அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/20/11

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் 
மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
                                                                                   

                                                                                  
                                                                   
                                                                              

                             எல்லாரும் சந்தோஷமா பண்டிகையையும் 
புத்தாண்டையும் கொண்டாடுங்க .வெளிநாடு வந்தபின் 
கிறிஸ்மசுக்கு பலகாரம் செய்வது அக்கம்பக்கம் கொண்டு
சென்று நண்பர்கள் உறவினருடன் பகிர்ந்துண்பது எல்லாமே 
பல வருடங்களாக மறந்து போனகாணமல் போனவைகள் .


இது மகி கேட்டுகொண்டதற்கு என்று செய்தது
(என்னா நம்பிக்கை என் மேல் )
எல்லாரும் ஷேர் செய்து சாப்பிடுங்க முட்டை 
சேர்க்காமல் செய்த ரோஸ் முறுக்கு அல்லது 
அச்சுமுறுக்கு 
          அக்கா /தங்கை/அண்ணா/தம்பி யாரும்      
          முறுக்கை பார்த்து சிரிக்க கூடாது .
          குறிப்பா நோ ஸ்மைலிஸ்.                                            
                                                                                         
   இதில் ஒரு வகை முட்டை சேர்த்து செய்வது .
எனக்கு முட்டை வாசனை விருப்பமில்லாததால் 
வெறும் தேங்காய்பால் சேர்த்து செய்தேன் .
நான் ரெசிப்பி  கொடுத்தா பூமி தாங்காது .

இங்கே               முட்டை சேர்த்து செய்யும் விதமும் 
eggless        முட்டை சேர்க்காமல் செய்யும் விதமும்
 இருக்கு.

அச்சு வாங்கி ஏழு வருடம் அதை வீட்டுக்குள்ளேயே 
காணமபோட்டு ஒரு வழியா தேடி கண்டுபிடிச்சி 
வாழ்க்கையில் முதன் முறையா செய்த பலகாரம் .

நான் மொத்தம் சுட்டது ஐம்பது 
முதல் பத்து மோல்டை விட்டு வரவேயில்லை அவ்ளோ 
பாசம் !!!!!!!!!!!!!
அடுத்த பத்து டீப் ரோஸ்ட் ஆகி பின்ல போச்சு .
                                                                                        
                                        ஒரு கட்டத்தில் பேசாம மாவு படத்த 
மட்டும் போட்டு ,ஏசியன் கடையில் அச்சப்பம் வாங்கி 
வைச்சு படம் போட்டுடலாம்னு யோசிக்கவேயில்லை 
இல்லை .
இல்லை .

ஒருமாதிரி விடாஆஆஆ முயற்சிக்குப்பின் இருபத்தைந்தாவது 
முறுக்கிலிருந்து ஐம்பது வரைக்கும் என்மேல் பரிதாபப்பட்டு 
அழகா வந்தது .

உண்மையிலேயே சமையல் ப்ளாக் சகோதரிகள் 
கிரேட்டோ கிரேட் .எப்படிப்பா விதம் விதமா செய்றாங்க .???????!!!!!!
ஒகே எல்லோரும் enjoy your Holidays.
இது இந்த வருடத்தின் கடைசி பதிவு .
மீண்டும் 2012 இல் சந்திப்போம்.