அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/24/11

Advent /Christmas Count Down

                                                                                         




                                                                                     


                                           இந்த வாரம் ஞாயிற்றுகிழமை27 ஆம் 
திகதி அட்வென்ட் துவங்குகிறது . அன்று முதல் நான்கு
வாரம் 24 டிசம்பர் நள்ளிரவு வரை .நான்கு வாரம் சிறியோர் 
பெரியோர் எல்லாம் தங்களை கிறிஸ்மசுக்கு ஆயத்தம் செய்து 
கொள்வார்கள் .டிசம்பர் முதல் தேதி இலிருந்து குட்டீசுக்காக
எல்லார் வீட்டிலும் அட்வென்ட் நாட்காட்டி மாட்டி வைப்பார்கள்.
எங்க வீட்ல பெரிய ட்ரீ வடிவில் காலெண்டர் இருக்கு
                                           முதல்  தேதி இலிருந்து   24 ஆம் தேதி 
வரைக்கும் சாக்லேட்ஸ் போட்டு வச்சிடுவேன் .தினமும் 
ஒவ்வொரு  சாக்லெட்டாஎடுத்து சாப்பிட்டு எண்ணிகிட்டே 
வருவா என் மகள் .
                                                                                                  


                                                                                   
                                                                                                   
                                                                                       
                            ரெடிமேட் சாக்லேட்டோட நாட்காட்டியும் 
விக்குது .முன்பு சிறுபிள்ளைகள் பைபிள் வசனங்களை 
மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற  நோக்கத்தில்
நான்கு வாரத்துக்கும் வசனம் இருக்குமாம் .இப்ப காலம் 
மாறிப்போச்சு வசனத்துக்கு பதிலா  சாக்லேட் வந்தாச்சு .
என் பொண்ணு நிபிக்கும் அட்வென்ட் காலெண்டர் 
வாங்க சொன்னா இந்த முறை. நிபி இவர்தான் 
                                                                                       
                                                                                              


                                                                                        
இந்த ஊர்ல பூனை  நாய் எல்லாத்துக்கும் அட்வென்ட் 
காலெண்டர் விக்கறாங்க .    சாக்லேட்டுக்கு பதில் 
அனிமல்சொட பிடித்தமான உணவு .
எல்லாம் சின்ன சின்ன சந்தோஷங்கள் .   
     
                                       நாங்க எங்க ஆலயத்தில்முதியோர் 
இல்லத்துக்கு சென்று பரிசு பொருட்கள் கொடுப்போம் .
என் வேலை handmade cards செய்வது மற்றும் பரிசு 
பொருட்களை வாங்கி வண்ணத்தாளில் பாக் செய்வது .




எனவே கொஞ்ச நாட்களுக்கு வலைப்பக்கம் வர மாட்டேன் .
Enjoy a Refreshing Week End 





11/21/11

மழலைகள் உலகம் மகத்தானது ....தொடர் பதிவு

                                                                               
There is a garden in every childhood, an enchanted place 
where colors are brighter, the air softer, and the morning 
more fragrant than ever again.       
 Elizabeth Lawrence.

                                                                                    

             மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடர் பதிவுக்கு 
என்னை அழைத்த திருமதி BS.Sridhar ஆச்சி மற்றும் திரு .
வை .கோபாலக்ருஷ்ணன் அவர்களின் அழைப்பினை ஏற்று 
எனது பார்வையில் மழலைகள் உலகம் பற்றி பகிர்ந்து 
கொள்கிறேன் .

                                                  நேற்றைய தினம் நவம்பர் 20 ஆம் 
திகதி  சர்வதேச குழந்தைகள் தினம் உலகெங்கும் கொண்டாட
ப்பட்டது .

                          குழந்தைகளுக்கென்று சில உரிமைகள் இருக்கிறது அதனைவலியுறுத்துவதும்தான் இந்த நாளை கொண்டாடுவதன் 
நோக்கம் .
இதோ இருக்காரே இவர்தான் pudsey  bear 
                                                              


                                                                     


இவர்தான் BBC children in need இன் அடையாள சின்னம் .
வெள்ளியன்று மகளின் பள்ளியில் இவரைபோன்று ஒரு பெரிய 
உருவம் உடையணிந்து நின்று கொண்டிருந்தது.
அன்று பிள்ளைகள் சிறிய கப் கேக்ஸ் செய்து விற்று 
கொண்டிருந்தார்கள் இந்த நாட்களில் எல்லா இடங்களிலும் 
பல pudsey bears காணலாம் .இவர்கள் அருகில் பெரிய உண்டி
பெட்டியும் இருக்கும்.


                                                                                       

எல்லா தொகையும் ஏழைக்குழந்தகளுக்காய்  சேர்க்கப்படுகிறது .

 இதோ இவரை  பாருங்க நம்ம சென்னை புகழ் ரிக்சாவில்
இவர் இங்கே பல இடங்களுக்கும் இதில் பிரயாணம் செய்து 
குழந்தைகள் நலனுக்காய் ஒரு தொகை சேர்த்து தந்திருக்கிறார் 


மழலைகள் அழகிய மலர்கள் 
                                                                                   
என்னை பொறுத்த வரையில் நாம் வாழ்க்கையை பற்றி 
அவர்களுக்கு கற்று கொடுப்பதற்கு முன் வாழ்க்கை 
என்னவென்பதனை அவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்து 
விடுகிறார்கள் .                                                                            
ஆறில் ஒரு குழந்தை ,குழந்தை தொழிலாளி எங்கே தெரியுமா 
வளர்ந்து   வரும் உலக நாடுகளில் .
இங்கிலாந்தில் பதின்மூன்று வயதுக்கு கீழுள்ள பிள்ளைகள் வேலைக்கு செல்ல தடை அது மோடேல்லிங்/தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதும் சேர்த்துதான் .
எனக்கு இதை படித்ததும் ஒன்று மட்டுமே நினைவுக்கு வந்தது நம் நாட்டில் சில பல தொலைகாட்சிகளில் எப்படி சின்னசிறு பிள்ளைகளை புரியாத வசனங்களுக்கு ஆட்டுவிக்கிறார்கள் என்னை பொறுத்த வரையில் அந்த குழந்தைகள் பாவம்.

பலரின் பதிவுகளிலும் படித்த கவிதை வரிகள் 
                                                                     
வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே ! 
இனிமேல் தினங்களை விட்டு விட்டு குழந்தைகளை எப்போது 
கொண்டாட போகிறீர்கள் ?
                                                  -கவிக்கோ அப்துல் ரகுமான் 
                                          ஒரு பிள்ளை காலை பள்ளிக்கு செல்கிறது 
வீடு திரும்பியதும் பாட்டு நடனம் இதில்லாமல் ஃ பிரெஞ்சு /
ஜெர்மன் /யோகா வீணை /தற்காப்பு கலை .
இந்தியாவில் மட்டுமில்லை இங்கும்தான் .
ஒரு பெண் தனது தாயிடம் கூறுவதை கேட்டேன் //அம்மா 
எனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேண்டும் // 
அந்த தாய் சிறு வயதில் தான் கற்க முடியாத அத்தனை 
கலைகளையும் மகளை படிக்க சொல்லி நிர்ப்பந்தித்து இருக்கிறார் .
                  நமது ஆசைகளையும் விருப்பு வெறுப்புக்களையும் ஏன் 
குழந்தைகள் மேல் திணிக்கனும்?
ஒரு பானைக்குள் புகையை அடைத்து வைக்க முடியுமா 
ஒரு சிறு துவாரம் கிடைத்தாலும் போதுமே வெளியேறிவிடும் .
சில வருடங்களுக்கு முன் இங்கே நடந்த ஒரு சம்பவம் 
Child Prodigy என்று அழைக்கப்பட்ட இளவயதில் அதாவது 
பதின்மூன்று வயதிலேயே ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் 
சேர்ந்து படிக்க இடம் கிடைத்த ஒரு சிறு பெண் , மிகுந்த மன 
அழுத்தத்தால்தடம் மாறி பணத்திற்காக எழுதவும் மனம் 
வரவில்லை ஒரு பெண் குழந்தையின் தாயாக இருப்பதனால் .
                                              அந்த பிள்ளையின் தந்தை டிவி இசை 
எல்லாவற்றையும் வீட்டில் தடை செய்து இருந்தாராம் .
நடுஇரவில் முகத்தில் குத்தி எழுப்பி படிக்க சொல்வாராம் .
       அந்தபெண்கூறுகிறதுநானும்தம்பிதங்கைகளும்நரகத்திலிரு
ந்தோம்.உயர்நிலையை அடைந்திருக்க வேண்டிய பெண் 
அளவுக்கதிகமான நிர்பந்தம் காரணமாக மன அழுத்தம் 
ஏற்ப்பட்டு இப்போ ஒரு சோஷியல் வொர்க்கராக பணிபுரிகிறார் .
                     

            இவ்வளவு ஏன் நேற்று மாலை ஆலயத்தில் நடந்த சம்பவம் 
நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சர்வீசில் ஒருவர்
 puppet கொண்டு வந்திருந்தார் .அதை வைத்து சிறுவர்களுக்கு 
பைபிள் கதை சொல்ல ஏற்பாடு செய்திருந்தார் .
எங்களுக்கு பின் அமர்ந்திருந்த குடும்பம் உடனே எழுந்து 
விட்டது .பைபிளில் இதெல்லாம் இல்லையென்று .
ஏன் ஜீசஸ் சொல்லியிருக்காரே தேவனுடைய ராஜ்ஜியம் 
சிறு பிள்ளகளுடையது என்று .அவர்களின் சிறு மகன் 
அழுகிறான் ஆசையா இருக்கு பாக்கணும் என்று .
இவர்களெல்லாம் என்ன மனிதர்கள் .அப்படிதான் அங்கே 
இன்னொரு பிள்ளை சிறு பந்தை ஆராதனை துவங்குமுன் 
டைனிங் ஹாலில் வைத்து உருட்டி விளையாடிகொண்டி
ருந்தான் ,இவர்கள் தங்கள் மகனை அனுமதிக்கவே இல்லை 
                                     நான் மெதுவாக அச்சிறுவனை பார்த்தேன் 
துள்ளி விளையாடும் ஆட்டுக்குட்டியின் கால்களை கட்டி 
விட்டால் எப்படி இருக்குமோ அந்த மன நிலை அச்சிறுவனுக்கு 
அவன் கால்கள் தன்னிச்சையாய் அசைந்து கொண்டிருந்தது .
என்னால் இறைவா அந்த தகப்பனுக்கு நல்ல புத்தி கொடு 
என்று பிரார்த்திக்க மட்டுமே முடியும் .

இதுவரையிலும் தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகளை 
எதற்காவது நிர்பந்தித்து இருந்தால் அவர்களிடம் மன்னிப்பு 
கேளுங்கள் .நான் கேட்டிருக்கிறேன் என் மகளிடம் .அதில் 
தவறொன்றுமில்லை .குழந்தைகளை குழந்தைகளாக 
பாருங்கள் .ஆரோக்கியமான வருங்கால சந்ததியை உருவாக்குங்கள் .
                                                                                       
இந்த பதிவு முழுதும் எனது ஆதங்கத்தின் வெளிப்பாடு.
குறையிருப்பின் மன்னிக்கவும் .
இதனைத்தொடர நான் அழைப்பது .
ஐயா அம்பலத்தார் 

திருமதி ரமாரவி
திரு ,ரெவரி
மற்றும் என் அன்பிற்குரிய 
மியாவ் அதிரா 
நம்ம ஜலீலா அக்கா 


                                                                

11/18/11

கிறிஸ்மஸ் தாத்தா ..........Flashback ..End.

இந்த சாண்ட்டா கதை நிறைய வீடுகளில்நடக்கிறது
இப்படி நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது சென்ற 
டிசம்பர் 2010 வரையிலும் 

ஜெர்மன் கிறிஸ்மஸ் மார்க்கெட்
மிக பிரபலமானது 
                                        நாங்க வசித்த சிட்டி மார்க்கெட் 2005
                                                                           


            இது செஸ்நட்ஸ்  (chestnuts)  .நாங்க க்ரூப்பா காட்டுக்குள்ள 
போய் சேகரிச்சு வருவோம் .நம்ம பலா விதைகளை தணலில் 
சுட்டு சாப்பிடுவோமே .அந்த மாதிரி இதை சுட்டு சாப்பிட்டா 
ருசியா இருக்கும்   .   கிறிஸ்மஸ் மார்க்கட்டில் இப்படி அந்த 
சீசனுக்கு        சுட்டு விற்ப்பார்கள் .    இது கூகிள் படங்கள் .
                                                                                                           


                               
                      இங்கே மால்களில் கிறிஸ்மஸ் சீசனுக்கு 
                      சான்ட்டா  வேலைக்கு ஆட்கள் தேவைன்னு 
                     சரியா நவம்பர் மாத முதல் விளம்பரம் தருவாங்க .
                      இங்கே இதை மாதிரி 
                                     
  • Contract type

    temporary
Person to fulfill the Santa Claus role in 
a Garden centre. Must have full disclosure 
Scotland.
£10.00 per hour 8 hours per week Sat 12-4 Sun-12-4                                                     
இந்த சான்ட்டாக்கள்  எல்லா மால்களிலும் இருப்பாங்க 
நாம் பிள்ளைகளை கூட்டிட்டு போய் காண்பித்து 
அவர்களுடன் புகைப்படமும் எடுக்கலாம் .இங்கே பாருங்க 
என்னம்மோ பெரிய சாதனை புரிந்த மாதிரி எங்க பொண்ணு 
சாண்டா அருகில் .இங்கே வந்த நாளில் இருந்து ஒவ்வோர் 
வருடமும் சான்டாவுடன் படமெடுத்தோம் .
                                                                                                


                                          நாம் படத்துக்கும் பரிசு பொருளுக்கும் 
பணத்தை தந்துவிட வேண்டும் .ஒரு முறை சென்றப்போ 
கணவர் என்னிடம் மகளை வேறு பக்கம் திரும்ப சொல்லி 
சைகை செய்தார் .மெதுவா சொல்றார் ,சாண்டா தாடியை 
கழட்டி வைத்து விட்டு டீயும் தம்மும் அடிச்சிட்டிருந்ததாம்.
எப்படியெல்லாம் பயந்து மாபெரும் ரகசியத்தை கட்டி
 ஸ்ஸ்ஸ்....ஹப்பா காப்பாத்தி இருப்போம் .சென்ற வருடம் 
பிள்ளையிடம் உண்மையை சொல்லிடலாம் என்றேன் 
கணவரிடம் .அதற்க்கு சொன்னார் இந்த வருடம் மட்டும் பரிசு 
வைப்போம் .அவளே பிறகு புரிந்து கொள்வாள் என்று ..


                                                                                       


                             அவள் தெரிந்து கொள்கிரமாதிரியே இல்லை .
இரண்டு வாரங்கள் முன் நான் ஏற்க்கனவே கூறியிருந்தேனே 
ஒரு பிரிட்டிஷ் குடும்பத்தினர் அவர்களுடன் டவுன் செல்ல 
நேரிட்டது .
 சிட்டி முழுதும் ஜகஜோதியாக அலங்கரித்து இருந்தது .                                                                                          
இப்பவே எல்லா கடைகளிலும் அலங்கார பரிசுபொருட்
கள் வந்தாச்சு .வீட்டு முன் இப்படி DOOR HANGERS சான்ட்டவை
 வரவேற்க மாட்டி வைத்திருப்பார்கள் இவை மற்றும் ,,


                                                                                    
சாண்டா பேசுவது போன்று ஆடியோ 
குறுந்தட்டுக்கள் எல்லாம் ஒவ்வோர் பிள்ளைகள் 
பெயருடன் கடைகளில் இருந்தது A to Z .வரை பிள்ளைகள் 
பெயர்  இருக்கும் .என் மகள் பெயரில் மட்டும் இருக்காது 
SHARON என்பதற்கு பதில் SHANNON பெயரிலிருக்கும் .அதை 


                                                                                       




எல்லாம் பற்றி என் மகள் பெருமையா சாண்டா 
புராணம் சொல்லாரம்பிச்சா அந்த சிறு பெண்ணிடம் ,
சிம்னி வழியா குதித்தது ,குக்கீஸ் சாப்பிட்டது .........


                                                                         
அவள் பெயர் கிரேஸ் .வயது எட்டு அவள் என்னை பார்த்து
 "ஏஞ்சலின் இந்த நாட்டில் பெற்றோர் பிள்ளைகளை 
   ஏமாற்றுகிறார்கள் ".
                                                                              
                                                                            
தாங்களே பரிசை வைத்து விட்டு சாண்டா தருவதாக பொய் சொல்கிறார்கள் பிள்ளைகளை ஏமாற்றுவது தவறில்லையா ??
நீங்களும் அப்படியா ??????
மேலிருக்கும் படத்தில் இருக்கும் ஸ்கார்ஃ ப் கட்டிய குட்டி
 பெண் தான் உண்மையை உடைத்தது.
                                                                                    
என் எதிரே அன்பு மகள் .திருடிக்கு தேள் கொட்டின மாதிரி 
நான். என் மகள் வேறு என்னை பார்த்து கேட்டாள்//
அம்மா நீங்களும் அப்படிதான் செய்தீர்களா ?????.
என்ன செய்ய உண்மையை கூறிவிட்டேன் ...ஆமாம் ...
உன்னை சந்தோஷப்படுத்தவே அவ்வாறு செய்தோம் என்று 
கூறினேன் .
இந்த காலத்து பிள்ளைகள் நம்மை விட புத்திசாலிகள் 
அவள் ஒன்றுமே சொல்லவில்லை .என்னை கட்டி அணைத்து 
சொன்னாள்அதனால் என்ன பரவாயில்லை அம்மா நீங்க 
எனக்காகதானே செய்தீர்கள் ஐ லவ் யூ வெரி மச் .
.
இப்ப நாங்க தப்பிச்சிட்டோம் இன்னும் என் மைத்துனர் 
பிள்ளைகளுக்கு தெரியாது .அண்ணி சொன்னார் உங்க 
பொண்ணு கிட்ட உண்மையை உடைத்த மாதிரி யாராவது 
எங்க பிள்ளைகளிடமும் சொன்னால்தான் உண்டு என்று .

இது எங்களுக்கு ஒரு பாடம் இனி எந்த விஷயமானாலும் 
பொய் சொல்லவே கூடாது குறிப்பா பிள்ளைகளிடம் .
இனிமே சான்டா எங்க வீட்டுக்கு வராது .அதையிட்டு இனி 
பொய் சொல்வதும் இருக்காது ஆனா மனசுக்குள்ள ஒரு சின்ன 
வருத்தம் நாங்க ரெண்டு பேரும் போட்டி போட்டுகொண்டு 
தான் இந்த நாடகத்தை நடத்தி வந்தோம் .இந்த  வருடம் 
சாண்டா உடையணிந்து தானே ஹாலில் உட்காரப்போவதா 
கணவர் சொல்லியிருந்தார் .(வசமா மாட்டியிருப்பார்  ) 


மனசுக்கு கஷ்டமா இருக்கு ஆனாலும் Bye Bye SANTA.
                                                                              
இந்த படத்தை  க்ளிக் செய்து பார்க்கவும் 
                                                                                       


                                                                          
                                                                         

11/16/11

கிறிஸ்மஸ் தாத்தா ..........Flashback

                                       என் மகள் செய்த வாழ்த்து அட்டை 
                                                                                          
                                                                                            
                                கிறிஸ்மஸ் என்றாலே என்னைபோன்ற 
குட்டி பிள்ளைகளுக்கு நினைவுக்கு முதலில் வருவது 
SANTA /FATHER CHRISTMAS  தான் .
இன்னும் நாற்பது நாட்கள் இருக்கு ஆனா நான் கவுன்ட்
டவ்னை இப்பவே ஆரம்பிச்சுட்டேன் .


  
நம்மூர் சாண்டா மாஸ்க் எல்லாம் அணிந்து செயற்கையா 
இருக்கும் .சாண்டா மீது பெரிதாக அக்கரைகொண்டது 
கிடையாது .    


அப்புறம் மணமானதும் வலதுகால் வைத்த இடம் ஜெர்மனி 
அதுவும் நான் சென்ற நேரம் ஹெவி விண்டர் டிசம்பர் மாதம் .  
பார்த்த இடமெல்லாம் வெள்ளையாய் பனி மூடிய வீடுகளும் 
மரங்களும் .அங்கே தான் அழகிய கொழு மொழு ரோசி வைட்
மாஸ்க் போடாத சாண்டா பார்த்தேன் .வித் விதமான 
அலங்கார பொருட்கள் .கிறிஸ்மஸ் மார்கெட் என்று ஒரே 
கோலாகலம் .
                                                                                                
                                                    மகள் பிறந்த பின் அவளுக்காய் 
மரம் க்ரிப்எல்லாம் வைத்தோம் .ரெண்டு வயதிலேயே 
ரொம்ப குறும்பு நான் சொல்வேன் மரத்தை தொட்டா சாண்டா 
பரிசு தராது என்று .அப்படியும் பார்த்தா நேடிவிடி செட்டில் 
பொம்மைகள் இடம்மாறியிருக்கும் .பேபி ஜீசஸ் இருக்குமி
டத்தில் ஆட்டுக்குட்டி ராஜா பக்கத்தில் மேரி என்று மாத்தி 
வைப்பா .இரவே வண்ண தாளில் சுற்றிய பரிசு பொருட்களை 
கிறிஸ்மஸ் மரத்தின் முன் வச்சிடுவோம் .
                                    கிறிஸ்மஸ் நாளன்று காலையில் எழும்பி 
ஒடி வந்து பார்ப்பாள் .முகமெல்லாம் சந்தோஷமா இருக்கும் .
இரவு தான் சிறு மணியோசைகளை கேட்டதாக கணவர் 
அவளிடம் சொன்னப்போ விழிகள் மலர ஆவலுடன் 
கேட்பாள்  .


                      ஊருக்கு வாழ்த்து சொல்ல போன் செய்யும்போது எல்லோரிடமும் சான்டா புராணம் பாடுவாள் .மனதுக்கு பொய் சொல்றோமே என்று கஷ்டமா இருந்தாலும் இதுவே கடைசி 
என்று சொல்லி சொல்லி அந்த பொய் தொடர்ந்து கொண்டே 
வந்தது .மகள் பிறந்தது கிறிஸ்மசுக்கு சரியா ஒரு வாரமுன்
 எனவே ஆரம்ப நாளில் இவள் பிறந்த நாளுக்காய் வீட்டை அலங்கரிக்கிரோமென்று நினைத்து கொண்டாள்.
நாலு வயசில் திடீர்னு ஒரு குண்டை தூக்கி போட்டா .
அதாவது இரவு ஒளிந்திருந்து சான்டாவை பார்க்க போவதாக .
மறந்து தூங்கிட்டா .நல்லவேளை .
ஒருமுறை கேட்டா நம் வீட்டில் சிம்னி இல்லையே ப்படி 
சாண்டா வரும் .????????????
இத மாதிரி ஆளுங்களுக்கின்னே விக்கறாங்களே பெரிய
 சைஸ் மேஜிக் சாவி .
                                                                                                                                     




அதை காட்டி சமாளிச்சோம் .
                                                         எல்லாம் என் கணவரால் வந்தது 
ஒரு சிறு விளையாட்டு பொய் வளர்ந்து மலையாகிவிட்டது .
பிறகு இங்கே இங்கிலாந்து வந்தும் பொய் தொடர்ந்தது .
இரவு உறங்க போகுமுன் சூடா பால் ,குக்கீஸ் .டிசியு பேப்பர் 
எல்லாம் வைத்த பின் தூங்க போவா .
எங்க வீட்டு சாண்டா எல்லாத்தையும் சாப்பிட்டு பாலை 
குடிச்சு கப் சரிவா வச்ச மாதிரி இடத்தை அழுக்கு பண்ணி 
வைப்பார் .சில வீடுகளில் இதற்கென்றே கரித்தூள் ,புல், 
ரெயன்டியர் முடி எல்லாம் வாங்கி போடுவாங்க .சாண்ட்டா 
வந்து சென்றதற்கான அடையாளமாம் !!!!!!!!!!
                                                                                                
.எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க பாருங்க .இதில் சென்ற 
வருடம் என் கணவர் மகளிடம் சொன்னார் இம்முறை 
சான்ட்டாவுக்கு fish கட்லேட்ஸ் செய்ய சொல்லுங்க 
அம்மாவை என்று .சாண்டாஸ் நேம் அண்ட் ஹிஸ் கேம் .
அப்ப கூட மகள் சொன்னா அப்பா சாண்ட்ட நோர்த் போலில் 
இருப்பவர் அவருக்கு இந்திய உணவு பிடிக்காது .   
நல்லா பல்ப் ஹிஹி .  இப்படி ஒவ்வொரு வருஷமும்  
ஒரு லெட்டர் சாண்டாகு எழுதியிருக்கா நான் அவற்றை 
பத்திரமா வச்சிருக்கேன் ஒரு சீல் செய்த என்வலப்பில் .
சென்ற வருடம் சாண்டா பெயரில் ஒரு மெயில் ஐடி திறந்து 
அவளுக்கு மெயில் அனுப்பினார் என் கணவர் .



Hi SHARON

Did you know that all my elves have been talking about you? 
They are all very impressed that you have !!ACCOMPLISHMENT!!
this year.
ALL THESE DAYS YOU WERE LOVELY AND WONDERFUL .             
YOU ARE A FANTASTIC GIRL.
I WILL LEAVE SOME PREZZIES FOR YOU TO NIGHT.
HOPE YOU like them.
WISH YOU A MERRY CHRISTMAS.
KEEP SMILING.
PLS.leave SOME COOKIES FOR ME .
DO NOT REPLY BECAUSE I AM TOO BUSY 
BYE BYE BYE .ALWAYS BE GOOD READ YOUR BIBLE EVERYDAY
SING PRAISES ABOUT GOD.
                                                                                                   
                                                                           
இந்த சாண்ட்டா கதை நிறைய வீடுகளில்நடக்கிறது


இப்படி நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது சென்ற டிசம்பர் 2010 வரையிலும் 


தொடரும் ......................