அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/14/11

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் /Decoupage Cards /Pyramage cards Tutorial

Decoupage  Christmas  Card
                                                                         


                                 Pyramage Card .... ஒரே படம் வித விதமான 
அளவுகளில் வெட்டி foam pads  உதவியுடன் பிரமிட் 
வடிவத்தில் ஓட்டுவது .                               
நான் செய்த ராபின் வாழ்த்து அட்டை இவ்வகை 
                                                                                
Decoupage Card என்பது இது .இங்கே ரெடிமேட் ஷீட்ஸ் 
கிடைக்குது 
                                                                               
அதிலேயே ஸ்டெப் 1,2,3,4,5, 6  என்று அச்சிடப்பட்டு இருக்கும் .
                                                                                     
     படங்களையும்அட்டையில் இருந்து  இலகுவாக பிரித்து 
எடுக்கலாம்.             ஒன்றன் மீது ஒன்றாக foampads வைத்து 
இணைக்கவும் .         இப்படி வரும். 
                                                                                  
                                            இப்ப அரேன்ஜ் செய்த 
படங்களை கார்டில் இணைக்கவேண்டும் .
வெள்ளை நிற தடிமனான அட்டை எடுத்து இவ்வாறு 
மடிக்கவெண்டும் .பேப்பர் க்ரீசரால் மடித்து நீவினால்
அழகா இருக்கும் .


                                                                                     
அட்டை பெரிதாக இருந்தால் ,விருப்பமான 
 அளவு வெட்டி கொள்ளலாம் .
பிறகு டிசைன் பேப்பர் வெட்டி ஒட்டவும் .
தயாரான வாழ்த்து அட்டை 
ஓரங்களுக்கு கோல்டன் பார்டர் ஒட்டி 
முடிக்குமுன்  .  
இந்த மியாவ் காரக்டர் பெயர் SNOW BELL!!!    
            நான் இவ்வகை வாழ்த்து அட்டை பொருட்கள் மலிவாக 
இருக்கும்போது வாங்கி வைப்பேன் .இது சென்ற வருடம் 
சீசன் முடிந்தபின் டிஸ்கவுண்டில் வாங்கியது .
கூடுமானவரையிலும் க்வில்லிங் மற்றும் மீள் சுழற்சி 
செய்த பொருட்களையே நான் craft செய்ய பயன்படுத்துவேன் .
அப்படி விளம்பர தாள்களை வைத்து செய்தது இது 
இந்த காரக்டர் பெயர் பெப்பர்.இந்த மாதிரி விளம்பர தாள்கள் 
இப்ப கடைகளில் வைப்பதில்லை (யாரும் அப்புறமா விலை 
கொடுத்து வாங்க மாட்டார்களே என் ஐடியாவை பார்த்த
பிறகு )
       


                                                                 xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


இது இன்னொருவிதம் .ரெடிமேட் படம் ஆர்டர் செய்து 
      அட்டையில் ஓட்ட வேண்டும் .


                                                                                            
பிரமேஜ் வாழ்த்து அட்டை .இவ்வாறு காட்டப்பட்டு இருக்கும் 
அதே போல சாய்வாக ஓட்ட வேண்டும் .இது பளபள அட்டை
எனவே இருட்டில் படம் தெளிவில்லை .


                 எல்லாவற்றையும் இரவு நேரம் செய்தேன் காலையில்
தபாலில் சேர்க்க வேண்டியிருந்ததால் .இரவே எடுத்த படங்கள் தெளிவில்லை .


                                                                                                                                  
                    மீண்டும் சந்திப்பேன் .                                                                                                                 

26 comments:

 1. எப்படி பா யோசிக்கிறீங்க :-)

  ReplyDelete
 2. Decoupage Cards /Pyramage cards Tutorial விளக்கம்
  மிக அருமை.இது மாதிரி கார்ட்ஸ் அத்தனை விலை கொடுத்து வாங்குவதுண்டு.நீங்களே செய்து அசத்திட்டீங்க.பகிர்விற்கு மிக்க நன்றி.இப்பொழுதும் எங்கள் மகள் ஹேண்ட்மேட் கார்ட்ஸ் செய்து தான் எங்களுக்கு தருவாள்.உங்க பகுதியை அவளுக்கு விடுமுறை நாட்களில் காட்ட வேண்டும்.

  ReplyDelete
 3. ரொம்ப நல்லா வந்திருக்கு.

  ReplyDelete
 4. ரொம்ப நன்றாக இருக்கு angelin. எவ்வளவு பொருமையாக படம் எடுத்து பதிவுல கொடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. சூப்பரா இருக்கு எல்லாம் வாழ்த்துக்கள் குயின்...!!!

  ReplyDelete
 6. @ஆமினா said...//

  அது ஒன்றுமில்லைங்க எல்லாரும் புதுசா என்ன சமைக்கலாம் அப்படீன்னு யோசிப்பாங்க .நம் சமையல் ராணிகள் உபயத்தால் எனக்கு பிரச்சினையே இல்ல .
  அவங்க ரெசிப்பிய செய்து சாப்ப்டிட்டு ரிலக்ஸ்டா கைவினை செய்து முடிச்சிடுவேன் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 7. asiya omar said...//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.ஸ்டெப் பை ஸ்டெப் உங்களுக்காகத்தான் படம் எடுத்து போட்டேன்

  ReplyDelete
 8. @கோவை2தில்லி said...//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 9. RAMVI said...//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமா ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம் இருந்தால் நன்றாக இருக்கும்னு தோணிச்சு

  ReplyDelete
 10. MANO நாஞ்சில் மனோ said...//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.கிறிஸ்மஸ் ஷாப்பிங்க்ல்லாம் முடிஞ்சாச்சா ?

  ReplyDelete
 11. ரொம்ப அழகா இருக்கு ஏஞ்சலின்,நமக்கெல்லாம் இந்த கைவினை பொருட்கள் செய்வது சுட்டு போட்டாலும் வராது...

  ReplyDelete
 12. கை வேலைப்பாடுகளும் , விளக்கமும் அருமை ...பகிர்வுக்கு நன்றி ...

  ReplyDelete
 13. அஞ்சு மத்தியானம் தலைப்பை பார்த்தேன், போன தலைப்பு இப்படித்தானே அதனால அதுதான் என விட்டுவிட்டேன், இப்போதான் யோசித்தேன், என் தலைப்புக்கு பின் மேலே வந்திருக்கே என அவ்வ்வ்வ்வ்:)))... எப்பவும் அவசரத்தில பார்த்திட்டு ஓடுவதால்தான் இப்பூடி ஆகுது:).

  ReplyDelete
 14. கார்ட் எல்லாமே அழகு.. அதிலும் பூஸ்குட்டி சூப்பர்:).

  இங்கொரு லேடி இருக்கிறா, அவவும் இப்படி அழகழகாகச் செய்து, சரட்டிக்குக்(charity) கொடுப்பா.

  ReplyDelete
 15. வாழ்த்து அட்டை மிகவும் அருமை... நிறைய விஷயங்கள் உங்கைடமிருந்து கற்றுக்கொள்ளனும்..

  ReplyDelete
 16. Decoupage Card ரொமப நல்லா இருக்கு..

  ReplyDelete
 17. அழகிய கிறிஸ்மஸ் வாழ்த்துமடல்கள் .வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 18. வாழ்த்து அட்டைகள் அனைத்தும் மிக மிக அருமை
  பல்வேறு பணிகளுக்கிடையில் எங்கள் பார்வைக்கும்
  பதிவாக்கித் தருவதற்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 19. அழகழகான கார்ட் ஏஞ்சல் அக்கா!சூப்பரா இருக்கு ஒவ்வொண்ணும்,..இதெல்லாம் செய்ய பொறுமை,ஷாப்பிங் செய்ய பொறுமை தேவை. அது என்கிட்ட இல்லை!

  க்ரீட்டிங் கார்ட்ஸ் எல்லாம் ஊரில் இருக்கும்வரைதான்.. சொல்லப்போனா இப்பலாம் கார்ட் பக்கமே போறதில்லை..பொங்கல் வாழ்த்து,தீபாவளி வாழ்த்துன்னு தேடித் தேடி வாங்கிய அந்தக் காலங்கள் எல்லாம் நினைவு வருது. ஹேப்பி ஹாலிடேஸ்!:)

  ReplyDelete
 20. அழகான வாழ்த்துமடல்கள்.அருமையாக உள்ளது.ரொம்ப பொறுமை உங்களுக்கு ஏஞ்சலின்.

  ReplyDelete
 21. அடடா! உங்க தமிழ் வலைத்தளம் இப்ப தான் பார்த்தேன். சூப்பர் போங்கள். உங்க தமிழ் ப்ளாக் பற்றித் தெரியாமல் இங்கிலீஸூ ப்ளாக் பக்கம் போய் படம் பார்த்து, கதை சொல்லு ரேஞ்சுக்கு கமன்ட் போட்டுட்டு இருந்தேன் இம்பூட்டு நாளா....

  ReplyDelete
 22. வாழ்த்து அட்டை சூப்பர். வீட்டில் செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்

  ReplyDelete
 23. ஏஞ்சல்....உங்கள் பதிவுகளைக் காட்டுவதற்காகவே குழந்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.காட்டியுமிருக்கிறேன் !

  ReplyDelete
 24. இதெல்லாம் எனக்கு மிகப் பிடிக்கும். நர்சரி பிள்ளைகளோடு செய்வதும் உண்டு. பார்க்க மகிழ்வாக உள்ளது. வாழ்த்துகள் சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 25. எப்படிங்க,இந்த அழகான வேலைப்பாடுகள் செய்வதுடன் ,பதிவுலையும் போஸ்ட் பன்றீங்க.நல்ல டைம் மேனேஜ்மென்ட் உங்களுக்கு.வாழ்த்துகள்.

  ReplyDelete