அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/19/11

ஞாயிறு கொண்டாட்டம் ... // Christmas cards

                                                      


                எங்க செல்ல மகளுக்கு வாழ்த்து தெரிவித்த 
அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
ஞாயிற்றுக்கிழமை எப்பவுமே நாங்க பிசி ,இந்த முறை 
மகளின் பிறந்த நாள் /கேரல் சர்விஸ் /முதியோர் 
இல்லத்தில் கொண்டாட்டம் என்று எல்லாம் ஒரே
நாளில் அமைந்துவிட்டது .


                     நாங்க ஒரு தொகை அளித்து அங்கேயே 
கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினோம் .
அங்கே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை .
                                                        நான்கு வருடங்களாக
தொடர்ந்து செல்கிறோம் இம்முறை சென்றபோது
சென்றமுறை பார்த்தவர்களில் சிலர் இல்லை .
ஒரு பாட்டி எல்லாரிடமும் //நான் ரொம்ப நேரம் 
உங்களுடன் இருக்க முடியாது ,என்னை பார்க்க 
விசிட்டர்ஸ் வருவார்கள் என்று மறுபடியும் 
மறுபடியும் கூறிகொண்டேயிருந்தார்.
                                                              நிமிஷத்துக்கொரு
முறை கைக்கடிகாரத்தை /சுவர் கடிகாரத்தை 
பார்த்துக்கொண்டிருந்தார் .நாங்க அங்கே சுமார் 
ஒரு மணிநேரமிருந்தோம் யாரும் வரவில்லை .
                              வெளியே வரும்போதுதான் கேர் 
டேக்கர் சொன்னார் //பாட்டியின் பிள்ளைகள் 
வருவேன் என்று ஒவ்வொருமுறையும் வாக்கு 
தருவார்களாம் ஆனால் வரமாட்டார்களாம் .
பாவம் அந்த வயதான பாட்டி .
                                 
                     மெதுவாக திரும்பி பார்த்தபோது பாட்டி
மற்றொருவரிடம் கூறிகொண்டிருந்தார்
//என்னபார்க்க விசிட்டர்ஸ் வருவாங்க .,,,/   
 இப்ப நேரம் என்ன ??
              பிறகு ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவும் 
சிறப்பாக நடைபெற்றது . சாண்டா வந்து சாக்லேட்ஸ் 
தந்தார் .
                                                                                                              


      நான் முன்பே கூறியிருந்தேனே அந்த செலீனா
வந்திருந்தாள் .என் மகள் ஒரு ஸ்னோ man  handmade      
வாழ்த்து அட்டை அவளுக்கு தந்தாள் .அந்த குழந்தை 
மிகவும்அன்புடன்  என் மகளை கட்டி அணைத்து
கொண்டது .அவ்வளவு சந்தோசம் அந்த குழந்தைக்கு .


        லாஸ்ட் மினிட் கார்ட்ஸ் 


                                                                             


தேவையான பொருட்கள் 
ஜூட் துணி ,கலர் மணிகள் ,பழைய மெரூன் நிற 
வாழ்த்து அட்டை (பார்டர் வெட்டி ஓட்ட)
ஊசி .தங்க நிற தடிமனான நூல் .மரம் வடிவத்தை 
நேர் கோடுகளால காகிதத்தில் வரைந்து அதன் கீழ்
ஜூட் துணியை வைத்து பேப்பரோடு தைத்தேன் .
இடைக்கு இடைகலர் மணிகள் இணைத்தேன் .
தைத்து முடித்த பின் பேப்பரை எளிதில் பிய்த்து 
எடுக்கலாம் .எல்லாம் மகியின் ஐடியா தான் 
                                                                                
                                                               
         மற்றொரு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை
peel off ஸ்டிக்கர் மட்டும் வைத்து செய்தது 
                                                                                     
எல்லாருக்கும் மிக்க நன்றி .
கொஞ்ச நாளைக்கு நோ போஸ்ட்ஸ் .
ஆனா எல்லார் வலைக்கும் வருகை தருவேன் .18 comments:

 1. Belated Birthday wishes to ur angel....cards looks beautiful!!

  ReplyDelete
 2. அழகு... இவ்வளாவி பிசியிலும் கார்ட் செய்முறையும் போட்டுக்காட்டியிருக்கும் அஞ்சுவை என்னவெனப் புகழ்வது.... வாழ்க வளமுடன்.

  Merry Christmas.

  ReplyDelete
 3. கார்ட்ஸ் அழகா இருக்கு ஏஞ்சல் அக்கா! நான் யூஸ் பண்ண ஐடியா உங்களுக்கும் உபயோகமா இருந்தது ரொம்ப சந்தோஷம்!

  மெர்ரி க்றிஸ்மஸ்..கொக்கிஸ் ரெடியா?? ;))

  ReplyDelete
 4. தங்கள் பதிவு படிப்பவர்கள் அனைவரிடத்தும்
  கொண்டாட்ட உணர்வையும் மகிழ்வையும்
  மிக ஆழமாக விதைத்துப் போகிறது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. மகளிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அனைவருக்கும் மெர்ரி கிறிஸ்மஸ்.கார்டு சூப்பர்.அந்த மூதாட்டியை பார்க்க இந்நேரம் விசிட்டர்ஸ் வந்திருப்பாங்க தானே ஏஞ்சலின்.கொண்டாட்டம் தொடரட்டும்..வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. அந்த பாட்டியின் நிலை பரிதாபம்.
  கார்டுகள் அழகு.

  ReplyDelete
 7. அழகான பதிவு.

  ”எந்தன் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்”

  அன்புடன்
  vgk

  ReplyDelete
 8. காலம் தாழ்ந்து சொல்லுவதற்கு மன்னிக்கவும் ..
  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி செல்லத்திற்கு ..
  உங்களுக்கும் குடும்பத்தினர் அனவைருக்கும் எனதினிய கிருஸ்துமஸ் நல வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 9. கார்ட்ஸ் பார்க்க அழகாயிருக்கு. படங்கள் நல்ல விளக்கமாக...

  ReplyDelete
 10. சூப்பர் angelin அதிரா சொன்னதுபோல் இந்தபிசியான நேரத்திலும் இப்பதிவை போட்டதற்கு வாழ்த்துக்கள்&நன்றி.
  இங்கு சில‌வயதான பெற்றோரின் நிலை ரெம்ப பாவம்.
  உங்களுக்கும் ,உங்க குடும்பத்தவ்ர்களுக்கும் என் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். angelin

  ReplyDelete
 11. மெதுவாக திரும்பி பார்த்தபோது பாட்டி
  மற்றொருவரிடம் கூறிகொண்டிருந்தார்
  //என்னபார்க்க விசிட்டர்ஸ் வருவாங்க .,,,/
  இப்ப நேரம் என்ன ??///

  படித்தபோது எழுத மறந்திட்டேன்... என்ன கொடுமை இது, ஆனா இந்நாட்டில் எல்லோரும் இப்படியில்லை... இங்கிருக்கும் எனக்குத் தெரிந்த சிலர்... தினமும் போய் தாயைப் பார்த்து கதைத்து, வெளியே அழைத்துச் செல்கிறார்கள், இப்படியும் இருக்கிறார்கள்... ஆனாலும் அதிகம் இருப்பது உதுபோலத்தான்...

  அதனால்தானோ என்னவோ, எனக்கும் வயதானோர் என்றால் ரொம்ப பிடிக்கும்... நேரம் போனாலும் போகட்டும் என, அவர்களோடு நின்று கதைத்துவிட்டே வருவேன்...

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு. பாவம் அந்த பாட்டி.....

  ReplyDelete
 13. உங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்த்து அட்டை சூப்பரோ சூப்பர்.
  முதியோர்கள் நிலை எப்போதும் பாவம் தான். என் உறவினர் ஒருவர் 90 வயது, மகள் வீட்டில் தான் இருக்கிறார். எழும்பி நடப்பது சிரமம். மகள் நன்றாகப் பார்த்தாலும் ஏதாவது புகார்/ குறை சொல்வார். நான் அடிக்கடி சொல்வேன் அவர் நல்ல லக்கி என்று. இப்படி முதியோர் காப்பகத்தில் ஒரு நாள் இருக்கவிட்டால் புகார் எல்லாம் அறவே காணாமல் போய்விடும்.

  ReplyDelete
 14. குட்டி அஞ்ஜெலினிற்கு காலம்தாழ்ந்த பிறந்ததின வாழ்த்துக்கள்.மனதில் மகிழ்வை உண்டுபண்ணும் உங்கள் பதிவுகளிற்கு நன்றிகளும் உங்கள் குடும்ப உறவுகள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 15. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ஏஞ்சலின்.

  முதியவரின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போகாமலிருக்க வேண்டுமே என்று மனம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறது.

  ReplyDelete
 16. @S.Menaga said...//
  athira//
  மகி//
  Ramani //
  siva //
  asiya omar//
  thirumathi bs sridhar//
  வை.கோபாலகிருஷ்ணன்//
  அரசன் //
  கே. பி. ஜனா.//
  ammulu //
  கோவை2தில்லி //
  vanathy //
  அம்பலத்தார்//
  கீதா //
  அன்பான கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி
  @கீதா//என் பிரார்த்தனையும் அந்த மூதாட்டி ஏமாற்றமடையகூடாதஎன்பதுதான் .

  ReplyDelete
 17. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete