அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/20/11

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் 
மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
                                                                                   

                                                                                  
                                                                   
                                                                              

                             எல்லாரும் சந்தோஷமா பண்டிகையையும் 
புத்தாண்டையும் கொண்டாடுங்க .வெளிநாடு வந்தபின் 
கிறிஸ்மசுக்கு பலகாரம் செய்வது அக்கம்பக்கம் கொண்டு
சென்று நண்பர்கள் உறவினருடன் பகிர்ந்துண்பது எல்லாமே 
பல வருடங்களாக மறந்து போனகாணமல் போனவைகள் .


இது மகி கேட்டுகொண்டதற்கு என்று செய்தது
(என்னா நம்பிக்கை என் மேல் )
எல்லாரும் ஷேர் செய்து சாப்பிடுங்க முட்டை 
சேர்க்காமல் செய்த ரோஸ் முறுக்கு அல்லது 
அச்சுமுறுக்கு 
          அக்கா /தங்கை/அண்ணா/தம்பி யாரும்      
          முறுக்கை பார்த்து சிரிக்க கூடாது .
          குறிப்பா நோ ஸ்மைலிஸ்.                                            
                                                                                         
   இதில் ஒரு வகை முட்டை சேர்த்து செய்வது .
எனக்கு முட்டை வாசனை விருப்பமில்லாததால் 
வெறும் தேங்காய்பால் சேர்த்து செய்தேன் .
நான் ரெசிப்பி  கொடுத்தா பூமி தாங்காது .

இங்கே               முட்டை சேர்த்து செய்யும் விதமும் 
eggless        முட்டை சேர்க்காமல் செய்யும் விதமும்
 இருக்கு.

அச்சு வாங்கி ஏழு வருடம் அதை வீட்டுக்குள்ளேயே 
காணமபோட்டு ஒரு வழியா தேடி கண்டுபிடிச்சி 
வாழ்க்கையில் முதன் முறையா செய்த பலகாரம் .

நான் மொத்தம் சுட்டது ஐம்பது 
முதல் பத்து மோல்டை விட்டு வரவேயில்லை அவ்ளோ 
பாசம் !!!!!!!!!!!!!
அடுத்த பத்து டீப் ரோஸ்ட் ஆகி பின்ல போச்சு .
                                                                                        
                                        ஒரு கட்டத்தில் பேசாம மாவு படத்த 
மட்டும் போட்டு ,ஏசியன் கடையில் அச்சப்பம் வாங்கி 
வைச்சு படம் போட்டுடலாம்னு யோசிக்கவேயில்லை 
இல்லை .
இல்லை .

ஒருமாதிரி விடாஆஆஆ முயற்சிக்குப்பின் இருபத்தைந்தாவது 
முறுக்கிலிருந்து ஐம்பது வரைக்கும் என்மேல் பரிதாபப்பட்டு 
அழகா வந்தது .

உண்மையிலேயே சமையல் ப்ளாக் சகோதரிகள் 
கிரேட்டோ கிரேட் .எப்படிப்பா விதம் விதமா செய்றாங்க .???????!!!!!!
ஒகே எல்லோரும் enjoy your Holidays.
இது இந்த வருடத்தின் கடைசி பதிவு .
மீண்டும் 2012 இல் சந்திப்போம்.

59 comments:

 1. meeeeeeeeee the firstu wishes...

  ReplyDelete
 2. அச்சு முறுக்கு
  இனிப்பு முறுக்கு சூப்பர்
  அந்த முன் வராத முறுக்கையும்
  எனக்கே பார்சல் பண்ணிடுங்க
  ஏஞ்சலின் அக்கா

  பேபி அதிரா பாவம் ஒரு ரெண்டு முறுக்கு அவங்களுக்கு கொடுத்திடுங்க

  இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும்

  ReplyDelete
 3. Wow...superb murukku ! Thanks Angel Akka! :)

  ReplyDelete
 4. அச்சு முறுக்கு அருமை,அழகு.பகிர்வுக்கு மகிழ்ச்சி.
  எஞ்சாய்,கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. //அக்கா /தங்கை/அண்ணா/தம்பி யாரும்
  முறுக்கை பார்த்து சிரிக்க கூடாது .
  குறிப்பா நோ ஸ்மைலிஸ்.//

  :)))))))) ha ha its only sundeele:)

  ReplyDelete
 6. பத்து வருஷத்துக்கு பிறகு இப்போ ஒரு ரெண்டு மூணு நாளா அச்சிமுருக்கு கடையில் கிடைத்தது இங்கே வாங்கி ஆசைதீர சாப்புட்டுட்டு இருக்கோம் நானும் நண்பனும், உங்க பதிவும் அச்சிமுறுக்கு பற்றி வந்துருக்கு அசத்தல் குயின்...!!!

  ReplyDelete
 7. உங்களுக்கும், உங்ககுடும்பத்தினருக்கும் என் இனிய கிறிஸ்மஸ் & புத்தாண்டுவாழ்த்துக்கள்.இனிதாக உங்கள் விடுமுறையை கொண்டாடுங்கள்.

  அச்சுமுறுக்கு பார்க்கநன்றாக‌ இருக்கு. நான் நினைக்கிறேன் உங்க ப்ளாக்கில் முதல்தரம் ரெசிபி கொடுத்திருக்கிறீங்க என்று.

  ReplyDelete
 8. அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

  TREE படம் நல்ல அழகாக உள்ளது.

  ReplyDelete
 9. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.
  அச்சு முறுக்கு எனக்கு மிகவும் பிடித்தது.
  பார்க்க அழகா இருக்குங்க.

  ReplyDelete
 10. நன்றி angelin அச்சு முறுக்குக்கும்,வாழ்த்துகளுக்கும்..

  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்.

  ReplyDelete
 11. ஏஞ்சல் அக்கா,அபர்ணாவும் ஒரு முட்டை சேர்க்க சொல்லிருக்காங்க.ஸோ,நீங்க குடுத்திருக்க ரெண்டு லிங்க்குமே முட்டை சேர்த்து செய்த அச்சப்பம்தான்!ஹிஹி!!!

  கொஞ்சம் டெலிகேட் வேலைதான் போல இந்த அச்சுமுறுக்கு செய்யறது..எங்கிட்ட அச்சுஇல்லை, இல்லைன்னா ஒரு கை பார்த்திருப்பேன்.;)

  உங்க வீட்டு முறுக்கு சூப்பரா இருக்குது,அடிக்கடி செய்யுங்க.ப்ராக்டிஸ் கிவ்ஸ் பர்பெக்ஷன்! :)))))) இதோ இங்கை பாருங்க,எக்லெஸ்குக்கீஸ்..
  http://vegetariantastebuds.blogspot.com/

  இனிய நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. http://vegetariantastebuds.blogspot.com/2011/12/rosette-cookies.html இதுதான் அச்சப்பம் URL..அது அந்த ப்ளாகின் லிங்க்.சாரி! :)

  ReplyDelete
 13. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ஏஞ்சலின்.

  அச்சு முறுக்கு அபாரமா இருக்கு. எத்தனைத் தின்பண்டங்கள் கடையில் வாங்கி உண்டாலும் நம் கையால் செய்த (அது எப்படியிருந்தாலும்) பலகாரத்தைச் சாப்பிடுவது போல் ஆகாது, இல்லையா?

  ReplyDelete
 14. ஆஹா!! நான்தான் லிங்கை மாத்திருக்கேன்
  நான் செய்தது பிரேமாஸ் குக் புக் பார்த்து

  ReplyDelete
 15. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ!... அச்சு முறுக்கு தானே பொட்டலம் பத்து ரூபா.. வாங்கி சாப்பிட்டுக்கிறேன்.. ஹா ஹா... மகிழ்ச்சியா கொண்டாடுங்கள்..மீண்டும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. ஒவ்வொரு பதிவிலும்.. அதன்பின்பு பதிவு வராதாக்கும் என வாழ்த்தி வாழ்த்தி... கிரிஸ்மஸ் வரைக்கும் வந்தாச்சூஊஊஊஊஉ.. இம்முறை கொஞ்சம் சத்தமா வாழ்த்துறேன்..... கிரிஸ்மஸ் வாழ்த்துக்கள் அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ....

  சன்ரா உங்கட வீட்டுக்கோ? இல்ல எங்கட வீட்டுக்கோ 1ஸ்ட்டாக வருவார் அவ்வ்வ்வ்வ்வ்?:))).

  ReplyDelete
 17. அச்சு முறுக்கு சூஊஊஊஊஊஊப்பர், ஊரில் வைபவங்களுக்கு செய்வார்கள் சாப்பிட்டிருக்கிறேன்... ஊரிலும் முட்டை சேர்க்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன், பலகார வகை அனைத்தும் சைவமாகவே செய்வார்கள்....

  ஆனா அஞ்சுவுகு முட்டை பிடிக்காதோ? அவ்வ்வ்வ்வ்வ்:))))... எனக்கு அவித்த முட்டைதான் பிடிக்கும்... பொரித்தது ஓக்கை.... மற்றும்படி பிடிக்காது.... எக் சேர்த்து ஒரு நூடில்ஸ் விற்குதே... அது ஒரு சாதி மணமாக இருக்கும் அதுவும் பிடிக்காதெனக்கு.

  ReplyDelete
 18. இன்னும் ஒரு கிழமையில் புதுவருடத்தில் புதுத்தலைப்புக்கு வருகிறேன்.... பாருங்க வருடம் முடிய முன் மாயாவும் ஆஜர்:)....

  சீயா மீயா....

  ReplyDelete
 19. யு.கே.ல பஃப் பேஸ்ட்ரி கண்டிப்பாக கிடைக்கும் ஏஞ்சல் அக்கா..இந்த லிங்க்-ஐ பாருங்க.

  http://www.mysupermarket.co.uk/#/tesco-price-comparison/home_baking/jus_rol_puff_pastry_sheets_2_per_pack_425g.html

  எல்லா க்ரோசரி-சூப்பர் மார்க்கெட்லயும் ஃப்ரோஸன் பொருட்கள்/ஐஸ் க்ரீம்/pie crust இருக்கும் இடத்தில இருக்கும். இந்த jus_rolதான் உங்க ஊர் பேஸ்ட்ரிஷீட் ப்ராண்ட் போல. லோக்கல் கடைகள்லயே கிடைக்கலாம். கடைக்குப் போகும்போது (ம்யாவ் மாதிரி) மறக்காம வாங்குங்க. :))))

  https://www.google.com/search?client=ubuntu&channel=fs&q=pastry+sheet+in+UK&ie=utf-8&oe=utf-8 இது மேலதிகத் தகவலுக்கு! :)

  இனிய க்றிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. @மகி said..//


  Thanks Magi நீங்க கொடுத்த லின்க்ல டெஸ்கோ /sainsbury ரெண்டு இடத்திலும் கிடைக்குது
  நான்தான் கவனிக்கல .நாளைக்கு வாங்கிடறேன்

  ReplyDelete
 21. @athira said...//

  ஆனா அஞ்சுவுகு முட்டை பிடிக்காதோ? அவ்வ்வ்வ்வ்வ்:))))//

  ஆமாம் அதிரா எனக்கு எப்பவுமே முட்டை பிடிக்காது ,
  அதனாலேயே கஸ்டர்ட் மற்றும் எந்த டிசர்ட்டும் சாப்பிடமாட்டேன்

  ReplyDelete
 22. சன்ரா உங்கட வீட்டுக்கோ? இல்ல எங்கட வீட்டுக்கோ 1ஸ்ட்டாக வருவார் அவ்வ்வ்வ்வ்வ்?:))).//

  எங்க வீட்டுக்கு முதல்ல வந்திட்டு அப்புறமா தேம்ஸ்

  ReplyDelete
 23. @கீதா said...//

  எத்தனைத் தின்பண்டங்கள் கடையில் வாங்கி உண்டாலும் நம் கையால் செய்த (அது எப்படியிருந்தாலும்) பலகாரத்தைச் சாப்பிடுவது போல் ஆகாது, இல்லையா?//

  உண்மைதான் கீதா . நான் இன்னும் கூட ட்ரை பண்ணி செய்வேன்.
  வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 24. @RAMVI said...
  நன்றி angelin அச்சு முறுக்குக்கும்,வாழ்த்துகளுக்கும்.//

  .
  வருகைக்கும் கருத்துக்கள் மற்றும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ரமா

  ReplyDelete
 25. @கோவை2தில்லி said...//

  வருகைக்கும் கருத்துக்கள் மற்றும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஆதி

  ReplyDelete
 26. @மாய உலகம் said...//
  வருகைக்கும் கருத்துக்கள் மற்றும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ராஜேஷ் அடுத்த முறை சேலம் வர்வேன் கண்டிப்பா பத்து பொட்டலம் முறுக்கு வாங்கித்தரனும் ஆமாம்

  ReplyDelete
 27. @வை.கோபாலகிருஷ்ணன் said...//

  வருகைக்கும் கருத்துக்கள் மற்றும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 28. @ammulu said...//

  நான் நினைக்கிறேன் உங்க ப்ளாக்கில் முதல்தரம் ரெசிபி கொடுத்திருக்கிறீங்க என்று.//
  மகி ஆசைப்பட்டு கேட்டதால்தான் இந்த சோதனை முயற்சி
  வருகைக்கும் கருத்துக்கள் மற்றும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 29. @MANO நாஞ்சில் மனோ said...
  பத்து வருஷத்துக்கு பிறகு இப்போ ஒரு ரெண்டு மூணு நாளா அச்சிமுருக்கு கடையில் கிடைத்தது //
  எனக்கு மட்டும் நல்லா வந்ததுன்னா கண்டிப்பா பக்ரைனுக்கு பார்சல் செய்திடுவேன்
  வருகைக்கும் கருத்துக்கள் மற்றும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 30. @சுண்டெலி said...//


  சுண்டெலி அக்காவை பாத்தா பாவமாயில்லையா ??? இப்படியா சிரிக்கறது .தீஞ்ச /உடைஞ்ச ஆச்சு முறுக்கெல்லாம் உங்களுக்குத்தான்

  ReplyDelete
 31. @asiya omar said...//

  வாங்க ஆசியா வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி .போஸ்ட் போடும்போதே வேண்டிக்கிட்டே போட்டேன்
  கடவுளே ஆசியா ஜலீலா மேனகா கீதா இன்னிக்கு இந்த பக்கம் வரவே கூடாதுன்னு .நல்லவேளை ஜலீலா இங்க்லீஷ் ப்ளாக்ல வந்துட்டு போய்ட்டாங்க .

  ReplyDelete
 32. @siva said...//

  எல்லா முறுக்கும் சிவாவுக்குதான் .தீஞ்சதேல்லாம் சுண்டெலிக்கு .வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 33. @மகி said...//
  கொஞ்சம் டெலிகேட் வேலைதான் போல இந்த அச்சுமுறுக்கு செய்யறது..எங்கிட்ட அச்சுஇல்லை, இல்லைன்னா ஒரு கை பார்த்திருப்பேன்.;)//

  முதலில் பயந்தேன் அப்புறம் நல்லாவே வந்தது மகி .
  நான் முட்டை சேக்கல .சேர்த்திருந்தா திக்கா வந்திருக்கும்னு நினைக்கிறேன் .தேங்காய் பாலும் நல்லா திக்கா இருக்கணும் .இனிமே ஒரு கை பார்த்திட வேண்டியதுதான் .அடுத்த முறை அச்சு ஊர்லருந்து வாங்கிட்டு வாங்க

  ReplyDelete
 34. @athira said...
  ஒவ்வொரு பதிவிலும்.. அதன்பின்பு பதிவு வராதாக்கும்//

  :)))))))))))))))))))))

  ReplyDelete
 35. உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ஏஞ்செல்.


  //ஏசியன் கடையில் அச்சப்பம் வாங்கி
  வைச்சு படம் போட்டுடலாம்னு யோசிக்கவேயில்லை
  இல்லை .// இத படிச்சப்புறம் தான் லைட்டா டவுட்டு வருது ஊஊ  அச்சு முறுக்கு சூப்ப்பர் என்ன படத்த மட்டும் தான் பார்த்து பெருமூச்சு விட்டுக்க வேண்டி இருக்கு !!

  ReplyDelete
 36. ஏஞ்சலின் அச்சு முறுக்கு ரொம்ப நல்லா செய்திருக்கீங்க,படித்ததும் சிறிப்பு வந்துடுச்சு...மோல்டை ஒவ்வொரு முறையும் என்ணெயில் நன்கு காயவைத்தபிந்தான் மாவில் தோய்த்து சுடவேண்டும்.எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த முறுக்கு...இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏஞ்சலின்!

  ReplyDelete
 37. //வாங்க ஆசியா வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி .போஸ்ட் போடும்போதே வேண்டிக்கிட்டே போட்டேன்
  கடவுளே ஆசியா ஜலீலா மேனகா கீதா இன்னிக்கு இந்த பக்கம் வரவே கூடாதுன்னு .நல்லவேளை ஜலீலா இங்க்லீஷ் ப்ளாக்ல வந்துட்டு போய்ட்டாங்க .
  //
  இப்ப நான் பார்த்துட்டுட்டேனே,என்ன பண்ணுவீங்க/??

  ReplyDelete
 38. En Samaiyal said...//  வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி
  கிரிஜா .
  என் கைல எண்ணெய் சூட்டு அடையாளம் கூட இருக்கு .
  நான்தான் செய்தேன் முறுக்கு

  ReplyDelete
 39. S.Menaga said...//
  //
  இப்ப நான் பார்த்துட்டுட்டேனே,என்ன பண்ணுவீங்க/??//

  முழு தட்டு முறுக்கையும் சாப்பிட்டாலே ஆச்சு ....இப்ப மறந்திருப்பீங்களே

  ReplyDelete
 40. http://www.animate-gif.de/christmas/Weihnachten48.gif

  ReplyDelete
 41. உங்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.எப்படியோ இந்த அச்சு முறுக்கை செய்து வெற்றி பெற்றுவிட்டீர்கள்.வந்தது வராதது எல்லாத்தையும் கவுன்ட் செய்துள்ளிர்கள் போல.இவ்வளவு அழகழகான கைவேலைகள் செய்பவருக்கு இதெல்லாம் எளிமையா வந்திடும்.


  ஒரு ஐடியா சொல்றேன்,டெண்சனாகிடாதிங்க.

  இப்படி செய்யும் உணவுப்பொருட்களை வைத்தும் டெக்ரேடிவ் கார்ட் செய்திடுங்க.கார்டுக்கு கார்டும் கிடைக்கும்,சாப்பிடுவதற்கும கிடைக்கும். எனக்கு முதல்ல டெஸ்ட்டிற்கு அனுப்பிடுங்க.

  ReplyDelete
 42. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சகோ.

  சிஸ்டர் ஆதிரவுக்கும் சொல்லிவிடுங்கள் அவர் தளத்தில் கருத்து பெட்டியை காணோம்.

  ReplyDelete
 43. தாமதமாக தான், என்றாலும் சொல்கிறேன். கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

  முன்பாகவே சொல்கிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 44. உங்க விடாஆஆஆஆஆஆஆஆ முயற்சிக்கு வாழ்த்துக்கள். தாமதமா கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை சொல்லிக்குறேன்.

  ReplyDelete
 45. ஏஞ்சல் மன்னிப்போடு என் பிந்திய ஆனால் மனம் நிறைந்த நத்தார் புதுவருட வாழ்த்து உங்களுக்கும் உங்க குட்டி ஏஞ்சலுக்கும் !

  ReplyDelete
 46. நண்பர்களுக்கு
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  நொடியாய்ப் பிறந்து
  மணித் துளியாய் மறைந்து
  புது ஆண்டாய் மலர்ந்த
  பொழுதே....
  வறண்ட வாழ்வும்
  தளர்ந்த கையும்
  உன் வரவால்
  நிமிர்ந்து எழுதே!
  புது வருடம் பிறந்தால்
  வாழ்வு மாறும்-என
  ஏங்கித் தவிக்கும்
  நெஞ்சம்..
  உன் வரவே
  நெஞ்சின் தஞ்சம்!
  இறந்த காலக்
  கவலை அதனை
  மறந்து வாழ
  பிறந்து வா வா
  என் புதிய வாழ்வே
  விரைந்து வா வா!

  அழுதுவிட்டேன்
  ஆண்டு முழுதும்
  முயன்று பார்த்தேன்
  விழுந்து விட்டேன்
  அழுத நாளும் சேர்த்து
  மகிழ்ந்து வாழ
  எழுந்து நின்று
  இமயம் வெல்ல
  இனிய ஆண்டே
  இன்றே வா வா
  நன்றே வா வா!

  அன்புடன் இனியவன்

  ReplyDelete
 47. ஒரு வாரம் ஊர் சுற்றப் போகிறேன். இணையத்தின் பக்கம் வர முடியாது. அதனால் இப்போதே சொல்லி விடுகிறேன்... வரும் ஆண்டு உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும், உலகத்துக்கும் இனிமையான ஆண்டாக அமையட்டும்.

  ReplyDelete
 48. அருமையான புத்தாண்டு வரவேற்புப்பா...

  மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்....

  ReplyDelete
 49. அது ஏஞ்சலீனைப் பார்த்து விட்ட ஸ்மைல்.

  ;) - இது அச்சுமுறுக்கைப் பார்த்து. ;))

  ReplyDelete
 50. நான் மொத்தம் சுட்டது ஐம்பது
  முதல் பத்து மோல்டை விட்டு வரவேயில்லை அவ்ளோ
  பாசம் !!!!!!!!!!!!!
  அடுத்த பத்து டீப் ரோஸ்ட் ஆகி பின்ல போச்சு . = 30 ம்.. பரவால்ல. அப்பிடித்தான் ஆகும். அதெல்லாம் மூடி மறைச்சு அழகா இருக்கிறதை மட்டும் தட்டுல வச்சு ஷோ காட்டிரணும். ;)

  //அச்சப்பம் வாங்கி வைச்சு படம் போட்டுடலாம்னு யோசிக்கவேயில்லை// அட! நீங்க அப்பிடி யோசிப்பீங்கன்னு நாங்களும் யோசிக்கவேயில்லை. ;))

  அச்சு பழகிவந்தா 50ம் சரியா வரும். திரும்ப தொலையவிடாதீங்க ஏஞ்சல். சாடில இருக்கிறது அழகா இருக்கு.

  ReplyDelete
 51. நாற்பத்தி நைன்:)

  ReplyDelete
 52. ஐஐஐ.... மீ ட ஐம்பது:).. அச்சு முறுக்ஸ்:).

  //அந்நியன் 2 said...
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சகோ.

  சிஸ்டர் ஆதிரவுக்கும் சொல்லிவிடுங்கள் அவர் தளத்தில் கருத்து பெட்டியை காணோம்//

  அந்நியன்!!! இமா உலகிலும் தேடி இங்கயும் தேடி.... ஆகவும் இப்படி டச்சு பண்ணினா என்ன பண்ணுவேன் நான்?:)) குட்டி இதயம் பொசுக்கென நின்றிடும்:)).....

  கருத்துப்பெட்டி... ஹா..ஹா..ஹா.. என்னாது காணல்லியோ? அது அந்த சுண்டெலியின் வேலை, என் கையில மாட்டிச்சு அவ்ளோதான்... நான் சுண்டெலியைச் சொன்னேன்:).

  விரைவில பெட்டி ஓபின் ஆகும்... ஓபின் ஆக இருந்தா ஆரும் தேட மாட்டினம்:)), ஆனா மூடியிருந்தா மட்டும் எல்லோரும் ஏன் காணல்ல என தேடுவினம்...:).

  ReplyDelete
 53. இது எப்பவாக்கும் அஞ்சூஊஊஊஊஊஊஊ? ஏது புதுவருடத்தோடு லொக் போட்டிட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:))). எனக்கிந்த லொக்கைப் பார்த்தாலே ஒரு அலர்ஜி:).

  ReplyDelete
 54. wish you a very happy new year -2012

  ReplyDelete
 55. மனம் நிறைந்த அன்பு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்....

  ReplyDelete
 56. உங்களுக்கும் உங்க குட்டி ஏஞ்சலுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்..  முயற்சியில் விக்ரமாதித்தனாய்
  வெற்றி பெற்று அச்சப்பம் வெற்றி
  பெற்றமைக்குப் பாராட்டுக்கள்..

  வெற்றி!! வெற்றி !!!!

  ReplyDelete
 57. உண்மையில் நெறைய குப்பைக்கு போயிருக்கும் அதையெல்லாமா சொல்வாங்க . சுப்பர் ர மட்டும் சொன்னாதான எல்லாரும் மதிப்பாங்க .

  ReplyDelete