அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/8/11

கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகள்

முதியோர் இல்ல குழந்தைகளுக்கு 
செய்த வாழ்த்து அட்டைகள் .


இந்த ராபின் வாழ்த்து அட்டை 
க்வில்லிங் முறையில் செய்தது 

                                                                                       


இது Pyramex  card .Decoupage முறையில் செய்தது .
    இந்த மாதிரி படங்கள் வாங்கி வெட்டி இணைத்து 
செய்தேன் .foam pads வைத்து ஓட்டும்போது முப்பரிமாண  
வடிவம் வரும் .                                     
                                                                                   


இதுவும் க்வில்லிங் முறையில் செய்த வாழ்த்து அட்டை 
                                                                                  


    மேலும் சில அட்டைகள் .


                                                                           
     நாங்கள் வருடா வருடம் முதியோர் இல்லத்துக்கு 
கிறிஸ்துமஸ் முன்பு செல்வோம் .அங்கே ஒரு சிறிய 
மரத்தில்   நிறைய காகிதங்கள் மடித்து கட்டி தொங்க 
விடப்பட்டிருக்கும் .நம்ம ஊர்ல கோவில்களில் 
வேண்டுதல் எழுதி முடியிட்டு வைப்போமே அதுபோல 
அவ்வாறு தொங்க விடப்பட்டுள்ள கடிதங்களை அங்கே 
வேலை செய்பவர் எனக்கு காட்டினார் .
                                                                   எல்லா காகிதங்களிலும் 
 எழுதியிருந்த பெரும்பாலான வாசகங்கள் இவை //நான் 
என் மகளுடன்/மகனுடன் பூங்கா செல்லனும் அல்லது 
அவர்களுடன்   மாலைப்பொழுதை கழிக்க வேண்டும் /
அமர்ந்து நான் பேசுவதை அவர்கள் கேட்க்க வேண்டும் /
இப்படி சின்ன சின்ன ஆசைகள் .எனக்கு மிகவும் பாவமாக
இருக்கும் .பெரும்பாலும் அனைவருமே தொண்ணூறு 
வயதை தாண்டியவர்கள் .அன்பை வேண்டி யாசித்து 
நிற்கிறார்கள்.
                          என்ன வாழ்க்கை பணமிருந்தும் அன்பில்லா 
மக்கள் . நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை நோக்கி
திரும்ப வரும்.மனிதர்கள் இதனை உணர்ந்து நடக்கணும் . 
அவர்களின் கேர் டேக்கர் என்னை handmadecards  செய்யுமாறு 
கேட்டார் .
அவற்றில் சிலவற்றை இங்கே போட்டிருக்கிறேன்.


இது ஸ்பெஷல் ........................


                                                                               


       சில மாதமுன்பு என் குட்டி வாண்டு பள்ளியிலிருந்து      
தவளை முட்டைகளை கொண்டு வந்தா .


                                                                                         
                                                                                    
                                                                                                          அவை 
தலைபிரட்டைகளாய் வெளியே வந்து காணமல் போய் 
விட்டன .மூன்று  நாட்கள் முன்பு pond சுத்தப்படுத்தும்போது 
அங்கே இவர் இருக்கிறார் வளர்ந்த தவளை .
                               இவருக்கு ஒருநூல் ஏணி செய்து வைத்தேன் 
வெளியே செல்ல .
                                                                                 
நேரமிருக்கும்போது மீண்டும் சந்திப்பேன் .
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி .
                                                                                       

37 comments:

 1. வாழ்த்தட்டைகள் அழகோ அழகு.தவளை முட்டை,தவளைக்குஞ்சு..ஐயோ..

  ReplyDelete
 2. வாழ்த்து அட்டை மிகவும் அழகு.. தவளை முட்டை எப்படிங்க எடுத்து வந்தாங்க?

  ReplyDelete
 3. உங்கள் மெயில் ஐடி கிடைக்குமா? என் மெயில் ஐடி eniniyaillam.blogs@gmail.com.. முடிந்தால் உங்கள் ஐடி யினை தரவும்..

  ReplyDelete
 4. கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் எனச் சொல்லத் தக்க அளவு
  அருமையான அம்சமான வாழ்த்து அட்டைகள்
  மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தோம்
  மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. @சிநேகிதி said...//

  அந்த தவளை முட்டைகள் மகள் படிக்கும் பள்ளியில் ஒரு சிறு POND இருக்கு
  அங்கே வாரம் ஒருமுறை நெட் வைத்து POND DIPPING மூலம் ECOSYSTEM பற்றி படிப்பார்கள் அங்கிருந்து கொண்டு வந்தது .இது பரவாயில்லை
  NEWT முட்டைகளும் அங்கிருக்காம் .நான் தப்பித்தேன் .உங்களுக்கு இமெயில்
  அனுப்பிட்டேன் பாருங்க .

  ReplyDelete
 6. @Ramani said.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

  ReplyDelete
 7. @ஸாதிகா said...//
  .தவளை முட்டை,தவளைக்குஞ்சு..ஐயோ..///

  ஹா ஹா .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
  என் பொண்ணோட வேலையே இதுதான் .ஒரு பூச்சி புழு விட மாட்டா
  புக் ஷெல்பில் பட்டாம்பூச்சி நத்தை எல்லாம் ஒளிச்சு வச்சிருந்தா ஒருதரம்

  ReplyDelete
 8. வாழ்த்து அட்டைகள் அனைத்தும் அருமை.
  //Pyramex card .Decoupage முறையில் செய்தது .//முறையே எனக்கு புரியலை.நானெல்லாம் எப்படி முயன்று பார்ப்பது.
  முதியோர் பற்றிய பகிர்வு ம்னதை பிசைந்தது.
  மகளோட இண்ட்ரெஸ்ட் பாராட்டதக்கது.பாதுகாப்பது எத்தனை சிரமம்.

  ReplyDelete
 9. வயோதிபர் இல்லத்திற்குச்செல்வதுவும், தவளைக்கு நூல் ஏணி வைப்பதுவும் உங்க மனிதாபிமானத்திற்குச் சான்றுபகருகிறது.

  ReplyDelete
 10. இவ்வளவு அழகழகா செய்யிறிங்களே. கைவினைப்பொருட்கள் செய்வதுசம்பந்தமான பயிற்ச்சி பெற்றனிங்களோ அன்ஜெலின்

  ReplyDelete
 11. அம்பலத்தார் said...//

  வாங்க வாங்க .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
  2009 வரை எனக்கும் கிராஃப்ட் வேலைகளுக்கும் ரொம்ப தூரம் .
  எனது அப்பா இறந்தபோது மிகவும் ஆழ்ந்த துக்கத்தில் இருந்ததால் டிப்ரஷன் ஏற்பட்டு சுகவீனமடைந்தேன் அப்போ என்னை மருத்துவர்கள் டைவேர்ஷன்/relaxation வேண்டும் என்பதற்கு இவ்வாறான கைவேலைகளில் ஈடுபட சொன்னார்கள் .
  அப்போ ஆரம்பிச்சு என்னால் முடியும்போதெல்லாம் செய்யும் கைவேலைகளை charity shops இக்கு தருவேன் .எல்லாம் மனதுக்கு ஒரு திருப்தி தருகிறது .

  ReplyDelete
 12. asiya omar said...//

  இங்கே அப்படியேPyramex card .Decoupage பாக்கில் விற்கிறார்கள் ஆசியா .ஒவ்வொரு எண்ணை பார்த்து ஒன்றின் மீது ஒன்றாக படத்தில் காட்டினபடியே ஓட்ட வேண்டும் .
  கண்டிப்பா அடுத்த கார்ட் செய்முறையோடு காட்டுகிறே

  ReplyDelete
 13. கார்ட்ஸ் எல்லாமே அழகழகா இருக்கு ஏஞ்சல் அக்கா! கலக்கறீங்க!

  தவளை....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! மீ த எஸ்கேப்பூ!!!!

  /ஒரு பூச்சி புழு விட மாட்டா
  புக் ஷெல்பில் பட்டாம்பூச்சி நத்தை எல்லாம் ஒளிச்சு வச்சிருந்தா ஒருதரம் /ஆஆஆத்தீஈஈஈ! ஷெரன்...ஏன் இப்பூடி??!!வருங்காலத்தில Entomology specialist ஆகப்போறியாம்மா?? :)))))))

  ReplyDelete
 14. ஆ.... அஞ்சு கார்ட் அனைத்தும் சூப்பர்... இவை செய்வதுகு பொறுமை வேண்டும். எனக்கு தையல் பூப்போடுதல் பிடிக்கும், ஆனா இப்படியான வேலை பிடிப்பதில்லை. ஆனா மகனுக்கு ஸ்கூலுக்கு தேவைப்படும்போது சேர்ந்து மினக்கெட்டுச் செய்து கொடுப்பேன்.

  போனவாரமும் பருப்பு, அரிசி எல்லாம் சேர்த்து வீடு கட்டினோம்.. புரஜக்ட் வேர்க்.

  ReplyDelete
 15. //முதியோர் இல்ல குழந்தைகளுக்கு
  செய்த வாழ்த்து அட்டைகள் .//

  தலைப்பைப் பார்த்துக் குழம்பிப்போய் அங்கே எப்படிக் குழந்தைகள் என பெரிய கண்டுபிடிப்புக் கண்டுபிடித்துவிட்டேன்:) என்று கேட்க வெளிக்கிட்ட வேளைதான் கிட்னியில் தட்டுப்பட்டுது அவ்வ்வ்வ்வ்வ்:))) முதியோர் இல்லக் குழந்தைகள் கரீட்டு:)

  ReplyDelete
 16. முதலாவது கார்ட்... அணில் செய்ததுபோலவே செய்திருக்கிறீங்க அழகாக இருக்கு.

  ReplyDelete
 17. பப்பி கார்ட் செய்தீங்க பூஸ் கார்ட் செய்யவில்லை.... ஆனா அது செய்யாவிட்டாலும் பறவாயில்லை, சுண்டெலிக் கார்ட் செய்திடப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  ReplyDelete
 18. முந்தின தவளைக்குஞ்சார் வளர்ந்திட்டாரோ அவ்வ்வ்வ்:)).. நானும் ஓடி ஒளித்திடுவேன் அதிலும் தேரை என ஊரில இருக்கும்.. அது நல்ல ஸ்பீட்டாப் பாயும்... கத்திக்கொண்டு ஓடுவோம்:))))

  ReplyDelete
 19. i have already made poos card .check my english blog

  ReplyDelete
 20. http://cherubcrafts.blogspot.com/2011/08/quilled-anniversary-card.html

  ReplyDelete
 21. அங்கே போய் பாருங்க ரெண்டு பூஸ் இருக்கு

  ReplyDelete
 22. கார்ட்ஸ் எல்லாமே அசத்தல். முதியோர் இல்லக் குழந்தைகள்! உண்மைதான். அன்பிற்கு ஏங்கும் அக்குழந்தைகளுக்கு நம்மால் அன்பைத் தவிர வேறெதைக் கொடுத்து அமைதிப்படுத்த முடியும்? உங்கள் சேவை மிகுந்த பாராட்டுக்குரியது ஏஞ்சலின்.

  தவளை வளர்ப்பா? உங்களுக்குப் பொறுமையும் இரக்க சுபாவமும் அதிகமென்று புரியுது. பாராட்டுகள்.

  ReplyDelete
 23. எனக்கும் இதுபோல உதவிகள் முதியோருக்கும் மட்டும் இன்றி முடியாதவர்கள் அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது
  உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.உங்கள் மகிழ்விக்கும் பொன்னான பணி எப்போவும் தொடரட்டும்
  அன்பை கொடுக்கும் ஒரு ஒருவரும் கடவுளே..(god is love)..Thanks a Lot Anglin Akka.

  ReplyDelete
 24. தவளையா அவ்வவ்
  me escapping...:)

  ReplyDelete
 25. ஏஞ்சல்...இந்த உலகத்திலேயே தவளைக்குட்டிக்கு ஏணி வைச்சு ஏத்திவிடுற ஆள் நீங்களாத்தான் இருப்பீங்கள்.கொடுத்து வச்ச தவளைக் குட்டி !

  ReplyDelete
 26. வாழ்த்து அட்டைகள் மிக அழகாக இருக்கு angelin.

  ///என்ன வாழ்க்கை பணமிருந்தும் அன்பில்லா
  மக்கள் . நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை நோக்கி
  திரும்ப வரும்.மனிதர்கள் இதனை உணர்ந்து நடக்கணும் ///

  ரொம்ப அழகாக சொல்லியிருக்கீங்க.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. நீங்கதான் குயின்'ன்னு நிரூபிச்சிட்டீங்க எல்லாமே சூப்பரா இருக்கு...!!!!

  ReplyDelete
 28. ரொம்ப அழகா செய்திருக்கீங்க.தவளை வளர்ப்பு,ஏணீ ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க போங்க,உங்க பொண்ணும் ரொம்ப தைரியசாலி போலருக்கே.ரெண்டு பேருக்கும் என் திருஷ்டி நிறைய பட்டுவிட்டது.

  அந்த பெரியோர்களின் ஏக்கம் மனசுக்கு கஷ்டமாயிருந்தது.

  ReplyDelete
 29. வாழ்த்து அட்டைகள் எல்லாமே பிரமாதமாயிருந்தது.

  முதியோர்களை பற்றி சொன்னது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. தங்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதைக் கூட வேண்டுதல் போல எழுதிப் போட வேண்டியிருக்கிறது.:(

  ReplyDelete
 30. வாழ்த்து அட்டைகள் அனைத்தும் அருமை.வாழ்த்துக்கள்!!!!

  ReplyDelete
 31. சேர்க்கபட்ட படங்கள் அழகு

  ReplyDelete
 32. வாழ்த்து அட்டைகள் மிக அழகாக இருக்கின்றன angelin.. உங்க ப்ளாக் பார்த்தபின் நானும் க்விலிங் செய்ய tools தேடுகிறேன். நீங்க இங்கு எங்கு tools வாங்கினீர்கள்? என்பதை தெரிவிப்பீங்களா.(ஒன்லைனை தவிர)

  //என் பொண்ணோட வேலையே இதுதான் .ஒரு பூச்சி புழு விட மாட்டா
  புக் ஷெல்பில் பட்டாம்பூச்சி நத்தை எல்லாம் ஒளிச்சு வச்சிருந்தா ஒருதரம்//
  என் மகனிடமும் இப்பழக்கங்கள் இருந்தன.

  ReplyDelete
 33. http://www.idee-shop.de/shop/de/dieprodukte/BastelnmitPapier/Papierfalten/EntdeckenSiemehr/QuillingStiftausM
  ஜெர்மனியில் IDEE CREATIVE MARKT இல் கிடைக்கிறது
  UK வில் THE WORKS BOOK STORE /
  HOBBY CRAFT
  இந்த கடைகளில் கிடைக்கும் .நிறைய பேர் தாங்களே செய்கிறார்கள்
  எப்படி தெரியுமா பெரிய கண் கோணி ஊசியை ஷார்ப் பக்கம் FELT PEN மூடியில் குத்தி விட்டு கண் துளையுள்ள ஓரத்தை கட்டிங் ப்ளையர்சால் கவனமாக வெட்டி எடுக்க வேண்டும் .இப்ப SLOTTED TOOL ரெடி
  கீழேயுள்ள ப்ளாகில் செய்முறை அழகா சொல்லி தராங்க
  http://increations.blogspot.com/2008/04/diy-quilling-tool.html

  ReplyDelete
 34. Latha Vijayakumar said...//
  Yoga.S.FR said...//
  siva said...//
  கோவை2தில்லி said...//
  thirumathi bs sridhar said...//
  MANO நாஞ்சில் மனோ said...//
  RAMVI said.//
  ஹேமா said..//
  கீதா said...//

  உங்கள் அனைவரின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 35. Mahi said...//

  ஷரோனோட அம்மா கம்பளி பூச்சில்லாம் பாக்கெட்ல வச்சிருந்தாங்களாம்

  ReplyDelete
 36. ரெம்ப நன்றி angelin.

  ReplyDelete