அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/21/11

மழலைகள் உலகம் மகத்தானது ....தொடர் பதிவு

                                                                               
There is a garden in every childhood, an enchanted place 
where colors are brighter, the air softer, and the morning 
more fragrant than ever again.       
 Elizabeth Lawrence.

                                                                                    

             மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடர் பதிவுக்கு 
என்னை அழைத்த திருமதி BS.Sridhar ஆச்சி மற்றும் திரு .
வை .கோபாலக்ருஷ்ணன் அவர்களின் அழைப்பினை ஏற்று 
எனது பார்வையில் மழலைகள் உலகம் பற்றி பகிர்ந்து 
கொள்கிறேன் .

                                                  நேற்றைய தினம் நவம்பர் 20 ஆம் 
திகதி  சர்வதேச குழந்தைகள் தினம் உலகெங்கும் கொண்டாட
ப்பட்டது .

                          குழந்தைகளுக்கென்று சில உரிமைகள் இருக்கிறது அதனைவலியுறுத்துவதும்தான் இந்த நாளை கொண்டாடுவதன் 
நோக்கம் .
இதோ இருக்காரே இவர்தான் pudsey  bear 
                                                              


                                                                     


இவர்தான் BBC children in need இன் அடையாள சின்னம் .
வெள்ளியன்று மகளின் பள்ளியில் இவரைபோன்று ஒரு பெரிய 
உருவம் உடையணிந்து நின்று கொண்டிருந்தது.
அன்று பிள்ளைகள் சிறிய கப் கேக்ஸ் செய்து விற்று 
கொண்டிருந்தார்கள் இந்த நாட்களில் எல்லா இடங்களிலும் 
பல pudsey bears காணலாம் .இவர்கள் அருகில் பெரிய உண்டி
பெட்டியும் இருக்கும்.


                                                                                       

எல்லா தொகையும் ஏழைக்குழந்தகளுக்காய்  சேர்க்கப்படுகிறது .

 இதோ இவரை  பாருங்க நம்ம சென்னை புகழ் ரிக்சாவில்
இவர் இங்கே பல இடங்களுக்கும் இதில் பிரயாணம் செய்து 
குழந்தைகள் நலனுக்காய் ஒரு தொகை சேர்த்து தந்திருக்கிறார் 


மழலைகள் அழகிய மலர்கள் 
                                                                                   
என்னை பொறுத்த வரையில் நாம் வாழ்க்கையை பற்றி 
அவர்களுக்கு கற்று கொடுப்பதற்கு முன் வாழ்க்கை 
என்னவென்பதனை அவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்து 
விடுகிறார்கள் .                                                                            
ஆறில் ஒரு குழந்தை ,குழந்தை தொழிலாளி எங்கே தெரியுமா 
வளர்ந்து   வரும் உலக நாடுகளில் .
இங்கிலாந்தில் பதின்மூன்று வயதுக்கு கீழுள்ள பிள்ளைகள் வேலைக்கு செல்ல தடை அது மோடேல்லிங்/தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதும் சேர்த்துதான் .
எனக்கு இதை படித்ததும் ஒன்று மட்டுமே நினைவுக்கு வந்தது நம் நாட்டில் சில பல தொலைகாட்சிகளில் எப்படி சின்னசிறு பிள்ளைகளை புரியாத வசனங்களுக்கு ஆட்டுவிக்கிறார்கள் என்னை பொறுத்த வரையில் அந்த குழந்தைகள் பாவம்.

பலரின் பதிவுகளிலும் படித்த கவிதை வரிகள் 
                                                                     
வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே ! 
இனிமேல் தினங்களை விட்டு விட்டு குழந்தைகளை எப்போது 
கொண்டாட போகிறீர்கள் ?
                                                  -கவிக்கோ அப்துல் ரகுமான் 
                                          ஒரு பிள்ளை காலை பள்ளிக்கு செல்கிறது 
வீடு திரும்பியதும் பாட்டு நடனம் இதில்லாமல் ஃ பிரெஞ்சு /
ஜெர்மன் /யோகா வீணை /தற்காப்பு கலை .
இந்தியாவில் மட்டுமில்லை இங்கும்தான் .
ஒரு பெண் தனது தாயிடம் கூறுவதை கேட்டேன் //அம்மா 
எனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேண்டும் // 
அந்த தாய் சிறு வயதில் தான் கற்க முடியாத அத்தனை 
கலைகளையும் மகளை படிக்க சொல்லி நிர்ப்பந்தித்து இருக்கிறார் .
                  நமது ஆசைகளையும் விருப்பு வெறுப்புக்களையும் ஏன் 
குழந்தைகள் மேல் திணிக்கனும்?
ஒரு பானைக்குள் புகையை அடைத்து வைக்க முடியுமா 
ஒரு சிறு துவாரம் கிடைத்தாலும் போதுமே வெளியேறிவிடும் .
சில வருடங்களுக்கு முன் இங்கே நடந்த ஒரு சம்பவம் 
Child Prodigy என்று அழைக்கப்பட்ட இளவயதில் அதாவது 
பதின்மூன்று வயதிலேயே ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் 
சேர்ந்து படிக்க இடம் கிடைத்த ஒரு சிறு பெண் , மிகுந்த மன 
அழுத்தத்தால்தடம் மாறி பணத்திற்காக எழுதவும் மனம் 
வரவில்லை ஒரு பெண் குழந்தையின் தாயாக இருப்பதனால் .
                                              அந்த பிள்ளையின் தந்தை டிவி இசை 
எல்லாவற்றையும் வீட்டில் தடை செய்து இருந்தாராம் .
நடுஇரவில் முகத்தில் குத்தி எழுப்பி படிக்க சொல்வாராம் .
       அந்தபெண்கூறுகிறதுநானும்தம்பிதங்கைகளும்நரகத்திலிரு
ந்தோம்.உயர்நிலையை அடைந்திருக்க வேண்டிய பெண் 
அளவுக்கதிகமான நிர்பந்தம் காரணமாக மன அழுத்தம் 
ஏற்ப்பட்டு இப்போ ஒரு சோஷியல் வொர்க்கராக பணிபுரிகிறார் .
                     

            இவ்வளவு ஏன் நேற்று மாலை ஆலயத்தில் நடந்த சம்பவம் 
நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சர்வீசில் ஒருவர்
 puppet கொண்டு வந்திருந்தார் .அதை வைத்து சிறுவர்களுக்கு 
பைபிள் கதை சொல்ல ஏற்பாடு செய்திருந்தார் .
எங்களுக்கு பின் அமர்ந்திருந்த குடும்பம் உடனே எழுந்து 
விட்டது .பைபிளில் இதெல்லாம் இல்லையென்று .
ஏன் ஜீசஸ் சொல்லியிருக்காரே தேவனுடைய ராஜ்ஜியம் 
சிறு பிள்ளகளுடையது என்று .அவர்களின் சிறு மகன் 
அழுகிறான் ஆசையா இருக்கு பாக்கணும் என்று .
இவர்களெல்லாம் என்ன மனிதர்கள் .அப்படிதான் அங்கே 
இன்னொரு பிள்ளை சிறு பந்தை ஆராதனை துவங்குமுன் 
டைனிங் ஹாலில் வைத்து உருட்டி விளையாடிகொண்டி
ருந்தான் ,இவர்கள் தங்கள் மகனை அனுமதிக்கவே இல்லை 
                                     நான் மெதுவாக அச்சிறுவனை பார்த்தேன் 
துள்ளி விளையாடும் ஆட்டுக்குட்டியின் கால்களை கட்டி 
விட்டால் எப்படி இருக்குமோ அந்த மன நிலை அச்சிறுவனுக்கு 
அவன் கால்கள் தன்னிச்சையாய் அசைந்து கொண்டிருந்தது .
என்னால் இறைவா அந்த தகப்பனுக்கு நல்ல புத்தி கொடு 
என்று பிரார்த்திக்க மட்டுமே முடியும் .

இதுவரையிலும் தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகளை 
எதற்காவது நிர்பந்தித்து இருந்தால் அவர்களிடம் மன்னிப்பு 
கேளுங்கள் .நான் கேட்டிருக்கிறேன் என் மகளிடம் .அதில் 
தவறொன்றுமில்லை .குழந்தைகளை குழந்தைகளாக 
பாருங்கள் .ஆரோக்கியமான வருங்கால சந்ததியை உருவாக்குங்கள் .
                                                                                       
இந்த பதிவு முழுதும் எனது ஆதங்கத்தின் வெளிப்பாடு.
குறையிருப்பின் மன்னிக்கவும் .
இதனைத்தொடர நான் அழைப்பது .
ஐயா அம்பலத்தார் 

திருமதி ரமாரவி
திரு ,ரெவரி
மற்றும் என் அன்பிற்குரிய 
மியாவ் அதிரா 
நம்ம ஜலீலா அக்கா 


                                                                

49 comments:

 1. வாழ்க்கை
  என்னவென்பதனை அவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்து
  விடுகிறார்கள் .//

  முற்றிலும் உண்மை ஏஞ்சலின்...

  அப்துல் ரகுமான் எனக்கும் பிடித்தவர்...அது நியாயமான கேள்வி...


  உங்கள் பதிவு ஆதங்க பதிவு தான்...ஆரோக்கியமான வருங்கால சந்ததியை உருவாக்க...

  இப்படி வசமா மாட்டிவிட்டுட்டீங்க ...முடிந்தவரை எழுதுகிறேன்...உங்களைப்போல் யாரையாவது வசமாக மாட்டி விடுகிறேன்...

  ReplyDelete
 2. உங்களின் ஆதங்கம் நியாயமானது தான்.நல்ல பகிர்வு.

  ReplyDelete
 3. உங்க ஊர் ரிக்‌ஷா நல்லாயிருக்கு.தங்களின் மனக்கருத்துக்கள் புரிகிறது.பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 4. அழைப்பை ஏற்று அருமையான பதிவு எழுதியுள்ள தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


  //ஒரு பெண் தனது தாயிடம் கூறுவதை கேட்டேன் ”அம்மா எனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேண்டும்”
  அந்த தாய் சிறு வயதில் தான் கற்க முடியாத அத்தனை கலைகளையும் மகளை படிக்க சொல்லி நிர்ப்பந்தித்து இருக்கிறார் .//

  ஆம். பல இடங்களில் இது தான் இன்று நடக்கிறது.
  எல்லாக்கலைகளும் திணிக்கப்பட்டு வருகின்றன.
  பாவம். அந்தக்குழந்தைகள்.

  ReplyDelete
 5. //என்னை பொறுத்த வரையில் நாம் வாழ்க்கையை பற்றி
  அவர்களுக்கு கற்று கொடுப்பதற்கு முன் வாழ்க்கை
  என்னவென்பதனை அவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்து
  விடுகிறார்கள் . //

  அருமை..

  மிக அழகாக எழுதியிருக்கீங்க.

  என்னைத்தொடர அழைத்ததுக்கு நன்றி,
  எனக்கு சிறிது அவகாசம் தேவைப்படுகிறது.
  கூடிய விரைவில் எழுதி விடுகிறேன்.
  நன்றி angelin.

  ReplyDelete
 6. நான் ஊர் போயிருந்த போது ஒரு நாள் என் மனைவி : அய்யய்யோ இவள் ஒன்னுமே படிக்கலையே எப்பிடி எக்ஸ்சாம் எழுதப்போராலோன்னு ஒரே கரைச்சல் பண்ணி கொண்டிருந்தவளை இடைமறித்த மகள், மம்மி நீங்க எதுக்கு டென்சன் ஆகுறீங்க நான் சூப்பரா எழுதிட்டு வாறேன்னு போனவள், பஸ்ட் மார்க்கோடு வந்து என் மனைவிக்கு பல்ப் கொடுத்தாள், ஸோ அவர்கள் உலகமே வேறுதான்...!!!

  ReplyDelete
 7. அடடா நான் ரொம்ப லேட்டாயிட்டேன் பொல இம்முறை.... கரெக்ட்டா அதிரா நித்திரையாகிட்டா எனப் பார்த்திட்டுத் தலைப்புப்போட்டிருக்கிறா அஞ்சூஊஊஉ.... நில்லுங்க வாறேன்... கொஞ்சம் நேரமாகும்...

  ReplyDelete
 8. நியாயமான ஆதங்கம்.

  ReplyDelete
 9. @ரெவெரி said...//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரெவரி .
  முன்பெல்லாம் கமென்ட் எழுத கூட பயப்படுவேன் ,இப்பெல்லாம் no fear
  உங்க பார்வையில் மழலைகள் உலகம் எப்படி என்று எழுதுங்கள்

  ReplyDelete
 10. @asiya omar said...//

  உங்க பெயரை ஏற்க்கனவே லிஸ்டில் பார்த்தேன் அதனால் நீங்க மிஸ்ட் இன் மை லிஸ்ட் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியா

  ReplyDelete
 11. //நாம் வாழ்க்கையை பற்றி
  அவர்களுக்கு கற்று கொடுப்பதற்கு முன் வாழ்க்கை
  என்னவென்பதனை அவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்து
  விடுகிறார்கள்//

  வைர வரிகள்.

  பலர் மனதில் இருக்கும் ஆதங்கத்தை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  இதே தலைப்பில் நானும் எழுதி இருக்கிறேன். முடிந்தால் படித்து விட்டு விமரிசியுங்கள்.

  http://vaazhveperaanantham.blogspot.com/2011/11/blog-post_14.html

  ReplyDelete
 12. @thirumathi bs sridhar said...//

  @வை.கோபாலகிருஷ்ணன் said...//

  நான்தான் உங்கள் இருவருக்கும் நன்றி கூற வேண்டும் .என் பார்வையில் மழலைகள் படும் பாட்டை எழுதி இருக்கிறேன் .ஏன் வெறுப்பு கோபம் ஆதங்கம் எல்லாவற்றையும் கொட்டி தீர்த்து விட்டேன்

  ReplyDelete
 13. @RAMVI said...//

  உங்கள் எழுத்தாளுமை எப்பவும் என்னை பிரமிக்க வைக்கும் .உங்கள் பார்வையில் இந்த தொடரை படிக்க ஆசை .எப்ப நேரம் கிடைக்கின்றதோ அப்ப எழுதுங்க

  ReplyDelete
 14. @MANO நாஞ்சில் மனோ said...//
  ஆமாம் நீங்க சொல்வது ரொம்ப சரி .பெற்றோராகிய நாம்தான் தேவயில்லாம எல்லாத்துக்கும் பயபடுறோம் ..பிள்ளைகள் எல்லாவற்றிலும் தெள்ளதெளிவா இருக்காங்க .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 15. @athira said...//
  வாங்க அதிரா .நேற்று போஸ்ட் நள்ளிரவில்தான் எழுதினேன் .பரவாயில்லை உங்கள் பார்வையில் எழுதுங்க இதைப்பற்றி

  ReplyDelete
 16. ஸாதிகா said...//
  வாங்க சாதிகா .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
  என் ஆதங்கத்தை பாதி கொட்டி தீர்த்து விட்டேன் .இன்னும்நிறைய இருக்கு வேறொரு தருணத்தில் பகிர்கிறேன்

  ReplyDelete
 17. ரசிகன் said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .இதோ அங்கே வருகின்றேன்

  ReplyDelete
 18. அழகாகச் சொல்லிட்டீங்க அஞ்சு..... என் மனதில் இருக்கும், கொதிப்பு... கணிப்பு அனைத்துமே உங்கள் எழுத்திலும் காட்டியிருக்கிறீங்க... முற்றிலும் நான் இதுக்கு உடன் படுகிறேன்... சரி பிழை தெரியவில்லை, ஆனா நானும் உங்க கட்சிதான் இந்த விஷயத்தில்...:)))

  ReplyDelete
 19. //அவர்களின் சிறு மகன்
  அழுகிறான் ஆசையா இருக்கு பாக்கணும் என்று .
  இவர்களெல்லாம் என்ன மனிதர்கள் .அப்படிதான் அங்கே
  இன்னொரு பிள்ளை சிறு பந்தை ஆராதனை துவங்குமுன்
  டைனிங் ஹாலில் வைத்து உருட்டி விளையாடிகொண்டி
  ருந்தான் ,இவர்கள் தங்கள் மகனை அனுமதிக்கவே இல்லை //

  ஆமாம் பெற்றோருக்கு எது தேவையோ அதைச் செய்கிறார்கள், குழந்தைகளுக்கான பிடித்த விஷயங்கள், பெற்றோருக்கு போறிங்காக இருக்கும் பட்சத்தில், பிள்ளைகளை அனுமதிக்கிறார்கள் இல்லை.... சில பெற்றோர் உணவு விஷயத்திலும் இப்படி இருப்பதாக அறிந்தேன்... என்னவெனச் சொல்வது...

  ReplyDelete
 20. கடேஏஏஏஏஏஏஏசில என்னையுமோ அவ்வ்வ்வ்வ்வ்:)))... பெரும்பால இடங்களில் இத் தலைப்பு போவதை பார்த்தேன்... நல்லவேளை நம்மவருக்குள் இல்லைப்போல என மனதில் நினைத்தபோது அஞ்சுவின் அழைப்பு:)))...

  ஓக்கை நிட்சயம் தொடர்வேன்.... நானும் என் உள்ளக்கொதிப்பைக் கொட்டித்தான் எழுதுவேன்... எழுதிப்போட்டு ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழே ஒளிச்சிடுவேன் ஓக்கை?:))).

  ReplyDelete
 21. ஆமாம் பட்ஷி பெயார்:)... இங்கு டொட்ஸ் ரீஷேட் கிடைக்கவில்லை, அதனால் பிளேன் ரீ ஷேட் வாங்கி, பப்றிக் பெயிண்ட்டால் டொட்ஸ் போட்டுக் கொடுத்தேன், ஸ்கூலுக்குப் போட்டுப்போக:)))...

  ReplyDelete
 22. மிகச் சரியான கருத்துக்களை தெளிவாகப் பதிந்திருக்கிறீர்கள் ஏஞ்சலின்.பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 23. உங்களின் ஆதங்கம் நியாயமானது தான்... பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 24. வருகைதந்து கருத்துக்களை தெரிவித்த சிநேகிதி , raji ஆகியோருக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 25. குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.சிலநேரங்களில் திக்குமுக்காட வைத்துவிடுகிறார்களே.அருமையான பதிவு.கவிக்கோ சொன்னதுபோல குழந்தைகளைக் கொண்டாடுவோம் !

  ReplyDelete
 26. குழந்தைகளை எப்படி கொண்டாடவேண்டுமென்று அழகாய் உணர்த்திய பதிவு. கட்டுப்பாட்டுக்குள் திணிக்கப்படும் குழந்தைகள் பற்றிய ஆதங்கம் மிகச்சரிதான். நீங்கள் சொல்வது போல் அக்குழந்தைகளின் பெற்றோர் மனமாற்றத்துக்காக பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.

  ReplyDelete
 27. அருமையான கருத்து
  அழகான படங்களுடன்
  விளக்கிச் செல்லும்விதமும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. அப்துல்ரகுமான் கவிதை அழகு. :-)

  ReplyDelete
 29. ஒரு குழந்தையின் மனம் ஒரு களிமண் மாதிரி . அதோட சின்ன வயசுல நாம என்ன செய்யுறோமோ அதுதான் வருங்கால சந்ததி..!! . இது புரியும் போது எல்லாமே நல்லதா அமையும் .


  அருமையான நடையில் ஒரு தொடர் :-)

  ReplyDelete
 30. //இதுவரையிலும் தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகளை
  எதற்காவது நிர்பந்தித்து இருந்தால் அவர்களிடம் மன்னிப்பு
  கேளுங்கள் //

  நான் கேட்டதுக்கு என் குட்டீஸ் சொல்லுது . ஹண்ட்ரட் சாக்லேட் வேணும் அதுவும் இப்பவே ...!! அவ்வ்வ்வ்வ் :-)))

  ReplyDelete
 31. உங்கள் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன் ஏஞ்சலின்...இரவு வணக்கங்கள்...

  ReplyDelete
 32. கொஞ்சம் லேட்.:(

  ReplyDelete
 33. முழுவதும் வாசித்த பிறகு
  உங்கள் ஆதங்கம் எவ்ளோ எளிதாய் யாரும் சொல்லிவிட முடிவது இல்லை
  அறிந்துகொண்டேன்
  குழந்தைகள் உலகம் வேறு

  ReplyDelete
 34. என்னை பொறுத்த வரையில் நாம் வாழ்க்கையை பற்றி
  அவர்களுக்கு கற்று கொடுப்பதற்கு முன் வாழ்க்கை
  என்னவென்பதனை அவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்து
  விடுகிறார்கள் . // true lines..

  ReplyDelete
 35. எங்களை பற்றிய மகத்தான பதிவுக்கு
  குழந்தைகள் சார்பாக
  நன்றி தெரிவித்து கொள்கிறோம் (/\)

  ReplyDelete
 36. pudsey bear செய்தி நல்ல விசயம்...

  ReplyDelete
 37. இதுவரையிலும் தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகளை
  எதற்காவது நிர்பந்தித்து இருந்தால் அவர்களிடம் மன்னிப்பு
  கேளுங்கள் .நான் கேட்டிருக்கிறேன் என் மகளிடம் .//

  மிக அருமையாக சொல்லிட்டீங்க... கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை.... ;-)))))))))))

  ReplyDelete
 38. ரொம்ப சூப்பரான பதிவு
  உங்கள் ஆதங்கம் நியாயமானது தான்
  நானும் ஏற்கனவே நினைத்து வைத்து இருந்த பதிவு தான் மனோ அக்காவும் அழைத்து இருக்காஙக்
  மெதுவா போடு ரேனே.
  டைப் செய்ய நேரம் இல்லை.

  ReplyDelete
 39. கர்நாடகா ஸ்டைல் நெல்லிக்கா சாதம் செய்து பார்த்து குறித்து மிக்க சந்தோஷம்

  ReplyDelete
 40. Jaleela Kamal said...//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா .உங்களுக்கு நேரமிருக்கும்போது தொடருங்கள்

  ReplyDelete
 41. மாய உலகம் said...//

  வாங்க ராஜேஷ் .வருகைக்கும்கருதுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 42. siva said...//
  வாங்க சிவா மழலைகள் சார்பில் உங்க கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி

  ReplyDelete
 43. @ஜெய்லானி said..நான் கேட்டதுக்கு என் குட்டீஸ் சொல்லுது . ஹண்ட்ரட் சாக்லேட் வேணும் அதுவும் இப்பவே ...!! //
  வாங்க ஜெய் உங்க கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி .நூறென்ன இருநூறே வாங்கித்தரனும் செல்ல குட்டீசுக்கு .

  ReplyDelete
 44. கீதா said...//
  வருகைக்கும்கருத்துக்கும் மிக்க நன்றி கீதா .நீங்க எழுதின கதை மிகவும் பிடிச்சிருந்தது அருமை .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 45. RVS said...//

  வாங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .உங்க பார்வையில் மழலை உலகம் படிக்க ஆவலாஇருக்கு சீக்கிரம் எழுதுங்க

  ReplyDelete
 46. Ramani said...//
  வாங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 47. சிநேகிதி said...//
  வாங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 48. raji said...//
  வாங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 49. ஹேமா said...//
  வாங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி

  ReplyDelete