அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/3/11

St. Martin's Day/ஜெர்மனியில்
                                   நவம்பர் 11 ஆம் திகதி மார்டின்ஸ்  டே
ஜேர்மனி /போலந்து.ஃபிரான்ஸ் /ஹங்கேரி லத்வியா 
மற்றும்இன்னும் சில ஐரோப்பிய நாடுகளில் கொண்டா
டப்படுகிறது .
ஆரம்ப காலத்தில் கத்தோலிக்க சமூகத்தால் மட்டுமே 
கொண்டாடப்பட்டு வந்த இந்த நாள் பிறகு ஆங்கலிக்கன் 
சமூகத்தாலும் ஏற்றுக் கொள்ள பட்டது .
எங்கள் மகள் படித்தது பிராட்டஸ்டேன்ட் கின்டர்கார்டன் .
அங்கே எடுத்த படங்கள் இவை .உங்களுக்காக .
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே பிள்ளைகளுடன் 
நாங்களும் நர்சரி சென்று அவர்களுடன் இந்த LANTERN 
செய்ய வேண்டும் .

    

இவ்வாறு தயாரான காகித LANTERN ஐ எடுத்துக்கொண்டு குறிப்பிட்டநாளன்று எல்லா பிள்ளைகளும் பெற்றோரும் 
 ஓரிடத்தில் கூடுவார்கள் .அங்கே பாடல்கள் பாடி ஒரு 
ஊர்வலமாக சிறிது தொலைவிலுள்ள முதியோர் 
இல்லத்திற்கு சென்று கூடுவார்கள் அங்கே இருக்கும் 
எல்லார்ர்முன்பும்   பாடி அவர்களை சந்தோஷப் 
படுத்தியப்பின்   மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வந்து 
அங்கிருந்து நர்சரிக்கு வருவார்கள் அங்கேஎல்லாருக்கும்       
உணவு மற்றும் ஜெர்மன் புகழ் GluheWein  விநியோகிக்கப் 
படும் .     
                                                
திரும்பவும்எல்லாபிள்ளைகளும் ஆடல் பாடல் என்று 
சிறிது நேரம் குதூகலமாக கழிந்தபின் வீட்டுக்கு 
திரும்புவார்கள் .
மார்டின்ஸ் டே என்பது ஒரு முன்னாள் ரோமானிய படைவீரர்/பின்னாள்பிஷப்/கீழே லிங்க் பார்க்கவும் )புனிதர்மார்டின்என்பவர்நினைவாகொண்டாடப்படுகிறது .
அவர் ஒருமுறை இரவு நேரம் குதிரையில் நகர்வலம் 
வந்தப்போ ஒரு ஏழை மனிதன் குளிரில் நடுங்கிக்கொண்டு 
இருப்பதை   கண்டாராம் .உடனே தனது வாளால் தன்னுடைய சால்வையை இரண்டாக கிழித்து அந்த ஏழைக்கு போர்த்த தந்தாராம் .
அடுத்த நாள் இரவு கனவில் ஜீசஸ் தேவதூதர்களிடம் நேற்றிரவு நான் குளிரில் நடுங்கி கொண்டிருந்தபோதுஎனக்கு போர்வை தந்த மனிதர் மார்டின் இவர்தான் என்று கூறுவதை கேட்டாராம் .அதுவரை பாப்டிசம் எடுக்காத அவர் அதன் பின் முழுமையாக கிறித்தவ மதத்தில் தன்னை ஈடுபடுத்தி  கொண்டார் .தன் வாழ்நாளில் பலரை கிறிஸ்தவ மதத்தில் இணைத்து பலருக்கு நன்மைகள் புரிந்திருக்கிறார் .அந்த நினைவாக சிறுவன் ஒருவனை படைவீரன் மாதிரி உடுத்தி போனி ஒன்றின் மீது
இந்த ஊர்வலத்தில் கொண்டு செல்வார்கள்                                                                                          
கடைசி படத்தில் ஒளிவட்டத்துக்கு கீழிருக்கும் ஞானி 
இன்று ரொம்ப ஜெர்மன் பற்றி நினைவூட்டிவிட்டார்    .
நினைவுக்கு வந்ததை எழுதியிருக்கிறேன் .இன்னும் 
விடுபட்டதை கீழுள்ள தளத்தில் சென்று பார்க்கவும் .
                                                 

48 comments:

 1. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
  இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
  கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
  வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

  ReplyDelete
 2. ///உடனே தனது வாளால் தன்னுடைய சால்வையை இரண்டாக கிழித்து அந்த ஏழைக்கு போர்த்த தந்தாராம் .////

  அட அங்கேயும் ஒரு பாரி வள்ளலா?

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

  ReplyDelete
 3. அறிந்திராத செய்தி.

  ReplyDelete
 4. ஓ... ஜேர்மனிக்கால நினைவுகளோ அஞ்சு....

  மகள் நல்ல ஆர்வமாக ட்ரோ பண்ணுகிறா.. cute.

  நான் பின்பு வந்து ஒவ்வொன்றாகப் பார்க்கிறேன்.... இப்போ எஸ்ஸ்ஸ்:)))).

  ReplyDelete
 5. ஒளி வட்டத்திற்குள் ஒளிரும் ஞானியைக்காணும் பாக்யம் பெற்றோம். சந்தோஷம்.

  பல நல்ல தகவல்களும் படங்களும் அருமையாகத் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

  ReplyDelete
 6. அறிந்து கொண்டேன் . பகிர்வுக்கு நன்றிங்க

  ReplyDelete
 7. St. Martin's Day பற்றிய தகவல் அறிந்து கொண்டேன் angelin .
  படங்கள் ரொம்ப அழகாக இருக்கு.
  உங்க மகளுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. குதிரைமேல் அந்தக் குட்டி பயமில்லாமல் இருக்கிறார், எனக்கு தொட்டுப் பார்க்கவே பயம் அவ்வ்வ்வ்:)).. அழகாக இருக்குது படங்கள்.

  பிங் தொப்பியோடு போஸ் கொடுப்பதுதானே குட்டி ஏஞ்சல்... அழகான குட்டி, அழகான போஸ்..

  ReplyDelete
 9. இது இரவு நேரம் தானே நடத்தப்படுகிறது? நேசறியும் இரவு நேரமோ?

  ReplyDelete
 10. athira said...//


  மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து கொண்டாட்டம் இரவு எட்டு வரை நடக்கும் .
  நர்சரிக்கு போவது போன் ஃபயர் (bon fire) செய்ய பெரிய கார்டன் இருக்கு அதுக்குதான் இரவு நர்சரியில் கூடுவார்கள்

  ReplyDelete
 11. ///உடனே தனது வாளால் தன்னுடைய சால்வையை இரண்டாக கிழித்து அந்த ஏழைக்கு போர்த்த தந்தாராம் .////

  அட அங்கேயும் ஒரு பாரி வள்ளலா?

  ReplyDelete
 12. St.Martin's Day celebrations pattri arinthu kondaen.Luvly interesting Write-up.Thanks for sharing it Angel.

  ReplyDelete
 13. நாள்காட்டியில் பார்த்திருக்கிறேன் ஏஞ்சலின்...இதுவரை கொண்டாட்டங்கள் கேள்விப்பட்டதில்லை...
  புதிய தகவல்..அனுபவமும் கூட...நன்றி சகோதரி...

  ReplyDelete
 14. அவர் St.Martin of Tours என்ற புனிதர்
  அன்று கனடாவில் Remembrance Day ...
  அமெரிக்காவில் Veterans Day...என்று வீட்டுக்காரம்மா சொல்றாங்க...

  நமக்கு இன்னைக்கு தேதி...கிழமை கூட ஒழுங்கா தெரியாது... ENZOY...

  ReplyDelete
 15. ரெவெரி said...//ஜெர்மனியில் இந்த மாதிரி நிறைய கொண்டாட்டங்கள் இருக்கு ரெவரி .
  எனக்கு ஜெர்மனி விட்டு வர ஆசையே இல்லை .அது ஒரு தனி அமைதியான வாழ்க்கை.எங்க வீட்டுகாரர்தான் .UKபோகணும்னு ...NOW இங்கே செட்டில்ட்.

  ReplyDelete
 16. அவர் St.Martin of Tours என்ற புனிதர்
  அன்று கனடாவில் Remembrance Day ...
  அமெரிக்காவில் Veterans Day...என்று வீட்டுக்காரம்மா சொல்றாங்க...//
  வீட்டுக்காரம்மா சரியா சொல்லிருக்காங்க .

  ReplyDelete
 17. MyKitchen Flavors-BonAppetit!. said...//
  Thanks for your lovely comments Christy .

  ReplyDelete
 18. ஆமினா said...//
  வாங்க ஆமினா இவர் ஐரோப்பிய பாரிவள்ளல் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 19. RAMVI said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 20. அரசன் said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 21. வை.கோபாலகிருஷ்ணன் said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 22. athira said...
  ஓ... ஜேர்மனிக்கால நினைவுகளோ அஞ்சு...//

  .
  யெச்,யெச்,யெச்,.முதலில் வலது காலை எடுத்து வைத்த இடம் புகுந்த வீடு .நிறைய நினைவுகள் .

  ReplyDelete
 23. ஸாதிகா said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 24. siva said...//
  இனிமே நானே உங்களுக்கு என்று ஒரு கமென்ட் போட்டுடறேன் சோ எப்பவும் நீங்க தான் ஃபர்ஸ்டு .ஓகே

  ReplyDelete
 25. ♔ம.தி.சுதா♔ said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
  இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் //
  உடனே அங்கே வருகிறேன்

  ReplyDelete
 26. உலக சினிமா ரசிகன் said...//
  நான் உங்க கமென்ட் பார்த்ததும் அங்கே வந்து கருத்து அளித்துவிட்டேன் நண்பா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 27. இனிமே நானே உங்களுக்கு என்று ஒரு கமென்ட் போட்டுடறேன் சோ எப்பவும் நீங்க தான் ஃபர்ஸ்டு .ஓகே


  :) thank you....

  ReplyDelete
 28. நீங்கள் வசிப்பது ஜெர்மனியிலா.
  இங்கும் இதுபோல ஆகஸ்ட் மாதம்
  பௌர்ணமி தினம் அன்று
  குழந்தைகள்
  இப்படிப்பட்ட
  காண்டில் உடன் வருவார்கள்

  கதை நீங்கள் சொன்ன பிறகுதான்
  கொஞ்சம் புரிந்தது

  ReplyDelete
 29. அறியாத தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி ஏஞ்சலின்.

  ReplyDelete
 30. என்னது இது..ஒரே குட்டீஸ் போட்டோ ரிலீஸ் சீஸன் போலருக்கே?;) இப்பதான் பூஸ் குட்டிங்களை பார்த்தோம்,அடுத்து குட்டி ஏஞ்சலா?:)))))))) அழகா இருக்காங்க உங்க ஏஞ்சல்!

  படங்களுடன் நல்ல பகிர்வு,நன்றி!

  ReplyDelete
 31. /கடைசி படத்தில் ஒளிவட்டத்துக்கு கீழிருக்கும் ஞானி
  இன்று ரொம்ப ஜெர்மன் பற்றி நினைவூட்டிவிட்டார்./ அவ்வ்வ்வ்..அப்புடியா?? அவர் ஞானின்னா.....நீங்க?????!!!!!

  ;))))))))))))))

  ReplyDelete
 32. புதிய தகவலுக்கு நன்றி ...

  ReplyDelete
 33. அட புது பதிவு... பிறகு வாறேன்.... ;-)

  ReplyDelete
 34. நானும்... நானும் பிறகு வாறேன்:))))).

  ReplyDelete
 35. சிறிது தொலைவிலுள்ள முதியோர்
  இல்லத்திற்கு சென்று கூடுவார்கள் அங்கே இருக்கும்
  எல்லார்ர்முன்பும் பாடி அவர்களை சந்தோஷப்
  படுத்தியப்பின் //

  நம்ம நாட்டிலயும் இது போல் இருந்தால் நல்லாருக்கும் ;-(((

  ReplyDelete
 36. மார்ட்டின் டே பற்றி தெரிந்துகொண்டேன்... பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 37. இங்கும் இந்த நிகழ்வை ஒவ்வொரு வருடமும் பார்க்கிறேன் ஏஞ்சல்.ஆனால் அதன் விளக்கம் அறியத்தந்தமைக்கு சந்தோஷம் !

  ReplyDelete
 38. புதிய தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 39. விச்சு said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

  ReplyDelete
 40. ஹேமா said...//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி .ஜெர்மன் மற்றும் சுவிஸ்
  ஏறக்குறைய ஒரே மாதிரி கொண்டாட்டம் தான்

  ReplyDelete
 41. மாய உலகம் said...//

  நம்ம நாட்டிலயும் இது போல் இருந்தால் நல்லாருக்கும் ;-(((//

  எனக்கும் அந்த ஆதங்கம் நிறைய உண்டு ராஜேஷ் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

  ReplyDelete
 42. @ananthu said..//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

  ReplyDelete
 43. மகி said...
  /கடைசி படத்தில் ஒளிவட்டத்துக்கு கீழிருக்கும் ஞானி
  இன்று ரொம்ப ஜெர்மன் பற்றி நினைவூட்டிவிட்டார்./ அவ்வ்வ்வ்..அப்புடியா?? அவர் ஞானின்னா.....நீங்க?????!!!!! //

  நான் திருமதி ஞானி .ஹா ஹா ஹா

  ReplyDelete
 44. மகி said...
  என்னது இது..ஒரே குட்டீஸ் போட்டோ ரிலீஸ் சீஸன் போலருக்கே?;)//
  ஆமாம் குட்டி ஜெர்மனியில் இருந்தப்போ எடுத்த படங்கள் .இப்ப உயரம் வளந்துட்டா

  ReplyDelete
 45. @ஆயிஷா அபுல் said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிஆயிஷா .

  ReplyDelete
 46. siva said...
  நீங்கள் வசிப்பது ஜெர்மனியிலா.//
  அங்கே விதம் விதமான கொண்டாட்டங்கள் நடைபெறும் அங்கே நாங்க இருந்தப்போ எடுத்த படங்கள் .இப்ப அதிரா கிட்ட வந்துட்டோம் .

  ReplyDelete
 47. வித்யாசமான தகவல்கள்/வாழ்க்கைமுறைகள்.வாழ்த்துகள்.தங்கள் மகளுக்கும்.

  ReplyDelete