அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/16/11

கிறிஸ்மஸ் தாத்தா ..........Flashback

                                       என் மகள் செய்த வாழ்த்து அட்டை 
                                                                                          
                                                                                            
                                கிறிஸ்மஸ் என்றாலே என்னைபோன்ற 
குட்டி பிள்ளைகளுக்கு நினைவுக்கு முதலில் வருவது 
SANTA /FATHER CHRISTMAS  தான் .
இன்னும் நாற்பது நாட்கள் இருக்கு ஆனா நான் கவுன்ட்
டவ்னை இப்பவே ஆரம்பிச்சுட்டேன் .


  
நம்மூர் சாண்டா மாஸ்க் எல்லாம் அணிந்து செயற்கையா 
இருக்கும் .சாண்டா மீது பெரிதாக அக்கரைகொண்டது 
கிடையாது .    


அப்புறம் மணமானதும் வலதுகால் வைத்த இடம் ஜெர்மனி 
அதுவும் நான் சென்ற நேரம் ஹெவி விண்டர் டிசம்பர் மாதம் .  
பார்த்த இடமெல்லாம் வெள்ளையாய் பனி மூடிய வீடுகளும் 
மரங்களும் .அங்கே தான் அழகிய கொழு மொழு ரோசி வைட்
மாஸ்க் போடாத சாண்டா பார்த்தேன் .வித் விதமான 
அலங்கார பொருட்கள் .கிறிஸ்மஸ் மார்கெட் என்று ஒரே 
கோலாகலம் .
                                                                                                
                                                    மகள் பிறந்த பின் அவளுக்காய் 
மரம் க்ரிப்எல்லாம் வைத்தோம் .ரெண்டு வயதிலேயே 
ரொம்ப குறும்பு நான் சொல்வேன் மரத்தை தொட்டா சாண்டா 
பரிசு தராது என்று .அப்படியும் பார்த்தா நேடிவிடி செட்டில் 
பொம்மைகள் இடம்மாறியிருக்கும் .பேபி ஜீசஸ் இருக்குமி
டத்தில் ஆட்டுக்குட்டி ராஜா பக்கத்தில் மேரி என்று மாத்தி 
வைப்பா .இரவே வண்ண தாளில் சுற்றிய பரிசு பொருட்களை 
கிறிஸ்மஸ் மரத்தின் முன் வச்சிடுவோம் .
                                    கிறிஸ்மஸ் நாளன்று காலையில் எழும்பி 
ஒடி வந்து பார்ப்பாள் .முகமெல்லாம் சந்தோஷமா இருக்கும் .
இரவு தான் சிறு மணியோசைகளை கேட்டதாக கணவர் 
அவளிடம் சொன்னப்போ விழிகள் மலர ஆவலுடன் 
கேட்பாள்  .


                      ஊருக்கு வாழ்த்து சொல்ல போன் செய்யும்போது எல்லோரிடமும் சான்டா புராணம் பாடுவாள் .மனதுக்கு பொய் சொல்றோமே என்று கஷ்டமா இருந்தாலும் இதுவே கடைசி 
என்று சொல்லி சொல்லி அந்த பொய் தொடர்ந்து கொண்டே 
வந்தது .மகள் பிறந்தது கிறிஸ்மசுக்கு சரியா ஒரு வாரமுன்
 எனவே ஆரம்ப நாளில் இவள் பிறந்த நாளுக்காய் வீட்டை அலங்கரிக்கிரோமென்று நினைத்து கொண்டாள்.
நாலு வயசில் திடீர்னு ஒரு குண்டை தூக்கி போட்டா .
அதாவது இரவு ஒளிந்திருந்து சான்டாவை பார்க்க போவதாக .
மறந்து தூங்கிட்டா .நல்லவேளை .
ஒருமுறை கேட்டா நம் வீட்டில் சிம்னி இல்லையே ப்படி 
சாண்டா வரும் .????????????
இத மாதிரி ஆளுங்களுக்கின்னே விக்கறாங்களே பெரிய
 சைஸ் மேஜிக் சாவி .
                                                                                                                                     
அதை காட்டி சமாளிச்சோம் .
                                                         எல்லாம் என் கணவரால் வந்தது 
ஒரு சிறு விளையாட்டு பொய் வளர்ந்து மலையாகிவிட்டது .
பிறகு இங்கே இங்கிலாந்து வந்தும் பொய் தொடர்ந்தது .
இரவு உறங்க போகுமுன் சூடா பால் ,குக்கீஸ் .டிசியு பேப்பர் 
எல்லாம் வைத்த பின் தூங்க போவா .
எங்க வீட்டு சாண்டா எல்லாத்தையும் சாப்பிட்டு பாலை 
குடிச்சு கப் சரிவா வச்ச மாதிரி இடத்தை அழுக்கு பண்ணி 
வைப்பார் .சில வீடுகளில் இதற்கென்றே கரித்தூள் ,புல், 
ரெயன்டியர் முடி எல்லாம் வாங்கி போடுவாங்க .சாண்ட்டா 
வந்து சென்றதற்கான அடையாளமாம் !!!!!!!!!!
                                                                                                
.எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க பாருங்க .இதில் சென்ற 
வருடம் என் கணவர் மகளிடம் சொன்னார் இம்முறை 
சான்ட்டாவுக்கு fish கட்லேட்ஸ் செய்ய சொல்லுங்க 
அம்மாவை என்று .சாண்டாஸ் நேம் அண்ட் ஹிஸ் கேம் .
அப்ப கூட மகள் சொன்னா அப்பா சாண்ட்ட நோர்த் போலில் 
இருப்பவர் அவருக்கு இந்திய உணவு பிடிக்காது .   
நல்லா பல்ப் ஹிஹி .  இப்படி ஒவ்வொரு வருஷமும்  
ஒரு லெட்டர் சாண்டாகு எழுதியிருக்கா நான் அவற்றை 
பத்திரமா வச்சிருக்கேன் ஒரு சீல் செய்த என்வலப்பில் .
சென்ற வருடம் சாண்டா பெயரில் ஒரு மெயில் ஐடி திறந்து 
அவளுக்கு மெயில் அனுப்பினார் என் கணவர் .Hi SHARON

Did you know that all my elves have been talking about you? 
They are all very impressed that you have !!ACCOMPLISHMENT!!
this year.
ALL THESE DAYS YOU WERE LOVELY AND WONDERFUL .             
YOU ARE A FANTASTIC GIRL.
I WILL LEAVE SOME PREZZIES FOR YOU TO NIGHT.
HOPE YOU like them.
WISH YOU A MERRY CHRISTMAS.
KEEP SMILING.
PLS.leave SOME COOKIES FOR ME .
DO NOT REPLY BECAUSE I AM TOO BUSY 
BYE BYE BYE .ALWAYS BE GOOD READ YOUR BIBLE EVERYDAY
SING PRAISES ABOUT GOD.
                                                                                                   
                                                                           
இந்த சாண்ட்டா கதை நிறைய வீடுகளில்நடக்கிறது


இப்படி நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது சென்ற டிசம்பர் 2010 வரையிலும் 


தொடரும் ......................32 comments:

 1. First comment cookies for forever baby me the first SIVA

  ReplyDelete
 2. ரொம்ப அழகாக உள்ளது.மகளுக்கு பாராட்டுகளை சொல்லுங்கள்.சீக்கிரம் அடுத்த பகுதியை பப்லிஷ் பண்ணுங்க .

  ReplyDelete
 3. ஹா ஹா ஹா ஹா கதை சூப்பரா இன்ட்ரெஸ்ட்டா போகுதே, தொடருங்கள்.....

  என்மகள் கிறிஸ்மஸ் அன்று காலையில் பிறந்தாள், ஹி ஹி இப்போ எனக்கு இரண்டு செலவை தலையில் வைத்து விட்டாள், ஒன்று அவள் பிறந்தநாள் கொண்டாட்டம், அப்புறம் ஜீசஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் தனித்தனியாதான் வேணும்னு கண்டிப்பா கேட்டு வாங்குகிறாள் எனக்கும் சந்தோஷம்தான் வெளிக்காட்டவில்லை ஹி ஹி...

  ReplyDelete
 4. வாழ்த்து அட்டை அருமை.அனிமேடிங் படங்களும் சூப்பரா இருக்கு.

  ஆங்கிலத்தில் இருக்கும் வார்த்தைகளுக்கு பக்கத்தில் நிறைய இண்ட்டு மார்க்குகள் தெரியுதே.எதும் படங்களா?எனக்கு டிஸ்ப்ளே ஆகவில்லையா?

  ReplyDelete
 5. வாழ்த்து அட்டைகளும், காட்டப்பட்டுள்ள படங்களும் மிகவும் அருமை.

  வாழ்த்துக்கள். vgk

  ReplyDelete
 6. அருமையான வாழ்த்து அட்டைகள்
  தங்கள் மகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
  தங்கள் தொடர் பதிவை ஆவலுடன்
  எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்...
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. வாழ்த்து அட்டை வெகு ஜோர்.

  அழகான மலரும் நினைவுகளுக்கு இப்படி தொடரும் போட்டுடீன்களே...?!! சீக்கிரம் அடுத்த பதிவு வரணும் சொல்லிட்டேன்... :))

  ReplyDelete
 8. அதுக்குள்ளே க்ரிஸ்மாசா...?

  வாழ்த்து அட்டைகளும் படங்களும் அருமை ஏஞ்சலின்...

  சாண்டா ன உடனே மால் சாண்டா உடை பக்கம் இருந்து வர்ற வாடை தான் நினைவு வருது...அவ்வ்வ்வ்...

  உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் கிறிஸ்மஸ் என் பிறந்த ஊர்ல தான்...அதை அடிக்க யாராலும் முடியாது..

  உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் கிறிஸ்மஸ் என் பிறந்த ஊர்ல தான்...அதை அடிக்க யாராலும் முடியாது...

  நடு இரவு மாஸ்...பிறகு கோலாகலம்..கரோலஸ்...வீதியெங்கும் கொண்டாட்டம்...குதூகலம்...
  முக்கியமா அதிகாலைல நல்ல இடியாப்பம்...கறி...கூடவே எல்லாத்தையும் மறந்த உறவினர்...


  ம் ம் ம் ம் ம் ம் ...Countdown begins 40..39...

  ReplyDelete
 9. ஆ... அஞ்சூஊஊஊஊஊஊஊ... மீ..மீ... மீதான் 2ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ:))... கொஞ்சம் திரும்புறதுக்குள்ள, நண்டுக்கறியை இறக்கி வச்சிட்டு வாறதுக்குள்ள வடை போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:))))).

  நில்லுங்க சன்ராவைப் பார்த்திட்டு வாறேன்ன்ன்ன்

  ReplyDelete
 10. சன்ராக் கதை நல்ல சுவாரஸ்யமாக இருக்கு. எங்கள் வீட்டிலும் அதேதான்... இத்தனை வருடமும் சன்ரா சிம்னிக்குள்ளால வந்து போவார் என்றுதான் ஏமாத்திக்கொண்டே இருந்தோம், அப்பப்பா நிறைய பார்ஷல் அனுப்பிடுவார், அழகாக பக் பண்ணி, அதை கிரிஸ்மஸ் வரை ஒளித்து வைக்க நான் படும்பாடு.

  அதுவும் அவர்களை வேளைக்கு நித்திரைக்கு அனுப்பினால்தானே, பின் பிரசண்ட் எல்லாவற்றையும் எடுத்து வெளியில் மரத்தின் கீழே வைக்கலாம்... அது பெரிய பிரச்சனை.

  ReplyDelete
 11. போன வருடம் முதல் மூத்தவருக்கு தெரிந்துவிட்டது. சின்னவருக்கு இன்னும் டவுட். தினமும் காலையில் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கு எனச் சொல்லத் தொடங்கிட்டார் இப்போ.

  படுக்கும்போது கேட்கிறார்... கான் ஐ ரோக் எபவுட் கிரிஸ்மஸ் பிரசண்ட் என.... எல்லாம் ஒரு வயது வரைதான்...

  ReplyDelete
 12. எங்கட வீட்டு சன்ராவுக்கு கோக் தான் பிடிக்கும் எனச் சொல்லி, கோக்கும் பிஸ்கட்டும், ரெயின் டியருக் குகரட்டும் வைப்போம்:)))))

  அதிலயும் ஒரு பகிடி என்ன வென்றால்... வெப்சைட்கூட இருக்கே.... சன்ரா நோத்போலிலிருந்து புறப்பட்டு விட்டார், இப்போ இந்த நாட்டில் இருக்கிறார்.... இப்படி ரைம் போட்டுப் போட்டு... இருந்துது, போன வருடம் அதைப்பார்த்த மூத்தவருக்கு பாதி டவுட், பாதி.... உண்மையாக இருக்குமோ எனவும் ஒரு நம்பிக்கை:))).

  ReplyDelete
 13. மகளின் கார்ட் சூப்பராக இருக்கு.

  ReplyDelete
 14. அடடா 1ஸ்ச்ட்டூஊஊஊஊஉ என அடித்தேன் அவசரத்தில 2 என விழுந்துவிட்டுதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

  ReplyDelete
 15. //angelin said...
  First comment cookies for forever baby me the first SIVA//

  karrrrrrrrrrrrrrrrrrrr * karrrrrrrrrrrrrrrrrrr:)

  ReplyDelete
 16. wowww,congrats to ur little angel,lovely post!!

  ReplyDelete
 17. ஆஹா இப்படி இப்ப தான் கேள்விப்படுறேன்.குழந்தை பாவம்,எப்படி சமாளித்தீர்கள்,அறிய ஆவல்.தொடர்ந்து எழுதுங்க.

  ReplyDelete
 18. மகள் செய்த வாழ்த்து அட்டை அழகு,,,.. ..மகளுக்கு சொல்லும் கதை நல்லாதான் போகுது... தொடருங்கள்...

  ReplyDelete
 19. ஏஞ்சல்...உங்க குட்டியாச்சே.காட் சூப்பர்ன்னு சொல்லணுமா.கிறிஸ்மஸ் களை கட்டத் தொடங்குது !

  இருங்க இருங்க சின்னக்குட்டிக்கு நான் சொல்லித்தரேன்.அப்பாவும் அம்மாவும் ஏமாத்துறாங்கன்னு !

  ReplyDelete
 20. மீ தி பிர்ச்டு ..:)

  சாரி சாரி கொஞ்சம் லேட் ஆகிட்டு

  உங்க பாப்பாவுக்கும் உங்களுக்கும் எனது அட்வான்ஸ்
  கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

  அப்பறம் என்னக்கு பதிலா ஒரு மீ தி பிஸ்ட் கம்மேண்டுக்கும்
  தங்க யு சோ மச் :)

  ReplyDelete
 21. கார்டு சூப்பர்
  உங்கள் மகள் உங்களை விட மிக அழகாய் செய்து இருக்கிறார்
  அப்பறம் உண்மையிலே எங்கு வந்துதான்
  கிறிஸ்மஸ் எல்லாம் கொண்டாட பழகிக்கொண்டேன்
  ம் இன்னமும் கிறிஸ்மஸ் சான்ட்ர வருவார் என்று நம்புகிறேன்

  ReplyDelete
 22. //athira said...
  First comment cookies for forever baby me the first SIVA//

  karrrrrrrrrrrrrrrrrrrr * karrrrrrrrrrrrrrrrrrr:)
  16 November 2011 06:55//

  y y y baby athira :))))

  ReplyDelete
 23. அப்பா சாண்ட்ட நோர்த் போலில்
  இருப்பவர் அவருக்கு இந்திய உணவு பிடிக்காது . ///hahaha....:)yes sema balp..

  ReplyDelete
 24. தொடரும் ......................///

  ஒரு விசியம் எங்கள போல சின்ன குழந்தைகளை
  ரொம்ப நாள் ஏமாத்த முடியாது நாங்கலாம் ரொம்ப சமத்தாக்கும்:)

  so soon release the post..:)

  ReplyDelete
 25. இன்னும் நாற்பது நாட்கள் இருக்கு ஆனா நான் கவுன்ட்
  டவ்னை இப்பவே ஆரம்பிச்சுட்டேன் .

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. மகளின் கைவண்ணத்துக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 27. அருமையான மலரும் நினைலைகள் பகிர்வு!

  ReplyDelete
 28. வருகை தந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி .
  @ ஆச்சி // அது ஈமெயில் அனிமேசன்ஸ் பதிவில் பெட்டி பெட்டியா தான் எனக்கும் தெரிகிறது .

  ReplyDelete
 29. உங்கள் மகள் செய்த வாழ்த்து அட்டை மிக பிரமாதமாக உள்ளது.. அருமை அருமை... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. சாண்டா படங்கள் படத்தில் தான் பார்த்திருக்கிறேன்.. நிறைய வீடுகளில் இது போல் சாண்டா பற்றி குழந்தைகளுக்கு சொல்கிறார்கள் என்றால்.. குழந்தைகளின் சந்தோசத்திற்காகத்தானே...

  ReplyDelete