அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/18/11

கிறிஸ்மஸ் தாத்தா ..........Flashback ..End.

இந்த சாண்ட்டா கதை நிறைய வீடுகளில்நடக்கிறது
இப்படி நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது சென்ற 
டிசம்பர் 2010 வரையிலும் 

ஜெர்மன் கிறிஸ்மஸ் மார்க்கெட்
மிக பிரபலமானது 
                                        நாங்க வசித்த சிட்டி மார்க்கெட் 2005
                                                                           


            இது செஸ்நட்ஸ்  (chestnuts)  .நாங்க க்ரூப்பா காட்டுக்குள்ள 
போய் சேகரிச்சு வருவோம் .நம்ம பலா விதைகளை தணலில் 
சுட்டு சாப்பிடுவோமே .அந்த மாதிரி இதை சுட்டு சாப்பிட்டா 
ருசியா இருக்கும்   .   கிறிஸ்மஸ் மார்க்கட்டில் இப்படி அந்த 
சீசனுக்கு        சுட்டு விற்ப்பார்கள் .    இது கூகிள் படங்கள் .
                                                                                                           


                               
                      இங்கே மால்களில் கிறிஸ்மஸ் சீசனுக்கு 
                      சான்ட்டா  வேலைக்கு ஆட்கள் தேவைன்னு 
                     சரியா நவம்பர் மாத முதல் விளம்பரம் தருவாங்க .
                      இங்கே இதை மாதிரி 
                                     
 • Contract type

  temporary
Person to fulfill the Santa Claus role in 
a Garden centre. Must have full disclosure 
Scotland.
£10.00 per hour 8 hours per week Sat 12-4 Sun-12-4                                                     
இந்த சான்ட்டாக்கள்  எல்லா மால்களிலும் இருப்பாங்க 
நாம் பிள்ளைகளை கூட்டிட்டு போய் காண்பித்து 
அவர்களுடன் புகைப்படமும் எடுக்கலாம் .இங்கே பாருங்க 
என்னம்மோ பெரிய சாதனை புரிந்த மாதிரி எங்க பொண்ணு 
சாண்டா அருகில் .இங்கே வந்த நாளில் இருந்து ஒவ்வோர் 
வருடமும் சான்டாவுடன் படமெடுத்தோம் .
                                                                                                


                                          நாம் படத்துக்கும் பரிசு பொருளுக்கும் 
பணத்தை தந்துவிட வேண்டும் .ஒரு முறை சென்றப்போ 
கணவர் என்னிடம் மகளை வேறு பக்கம் திரும்ப சொல்லி 
சைகை செய்தார் .மெதுவா சொல்றார் ,சாண்டா தாடியை 
கழட்டி வைத்து விட்டு டீயும் தம்மும் அடிச்சிட்டிருந்ததாம்.
எப்படியெல்லாம் பயந்து மாபெரும் ரகசியத்தை கட்டி
 ஸ்ஸ்ஸ்....ஹப்பா காப்பாத்தி இருப்போம் .சென்ற வருடம் 
பிள்ளையிடம் உண்மையை சொல்லிடலாம் என்றேன் 
கணவரிடம் .அதற்க்கு சொன்னார் இந்த வருடம் மட்டும் பரிசு 
வைப்போம் .அவளே பிறகு புரிந்து கொள்வாள் என்று ..


                                                                                       


                             அவள் தெரிந்து கொள்கிரமாதிரியே இல்லை .
இரண்டு வாரங்கள் முன் நான் ஏற்க்கனவே கூறியிருந்தேனே 
ஒரு பிரிட்டிஷ் குடும்பத்தினர் அவர்களுடன் டவுன் செல்ல 
நேரிட்டது .
 சிட்டி முழுதும் ஜகஜோதியாக அலங்கரித்து இருந்தது .                                                                                          
இப்பவே எல்லா கடைகளிலும் அலங்கார பரிசுபொருட்
கள் வந்தாச்சு .வீட்டு முன் இப்படி DOOR HANGERS சான்ட்டவை
 வரவேற்க மாட்டி வைத்திருப்பார்கள் இவை மற்றும் ,,


                                                                                    
சாண்டா பேசுவது போன்று ஆடியோ 
குறுந்தட்டுக்கள் எல்லாம் ஒவ்வோர் பிள்ளைகள் 
பெயருடன் கடைகளில் இருந்தது A to Z .வரை பிள்ளைகள் 
பெயர்  இருக்கும் .என் மகள் பெயரில் மட்டும் இருக்காது 
SHARON என்பதற்கு பதில் SHANNON பெயரிலிருக்கும் .அதை 


                                                                                       
எல்லாம் பற்றி என் மகள் பெருமையா சாண்டா 
புராணம் சொல்லாரம்பிச்சா அந்த சிறு பெண்ணிடம் ,
சிம்னி வழியா குதித்தது ,குக்கீஸ் சாப்பிட்டது .........


                                                                         
அவள் பெயர் கிரேஸ் .வயது எட்டு அவள் என்னை பார்த்து
 "ஏஞ்சலின் இந்த நாட்டில் பெற்றோர் பிள்ளைகளை 
   ஏமாற்றுகிறார்கள் ".
                                                                              
                                                                            
தாங்களே பரிசை வைத்து விட்டு சாண்டா தருவதாக பொய் சொல்கிறார்கள் பிள்ளைகளை ஏமாற்றுவது தவறில்லையா ??
நீங்களும் அப்படியா ??????
மேலிருக்கும் படத்தில் இருக்கும் ஸ்கார்ஃ ப் கட்டிய குட்டி
 பெண் தான் உண்மையை உடைத்தது.
                                                                                    
என் எதிரே அன்பு மகள் .திருடிக்கு தேள் கொட்டின மாதிரி 
நான். என் மகள் வேறு என்னை பார்த்து கேட்டாள்//
அம்மா நீங்களும் அப்படிதான் செய்தீர்களா ?????.
என்ன செய்ய உண்மையை கூறிவிட்டேன் ...ஆமாம் ...
உன்னை சந்தோஷப்படுத்தவே அவ்வாறு செய்தோம் என்று 
கூறினேன் .
இந்த காலத்து பிள்ளைகள் நம்மை விட புத்திசாலிகள் 
அவள் ஒன்றுமே சொல்லவில்லை .என்னை கட்டி அணைத்து 
சொன்னாள்அதனால் என்ன பரவாயில்லை அம்மா நீங்க 
எனக்காகதானே செய்தீர்கள் ஐ லவ் யூ வெரி மச் .
.
இப்ப நாங்க தப்பிச்சிட்டோம் இன்னும் என் மைத்துனர் 
பிள்ளைகளுக்கு தெரியாது .அண்ணி சொன்னார் உங்க 
பொண்ணு கிட்ட உண்மையை உடைத்த மாதிரி யாராவது 
எங்க பிள்ளைகளிடமும் சொன்னால்தான் உண்டு என்று .

இது எங்களுக்கு ஒரு பாடம் இனி எந்த விஷயமானாலும் 
பொய் சொல்லவே கூடாது குறிப்பா பிள்ளைகளிடம் .
இனிமே சான்டா எங்க வீட்டுக்கு வராது .அதையிட்டு இனி 
பொய் சொல்வதும் இருக்காது ஆனா மனசுக்குள்ள ஒரு சின்ன 
வருத்தம் நாங்க ரெண்டு பேரும் போட்டி போட்டுகொண்டு 
தான் இந்த நாடகத்தை நடத்தி வந்தோம் .இந்த  வருடம் 
சாண்டா உடையணிந்து தானே ஹாலில் உட்காரப்போவதா 
கணவர் சொல்லியிருந்தார் .(வசமா மாட்டியிருப்பார்  ) 


மனசுக்கு கஷ்டமா இருக்கு ஆனாலும் Bye Bye SANTA.
                                                                              
இந்த படத்தை  க்ளிக் செய்து பார்க்கவும் 
                                                                                       


                                                                          
                                                                         

65 comments:

 1. Dear Friends
  Enjoy a refreshing weekend!

  ReplyDelete
 2. அழகிய படங்களுடன் சுவாரஸ்யமான விளக்கம்.

  ReplyDelete
 3. இனி எந்த விஷயமானாலும்
  பொய் சொல்லவே கூடாது குறிப்பா பிள்ளைகளிடம் ./////உண்மை உண்மை...

  ReplyDelete
 4. மகளுடன் சாண்டா அனுபவம்...அருமை...

  ஒரு குறிப்பிட்ட வயதில் சாண்டா..டூத் பாய்ரி...எல்லாம் உண்மை இல்லை என்று தெரிகையில் சங்கடம் தான்...

  அவர்களை வாழ்வின் தோல்விகளுக்கு பக்குவப்படுத்தும் கலையை நாம் வேறு எப்படி படிப்பது ஏஞ்சலின்..

  Enjoy the Wknd...

  ReplyDelete
 5. ஆஆஆஆஆ.... வக்கியூம் பண்ணி தோய்ஞ்சிட்டு வாறதுக்குள் வடைபோச்ச்ச்ச்ச்... அவ்வ்வ்வ்வ்வ்:))).

  ReplyDelete
 6. என்னாது செஸ்நட்ஸ் காட்டுக்குள் போய் சேகரித்து வருவீங்களோ? ஜேர்மனியில் அப்படி இருக்கோ? அவ்வ்வ்வ்வ்:)) அந்த மரத்தோடு எடுத்த படம் இருந்தால் பின்பு போடுங்க.

  எனக்கும் அது பிடிக்கும் அவித்த பலாக்கொட்டைபோல சுவை. அவனுக்குள் வைத்து அந்தச் சூட்டோடு சாப்பிட சுவையோ சுவை.

  ReplyDelete
 7. வடைபோச்ச்ச்ச்ச்... அவ்வ்வ்வ்வ்வ்:)))//
  பரவாயில்லை செஸ்ட்நட்ஸ் சாப்பிடுங்க

  ReplyDelete
 8. இங்கும் ஒவ்வொரு வருடமும் மோலிக்குப் போய் சண்டாவோடு படமும் எடுத்து, பிரசண்ட்டும் வாங்கி அந்தப் பிரசண்ட்டுக்கு நாங்களே காசும் கட்டி ஹையோ ஹையோ... அதைவிடக் கொடுமை.... மணித்தியாலக் கணக்கில கியூவில் நிற்கவேண்டியும் வரும்....

  ஆரம்பம் எடுத்தபோது எங்கள் மூத்தவர் என் கையை இறுக்கிப்பிடித்தபிடி சண்டாவை உத்துப்பார்த்தது.... இப்பவும் கண்ணில நிற்குது, படங்கள் இருக்கோணும் முடிந்தால் ஒருநாளைக்கு நானும் போடுறேன்:)).

  மகள் பயப்படாமல் இருக்கிறா சண்டாவோடு:))

  ReplyDelete
 9. ஆமா அதிரா .அப்பெல்லாம் அதன் அருமை தெரியல .இப்பதான் மொபைலும் கையுமா திரியறேன் .பழைய படங்கள் இருக்கணும் தேடி போடுகிறேன்

  ReplyDelete
 10. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் செஸ் நட்ஸ் உடைப்பதுதான் கொஞ்சம் கஸ்டம், ஆனா உடைச்சிட்டால் சூப்ப்ப்ப்ப்ப்:))).

  ReplyDelete
 11. மகள் பயப்படாமல் இருக்கிறா சண்டாவோடு:)) //
  அவ இதுக்கெல்லாம் பயப்பட மாட்டா

  ReplyDelete
 12. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் செஸ் நட்ஸ் உடைப்பதுதான் கொஞ்சம் கஸ்டம், //
  அவன்ல போடுமுன் சின்ன ஸ்லிட் செய்து போடணும் அப்ப ஈசியா இருக்கும் உடைக்க

  ReplyDelete
 13. அது உண்மைதான் அஞ்சு, எங்கட பிள்ளைகளுக்கும் நாங்க பொய் சொல்லவில்லை, ஆனா அவர்களாகவே சண்டா உண்மை என நம்பினார்கள்... அப்படியே தொடர்ந்தோம்... மூத்தவர் வகுப்பில் எல்லோரும் கதைத்த இடத்தில் அது பொய் என்றார் போன வருடமே... சரி தம்பிக்குச் சொல்லாதீங்க அவரே கண்டு பிடிக்கட்டும் என சொன்னோம்...

  தம்பி இப்பவும் நம்புகிறார்:)))... நாம் ஏதும் சொல்லவில்லை... அவராக அறியட்டும்:)))..

  இதே போல்தானே ருத் பெரியும்... நாம் காசு வைப்போம்... துடித்துப் பதைத்து காலையில் காசு வந்திருக்கு என தேடித்தேடிப் பொறுக்கிக் கொண்டு வந்து தருவார்கள்... வளர வளர தாள் காசெல்லாம் வைக்கவேண்டியதாப்போச்சு:)))..

  ஆனா பின்பு அவர்கள் அறிந்து சொன்னார்கள் அது பொய்யாம்... நான் ஆஆ? அப்பூடியா எனக்கேட்டுவிட்டு விட்டுவிட்டேன்:))))

  ReplyDelete
 14. ///இந்த வருடம்
  சாண்டா உடையணிந்து தானே ஹாலில் உட்காரப்போவதா
  கணவர் சொல்லியிருந்தார் .(வசமா மாட்டியிருப்பார் )
  //

  ஹா..ஹா...ஹா.. எதுக்கும் நீங்க ஸ்ரெடியா இருங்க சாமத்தில பார்த்துக் கத்திடப்போறீங்க:)))

  ReplyDelete
 15. athira said..//
  நானும் டூத் ஃபெரி விஷயத்தில் எக்குத்தப்பா செய்து மாட்டுப்பட்டேன் .
  ஒவ்வொரு பல்லுக்கும் பார்பி பொம்மைகளை வைக்க அவ்வ்வ்வவ் .

  ReplyDelete
 16. தம்பி இப்பவும் நம்புகிறார்:)))... நாம் ஏதும் சொல்லவில்லை... அவராக அறியட்டும்:))).//
  கொஞ்ச நாளில் அவரே தெரிந்து கொள்வார் ,அதுவரை வெய்ட் பண்ணுங்க

  ReplyDelete
 17. ஹா..ஹா...ஹா.. எதுக்கும் நீங்க ஸ்ரெடியா இருங்க சாமத்தில பார்த்துக் கத்திடப்போறீங்க:)))//


  மகள் இப்ப வேற ஒரு ப்ளான்ல இருக்கா .
  என்கிட்டே சொல்றா //அம்மா இந்த கிறிஸ்மசுக்கு கட்லட் செஞ்சு வைங்க அப்பா சாப்பிடும்போது கையும் களவுமா பிடிக்கிறேன்//

  ReplyDelete
 18. இது பொய் சொல்கிறோம் என்றல்ல அஞ்சு, இது ஊரோடு ஒத்த விஷயம், அதுவும் மகிழ்வான விடயம்தானே, ஆனால் பிள்ளைகளுக்கு டவுட் வரும்போது, அதை மூடி மறைத்து இல்லை அது உண்மை எனச் சொல்லிக்கொடுக்கப்படாது, அதுதான் தப்பு:)).

  மற்றும்படி சந்தோசம்தானே... ஏன் எங்களுக்கும் கிரிஸ்மஸ்க்கு எங்கட மாமா:(( ரப்பண்ணி பிரசண்ட் அனுப்புவார் அதையும் மரத்தின் கீழே வைப்போம்... மகன் ஓடி ஓடிப் பெயர் வாசித்து, இது உங்களுக்கு எனக் கொண்டுவந்து தருவார்.... கிரிஸ்மஸ் அன்று காலை 4 மணிக்கே விழித்து விடுவார்கள்.., கீழே தனிய போகப் பயம்... வாங்கோ வாங்கோ என எம்மைக் கூப்பிடுவார்கள்.. என் கணவர் சொல்வார்... சண்டா இன்னும் வரேல்லை மணிச்சத்தம் கேட்கவில்லை, 6 மணிக்கு தான் அவர் வருவார்போல என:)))... ..

  ReplyDelete
 19. இம்முறை நீங்களும் மகளும் சேர்ந்து, கணவரை மாட்ட வையுங்க... ஹா..ஹா..ஹா...

  ReplyDelete
 20. //என் கணவர் சொல்வார்... சண்டா இன்னும் வரேல்லை மணிச்சத்தம் கேட்கவில்லை, 6 மணிக்கு தான் அவர் வருவார்போல என:)))... .//

  இதே மணிசத்தம் மேட்டர என் கணவரும் மகள்கிட்ட சொல்லியிருக்கார்
  நானும் ரகசியமா நினைத்து சிரிப்பேன் .இவையெல்லாம் சின்ன சின்ன சந்தோஷங்கள் .அனுபவிக்க வேண்டிய வயதில் அனுபவிச்சுடனும்

  ReplyDelete
 21. நொவெம்பரில் ஸ்கூலிலும் கிரிஸ்மஸ் fete என நடக்குமெல்லோ... அங்கும் சண்டா இருப்பார்.. படமெடுக்க... :))...

  இங்கு மாதக் கடசியில் வருகிறது.

  போனவருடம் அன்றுபார்த்து காலை ஸ்நோ கொட்டிவிட்டது, போய் திரும்பிவரும்போது கார் ஸ்லிப்பாகி... பட்டபாடு மறக்கமுடியாது... இம்முறையும் ஸ்நோ வேளைக்கு வரப்போகுதாமே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

  ReplyDelete
 22. போய் திரும்பிவரும்போது கார் ஸ்லிப்பாகி... பட்டபாடு மறக்கமுடியாது... இம்முறையும் ஸ்நோ வேளைக்கு வரப்போகுதாமே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))). //
  போன டிசம்பர் கணவரின் கார் பழுதாகி குளிருக்கு நின்றுவிட்டது நாங்க
  ஸ்க்ராப்புக்கு போட்டுட்டு உடனே புது கார் வாங்கினோம் .இம்முறை கவனமா இருக்கா சொல்லணும்

  ReplyDelete
 23. வெளிநாட்டில் என்பதால்தான் இப்படியெல்லாம்.... இங்கு சண்டா என்பது பொதுவான ஒருவராகத்தான் கருதுகிறார்கள், அதனால் எல்லோரும் கொண்டாடுகிறார்கள், ஆனா எங்கட நாட்டில.... இதெல்லாம் கிரிஸ்தவ மதத்தினர் மட்டுமேதானே கொண்டாடுவார்கள், அதனால நாம் சின்ன வயதில் இதை அனுபவிக்கவில்லை....

  நேரமாகுது அஞ்சு மீண்டும் பேசலாம்... சீ யூ... பை பை... ஒட்டி மீன் பிஸ்:)))) ஹா..ஹா..ஹா... இது எப்பூடி?:)))

  ஸ்கூலில் படிக்கும்போது என்ன கறி எனக் கேட்டால் அது “ஒட்டி மீன் பிஸ்” என நகைச்சுவையாகப் பதில் சொல்வோம்.... அந்த ஞாபகம்:)))

  ReplyDelete
 24. ஸாதிகா said...
  அழகிய படங்களுடன் சுவாரஸ்யமான விளக்கம்.//
  Thanks a bunch for your lovely comments

  ReplyDelete
 25. @ரெவெரி said..//

  //அவர்களை வாழ்வின் தோல்விகளுக்கு பக்குவப்படுத்தும் கலையை நாம் வேறு எப்படி படிப்பது ஏஞ்சலின்..//
  exactly .thanks for your lovely comments .enjoy your week end

  ReplyDelete
 26. படங்களும் அருமை விவரிப்புகளும் அருமை, இந்த காலக் குழந்தைகள் படு ஷார்ப்பா இருக்காங்க....!!!

  ReplyDelete
 27. ஏஞ்சலின்
  இந்த பதிவையும் பின்னூட்டங்களையும் படிக்கும்போது என் மாமியார் சொன்ன பழமொழியில் வரும் குருவியாக மாறிவிட்டேன்.

  அது என்ன பழமொழின்னா
  கொய்யாப்பழ காட்டுக்குள்ள புகுந்த குருவி பார்க்குறமாதிரி பார்க்கிறான்னு சொல்லுவாங்க.

  எனிஹவ் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.படங்கள் சூப்பர்.

  ReplyDelete
 28. @thirumathi bs sridhar said...//


  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆச்சி

  ReplyDelete
 29. @MANO நாஞ்சில் மனோ

  இந்த காலக் குழந்தைகள் படு ஷார்ப்பா இருக்காங்க....!!!//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க .எதையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் அவர்களுக்கு இருக்கு .அவங்க தெளிவாதான் இருக்காங்க .

  ReplyDelete
 30. Interesting read.Nice Seasontiming Round up with luvly clicks.Luv it Angel.

  ReplyDelete
 31. சில சந்தோஷங்கள் குழந்தைப் பருவத்தில் மட்டுமே சாத்தியம் ஏஞ்சல் அக்கா! அது போன்ற விஷயங்கள்ல இந்த சான்டாவும் ஒன்று. இப்போ இந்த வயசில யாராவதுகிட்ட சான்டாக்ளாஸ் வருவார்னு சொன்னா நம்புவமா சொல்லுங்க? இதெல்லாம் ஒரு பெரிய பொய்யின்னு சொல்லிகிட்டு..சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு? ;))))))))

  நானும் பூஸ் கட்சிதான்! :)

  ReplyDelete
 32. க்றிஸ்மஸ் லைட்டிங் படங்கள் சூப்பரா இருக்கு!:)

  நானும் செஸ்ட்நட் ஒருமுறை வாங்கியிருக்கேன்,ஆனா அவ்வளவாப் புடிக்கலை! நீங்க காட்டுக்குள்ளயே போய் எடுப்பீங்களா?? அந்த போட்டோஸ் இருந்தா தேடிக் கண்டுபிடிச்சு போஸ்ட் பண்ணுங்கோ!:)

  ReplyDelete
 33. செஸ்ட்நட்ஸ் சுவிஸ்ல மரோனி என்று சொல்லுவோம்.நானே வறுத்துச் சாப்பிடுவேன்.குளிர்காலத்து விஷேசத்தில் இந்த மரோனியும் ஒன்று.உணவகங்களில் விஷேச மெனுக்கள்கூட வருமே !

  ReplyDelete
 34. ஹேமா said...//
  வாங்க ஹேமா .ஜெர்மனில கசடானியன்ஸ் என்று சொல்வாங்க .ஆனா அந்த டேஸ்ட் இங்கே இங்க்லன்ட்ல இல்லை .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி

  ReplyDelete
 35. மகி said...//
  ஆமாம் மகி ஜெர்மனில நாங்க இருந்தது கன்ட்ரி சைட் நிறைய திராட்சை தோட்டம் அப்புறம் காடுகள் மலை எல்லாம் இருக்கும் .ஆனா மருந்துக்கு கூட நம்மாட்களை பாக்க முடியாது .படங்கள் தேடிபாக்கறேன் .எல்லாம் அட்டிக்லஇருக்கு

  ReplyDelete
 36. இதெல்லாம் ஒரு பெரிய பொய்யின்னு சொல்லிகிட்டு..சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு? ;)))))))) //

  ஆமாம் மகி நீங்க சொல்றது சரிதான் ஆனா எங்க பொண்ணு ரொம்ப சென்சிடிவ் அது மட்டுமில்லாம ஏழு லெட்டர்ஸ் பத்திரமா வச்சிருக்கேன் எல்லாம் அவ உருகி உண்மைன்னு நினைச்சி சான்ன்டாக்கு எழுதினது .நான் பயந்த மாதிரி அவ எங்களை தவறா நினைக்கல ,அதனால் சந்தோசம் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

  ReplyDelete
 37. மகி said...
  க்றிஸ்மஸ் லைட்டிங் படங்கள் சூப்பரா இருக்கு!:)

  நானும் செஸ்ட்நட் ஒருமுறை வாங்கியிருக்கேன்,ஆனா அவ்வளவாப் புடிக்கலை!//


  சில நேரம் பழசை மறுபடியும் வறுத்து வித்திருப்பாங்க அது தீஞ்ச மாதிரி கடினமா இருக்கும்

  ReplyDelete
 38. சிட்டி மார்க்கெட்.. சூப்பரா ஜொலிக்குது...

  ReplyDelete
 39. மகள் விவரம் அறிந்தவுடன்.. அவங்க மகிழ்ச்சிக்காகத்தானே பொய் சொன்னீங்கன்னு புரிஞ்சுக்கிட்டாங்கள்ல.. அதுவே சந்தோசந்தானே...

  ReplyDelete
 40. பகிர்வுக்கு பாராட்டுக்கள்...

  ReplyDelete
 41. MyKitchen Flavors-BonAppetit!. said...//
  Thanks for your lovely comments Christy .have a great week end .

  ReplyDelete
 42. பகிர்வுக்கு பாராட்டுக்கள்...

  ReplyDelete
 43. அட இப்பவேயே வந்திட்டாரா எங்கே எனக்கு ரொபி...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

  ReplyDelete
 44. எப்படியெல்லாம் பயந்து மாபெரும் ரகசியத்தை கட்டி
  ஸ்ஸ்ஸ்....ஹப்பா காப்பாத்தி இருப்போம்
  பகிர்வுக்கு பாராட்டுக்கள்...

  ReplyDelete
 45. படங்களும் பகிர்வும் அருமை.சாண்டா குட்டு உடைந்து விட்டதா?அதனால் என்ன?இத்தனை வருடம் மகளை மகிழ்ச்சி படுத்தியது தான் பெரிய மகிழ்ச்சி.

  ReplyDelete
 46. மிக அருமையான படங்களும் பதிவும். மகள் சூப்பர்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 47. குழந்தைகள் உலகம் மகத்தானது என்ற தொடர் பதிவிற்கு என் அழைப்பினை ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையில் அழைப்புவிடுத்துள்ளே.

  என் தற்போதைய பதிவிற்கு வருகை தரவும்.

  ReplyDelete
 48. ”மழலைகள் உலகம் மகத்தானது” என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

  அன்புள்ள வை. கோபாலகிருஷ்ணன்
  gopu1949.blogspot.com 22.11.2011

  ReplyDelete
 49. நான் வேணும்னா உங்காத்துக்கு சாண்டா வேஷம் போட்டுண்டு வரட்டுமா?? (போடாம வந்தாலே அப்பிடிதான் இருக்கும்னு வாரிவிடக் கூடாது சொல்லிட்டேன் ஆமா!)

  ReplyDelete
 50. இந்த காலத்து பிள்ளைகள் நம்மை விட புத்திசாலிகள்
  அவள் ஒன்றுமே சொல்லவில்லை .என்னை கட்டி அணைத்து
  சொன்னாள்அதனால் என்ன பரவாயில்லை அம்மா நீங்க
  எனக்காகதானே செய்தீர்கள் ஐ லவ் யூ வெரி மச் .
  >>
  நிஜம்தான் நம்ம பிள்ளைங்கதான் நமக்கு ஆசான்கள்.

  ReplyDelete
 51. @தக்குடு said...//


  வாங்க தக்குடு பிசியான நேரத்திலும் வந்திருக்கீங்க ,உங்களை கிண்டல் செய்ய மாட்டேன் .எப்படியும் நீங்களும் கொஞ்ச காலத்துக்கு அப்புறம் சான்ட வேஷம் போடணும்

  ReplyDelete
 52. ராஜி said.//
  வாங்க ராஜி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 53. அன்புடன் மலிக்கா said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 54. asiya omar said...//
  ஆமாம் ஆசியா பல நாள் குட்டு உடைந்து போனது
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 55. இராஜராஜேஸ்வரி said...//
  வாங்க வாங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 56. மாலதி said...//
  வாங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 57. ♔ம.தி.சுதா♔ said...//
  வாங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
  கண்டிப்பா கிறிஸ்மசுக்கு பெருய பாக்ஸ்ல வச்சு சாக்லேட்ஸ் தரேன்

  ReplyDelete
 58. siva said...//
  வாங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 59. மாய உலகம் Rajesh//
  வாங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 60. இங்கு துப்ாயிலும் எல்லா ஷாபிங் மாலிலும் கிருஸ்மஸ் தாத்தா, வித விதமான மரம் எல்லாம் வைப்பாங்க

  ReplyDelete
 61. Jaleela Kamal said...//

  வாங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 62. ஹாஹா அமெரிக்காவை விட அங்கு சாண்டா கதை இன்னும் ஜோரா இருக்கே.. :-)
  இங்கு தொடர்கிறது சாண்டா மற்றும் tooth fairy.. பசங்க நம்புறமாதிரியும் இருக்கு, நம்பாத மாதிரியும் இருக்கு :-)

  ReplyDelete