அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/9/11

வாழ்த்து அட்டையும் .....ஒரு விண்ணப்பமும்


சிறகை விரித்து பறக்க துவங்கப் போகும் ஒரு சின்ன 
தேவதைக்கு இந்த வாழ்த்து அட்டையை செய்தேன் .
                        
                          நான் குறிப்பிடும் இந்த தேவதைக்கு இந்த மாத   
இறுதியில் பதினெட்டு வயதாகபோகிறது .பெயர் செலீனா .
இவர் ஸ்பாஸ்டிக் குறைபாடுகளுடன் பிறந்தவர் .இவரின்
மற்ற சகோதரிகளை ஏற்கனவே சந்தித்திருக்கிறேன்.
இவரை பற்றி கேள்வி பட்டிருந்தாலும் சந்தித்தது சில 
மாதங்களுக்கு முன்புதான்.பார்த்த மாத்திரத்தில் அவர் 
புன்னகை என்னையும் தொற்றி கொண்டது .வீல்சேரில
தான் பயணிப்பார்பேசவும் இயலாது .
         ஆனால் எப்பவும் சந்தோஷமாக இருக்கும் பூ முகம் .
              
            இவர்கள் குடும்பம் ரோமானிய ஜிப்சிஸ் /travellers.
இங்கிலாந்தில் ஐரோப்பிய யூனியன் விரிவாக்கத்தின் 
பிறகு பல நாடுகளிலும் இருந்து இங்கே மக்கள் குடி
யேறுகிறார்கள் .அப்படி வந்தவர்கள் இவர்கள் .இங்கே 
இவர்களுக்கு சகல வசதிகளும் கவுன்சில் மற்றும் அரசு 
செய்து கொடுக்கிறது .இவர்கள் குடும்பத்தில் ஐந்து 
பிள்ளைகள் இதோ இன்று ஆறாவதாக ஒரு பிள்ளை 
பிறக்க இருக்கிறது இந்த பிள்ளைகள் இவர்களுக்கு ஒரு 
விதத்தில் வருமானத்துக்கு ஒரு வழி .ஒரு முறை அவர்கள்
வீட்டுக்கு போனப்போ ,தரையில் தவழ்ந்தவாறு வந்து என்
கைகளை இறுக பற்றி கொண்டாள்எனக்கு மனதை 
பிசைந்தது .அந்த பிள்ளையின் முகத்தில் என்ன சந்தோசம். தினமும்அவர்களுக்கான ஸ்பெஷல் நீட்ஸ் பள்ளிக்கு 
செல்கிறாள் .இவள் வீட்டில் எந்த வசதியும் கிடையாது .
அரசு பணம் தரும் ஆனால் எல்லாம் விழலுக்கு இரைத்த நீர் .
இப்ப இவளுக்கு பதினெட்டு வயதாவதால் அவர் விருப்பபடி 
தனியே ஒரு ஹோமில் தங்கலாம் தனது ஆசிரியையிடம் 
தான் தனியே இருக்க விரும்புவதாக சைன் லாங்குவேஜில் கூறியிருக்கிறாள் .

                         இனிதான் பிரச்சினை துவங்கும் தகப்பனுக்கு 
வருவாயை இழக்க மனம் வராது .எதையாவது சொல்லி 
தடுப்பார் என்றுதெரிந்த நண்பி கூறினார் .
தனியே சென்றால் செலீனாவுக்கு எலக்ட்ரிக் வீல் சேர் 
மற்றும் ஒரு guide dog மற்றும் சகல வசதிகளும் கிடைக்கும் .
இவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் நண்பர்களே .
                                                      
                                

36 comments:

 1. அந்த பெண்ணின் நிலைமையை நினைத்தல் மனம் கலங்குகிறது.

  உங்களுடைய வாழ்த்து அட்டையுடன் சேர்த்து எங்களின் வாழ்த்துகளையும் அந்தப்பெண்ணிற்கு கொடுத்துவிடுங்கள் angelin.

  ReplyDelete
 2. செலீனாவைப்போன்று பலரை ஒவ்வொரு வாரமும் நான் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.
  அந்த ஒரு மணி நேரம் அந்த வாரத்தில் நான் செலவிடும் மிகவும் திருப்தி தரும் தருணங்களில் ஒன்று...

  நிறைய பெற்றோர் இப்படி வாழ்வது மேற்கத்திய நாடுகளில் சகஜம்...

  என் பிரார்த்தனைகள்...மற்றும் வாழ்த்துக்கள் ஏஞ்சலின்...

  ReplyDelete
 3. அந்த சகோதரிக்கு என் பிரார்த்தனைகள் ஏஞ்சலின்

  ReplyDelete
 4. செலீனாக்கு எனது வாழ்த்துக்களும், பிராத்தனைகளும்...

  ReplyDelete
 5. அடடா முதலில் ஆரம்பம் வாழ்த்து அட்டை, சூப்பர் கலர், எனக்கு மிகவும் பிடித்த கலர்... சூப்பராக இருக்கு.

  ReplyDelete
 6. செலீனாவுக்காக நாமும் பிரார்த்திக்கிறோம். என்ன செய்வது... இதுக்கு எதுவும் சொல்ல முடியாது. கடவுளுக்குத் தெரியும் எது நல்ல வழி என. அவர் நல்வழி காட்டுவார்.

  ReplyDelete
 7. பிரார்த்திப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும் நம்மால்.நாமும் ஒரு விதத்தில் ஒரு.... !

  ReplyDelete
 8. @RAMVI said...//
  முதல் வருகைக்கும் கருத்து மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி ரமா .

  ReplyDelete
 9. @ரெவெரி said...//
  //அந்த ஒரு மணி நேரம் அந்த வாரத்தில் நான் செலவிடும் மிகவும் திருப்தி தரும் தருணங்களில் ஒன்று...//
  ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான் .கள்ளமற்ற இவர்களை காணும்போது மனதுக்கு நிம்மதி
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரெவரி .
  எவ்வளவு பணம் அரசு தருகிறது .அந்த பிள்ளைக்கு கொஞ்சமேனும் செலவழிதிருந்தாலோ அல்லது வசதிகள் செய்து தந்திருந்தாலோ அந்த பிள்ளை இத்தகைய முடிவை எடுத்திருக்காது .

  ReplyDelete
 10. @ஆமினா said...//

  வருகைக்கும் அன்பான பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி ஆமினா

  ReplyDelete
 11. @சிநேகிதி said...//
  வருகைக்கும் அன்பான பிரார்த்தனைகளுக்கும் மற்றும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 12. ஹேமா said...//
  வாங்க ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .நல்ல உள்ளங்களின் பிரார்த்தனைகளுக்கு இறைவன் செவி சாய்ப்பார் என்ற நம்பிக்கையில் உங்க அனைவரிடமும் பகிர்ந்து கொண்டேன் .

  ReplyDelete
 13. @athira said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அதிரா .நம்மால் பிரார்த்தனை மட்டுமே செய்ய இயலும் .அந்த கூட்டம் பொல்லா கூட்டம் .

  ReplyDelete
 14. வாழ்த்து அட்டை அழகா இருக்கு ஏஞ்சல் அக்கா! செலீனாவுக்கு இனிமேலாவது நல்லவழி பிறக்க என் ப்ரார்த்தனைகள்! இப்படிப்பட்ட குழந்தைகளைப் பார்க்கையில் கடவுள் மீது கன்னாபின்னான்னு கோவம் வரும் எனக்கு! :(

  ReplyDelete
 15. @மகி said...//
  வாங்க மகி வருகைக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றிம்மா .

  ReplyDelete
 16. நிச்சயமாகப் பிரார்த்திப்பேன். பிறர் துன்பம் உணர்ந்து அவர்களுக்காக தாங்களும் பிரார்த்தித்து, வாழ்த்து அட்டை தானே தயாரித்து, பிறரையும் அவர்களுக்காகப் பிரார்த்திக்கும்படிச் சொல்லும் தங்களின் அழகிய மனமும் குணமும் என்னை மெய்சிலிரிக்க வைக்கிறது.

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
  அன்புடன் vgk

  ReplyDelete
 17. நானும் சாமிக்கிட்ட வேண்டிக்கிறேன்
  உங்களுக்கும் நீங்கள் குறிப்பிட்டபடி உள்ள நபருக்கும் மற்றும் கஷ்டப்படும் அனைவருக்காகவும்
  வேண்டிக்கொள்கிறேன்

  ReplyDelete
 18. மனதை பிசைந்த பதிவு அக்கா
  இன்னும் எத்தனை பேரு இருக்காங்க
  அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்

  ReplyDelete
 19. மனதினை கனக்கசெய்து விட்டது ஏஞ்சலின்,செலீனாவுக்கு பிராத்தனைகள்.

  ReplyDelete
 20. ரொம்ப கவலையா இருக்கு அக்கா செலீனா பற்றி நினைத்தால்...
  நிச்சியமா பிரார்த்திப்போம்....
  நல்லது நடக்கும்.... அல்லது நடப்பதுவே நல்லதாக அமையும்....
  இவங்க கடவுளோட குழந்தைங்க.... நம்மைவிட அவரு ரொம்ப அரவணைப்போட பாத்துப்பாரு....
  உங்களோட வாழ்த்து அட்டையும்..... சிறகை விரித்துப் பறக்கப்போகும் ஒரு சின்ன தேவதை எனும் துவக்கும் ரொம்ப ரொம்ப அழகு.... So sweet of you akka....

  ReplyDelete
 21. கண்டிப்பாக அவருக்காக பிரார்த்திப்போம்.. ஆண்டவர் கைவிட மாட்டார்...

  ReplyDelete
 22. அந்த வாழ்த்து அட்டையுடன் சேர்ந்து.. அவரது வாழ்வும் வசந்தமாகட்டும்....

  ReplyDelete
 23. தனியே சென்றால் செலீனாவுக்கு எலக்ட்ரிக் வீல் சேர்
  மற்றும் ஒரு guide dog மற்றும் சகல வசதிகளும் கிடைக்கும் .
  இவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் நண்பர்களே//


  செலீனாவுக்கு மட்டுமில்லை அவர் குடும்பத்திற்காகவும் பிரார்த்திப்போம் மக்களே....

  ReplyDelete
 24. அந்த வாழ்த்து அட்டையில் இருக்கும் பாசம் போல செலீனாவுக்கும் பாசம் அன்பு கிடைக்கட்டும்...

  ReplyDelete
 25. வை.கோபாலகிருஷ்ணன் ,MANO நாஞ்சில் மனோ ,மாய உலகம் Rajesh,ஸாதிகா ,siva ,Prabu M ,
  உங்க அனைவரின் அன்பான பிரார்த்தனைகளுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 26. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 27. பிரார்த்தனை செய்வோம். நல்லது நடக்கட்டும். எத்தனை எத்தனை துன்பங்கள் உலகத்தில். நாமும் ஒரு இயலாத குடும்பப் பிள்ளையை 18 வருட காலமாக வளர்க்கிறோம், எம்மோடு அல்ல. வாழ்த்துகள் சகோதரி. நீண்ட நாட்களின் பின் இங்கு வந்தேன்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 28. ஃபேஷன் நகைகள் செய்ய தேவையான பொருட்களை எங்களுக்கு ஒரு போன் கால் மூலமாகவோ அல்லது ஒரு மெயில் மூலமாகவோ தொடர்புக்கொண்டால் உங்கள் வீடு தேடி கூரியர் மூலமாக பொருட்களை அனுப்பி வைக்கிறோம்..
  பொருட்கள் தேவைக்கு தொடர்புக்கொள்ளவும்:
  moosa shahib
  e.mail : moosafs69@gmail.com
  contact no: 0476 - 3293737 Mobile no : 09387044070
  NEW JANATHA FANCY JEWELLERY
  B.R.Complex, K.S.R.T.C.Bus Stand,
  Thevarkaavu Road
  karunagappally - 690518

  ReplyDelete
 29. செலீனாவின் வாழ்வில் வசந்தமுண்டாகட்டும்..

  ReplyDelete
 30. செலீனா அவர்களின் வாழ்வில் அனைத்து வளங்களும்
  நலங்களும் சேர மனதார பிரார்த்திக்கிறேன்
  தங்கள் பதிவினுள் இன்றுதான நுழைந்தேன்
  தொடர்வதில் பெருமை கொள்கிறேன்

  ReplyDelete
 31. http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_634.html

  Please visit the above post & give a small comment. Urgent please. Left out one out of the 27 Star posts. vgk

  ALSO PLEASE COME FOR TODAY'S 4 POSTS.
  2 ALREADY RELEASED. 2 MORE BY 4PM & 9 PM

  ReplyDelete
 32. செலீனா வாழ்வு வளமாய் அமைய வாழ்த்துக்கள்..
  இப்படி பலவிதமான மக்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் பொழுது,எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

  ReplyDelete
 33. எப்பவும் சந்தோஷமாக இருக்கும் பூ முகம் .
  செலீனாவுக்கு பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 34. இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 35. என்னங்க இது,

  //இவர்கள் குடும்பம் ரோமானிய ஜிப்சிஸ் /travellers.
  இங்கிலாந்தில் ஐரோப்பிய யூனியன் விரிவாக்கத்தின்
  பிறகு பல நாடுகளிலும் இருந்து இங்கே மக்கள் குடி
  யேறுகிறார்கள் .அப்படி வந்தவர்கள் இவர்கள் .இங்கே இவர்களுக்கு சகல வசதிகளும் கவுன்சில் மற்றும் அரசு செய்து கொடுக்கிறது.//

  பள்ளியில் வரலாறு புத்தகம் படித்த நினைவு வந்து பக்குனாகிட்டு.

  அதற்கு பிறகு படித்ததில் மனம் பாராமாகிப்போனது.எனக்கு நேரம் ரொம்பவே சரியில்லாம போச்சு.அந்த வாழ்த்து அட்டையப்பார்த்து கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துக்கிறேன்.

  ReplyDelete
 36. பதிவு படிக்க முடியல அப்பப்பரமா வந்து படிக்கிறேன்,

  ReplyDelete