அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/24/11

Advent /Christmas Count Down

                                                                                         
                                                                                     


                                           இந்த வாரம் ஞாயிற்றுகிழமை27 ஆம் 
திகதி அட்வென்ட் துவங்குகிறது . அன்று முதல் நான்கு
வாரம் 24 டிசம்பர் நள்ளிரவு வரை .நான்கு வாரம் சிறியோர் 
பெரியோர் எல்லாம் தங்களை கிறிஸ்மசுக்கு ஆயத்தம் செய்து 
கொள்வார்கள் .டிசம்பர் முதல் தேதி இலிருந்து குட்டீசுக்காக
எல்லார் வீட்டிலும் அட்வென்ட் நாட்காட்டி மாட்டி வைப்பார்கள்.
எங்க வீட்ல பெரிய ட்ரீ வடிவில் காலெண்டர் இருக்கு
                                           முதல்  தேதி இலிருந்து   24 ஆம் தேதி 
வரைக்கும் சாக்லேட்ஸ் போட்டு வச்சிடுவேன் .தினமும் 
ஒவ்வொரு  சாக்லெட்டாஎடுத்து சாப்பிட்டு எண்ணிகிட்டே 
வருவா என் மகள் .
                                                                                                  


                                                                                   
                                                                                                   
                                                                                       
                            ரெடிமேட் சாக்லேட்டோட நாட்காட்டியும் 
விக்குது .முன்பு சிறுபிள்ளைகள் பைபிள் வசனங்களை 
மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற  நோக்கத்தில்
நான்கு வாரத்துக்கும் வசனம் இருக்குமாம் .இப்ப காலம் 
மாறிப்போச்சு வசனத்துக்கு பதிலா  சாக்லேட் வந்தாச்சு .
என் பொண்ணு நிபிக்கும் அட்வென்ட் காலெண்டர் 
வாங்க சொன்னா இந்த முறை. நிபி இவர்தான் 
                                                                                       
                                                                                              


                                                                                        
இந்த ஊர்ல பூனை  நாய் எல்லாத்துக்கும் அட்வென்ட் 
காலெண்டர் விக்கறாங்க .    சாக்லேட்டுக்கு பதில் 
அனிமல்சொட பிடித்தமான உணவு .
எல்லாம் சின்ன சின்ன சந்தோஷங்கள் .   
     
                                       நாங்க எங்க ஆலயத்தில்முதியோர் 
இல்லத்துக்கு சென்று பரிசு பொருட்கள் கொடுப்போம் .
என் வேலை handmade cards செய்வது மற்றும் பரிசு 
பொருட்களை வாங்கி வண்ணத்தாளில் பாக் செய்வது .
எனவே கொஞ்ச நாட்களுக்கு வலைப்பக்கம் வர மாட்டேன் .
Enjoy a Refreshing Week End 

45 comments:

 1. அச்சச்சோ! நான் இப்பத்தான் புதுசா உங்க வலைப்பக்கம் வந்துருக்கேன்.அதுக்குள்ள நீங்க டாடா பை பையா? என்னங்க நியாயம்?

  சரி.கிறிஸ்துமஸ்லாம் நல்லா கொண்டாடிட்டு வாங்க.உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும் எனது
  அட்வான்ஸ் க்றிஸ்துமஸ் வாழ்த்துக்கள் :)

  இந்த கேரல் சர்வீஸ்னு சொல்வாங்களே!அதெல்லாம் உண்டுதான?என் பொண்ணு இந்த மாதிரி ஒரு கேரல் சர்வீசின் போதுதான் பிறந்தாள்.பிரசவ வலியின் போது டாக்டர் எங்கயும் போகாம என் அருகில் பைபிள் படிச்சுக்கிட்டு உக்காந்திருந்தாங்க.

  ReplyDelete
 2. advent calender பழக்கம்
  நல்லாருக்கு.

  ReplyDelete
 3. அட்வான்ஸ் அட்வென்ட் வாழ்த்துக்கள்.உங்க ப்ளாக்கில் அனைத்தும் வாசித்து,ரசித்துவிட்டு இப்போ தான் வருகிறேன்.மன்னிக்கவும் ஏஞ்சலின் லேட் ஆக வருவதற்கு.
  உங்க அனைத்து கைவேலைப்பாடுகளும் சூப்பர்.தனித்தனி பதிவு போடவில்லை.அதற்கும் சாரி கேட்டுக்கறேன்.
  இங்கும் கிறிஸ்மஸ் களைகட்டத்தொடங்கிட்டுது

  ReplyDelete
 4. கிறிஸ்மஸ் காட், உங்க மகளுடைய அட்வென்ட் காலண்டர் அழகாக இருக்கு.
  நிபி (பெயரும்) அழகாக இருக்கு.

  ReplyDelete
 5. U r gifted Angelin.Luv this artistic Christmas Card.luks luvly.

  ReplyDelete
 6. raji said...//
  வாங்க ராஜி ,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .மகளின் பள்ளி மற்றும் ஆலயத்திலும் நிறைய கொண்டாட்டங்கள் இருக்கு நடு நடுவே வந்து கார்ட்ஸ் அப்லோட் செய்வேன் .பார்த்திட்டு கருத்து சொல்லுங்க

  ReplyDelete
 7. MyKitchen Flavors-BonAppetit!. said...//
  Thanks for your lovely comments Christy .

  ReplyDelete
 8. ammulu said//
  Welcome to my Blog
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

  ReplyDelete
 9. கோகுல் said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

  ReplyDelete
 10. அடடா வடை இட்லி.. பாயாசம்.... ஆயாகூடப் போயே போச்ச்ச்ச்ச்ச்:))).

  ReplyDelete
 11. அப்போ கவுண்ட் டவுன் டிஷம்பர் 1ம் திகதி தொடங்குவதில்லையோ? நான் 1ம் திகதிதான் தொடங்குமாக்கும் என நினைத்தேன்.

  இங்கு ஸ்கூலுக்குப் போகும் வழியில் ஒரு வீட்டில் எலக்றிக் நம்பேர்ஸ் போட்டிருப்பார்கள், அதால் போகும்போது காரை ஸ்லோப்பண்ண, எம் பிள்ளைகள் பார்த்துச் சொல்லுவினம்... இன்னும் எத்தனை நாள் இருக்கென....

  ReplyDelete
 12. சொக்கலேட் நல்லாத்தான் இருக்கு.... ஆனா எங்கட வீட்டில உப்படி வைத்தால்.... 2 நாட்களிலேயே... எல்லாம் முடிஞ்சிடும்... கேட்காமல் எடுக்காயினம்.... ஆனால் பிளீஸ்ஸ்ஸ் இன்னுமொன்று எடுக்கட்டோ... என்று அந்த பிளீஸ்ஸ்ஸ்ஸ் இலயே என் காது புளிச்சு ஓக்கை என்றிடுவேன்:))

  ReplyDelete
 13. நிபியை ஏன் மாவுக்குள் வைத்திருக்கிறீங்க? ரொட்டி சுடப்போறீங்களோ?:))) அவருக்கு ஒருவித டஸ்ட் விற்குதெல்லோ?

  ReplyDelete
 14. //ரெடிமேட் சாக்லேட்டோட நாட்காட்டியும்
  விக்குது //

  எல்லா இடத்திலும் இதுதான் இப்போ... ஆனால் வாங்கினால் உடனேயே காலி அவ்வ்வ்வ்வ்வ்:))..... இருந்தும் வாங்குவதுதான்.....

  ReplyDelete
 15. //நாங்க எங்க ஆலயத்தில்முதியோர்
  இல்லத்துக்கு சென்று பரிசு பொருட்கள் கொடுப்போம் .//

  மிக நல்ல விஷயம்தான். என் தோழியும் இங்கு சேர்ஜ்சால் போவார்(அவரும் ஒரு டாக்டர்)... அவ சொல்லுவா, அவர்களைப்பார்க்க பாவமாக இருக்குமாம்.. மிகவும் ஆசையாகக் கதைப்பினம்... தனியே இருக்கிறார்கள் என்று.... முதியோர் இல்லமல்ல.... சீனியேர்ஸ் அப்பார்ட்மெண்ட் க்கு என நினைக்கிறேன் இங்கு போறவ.

  ReplyDelete
 16. //இந்த ஊர்ல பூனை நாய் எல்லாத்துக்கும் அட்வென்ட்
  காலெண்டர் விக்கறாங்க . //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

  ReplyDelete
 17. //எனவே கொஞ்ச நாட்களுக்கு வலைப்பக்கம் வர மாட்டேன் .///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... என்ன இது புதுக்கதை:)) ஆழும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே வளர்த்தி....

  அதுபோல.... கிரிஸ்மஸ்க்கு கார்ட்டும் செய்யோணும், உணவும் செய்யோணும், மியாவ் பக்கமும்:)) வரோணும் அதுதான் கிரிஸ்மஸ் கொண்டாட்டம்:))... சீயா மீயா...

  ஊ.கு:
  அடடா அம்முலுவின் குரல் ஒலிக்குதே.... எப்பவோ இங்கு வரவேணும் எனச் சொன்னா... இப்பத்தான் வந்திருக்கிறா.... ஒருவேளை கிரிஸ்மஸ் கேக் கிடைக்குமென:))).... சே..சே.. நான் ஒண்ணுமே சொல்லல்ல நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)))))

  ReplyDelete
 18. அப்போ கவுண்ட் டவுன் டிஷம்பர் 1ம் திகதி தொடங்குவதில்லையோ? நான் 1ம் திகதிதான் தொடங்குமாக்கும் என நினைத்தேன்.//


  பூஸ்... காலேண்டர் முதல் தேதிதான் மாட்டுவோம் ஆனா ஆலயத்தில் சண்டேல இருந்து காண்டல் கொளுத்தி ஆரம்பிப்பாங்க

  ReplyDelete
 19. வாழ்த்து அட்டைகள் அட்டகாசமாய் கிறிஸ்துமஸ் கோலாகாலத்தை தொடங்கி வச்சாச்சு...ஜமாயுங்க...

  நான் ஊரில் தான் கிறிஸ்துமஸ்...

  மறுபடி இவ்வருடம் சந்திக்கா விட்டால் ...

  இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்துக்கு ...கூடவே புத்தாண்டு வாழ்த்துக்களும் ஏஞ்சலின்...

  ReplyDelete
 20. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரெவரி .சந்தோஷமா கொண்டாடிட்டு வாங்க .

  ReplyDelete
 21. me the first...

  and late comment..

  advance happy x mass.

  ReplyDelete
 22. உங்கள் கைவண்ணங்களுக்கு அழகில் என்றும் குறை
  இருப்பதில்லை.

  கிறிஸ்துமஸ்ஸிற்கு இவ்வளவு ஆர்வமும்,எதிர்பார்ப்பும்,கொண்டாட்டமும் உங்க பதிவுகளின் வெளிப்பாடுகள் புரியவைக்கிறது.வாழ்த்துகள்.

  நான் வேளாங்கன்னி பக்கத்தில் நாகப்பட்டினம்தானே,எனக்கு தங்கள் மதத்தின் வாசம் உண்டு(ஒரு காலத்தில்).அடிக்கடி ஆலயம் போய் அவர்கள் வழிபடுவதை வேடிக்கை பார்த்ததில் எனக்கு ஒரு ஃபாதர் புதிய பைபிள் புத்தகம் கொடுத்தார்.முழுமையாக படித்திருக்கிறேன்.மனம் ஒட்டும் கருத்துக்களை டைரியில் எழுதிவைத்ததுண்டு.

  ஆனாலும் முழுமையாக ஈடுபாடில்லை.தெரிந்துகொள்ள மட்டுமே ஆர்வம்.

  சுனாமி வந்த வருடம் நானும் கிறிஸ்துமஸிற்கு வேளாங்கன்னிக்கு போகயிருந்தேன்.ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் மறுநாளும் போகமுடியவில்லை என்று மனவருத்தத்துடன் இருந்தேன்.அந்த மறுநாள்தான் சுனாமி தாக்கியது.

  என்னை வரவிடாமல் வைத்த அன்னைக்கும்,தேவனுக்கும் நன்றி சொல்வதா/ அத்தனை உயிர்கள் மடிந்ததையும்,மீதி உறவுகள் துடித்ததையும் பார்க்கவைத்ததற்கு என்ன செய்வது என்று பல நாள் மனம் பாதித்ருந்தேன்.

  நாகையிலும் வேளாங்கன்னியிலும்தான் அதிக பாதிப்பு,எங்கு திரும்பினாலும் அழுகுரல்,பரபரப்பு.கடற்கரையிலிருந்து தப்பி வந்த வாகணங்களின் அடியில் எல்லாம் உடல் பகுதிகள்,இன்னும் பல கொடுமைகளை பார்த்ததில் கிறிஸ்துமஸ் என்றாலே எனக்கும்,உயிர்களை இழந்தோருக்கும் சுனாமியின் பாதிப்புதான் நினைவிற்கு வரும்.

  சில மாதங்களிலே வேளாங்கன்னி ஆலயத்திற்கு வருகை தரும் மக்களின் இன்னம் அதிகமாகதான் ஆனது.போனவர்கள் போனாலும் இருப்பவர்கள் எப்போதும் போல அதே இடத்தில் கொண்டாடியவண்ணம்தான் இருக்கிறார்கள்.இதுதான் வாழ்க்கை சொல்லித்தரப்படும் பாடம்.அவரவர் நம்பிக்கை.

  சில வருடங்களுக்கு பின் இந்த வருடம் நான் வேளாங்கன்னி போய்ட்டு வந்தேன்.எதோ கணத்தின் அடிப்படியில் மிக மெளனம் காத்தேன்.

  மனதில் பட்டதை சொல்லியுள்ளேன்.தவறிருந்தால் மன்னிக்கவும்.

  ReplyDelete
 23. advent பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன் angelin.
  இன்னும் ஒரு மாததிற்கு நீங்க ரொம்ப busy!!!

  கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்,உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும்.

  ReplyDelete
 24. @thirumathi bs sridhar said...//

  தங்கள் மனதில் பட்டதை மனவேதனையை கூறியிருக்கிறீர்கள் ஆச்சி .இதில் தவறொன்றும் கிடையாது

  ReplyDelete
 25. நல்ல தகவல் .. அறிந்து கொண்டேன் ..
  நல்லா கொண்டாடுங்க குடும்பத்துடன் ..
  மீண்டும் வாங்க அதுவரைக்கும் காத்திருக்கோம் ..

  ReplyDelete
 26. காலாண்டுல மாட்டி வைச்ச சாக்லேட் ஒரே நாளைக்கு ரெண்டு சாப்பிடுட போறாங்க.... ஹா ஹா... அட்வான்ஸ் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்... குடும்பத்துடன் சந்தோசத்துடன் கொண்டாடுங்கள்.. வரும் வரை காத்திருப்போம்... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. உங்கள் அனைவரின் அன்பு வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
  Rajesh,Rama,Arasan ,Gokul ,Mrs.Sridhar,Ammulu ,Raji,Reveri , Athira .,Christy.

  ReplyDelete
 28. @ Raji..//பொண்ணு இந்த மாதிரி ஒரு கேரல் சர்வீசின் போதுதான் பிறந்தாள்//same pinch
  என் மகளும் தாங்க கிறிஸ்மசுக்கு முன்னால் பிறந்தா

  ReplyDelete
 29. அருமை.பண்டிகையை நல்லவிதமாக கொண்டாடி விட்டு விடுமுறை கழிந்து வந்து எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ஏஞ்சலின்.

  ReplyDelete
 30. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு சொக்லேட்டா....அதிஷ்டம்தான்.கடைகளில் காலண்டர்போல இருக்குமே.ஒவ்வொருநாளும் அதைத் திறந்துபார்த்துக் குழந்தைகள் சந்தோஷப்பட்டுக்கொள்வார்கள்.
  கண்டிருக்கிறேன்.அதுசரி எலியார் என்ன செய்றார் !

  ReplyDelete
 31. விடுமுறை முடிந்து வந்து எம்முடன் அனுபவங்கலை பகிர்ந்து கொள்ளுங்கள்.அப்படியே கிஃப்ட் ராப் செய்வதையும் சொல்லித்தாருங்கள்.

  ReplyDelete
 32. சீக்கிரமே பண்டிகை முடிந்து வந்து பண்டிகை அனுபவங்களை பதிவ்டவும். காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 33. க்ரீட்டிங் கார்ட் அழகா இருக்கு ஏஞ்சல் அக்கா! அட்வென்ட் பற்றி நல்ல தகவல்கள். இங்கே டிவில கவுன்ட் டவுன் க்ளாக் add வரும்,ரொம்ப க்யூட்டா இருக்கும்!

  மனதுக்கு திருப்தி தரும் வேலையை செய்துட்டு இருக்கீங்க. வேலைகளை முடிச்சுட்டு விரைவில் வாங்க. க்றிஸ்மஸுக்கு 8 வகைப் பலகாரம் செய்யோணும்,நினைவிருக்கில்ல?;)

  ReplyDelete
 34. Advent calender எனக்கு புது விஷயம். அறிமுக படுத்தியமைக்கு நன்றி. அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

  ஆமாம், எங்களுக்கெல்லாம் சாக்லேட் கிடையாதா!!!

  ReplyDelete
 35. இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  ஜாலியா கொண்டாட்டு வாங்க!

  போய் வந்த பிறகு தாங்கள் விருப்பப்பட்டால் தங்களின் மின்னஞ்சல் முகவரியை என் மின்னஞ்சல் முகவரியான valambal@gmail.com க்கு அனுப்பி வைக்கவும். ஒரு சிறு சந்தேகம் தங்களிடம் கேட்க வேண்டியுள்ளது. அதுவும் ஒரு சந்தோஷமான விஷயம் பற்றியே! அன்புடன் vgk

  ReplyDelete
 36. //athira said...
  நிபியை ஏன் மாவுக்குள் வைத்திருக்கிறீங்க? ரொட்டி சுடப்போறீங்களோ?:))) அவருக்கு ஒருவித டஸ்ட் விற்குதெல்லோ?//

  அக்கா! எனக்கு சத்தியமா ரொட்டி சுட தெரியாது:))))

  ReplyDelete
 37. //இந்த ஊர்ல பூனை நாய் எல்லாத்துக்கும் அட்வென்ட்
  காலெண்டர் விக்கறாங்க . //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))//

  அப்ப சுண்டெலிக்கெல்லாம் காலெண்டர் இல்லையா :((((

  ReplyDelete
 38. வணக்கம் சகோதரி! பதிவுலகில் புதியவன். என் மனைவி உங்கள் தளத்தை விரும்பிப் பார்ப்பார்கள்.
  நான் இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, அழகான பதிவு. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:

  "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"


  "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

  ReplyDelete
 39. @சுண்டெலி said...//
  அப்ப சுண்டெலிக்கெல்லாம் காலெண்டர் இல்லையா :((((

  சுண்டெலிக்கெல்லாம் small animals Advent calender
  last photo paarunga

  ReplyDelete
 40. ஹையோ சுண்டெலி மியாவை விடாதுபோல இருக்கே:).... அஞ்சு... சுண்டெலியிட வாலைப் பார்த்தால் நம்மட பக்கத்து ஏரியாபோலவும் தெரியுதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

  //சுண்டெலிக்கெல்லாம் small animals Advent calender
  last photo paarunga//

  ரொம்ப முக்கியமாக்கும்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:):):).

  ReplyDelete
 41. வணக்கம் அக்கா,
  நல்லா இருக்கீங்களா?

  நான் கொஞ்சம் பிசியாகிட்டேன், அதனால் தான் இப்போ முன்பு போல நண்பர்களின் பக்கம் வர முடிவதில்ல.
  கோவிச்சுக்க வேணாம்...

  பண்டிகைக் காலத்திற்கேற்ற அட்வென்ற் கலண்டர் அழகாக உங்கள் கை வண்ணத்தால் மிளிர்ந்திருக்கிறது. மற்றைய கிறிஸ்மஸ் கை வண்ணமும் அழகு!

  ReplyDelete
 42. என்னோட அட்வன்ர் காலண்டரை எப்போ ஆனுப்பிவைக்கிறீங்க anjelin

  ReplyDelete
 43. வருஷம் இறுதி என்பதால் வேலை பளு அதிகம் ஆகையால் எங்கேயும் வர முடியலை சாரி...சாரி சரி.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete