அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/7/11

Seed Bead Basket .


TINY SEED BEAD BASKETS

                                                                   


இந்த லிங்க் பார்த்து இந்த சின்ன கூடைகளை செய்தேன் .
நான் மணிகளின் எண்ணிக்கையை வேறுபடுத்தி  
செய்திருக்கிறேன் .
இந்த முறைப்படி செய்து பாருங்கள் .
சாதாரண மணிகளில் இவற்றை செய்யலாம் .

                                                                               

                                                                               

இது Holly berries  படம் ,ஒன்று ஜூலை மாதம் எடுத்தது 
மற்றது நேற்று எடுத்தது 
முதலில் berries பச்சை நிறமாக இருந்து இப்ப சிவப்பா 
மாறியிருக்கு .
                                                                            
                                                                              
இந்த வாரம் எங்க கோயிலில் திருமண அறிவிப்பு ரெண்டு 
பேருக்கு அறிவித்தார்கள் .அதில் மணமகன் ஒரு WIDOW 
மணமகள் SPINSTER என்று குறிப்பிட்டிருந்தார்கள் .ஆலய 
வழக்கப்படி அவர்கள் BANNS PUBLISH     செய்யும்போது 
அங்கிருக்கணும் .மணமகன் வரவில்லை .மணமகள் பேர் 
குறிப்பிட்ட போது ஒரு பெண் எழும்பி  நின்றார் .நான் என் 
கண்களை நல்லா துடைத்து கொண்டு பார்த்தேன் ஒரு 
எண்பது வயது பாட்டி நின்று கொண்டிருந்தார் அப்பவும் 
சந்தேகம் என் கண் மேலதான் வந்தது .
கணவர் வேறு "Bride to be -- makeup இல்லாம வந்துட்டாங்க" 
என்று என்னை குழப்பினார் .
இப்ப மீண்டும் அறிவிப்பு .பாதிரியார் கூறினார் திருமணம் 
செய்ய வயது தடையில்லை மணமகனுக்கு 92 வயது 
மணமகளுக்கு 85 வயது .
நான் இத மாதிரி பேப்பர்ல தான் படிச்சிருக்கேன் .நேர்லய 
பார்த்திட்டேன் .திருமணம் செய்து வைக்கபோவது அந்த 
மணமகளின் மூத்த மகளாம் (அவரும் பாதிரியார்) 
கொள்ளு பேரபிள்ளைகள் FLOWER GIRLS /PAGE BOYS .
அப்புறமா அவர் அறிவித்தார் "இந்த திருமணத்தில் இவர்கள் இணையக்கூடாதபடிநியாயமான தடையோ காரணமோ 
இருப்பின் எழுத்து மூலம் பாதிரியாருக்கு அறிவிக்க 
வேண்டுகிறோம் ""

நல்ல வேளை எங்க மகள் சண்டே ஸ்கூலில் இருந்ததால் இதை பார்க்கல்ல .இல்லன்னா  ரொம்ப கேள்வி கேட்டிருப்பா.


நான் ஒரு வாரம் இணையம் பக்கம் வர மாட்டேன் .
ஒன்றுமில்லை கருப்பு நிற எழுத்துள்ள பேப்பர் வாசித்தா 
கூட கலர் கலரா தெரியுது .பட்டாம்பூச்சி பறக்குது .
கண்களுக்கு கொஞ்சம் ஒய்வு தேவை என்று 
நினைக்கிறேன் .வார இறுதி .எல்லாரும் சந்தோஷமா விடுமுறையை 
என்ஜாய் செய்யுங்க .

cheeeeeeeeeeeers .


  

45 comments:

 1. நிறம் மாறிய பூக்கள் அருமை!

  ReplyDelete
 2. திருமண வயது -21'ன்னு சொன்னாங்க .எத்தனை வயசு வரைக்கும் னு சொல்லையே!

  ReplyDelete
 3. அருமையான ஆக்கம் ஐ மீன் மணிகளால் செய்த கிண்ணம். பின்பு தேவாலயக் கதை மிக சுவையாக இருந்தது. நடப்பதைப் பார்த்து ரசிக்க வேண்டியது தான் . வாழ்த்துகள்
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 4. இது வேதாம்மா தெரியாமல் என் கவிதைக்கு பின்னூட்டமாய் இட்டுசென்றார்கள்...உரியவரிடம் சேர்த்துவிட்டேன்...ஏஞ்சலின்...

  ReplyDelete
 5. ஆஆஆஆஆஆஆஆஆ.. நான் வருமுன் போட்டுவிட்டினமே.... கர்ர்ர்:))).

  தனக்குத் தானே கொமெண்ட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நில்லுங்க பார்த்திட்டு வாறேன்..

  ReplyDelete
 6. அடடா அஞ்சு நீங்க செய்ததா? நம்பவே முடியவில்லை... சூப்பரோ சூப்பர்.

  ReplyDelete
 7. பேசாமல் ஒரு ஷொப் ஓபின் பண்ணிடுங்க.

  ReplyDelete
 8. அந்த பெரீஸ்ஸ்ஸ்ஸ் அழகூஊஊஊஊஊஉ.. அதுதான் நானும் போட்டேனாக்கும்.

  ReplyDelete
 9. வயோதிபத் திருமணம். என்னைப்பொறுத்து அது ஓக்கே. ஏனெனில் வெளிநாட்டில் பிள்ளைகளோடு பெற்றோர் இருப்பதில்லை(வெள்ளையர்கள்), அப்போ அவர்களுக்கு பேச்சுத்துணைக்கு ஒரு ஆள் தேவை.

  ReplyDelete
 10. உங்கள மாதிரி செய்ய முடியாது...ஒன்னு அனுப்பி வையுங்க....

  ஒரு வேளை அவங்க 40 ஆண்டுகள் காதலித்தார்களோ என்னவோ...இருந்தாலும் ஸ்வீட்...

  எங்கள் வீட்டிலும் அந்த மரம் உண்டு என்று நினைக்கிறன்...இனி ஹாலி பெர்ரி ன்னு (பிடித்த நடிகை/முடி) நானே அதுக்கு பேர் வச்சுக்கிறேன்..

  உங்க வீட்டுக்காரர ஒரு வாரம் பதிவு எழுத சொல்லுங்க...

  Take care of your eyes...Cheers

  ReplyDelete
 11. //நான் ஒரு வாரம் இணையம் பக்கம் வர மாட்டேன் .
  ஒன்றுமில்லை கருப்பு நிற எழுத்துள்ள பேப்பர் வாசித்தா
  கூட கலர் கலரா தெரியுது .பட்டாம்பூச்சி பறக்குது .
  கண்களுக்கு கொஞ்சம் ஒய்வு தேவை என்று
  நினைக்கிறேன் .//

  ஹையோ எனக்கும் இமாவின் பிரச்சனைபோல கையில் நோ வருகுது.... ரெஸ்ட் குடுக்கோணும் போல அவ்வ்வ்வ்வ்வ்:)))).

  இனி சனி ஞாயிறில் நெட் பக்கம் வர பெரிதாக நேரம் கிடைக்காது எனக்கு.

  ReplyDelete
 12. BTW,என்னோட கவிதை வரிகளில் கடைசி 11 வரிகளை எண்ணி எண்ணியத்துக்கு நன்றி...

  ReplyDelete
 13. நீங்க பதிவு போட்டு 4 அவேர்ஸ் ஆகுதா? அவ்வ்வ்:)), என் கண்ணுக்கு 4 மினிட்ஸ் எனத் தெரிஞ்சுதா... மின்னல் வேகத்தில வந்தேன்... வட போச்ச்ச்ச்ச்:)))))

  ReplyDelete
 14. மணிமணியான அழகான கைவேலை, பாராட்டுக்கள்.

  இவ்வளவு சின்னஞ்சிறு வயசில் திருமணமா? என்று சிலர் கேலி செய்யக்கூடும்.

  ஒருவருக்கொருவர் துணையாக, பேச்சுத்துணையாக, கொடிகள் பற்றிக்கொள்ள கொம்பைத் தேடுமே அது போலத் தான் இதுவும். தவறேதும் இல்லை என்று நான் நினைக்கிறேன். [இது பற்றிய கருவுடன் கூடிய நான் எழுதிய கதை ஒன்றும் பிறகு வெளிவர உள்ளது]

  ஓய்வு எடுத்துக்கொண்டு மீணடும் வாருங்கள்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. வை.கோபாலகிருஷ்ணன் said...//
  நீங்கள் எழுதினால் கண்டிப்பாக சந்தேகமில்லாமல் கருத்துடன் கூடிய கதையாகவே இருக்கும் .ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .
  இங்கே எல்லாம் சகஜம். ஆனா இந்த திருமண தம்பதியர் வெஸ்ட் இண்டீஸ்
  மக்கள் .கண்டிப்பாக ஒரு விஷயம் பாராட்டுக்குரியதே .living together என்றில்லாமல் இந்த வயதிலும் திருமண பந்தத்தில் இணைவது .நான் நினைக்கிறேன் காதலுக்கு வயதில்லை .

  ReplyDelete
 16. நான் முன்பே கூறியிருந்தேன் என்று நினைக்கிறேன் ஒரு முதியோர் இல்லத்தில் நான் சந்தித்த அத்தனை பெரும் கூறியது தங்களுடன் பேச,வாக் போக ஒரு துணை தேவை .திருமண செய்தியில் நானும் முதலில் சிரித்து விட்டேன் என் கணவரது பேச்சால் பிறகு யோசித்து பார்த்தபோது முதுமை என்பது second infancy .கண்டிப்பாக பேச்சு துணை அவசியம் .

  ReplyDelete
 17. கோகுல் said...//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோகுல் .என்னை சுற்றி நடக்கும் சில விஷயங்களை எல்லாருடனும் பகிர்ந்து கொண்டேன் .they are not flowers they are berries .

  ReplyDelete
 18. ரெவெரி said...//
  சரியான இடத்தை கண்டுபிடித்து சேர்த்ததற்கு நன்றி .
  என்னை சுற்றி நடக்கும் சில விஷயங்களை அவ்வப்போது எல்லாருடனும்
  பகிர்ந்து கொள்வேன் .என் கணவரையும் எழுத சொல்கிறேன் .

  ReplyDelete
 19. athira said...//
  ஆமாம் அதிரா நான் திரும்பி ஒரு வாரத்தில் வருவேன் என்று நம்புகிறேன் .

  ReplyDelete
 20. athira said...//
  yes i agree with you .
  முதுமை என்பது நாம் அந்த வயதில் இருக்கும்போதுதான் கஷ்டம் தெரியும்
  நான் பார்த்த விஷயத்தை உங்களோடு பகிர்ந்துகொண்டேன்

  ReplyDelete
 21. ஆகா இன்று இந்த அயிட்டமா? பொறுமையாக உட்கார்ந்து செய்ததற்கே பாராட்டவேண்டும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. test comment---no no mee the firstu..

  ReplyDelete
 23. நல்ல வேளை எங்க மகள் சண்டே ஸ்கூலில் இருந்ததால் இதை பார்க்கல்ல .இல்லன்னா ரொம்ப கேள்வி கேட்டிருப்பா.
  //
  நான் கேட்பேன் :)
  வாழ்க வளமுடன் அந்த தாத்தாவும் பாட்டியும்.

  அந்த முத்து சிப்பி போல உள்ளது
  உங்கள் பொறுமையும் ஆக்கமும்

  இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துக்கிறது

  ReplyDelete
 24. ஆஹா..........

  பாக்க மட்டும் தான் முடியும். பக்கத்துல உக்கர்ந்து பொருமையா யாராச்சும் சொல்லி கொடுத்தா செய்வேன்.... லிங்க் கொடுத்து......... ஹும்ஹும் :-(

  ஸ்டெப் பை ஸ்டெப்பா நீங்களே போடுங்க.... நேரம் கிடைக்கும் போது :-)

  விடுமுறையை இனிதே கழித்து நலமுடம் திரும்ப எல்லாம் வல்ல இறைவைனை ப்ரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 25. Luvly post and great bead work dear.Luv it Angelin.

  ReplyDelete
 26. நல்ல பகிர்வுங்க சகோ ..
  அதுவும் அந்த கல்யாணம் பற்றி படித்து வியந்து போனேன் ..
  நல்லாத்தான் இருக்குங்க ...

  ReplyDelete
 27. நல்ல வேளை எங்க மகள் சண்டே ஸ்கூலில் இருந்ததால் இதை பார்க்கல்ல .இல்லன்னா ரொம்ப கேள்வி கேட்டிருப்பா.//

  வசமா தப்பிச்சிட்டீங்க....!!!

  ReplyDelete
 28. நீங்க நல்ல டேலண்ட் குயின்தான் படங்களை ரசித்தேன்....!!!

  ReplyDelete
 29. SEED BEAD BASKETS ரொம்ப அழகா இருக்கு angelin.

  கோவிலில் திருமண அறிவிப்பு விவரம் நமக்கு வேடிக்கையாக இருக்கு.அந்த ஊரில் இதேல்லாம் சகஜமாக இருக்கும் என நினைக்கிறேன்.

  உங்க கண்களுக்கு ஓய்வு கொடுப்பதுடன் நல்ல கண் மருத்துவரிடம் சென்று காண்பிக்கவும்.

  ReplyDelete
 30. makeup இல்லாம வந்துட்டாங்க"
  என்று என்னை குழப்பினார் .//

  ஹா ஹா ... நல்லா புரிஞ்சு வச்சிருக்காரு.. அனுபவசாலி ஹா ஹா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 31. நல்ல வேளை எங்க மகள் சண்டே ஸ்கூலில் இருந்ததால் இதை பார்க்கல்ல .இல்லன்னா ரொம்ப கேள்வி கேட்டிருப்பா.//

  தப்பிச்சுட்டீங்களே... எனக்கும் நிறைய கேள்வி இருக்கூஊஊஊஊ... இல்ல இல்ல நான் எதுவும் கேக்குல நான் எதுவும் படிக்கல... மிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்வ்

  ReplyDelete
 32. கருப்பு நிற எழுத்துள்ள பேப்பர் வாசித்தா
  கூட கலர் கலரா தெரியுது .பட்டாம்பூச்சி பறக்குது .
  கண்களுக்கு கொஞ்சம் ஒய்வு தேவை என்று
  நினைக்கிறேன் .//

  எனக்கு கூட தலைய சுத்தி நட்சத்திரமெல்லாம் சுத்துது... ஓய்வு ரொம்ப முக்கியம் u take rest.. take care bye

  ReplyDelete
 33. முக்கியமா சொல்ல மறந்துட்டேன்.. அந்த சிறு கலர் மணிகளால் செய்த அலங்கார கூடை கொள்ளை அழகு... வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 34. கைவேலைப்பாடுகள் மிகவும் அருமை!

  ஒருத்தருக்கொருத்தர் தனிமையில் தவிக்காமல் வயதானாலும் திருமண‌ பந்தம் மூலமாக இணைவது ரசிக்க வைக்கிறது!

  ReplyDelete
 35. எது எப்படியிருந்தாலும் மிக நேர்த்தியான கைவண்ணமல்லவா அருமையாக இருக்கிறது...

  ReplyDelete
 36. ஐயோ..என்ன க்யூட்டா மணிக்கூடை செய்து இருக்கீங்க.சூப்பர்.

  // திருமணம்
  செய்ய வயது தடையில்லை மணமகனுக்கு 92 வயது
  மணமகளுக்கு 85 வயது ...//அடிப்படையே அதிருதே!

  ReplyDelete
 37. அம்பலத்தார் ,siva மாய உலகம் Rajesh,♔ம.தி.சுதா♔,,மனோசாமிநாதன்,RAMVI ,Rama,MANO நாஞ்சில் மனோ,MyKitchen Flavors-BonAppetit!Christy Latha,வேதா. இலங்காதிலகம்.,
  ஆமினா ,அரசன் ,ஸாதிகா ,

  THANKS A BUNCH

  கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி .ஒரு சிறு இடைவெளிக்கு பின் வெகு விரைவில் மீண்டும் சந்திப்போம்.
  அன்புடன் Angelin.

  ReplyDelete
 38. ஸீட் பேஸ்கட் க்யூட்டா இருக்கு ஏஞ்சல் அக்கா!

  கலியாண கதை சூப்பர்! கொஞ்சநாள் முந்தி யு.கே.ல ஒரு கோடீஸ்வரப்பாட்டி(85+) சொத்தெல்லாம் மகன்-மகள்-பேரன் பேத்திகளுக்கு பிரிச்சுக்குடுத்துட்டு கட்டின சேலையோட, ச்சீ,ச்சீ,போட்டிருந்த கவுனோட:);), தன்னைவிட 10 வயசு குறைஞ்ச மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கிறதாச் சொன்னாங்க!!இந்த ஊர்கள்ல வயசெல்லாம் ஒரு விஷயமாப் பார்க்கறதே இல்லை. ஒவ்வொரு ஊரும் ஒவ்வொருவிதம்!!

  ReplyDelete
 39. /கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ஒரு சிறு இடைவெளிக்கு பின் வெகு விரைவில் மீண்டும் சந்திப்போம்.
  அன்புடன் Angelin. /

  ஹாஹாஹ்ஹா!! நீங்க எதாச்சும் டிவி ப்ரோக்ராம் ஹோஸ்ட் பண்ண போலாம், சூஊஊஊஊஊப்பராப் பேசறீங்க!:))))))))

  ReplyDelete
 40. ஃஃஃமகி said...
  ஹாஹாஹ்ஹா!! நீங்க எதாச்சும் டிவி ப்ரோக்ராம் ஹோஸ்ட் பண்ண போலாம், சூஊஊஊஊஊப்பராப் பேசறீங்க!:))))))))
  ஃஃஃஃ

  ஆமாங்க என்னையும் வேலைக்கு சேத்து விடுங்க...

  ReplyDelete
 41. ஆஹா சந்தோஷமா சேர்த்து விடறேன் .எனக்கு கிடைக்கற அடி உதைஎல்லாம் நீங்க வாங்கிக்க ரெடியா .

  ReplyDelete
 42. இந்த பதிவ மிஸ் செய்திட்டேன்.இப்பதான் பார்த்தேன்.நீங்களும் ரெஸ்ட் எடுத்து அடுத்த பதிவும் பதிந்துவிட்டீர்கள்.கைவண்ணம் மிக அழகு.அப்புறம் அந்த கல்யாணக் கதையில் அசந்து போய்டேன்.இதனை வயசு வரைக்கும் உயிரோட இருப்பதே பெரிய விசியம்.

  ReplyDelete
 43. உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும்

  http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_25.html

  ReplyDelete