அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/27/11

எங்க ஊர்லHalloween கொண்டாட்டம் .


           
          அக்டோபர் 31  அன்று  ஹலோவீன் கொண்டாட்டங்கள் 
நடைபெறும் .அன்று இரவு சூனியக்காரிகள்  ,துர்தேவதைகள் 
கொள்ளி வாய்பிசாசுகள்,நீலி ,இரத்த காட்டேரிகள் எல்லாம் 
ரொம்ப புத்துணர்வோடு உலாவும் என்பது பிரிட்டிஷ் ஐதீகம் .
                                                                                      


                                                                                  
ஹாலோவீன்முன்பு  மஞ்சள் பூசணி எல்லா கடைகளிலும் 
கிடைக்கும் .பெரிய பூசணியை வெட்டி கண் மூக்கு எல்லாம் 
குடைந்து மெழுகு கொளுத்தி வாசலில் வைப்பாங்க .
நெருப்பு முதல் பாராவில் குறிப்பிட்டுள்ள பிசாசுகளை
ஓட ஓட விரட்டும் என்பதும் பிரிட்டிஷ் ஐதீகம் .

அன்று இரவு சின்னது பெரிசு என்று வகை தொகை 
இல்லாம எல்லாரும் பேய் பிசாசு மாதிரி ஆடை 
அலங்காரம் எல்லாம் செஞ்சுக்கிட்டு வீடு வீடா போய் 
பயம் காட்டி (மிரட்டி ) ஏதாவது சன்மானம் பெறுவாங்க .
இவங்களுக்கு கொடுக்கவென்றே கடைகளில் ஆரஞ்சு 
மற்றும் கருப்பு நிற தாள்களில் சுற்றிய மிட்டாய்கள் 
கிடைக்கும் அப்படி சன்மானம் தர விரும்பாதவர்கள் 

                                                                                    

                                                                                 
NO TRICK OR TREAT.
என்ற வாசகத்தை ஜன்னலில்தெரிகிற மாதிரி 
 ஒட்டி வைக்க வேண்டும் .ஒட்டி வைக்காம சன்மானமும் 
தராம விட்டா முட்டை அடிச்சிட்டு போவாங்க .ஒன்றிரண்டு 
இல்லைங்க இங்கே முப்பது முட்டை பெட்டி ரொம்ப மலிவா 
கிடைக்கும் .(சில நேரம். £1 .99. 
அதனால் இந்த ஒருநாள் பிசாசுகள் நிறைய வாங்கி 
வச்சிருக்கும் )எந்த சன்மானமும் தராம விட்டா அடுத்த
நாள் விண்டோ கிளீனருக்கு நாமதான் இருபது பவுண்ட்ஸ் 
அழனும் . எல்லாம் சொந்த அனுபவம்தானுங்க . 
சில இடங்களில் முதியோர் நிறையபேருக்கு 
மாரடைப்பு கூட வந்திருக்கு இந்த கொண்டாட்ட 
சேஷ்டைகளால் .பின்னே பேய்மாதிரி ரத்தம் வழிய 
காட்சி தந்தா எப்படி இருக்கும் .
அன்று இரவு பார்ட்டி எல்லாம் நடக்கும் .இந்த ஹாலோவீன் 
கொண்டாட்டதுக்குன்னு எல்லாம் ஓடி போய் பேய் ட்ரஸ் 
எல்லாம் வாங்குவாங்க . கிறிஸ்மசுக்கு அலங்கரிக்கற 
மாதிரியே வீட்டை ஹாலோவீன் ஸ்பெஷல்ஸ் சிலந்தி
வவ்வால் ,பூச்சி ,கருப்பு பூனை,மண்டை ஓடு  எல்லாம் 
வைத்து அலங்காரம் செய்திருப்பார்கள் .நம்ம ஊர் 
பூந்துடைப்பம் கூட வச்சிருப்பாங்க பேய் ஓட்டறதுக்கு .


                                                                                 

                                  (THANKS TO GOOGLE FOR THE ABOVE PICTURES)

                                    

இன்று காலை மார்கெட் போயிருந்தோம் இப்பவே 
கிறிஸ்மஸ் அலங்காரம் எல்லாம் போட்டிருந்தாங்க ,
அத்துடன் இந்த ஹாலோவீன் அலங்காரமும் .
கீழே இருக்கும் படங்கள் என் மொபைல் காமெராவில்
சுட்டது .பயப்படாம பாருங்க .
பூசணி குறிப்பு :
கீழேயுள்ள படங்களை அதிரா மற்றும் ராஜேஷுக்கு
டெடிகேட் செய்கிறேன் .
                                                                     
                                                    

                                                                  வேலாயுதம்                                                      
                                                                                      
                                                                                     
                                                                                                      


நாங்க இந்த ஹாலோவீன் எல்லாம் கொண்டாட 
மாட்டோம் பார்த்தவற்றை உங்களுடன் பகிர்ந்து 
கொண்டேன் .      முதலில் சென்று NO TRICK OR TREAT         
ஸ்டிக்கரை தேடி வைக்க வேண்டும் .

மீண்டும் சந்திப்போம்.

                                                   

37 comments:

 1. angelin என் பெண்களுக்கு ரொம்ப பிடித்த வெளிநாட்டு கொண்டாட்டம் இந்த ஹாலோவிந்தான்,அந்த மாதிரி உடைகள் வேண்டும் என்று நச்சரிப்பார்கள்.நான் வேடிக்கையா உங்க இரண்டு பேரையும் தவிர உலகத்துல பேய்கள் ஒண்ணும் கிடையாது என்று சொல்லுவேன்.

  அழகிய படங்களுடன் அருமையான தகவல்கள்.

  ReplyDelete
 2. படங்கள் எல்லாம் டெரர் காட்டுது ஏஞ்சலின்.

  ReplyDelete
 3. ஹா..ஹா..ஹா... ஹலவீன் கொண்டாட்டம் களை கட்டுது... எங்கட வீட்டிலும் உடுப்புக்கள் ரெடி:)

  ReplyDelete
 4. அதிராவோ கொக்கோ.... நாங்க இப்போ வீரப்பனுக்கே பயப்புடாத ஆட்களாக்கும்...க்கும்..க்கும்... இதுக்கெல்லாம் பயப்பிடுவனோ?:)))... ஆனா மாயாக்கும் பயம்:))).. உஸ் படிச்சதும் கிழிச்சிடுங்க அஞ்சு...:))

  ReplyDelete
 5. எங்கட வீட்டில ரிக் அண்ட் ரீட் போக இருவரும் இப்பவே ரெடி:)))

  ReplyDelete
 6. Ohh!,Nice to know abt Haloween Festival.Pics luk awesome.

  ReplyDelete
 7. ஹலவீனுக்கு முட்டை அடிப்பதும் உண்டோ? ....ங்ஙேஙேஙே... எனக்குத் தெரியாது... நான் இங்கு காணவில்லை.

  சின்னாட்கள் 8.30/9 க்கெல்லாம் ரிக் அண்ட் ரீட் வாங்கி முடித்திடுவார்கள்... அதன் பின்பே பெரீஈஈஈய ஹோஸ்ட்:)) எல்லாம் புறப்படும்.. அதனால் அவர்களது ஷேஸ்டைகள் நான் காணும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை:)).

  ReplyDelete
 8. athira said...
  ஹலவீனுக்கு முட்டை அடிப்பதும் உண்டோ? ....ங்ஙேஙேஙே... எனக்குத் தெரியாது...//
  trick and treat இக்கு ஒன்னும் தராவிடில் அடிப்பாங்க .போன வருஷம் கணவர் கேட்டை லாக் பண்ணாம விட்டார் .நான் உள்ளே எல்லா லைட்டும் போட்டுட்டு இருந்தேன் .தெரியாம கதவு தற்ற சத்தம் கேட்டு எட்டி பார்த்து உள்ளே ஓடிட்டேன் .அடுத்தநாள் பார்த்தா விண்டோ முழுக்க உடைந்த முட்டை /.

  ReplyDelete
 9. MyKitchen Flavors-BonAppetit!. said...//
  வாங்க கிறிஸ்டி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 10. ஸாதிகா said...//
  வாங்க அக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .நேர்ல பார்த்தா பயந்திருவீங்க ரத்த சாயம்லாம் பூசிட்டு போவாங்க

  ReplyDelete
 11. RAMVI said...//

  வாங்க ரமா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி உங்க மகள்களுக்கு ரொம்ப ஆசையா .நான் கொஞ்சம் படம்தான் எடுத்தேன் கடைக்குள்ள போனா மகள்களுக்கு ரொம்ப பிடிச்சி போகும் அவ்ளோ உடைகள் இருக்கு

  ReplyDelete
 12. அவ்வ
  எனக்கு பேய் எண்டால் பயம்
  அப்புறமா வரேன் :)

  ReplyDelete
 13. வணக்கம் அக்கா,
  நலமா?
  படிக்கவே டெரரா இருக்கே..
  ஹலோவீன் பற்றிய செய்திகள்..

  ஏன் ரெண்டு சாக்கிலேட் பாக்கட் வாங்கி கொடுக்கலாமே..
  ஏன் NO TRICK OR TREAT.

  கமராவில் சுட்ட சாரி எடுத்த படங்கள் அனைத்தும் அசத்தல்.

  ReplyDelete
 14. அய்யய்யோ பயமுறுத்தாதீங்க நான் ஒடீர்ரன் .....................ஹா ....ஹா ....ஹா .......படங்கள் அருமை (நேர பார்த்தால் தூங்குவது
  எப்படி ம்ம்ம்ம் ......)வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பெய்த்திருநாள் கொண்டா ட்டப் பகிர்வுக்கு (எங்க அம்மமாவும் அங்க வருவாவோ !...)

  ReplyDelete
 15. @Niruban ஏன் NO TRICK OR TREAT.//

  இந்த ஊர்ல ரொம்ப பூச்சாண்டி பிள்ளை பிடிக்கறவங்க இருக்காங்க அதனனல் எனக்கு கதவை திறக்க பயம் .கணவர் வீட்டில் இருந்தால் கேக்கறவங்களுக்கு ட்ரீட் கொடுப்பார்

  ReplyDelete
 16. அம்பாளடியாள் said...//
  வாங்க வாங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
  ரொம்ப பயம் காட்டிடனோ சாரி சாரி

  ReplyDelete
 17. siva said...
  அவ்வ
  எனக்கு பேய் எண்டால் பயம்
  அப்புறமா வரேன் :)//
  பேபி அதிரா பாருங்க எவ்ளோ தைரியமா கமென்ட் கொடுத்து படத்தை பார்த்துட்டும் போயிருக்காங்க .

  ReplyDelete
 18. உங்கள் அழகுக்கைவண்ண கூடையில் கொஞ்சம் மிட்டாய் வைத்து வெளியில் வைத்து விடுங்கள்...வந்து எடுத்துக்கொள்கிறேன்...

  ReplyDelete
 19. நாங்களே ஹாலோயீன் மாதிரிதான் இருப்போம் ..இதுல டிரஸ் வேறயா..ஹி..ஹி.... :-)))

  ReplyDelete
 20. என்னிடம் ஒரு மாஸ்க் இருந்துச்சி அதை போட்டுகிட்டு இரவு வெளியே வந்த போது நாய் துரத்துச்சி ப்பாருங்க ...!!! .அதுக்கு பிறகு அந்த மாஸ்கை வெளியே எடுப்பதே இல்லை..!!அவ்வ்வ்வ்

  உங்க ஊரில் இந்த தெருநாய் பிரச்சனை இல்லை ப்போலிருக்கு அதான் இது மாதிரி கொண்டாட்டம் ..ஹா..ஹா... :-)))

  ReplyDelete
 21. ஹலோய்யீன் அன்னைக்கி இந்த மாதிரி அட்டகாசம் செய்தா உண்மையான பேய் பிசாசு பயப்படாம என்ன செய்யும்...!!! ஹா..ஹா.. :-)))

  ReplyDelete
 22. கீழேயுள்ள படங்களை அதிரா மற்றும் ராஜேஷுக்கு
  டெடிகேட் செய்கிறேன் .//

  நல்ல வேளை பகல்ல வந்து பார்த்தேன்.... நைட் பாத்த்ருந்தேன் என் உயிருக்கு உத்திரவாதம் இல்ல .. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 23. முதலில் சென்று NO TRICK OR TREAT
  ஸ்டிக்கரை தேடி வைக்க வேண்டும் .//

  ஹா ஹா இது வேறையா...

  ReplyDelete
 24. பேய்க்கு திருவிழா கொண்டாடுற நாடு.. சூப்பர்... நல்ல வேளை நான் தேம்ஸ்ல ஒளிஞ்சுக்கிட்டேன்... இல்லன்னா பயத்துல ஜன்னியே வந்திருக்கும்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 25. ஒட்டி வைக்காம சன்மானமும்
  தராம விட்டா முட்டை அடிச்சிட்டு போவாங்க .ஒன்றிரண்டு
  இல்லைங்க இங்கே முப்பது முட்டை பெட்டி ரொம்ப மலிவா
  கிடைக்கும் //

  ஹா ஹா.. ஒரு ஐடியா விண்டோவுக்கு கீழ ஒரு பாட் வச்சிருங்க... உடைஞ்சு உழுவுற முட்டைய வச்சி.. ஆஃபாயில், ஆம்லட், இப்படி ஏதாவது செஞ்சி அசத்திருங்க... அதுக்கு தான் கிட்னி வேளை செய்யனுங்குறது....

  ReplyDelete
 26. பூசணி குறிப்புல... ரெண்டாவது படம் பாத்துமா அதிஸ் பயப்புடுல.. எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு... நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்...

  ReplyDelete
 27. பேய்களுக்கும் கொண்டாட்டக் காலம்தான்.இங்கும் நடக்குது !

  ReplyDelete
 28. இந்தப்பண்டிகை வந்தால் குழந்தைகளிற்கு கொண்டாட்டம்தான்.
  பழைய ஞாபகங்களை நினைவூட்டிய நல்ல பதிவு.
  வெளியில் வரும் குட்டிபிசாசுகளின் அட்டகாசத்தில் வீட்டிலிருக்கும் பெரியபிசாசுகள் பலதும் பயந்திடுவதும் உண்டு.

  ReplyDelete
 29. என்னிடம் ஒரு மாஸ்க் இருந்துச்சி அதை போட்டுகிட்டு இரவு வெளியே வந்த போது நாய் துரத்துச்சி ப்பாருங்க ...!!! .அதுக்கு பிறகு அந்த மாஸ்கை வெளியே எடுப்பதே இல்லை..!!அவ்வ்வ்வ்//

  சமீபத்தில் கிடைத்த தகவலின்படி அந்த ஜீவன் உங்களை தீவிரமா தேடிட்டிருக்காம் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்

  ReplyDelete
 30. அம்பலத்தார் said...//
  இங்க்லன்ட்ல பெரிய பிசாசுகள் அட்டகாசம்தான் ரொம்ப .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 31. ஒரு ஐடியா விண்டோவுக்கு கீழ ஒரு பாட் வச்சிருங்க... உடைஞ்சு உழுவுற முட்டைய வச்சி.. ஆஃபாயில், ஆம்லட், இப்படி ஏதாவது செஞ்சி அசத்திருங்க..//
  விளையாட்டாய் சொன்னாலும் உண்மைதான் ராஜேஷ் உலகில் எவ்ளோபேர்
  உணவில்லாம இருக்காங்க ,இதுங்க முட்டைய இப்படி வீனடிப்பதுக்கு பதில்
  ஏழைகளுக்கு தந்தா புண்ணியமாவது கிடைக்கும்

  ReplyDelete
 32. ஹேமா said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 33. ரெவெரி said..//
  கண்டிப்பா .போன கிறிஸ்மசுக்கு நானே கைப்பட செய்த மைசூர்பாக் இருக்கு அதையும் சேர்த்தே வச்சுடறேன் .
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 34. ஹாலோவீன் பண்டிகை கொண்டாட்டம் சூப்பர்,நானும் இங்கு பக்கத்தில் உள்ள மாலுக்கு போனேன்,சும்மா நாலு மஞ்சள் பூசணியில் முகம் வரைந்து பரிதாபமாக வச்சிருந்தாங்க,யாரும் கண்டுக்கிடலைபா..உங்க ஊரில் அமோகமாக கொண்டாடுறாங்க..

  ReplyDelete
 35. அன்று இரவு சூனியக்காரிகள் ,துர்தேவதைகள்
  கொள்ளி வாய்பிசாசுகள்,நீலி ,இரத்த காட்டேரிகள் எல்லாம்
  ரொம்ப புத்துணர்வோடு உலாவும் என்பது பிரிட்டிஷ் ஐதீகம் ./

  ரொம்பத்தான் கொண்டாட்டம்!

  ReplyDelete