அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/28/11

Quilled Art/மீள் சுழற்சி

                                                                                     


               எனது முந்தைய பதிவை பார்த்து பயந்து போன 
காணாமல் போன சிறு பிள்ளைகளே !! இனிமே அப்படி 
பேய் படமெல்லாம் போட்டு உங்க தூக்கத்தை கெடுக்க 
மாட்டேன் 
                                                                                      
          இது நான் இன்று செய்து முடித்த க்வில்ட் அணில் 
பழைய /உபயோகபடுத்தாத பிசினெஸ் ரிப்ளை பிரவுன் 
உறைகளை வெட்டி க்வில்லிங் செய்தேன் .
                                                                          
                                                                                   


                                                                                          

                                                                                        

சென்ற வாரம் சர்ச்சுக்கு வெளியே இவர் இருந்தார்                                                                                           
உடனே க்ளிக்கிட்டேன் .அவரமாதிரி படமும் 
செய்திட்டேன் .அணில் நட்ஸ் சாப்பிடறமாதிரி படம் 
வரைந்து க்வில்ட் shapes வைத்து இட்டு ஒட்டி நிரப்பினேன் 
சீக்கிரமே இருட்டுவதால் படம் வெளியே வைத்து எடுத்தேன் .
மீண்டும் சந்திப்போம்.
Cheeeeeers!!!!!!!!

10/27/11

எங்க ஊர்லHalloween கொண்டாட்டம் .


           
          அக்டோபர் 31  அன்று  ஹலோவீன் கொண்டாட்டங்கள் 
நடைபெறும் .அன்று இரவு சூனியக்காரிகள்  ,துர்தேவதைகள் 
கொள்ளி வாய்பிசாசுகள்,நீலி ,இரத்த காட்டேரிகள் எல்லாம் 
ரொம்ப புத்துணர்வோடு உலாவும் என்பது பிரிட்டிஷ் ஐதீகம் .
                                                                                      


                                                                                  
ஹாலோவீன்முன்பு  மஞ்சள் பூசணி எல்லா கடைகளிலும் 
கிடைக்கும் .பெரிய பூசணியை வெட்டி கண் மூக்கு எல்லாம் 
குடைந்து மெழுகு கொளுத்தி வாசலில் வைப்பாங்க .
நெருப்பு முதல் பாராவில் குறிப்பிட்டுள்ள பிசாசுகளை
ஓட ஓட விரட்டும் என்பதும் பிரிட்டிஷ் ஐதீகம் .

அன்று இரவு சின்னது பெரிசு என்று வகை தொகை 
இல்லாம எல்லாரும் பேய் பிசாசு மாதிரி ஆடை 
அலங்காரம் எல்லாம் செஞ்சுக்கிட்டு வீடு வீடா போய் 
பயம் காட்டி (மிரட்டி ) ஏதாவது சன்மானம் பெறுவாங்க .
இவங்களுக்கு கொடுக்கவென்றே கடைகளில் ஆரஞ்சு 
மற்றும் கருப்பு நிற தாள்களில் சுற்றிய மிட்டாய்கள் 
கிடைக்கும் அப்படி சன்மானம் தர விரும்பாதவர்கள் 

                                                                                    

                                                                                 
NO TRICK OR TREAT.
என்ற வாசகத்தை ஜன்னலில்தெரிகிற மாதிரி 
 ஒட்டி வைக்க வேண்டும் .ஒட்டி வைக்காம சன்மானமும் 
தராம விட்டா முட்டை அடிச்சிட்டு போவாங்க .ஒன்றிரண்டு 
இல்லைங்க இங்கே முப்பது முட்டை பெட்டி ரொம்ப மலிவா 
கிடைக்கும் .(சில நேரம். £1 .99. 
அதனால் இந்த ஒருநாள் பிசாசுகள் நிறைய வாங்கி 
வச்சிருக்கும் )எந்த சன்மானமும் தராம விட்டா அடுத்த
நாள் விண்டோ கிளீனருக்கு நாமதான் இருபது பவுண்ட்ஸ் 
அழனும் . எல்லாம் சொந்த அனுபவம்தானுங்க . 
சில இடங்களில் முதியோர் நிறையபேருக்கு 
மாரடைப்பு கூட வந்திருக்கு இந்த கொண்டாட்ட 
சேஷ்டைகளால் .பின்னே பேய்மாதிரி ரத்தம் வழிய 
காட்சி தந்தா எப்படி இருக்கும் .
அன்று இரவு பார்ட்டி எல்லாம் நடக்கும் .இந்த ஹாலோவீன் 
கொண்டாட்டதுக்குன்னு எல்லாம் ஓடி போய் பேய் ட்ரஸ் 
எல்லாம் வாங்குவாங்க . கிறிஸ்மசுக்கு அலங்கரிக்கற 
மாதிரியே வீட்டை ஹாலோவீன் ஸ்பெஷல்ஸ் சிலந்தி
வவ்வால் ,பூச்சி ,கருப்பு பூனை,மண்டை ஓடு  எல்லாம் 
வைத்து அலங்காரம் செய்திருப்பார்கள் .நம்ம ஊர் 
பூந்துடைப்பம் கூட வச்சிருப்பாங்க பேய் ஓட்டறதுக்கு .


                                                                                 

                                  (THANKS TO GOOGLE FOR THE ABOVE PICTURES)

                                    

இன்று காலை மார்கெட் போயிருந்தோம் இப்பவே 
கிறிஸ்மஸ் அலங்காரம் எல்லாம் போட்டிருந்தாங்க ,
அத்துடன் இந்த ஹாலோவீன் அலங்காரமும் .
கீழே இருக்கும் படங்கள் என் மொபைல் காமெராவில்
சுட்டது .பயப்படாம பாருங்க .
பூசணி குறிப்பு :
கீழேயுள்ள படங்களை அதிரா மற்றும் ராஜேஷுக்கு
டெடிகேட் செய்கிறேன் .
                                                                     
                                                    

                                                                  வேலாயுதம்                                                      
                                                                                      
                                                                                     
                                                                                                      


நாங்க இந்த ஹாலோவீன் எல்லாம் கொண்டாட 
மாட்டோம் பார்த்தவற்றை உங்களுடன் பகிர்ந்து 
கொண்டேன் .      முதலில் சென்று NO TRICK OR TREAT         
ஸ்டிக்கரை தேடி வைக்க வேண்டும் .

மீண்டும் சந்திப்போம்.

                                                   

10/20/11

தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

தீபங்கள் ஜொலிக்க ,பட்டாசு வெடிக்க ,புத்தாடைஉடுத்தி 
மகிழ்வோடு இந்நாளை கொண்டாட வாழ்த்துகிறேன் .
தீபாவளி கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் 
இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள் .


                                                                

.நாளை முதல் இங்கே பள்ளி விடுமுறை 
கணினி மகள்வசம் இருக்கும் .மீண்டும் சந்திப்போம்.
Cheeeers .enjoy your week end .

10/7/11

Seed Bead Basket .


TINY SEED BEAD BASKETS

                                                                   


இந்த லிங்க் பார்த்து இந்த சின்ன கூடைகளை செய்தேன் .
நான் மணிகளின் எண்ணிக்கையை வேறுபடுத்தி  
செய்திருக்கிறேன் .
இந்த முறைப்படி செய்து பாருங்கள் .
சாதாரண மணிகளில் இவற்றை செய்யலாம் .

                                                                               

                                                                               

இது Holly berries  படம் ,ஒன்று ஜூலை மாதம் எடுத்தது 
மற்றது நேற்று எடுத்தது 
முதலில் berries பச்சை நிறமாக இருந்து இப்ப சிவப்பா 
மாறியிருக்கு .
                                                                            
                                                                              
இந்த வாரம் எங்க கோயிலில் திருமண அறிவிப்பு ரெண்டு 
பேருக்கு அறிவித்தார்கள் .அதில் மணமகன் ஒரு WIDOW 
மணமகள் SPINSTER என்று குறிப்பிட்டிருந்தார்கள் .ஆலய 
வழக்கப்படி அவர்கள் BANNS PUBLISH     செய்யும்போது 
அங்கிருக்கணும் .மணமகன் வரவில்லை .மணமகள் பேர் 
குறிப்பிட்ட போது ஒரு பெண் எழும்பி  நின்றார் .நான் என் 
கண்களை நல்லா துடைத்து கொண்டு பார்த்தேன் ஒரு 
எண்பது வயது பாட்டி நின்று கொண்டிருந்தார் அப்பவும் 
சந்தேகம் என் கண் மேலதான் வந்தது .
கணவர் வேறு "Bride to be -- makeup இல்லாம வந்துட்டாங்க" 
என்று என்னை குழப்பினார் .
இப்ப மீண்டும் அறிவிப்பு .பாதிரியார் கூறினார் திருமணம் 
செய்ய வயது தடையில்லை மணமகனுக்கு 92 வயது 
மணமகளுக்கு 85 வயது .
நான் இத மாதிரி பேப்பர்ல தான் படிச்சிருக்கேன் .நேர்லய 
பார்த்திட்டேன் .திருமணம் செய்து வைக்கபோவது அந்த 
மணமகளின் மூத்த மகளாம் (அவரும் பாதிரியார்) 
கொள்ளு பேரபிள்ளைகள் FLOWER GIRLS /PAGE BOYS .
அப்புறமா அவர் அறிவித்தார் "இந்த திருமணத்தில் இவர்கள் இணையக்கூடாதபடிநியாயமான தடையோ காரணமோ 
இருப்பின் எழுத்து மூலம் பாதிரியாருக்கு அறிவிக்க 
வேண்டுகிறோம் ""

நல்ல வேளை எங்க மகள் சண்டே ஸ்கூலில் இருந்ததால் இதை பார்க்கல்ல .இல்லன்னா  ரொம்ப கேள்வி கேட்டிருப்பா.


நான் ஒரு வாரம் இணையம் பக்கம் வர மாட்டேன் .
ஒன்றுமில்லை கருப்பு நிற எழுத்துள்ள பேப்பர் வாசித்தா 
கூட கலர் கலரா தெரியுது .பட்டாம்பூச்சி பறக்குது .
கண்களுக்கு கொஞ்சம் ஒய்வு தேவை என்று 
நினைக்கிறேன் .வார இறுதி .எல்லாரும் சந்தோஷமா விடுமுறையை 
என்ஜாய் செய்யுங்க .

cheeeeeeeeeeeers .


  

10/4/11

ரிப்பன் எம்பிராயட்ரி /Twirled rose                                            இந்த ரிப்பன் ரோஸ் பூக்கள் சின்ன 
box frame இல் போடுவதற்காக செய்தேன் ,    ப்ளாகில் 
போடுவதற்கு வாழ்த்து அட்டையாக மாற்றி விட்டேன் .
cross stitch / துணியாக இருந்தால் இன்னும் அழகா சுலபமா 
வந்திருக்கும் .அதை செய்ய உபயோகித்தது முன்பு 
குறிப்பிட்ட அதே கோணி பை துணி தான் .
சில்க் ரிப்பன் எம்பிராயட்ரி பற்றி தளங்கள் லிங்க்
கீழே இருக்கும் லிங்க் பார்த்து தான் இந்த ரோஸ் செய்தேன் 

                                               

      பேப்பர் கிராப்ட்ஸ் எனக்கு மிகவும் எளிது .ஊசியில் கிராப்ட் 
வேலை எனக்கு கொஞ்சம் கடினம் எனவே இதில் எக்ஸ்பெர்ட்
சகோதரிகள் மகி ,வானதி இதை விட அழகா செய்து ப்ளோக்ல 
போடுங்க .
என்னுடைய ஆங்கில வலைபூவிலும் சில சுட்டி 
இதனைப்பற்றி கொடுத்திருக்கிறேன் அங்கும் 
சென்று பார்க்கவும் 
                                                                 
       இந்த வாழ்த்து அட்டை என் கணவரின் சகோதரியின் 
மகன் இரண்டாவது பிறந்த நாளுக்கு செய்தது 
                                                                              

              இது என் மகள் செய்த வாழ்த்து அட்டை 
               அந்த குட்டி பிள்ளையின் பெயர் ஆதித்யா JOASH
தமிழ்  பெயர எழுதுவது மிக சுலபம் ஆங்கில பெயரை 
அப்படியே எழுதிட்டேன் .ஆறாம் தேதி பிறந்தநாள்  .                                          
    


எல்லாரும் எப்பவும் சந்தோஷமா இருக்க இறைவனிடம் 
    பிரார்த்தனை செய்வோம் .