அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/6/11

மீள் சுழற்சி / Quilling


                                                                         

                                                     

                     இந்த போட்டோ ஃ பிரேம் நேற்று செய்தது .
ஃபிரேம் வாங்கி பின்பு அதில் க்வில்லிங் முறையில் 
வண்ணத்து பூச்சியையும் ரோசா மலர்களையும் 
செய்து ஓட்டினேன் . உள்ளே உள்ள படம் ஒரு பழைய 
கோணி பையில் வெட்டி எடுத்து செய்தது.2005 இல் 
இந்தியா  போய் திரும்பி வரும்போது அல்ட்ரா வெட் 
கிரைண்டர் வாங்கி  வந்தோம் அப்பா அதை ஒரு
பெரிய கோணிப்பையில் சுற்றி கட்டி தந்தார் .அப்பா 
இப்ப இல்ல ஆனா அந்த துணிய பத்திரமா
 வச்சிருக்கேன் .இன்னும் கொஞ்சம் மிச்சம்  இருக்கு 
முடிந்தவரை மீள் சுழற்சி செய்துவிட்டேன் .செய்முறை 
தேவையான பொருட்கள் 

IRON ON FABRIC
JUTE PIECES 
TRACE PAPER ,DESIGN ,FABRIC PAINT OR MARKER PENS .

1.தேவையான அளவில் ஜூட் துணி வெட்டி IRON ON 
FABRIC வுடன் இணைக்கவும் .
2.பிறகு இன்னொரு  IRON ON FABRIC துண்டு எடுத்து 
விரும்பிய டிசைன் வரைந்து அல்லது ட்ரேஸ் செய்து 
வண்ணம் தீட்டவும் .
3 அதை வெட்டி மீண்டும் ஜூட் துணிமேல் பசை 
கொண்டு ஒட்டவும் .நான் மூன்று பறவைகளை வெட்டி 
இணைத்துள்ளேன் .ஜூட் துணியில் நேரடியா தைப்பது 
எனக்கு கடினமா இருந்தது எப்படியோ தச்சு முடித்தேன் 
                                                                       
                                                                   


இதை ஆங்கிலபதிவிலும் போட்டுவிட்டேன் .
(இன்று ஆசியாவின் சமையல் குறிப்பு பார்த்ததில் 
இருந்து அப்பா நினைவு .அதே ரெசிப்பிய்ல் 
அப்பா செய்வார் நான் ஒரு முறைகூட சாப்பிட்டது 
கிடையாது .இப்ப வருந்துகிறேன் .
அன்பு செலுத்துவது அன்பு வெளிக்காட்டுவது எதுவா
 இருந்தாலும் உடனே செய்திடணும் காலம் கடந்தபின் 
எவ்வளவு யோசித்தாலும் பயனில்லை )
         

19 comments:

 1. //அன்பு செலுத்துவது அன்பு வெளிக்காட்டுவது எதுவா
  இருந்தாலும் உடனே செய்திடணும் காலம் கடந்தபின்
  எவ்வளவு யோசித்தாலும் பயனில்லை//

  மிகவும் சரியான அருமையான வார்த்தைகள் தான் மேடம். தாமதிக்கவே கூடாது. பின்னால் எவ்வளவு கதறினாலும் வரவே வராது என்பதே உண்மை.

  நான் இப்போது யார் எது செய்தாலும், கெடுதலே செய்தாலும், அவர்கள் மேல் கோபப்படாமல், அவர்கள் மீதும் அன்பு செலுத்திக்கொண்டு, வாழ என்னைப்பக்குவப் படுத்திக்கொண்டு வருகிறேன்.

  அப்பா அன்புடன் பேக் செய்து கொடுத்த சாக்குத்துணியையும், வேஸ்ட் செய்யாமல் பத்திரப்படுத்தி, உங்கள் கைவண்ணத்தைக் காட்டியுள்ளீர்களே! தங்கள் தந்தையும் அதை ரஸித்துக்கொண்டுதான் இருப்பார் இப்போது. நம் கண்களுக்கு மட்டும் அது தெரியாது.

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. @வை.கோபாலகிருஷ்ணன் said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க .
  மேடம் எல்லாம் எதற்கு .ஏஞ்சலின் என்றே அழையுங்கள் .உங்கள் அனுபவம் /QUALFICATION இவற்றின் முன்னால் நானெல்லாம் சிறு தூசு
  "வேலையில்லை" என்ற வார்த்தையை மாற்றி எழுத வேண்டும் என்று வந்தேன் உங்கள் பின்னூட்டத்தில் உள்ள "பயனில்லை" தான் அங்கே சரியா பொருந்தும் .மிக்க நன்றி

  ReplyDelete
 3. சூப்பராக இருக்கு அஞ்சலின். அழகாக நேர்த்தியாகச் செய்திருக்கிறீங்க.

  இன்றைய காலத்தில் இன்றிருக்கிறோம் நாளை இருப்போமா இல்லையா என்றே தெரியாது, அதனால எதுவானாலும் உடனேயே செய்திடோணும், கொமெண்ட் போடுவது கூடத்தான்..... அப்பத்தானே சொல்லுவீங்க நேற்றுக்கூட வந்து என்னிடம் பின்னூட்டம் போட்டுவிட்டுத்தான் போனா அதிரா என:).

  ReplyDelete
 4. @athira said...//
  வாங்க அதீரா இன்னிக்கு ரெண்டு போஸ்ட் .பயணம் பார்ட் 2 /அதையும் பாருங்க

  ReplyDelete
 5. ஓ... நான் இப்பத்தான் வந்தேன், அதனால இதுதான் கண்ணில பட்டது, ஓக்கே அதையும் பார்த்துப் படிக்கிறேன்...

  ReplyDelete
 6. உள்ளே மீன் பறப்பது அழகா இருக்கு..!!ஹி..ஹி.. ஆ...அதிஸ் இதை பாக்கிரதுகிள்ளே பிடிச்சு ஒளிச்சு வச்சிடுங்க :-))

  ReplyDelete
 7. //இன்றைய காலத்தில் இன்றிருக்கிறோம் நாளை இருப்போமா இல்லையா என்றே தெரியாது, அதனால எதுவானாலும் உடனேயே செய்திடோணும், கொமெண்ட் போடுவது கூடத்தான்..... அப்பத்தானே சொல்லுவீங்க நேற்றுக்கூட வந்து என்னிடம் பின்னூட்டம் போட்டுவிட்டுத்தான் போனா அதிரா என:). //

  நாங்கெல்லாம் சத்தியவான் சாவித்திரி பரம்பறை அப்படியே விட்டுடுவோமா என்ன ???? :-)

  ReplyDelete
 8. //ஜெய்லானி said...

  உள்ளே மீன் பறப்பது அழகா இருக்கு..!!ஹி..ஹி.. ஆ...அதிஸ் இதை பாக்கிரதுகிள்ளே பிடிச்சு ஒளிச்சு வச்சிடுங்க :-)//

  அவ்வ்வ்வ்வ் அது மீனோ?( இது வேற மீ நோ:)). நான் தாராவாக்கும் என நினைச்சு விட்டிருந்தேன்:).

  //நாங்கெல்லாம் சத்தியவான் சாவித்திரி பரம்ப””றை”” அப்படியே விட்டுடுவோமா என்ன ???? :-) //

  மாமீஈஈஈஈஈஈஈ ஓடிவாங்க, மருமகனுக்கு டமில் தடுமாறுது:)))).

  ஹையோ... கோடி புண்ணியம் கிடைக்கும், என்னை ஆராவது அவசரமா தேம்ஸ்ல விட்டுவிடுங்கோ:))

  ReplyDelete
 9. ஜெய்லானி said...//
  டீச்சர் கம் சூன் ....மீன் பறக்கற மாதிரி தெரியுதாம் ????????

  ReplyDelete
 10. அழகான வேலைப்பாடு,டச்சபிலான பதிவு

  ReplyDelete
 11. //மீன் பறப்பது அழகா இருக்கு.// ;))

  //அது மீனோ?( இது வேற மீ நோ:)). நான் தாராவாக்கும் என நினைச்சு விட்டிருந்தேன்// விளங்குது. ;)

  //மருமகனுக்கு டமில் தடுமாறுது// :))))

  ஒருத்தர் ஒரு போஸ்ட்டிங் போட்டால் அதுக்கு ஒழுங்காக ஒரு கருத்துச் சொல்லுறதும் இல்ல; சொல்ல விடுறதும் இல்ல. பொல்லாத பிள்ளைகள். கர்ர். ;)

  //டீச்சர் கம் சூன் ....மீன் பறக்கற மாதிரி தெரியுதாம் ???????? // ;)))

  இது இப்ப ஒரு ஃபஷனாப் போகுது; பிழை பிடிக்கிறவங்களுக்கும் பிழை விடுறவங்களுக்கும் நடுவில என்னைப் போட்டு உருட்டுறது. நடத்துங்கோ, நடத்துங்கோ. ;)

  ReplyDelete
 12. சுப்பர் ஏஞ்சல். பாராட்டுக்கள். வண்ணத்துப்பூச்சி வடிவா இருக்குது. பறவைகள் அதை விட வடிவா இருக்குது.

  சாக்குத் துணியில தைக்கிறதுக்கு குறுக்குத் தையல்தான் பெஸ்ட். அடுத்த முறை ட்ரை பண்ணுங்கோ. இந்தச் சாக்கு நீக்கல் அதிகமாகத் தெரியுது. wool - இரட்டைப் பட்டாக எடுத்து தைச்சால் நல்லா வரும்.

  மினக்கெட்டு செய்யிற வேலைகள் எல்லாம் பத்திரமாக தூசி பிடிக்காமல் வைக்கிறீங்கள்தானே ஏஞ்சலின்?

  ReplyDelete
 13. @thirumathi bs sridhar said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆச்சி .

  @இமா said...//
  ஆமாம் இமா அந்த கோணிப்பை கொஞ்சம் விலகின மாதிரி இருக்கு ,நான் அதை iron on fabric உடன் இணைத்ததால் தெரியவில்லை.அடுத்த முறை நீங்கள் சொன்னபடி செய்து பார்க்கிறேன்.எல்லா கைவினையும் பத்திரமா ஃபிரேம் செய்திருக்கிறேன் .கார்ட்ஸ் பெரும்பாலும் elders home /charity இக்கு
  அன்பளிப்பாக கொடுத்திடுவேன் .

  ReplyDelete
 14. சுருக்கவிடை. ;))) //கோணிப்பை கொஞ்சம் விலகின மாதிரி இருக்கு// தண்ணீரில் போட்டு எடுத்து கிடையாக உலரவைத்தால் இடைவெளி குறையும்.

  //எல்லா கைவினையும் பத்திரமா ஃபிரேம் செய்திருக்கிறேன்.// ம்.. ;) க்ளிங் ராப் போட்டு வைத்தால் தூசு படாமல் இருக்கும்.

  //பெரும்பாலும் elders home, charity இக்கு அன்பளிப்பாக கொடுத்திடுவேன்.// சூப்பர்ங்க ஏஞ்சலின்.

  ReplyDelete
 15. உங்களை பின்பற்றி என் மகளும் இதை செய்து எனக்கு கொடுத்தார்...நன்றி ஏஞ்சலின்...

  ரெவெரி

  ReplyDelete
 16. எப்படியோ கஷ்டப்பட்டு உங்கள் பக்கத்தில் மறுமொழி இட வழி கண்டுபிடிச்சாச்சு...சீக்கிரம் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்...-:)


  ரெவெரி

  ReplyDelete
 17. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரெவரி .மகளை என் ஆங்கில craft வலைபூவுக்கும் அறிமுகப்படுத்துங்கள் .

  ReplyDelete
 18. ரொம்ப சூப்பர்,

  இதெல்லாம் ஏணிவைத்தாலும் இப்போதைக்கு எட்டாது போல

  ReplyDelete
 19. அன்பு செலுத்துவது அன்பு வெளிக்காட்டுவது எதுவா
  இருந்தாலும் உடனே செய்திடணும் காலம் கடந்தபின்
  எவ்வளவு யோசித்தாலும் பயனில்லை )/

  எத்தனை அழகிய வரிகள்!

  ReplyDelete