அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/29/11

ரிப்பன் எம்பிரோய்டரி /Photos


                                  என் தோழி ஒருவர் இதை செய்ய கற்று 
                                 கொடுத்தார் .

                                                              
                                                                              
 RIBBON EMBROIDERY  TUTORIAL        என்ற தலைப்பில் 
 YOU TUBE    இல்  நிறைய வீடியோ செய்முறை விளக்கம் .
 தருகிறார்கள் .என்னால் வீடியோ லிங்க் இணைக்க 
 முடியவில்லை .பிறகு இணைக்கிறேன்.நான் செய்ததும் 
 இரவு நேரம் எனவே STEP BY STEP     படம் எடுக்கல .
 இந்த லிங்க் பார்க்கவும் 
        http://www.embroidery-methods.com/silk-ribbon-embroidery-stitches.html                                                                      

இது எங்க தோட்டத்தில் எடுத்த படம் .ஐந்து தங்கமீன்கள் 
ரெண்டு குட்டி மீன்கள் (TROPICAL ) மீன்கள் இருக்காங்க .
அக்டோபர் கடைசியில் தங்க மீன்கள் வீட்டு உள்ள 
வந்திடுவாங்க .இவற்றில் ஒரு மீன் லைட் பிங்க் நிறத்தில் 
இருக்கே அதன் பெயர் மெலனி ,அது கொஞ்சம் BEND ஆகின  
மாதிரி இருக்கும் பிறப்பில் இருந்தே இப்படித்தான் .
ஆனாலும் சாப்பாடு போடும்போது எல்லாரையும் கிட்ட 
விடாம தனியா சாப்பிடுவா .

                                                                   
  இவங்க POND மேலே நெட் போட்டிருக்கோம் அது மேலே 
  பக்கத்துக்கு வீட்டு அனுஷ்கா ஏறி போவா .

                                                                         
 வளக்கறது பிரிட்டிஷ் லேடி ஆனால் பூனை  பேரு அனுஷ்கா 
 அனுஷ்கா ரசிகர் மன்றம் காதில் விழுந்தா அவ்ளவுதான் .
  
                                                                                  

 எல்லாரும் வார விடுமுறையை சந்தோஷமா என்ஜாய் 
செய்யுங்க .எல்லா பின்னூட்டத்துக்கும் திங்களன்று 
பதில் தருகிறேன் .நாளை முதல் சன்டே வரை பிசி .

                                                                    


 Cheeeers Byeeeeee.                                               

31 comments:

 1. Wow,Luvly post Angeline,Ribbon Embroidery and its demo luks so good.

  ReplyDelete
 2. me the firstu...i like anushkkaaa..:)

  ReplyDelete
 3. பிங் கலர் சீட்ல கருப்பு பூனை
  அன்ஷ் கருப்ப இருந்தாலும் களையா இருக்கு
  ஓகே ஹாப்பி வீக் எண்டு

  ReplyDelete
 4. வேலைப்பாடு நல்லாயிருக்கு ஏஞ்சலின்...அக்டோபர்லையே குளிரா?

  ReplyDelete
 5. அற்புதமான எம்பிராய்டரி தோழி...கலர் பொருத்தமா இருக்கு...

  தங்கமீன்கள்,கருப்பு பூனை எல்லாம் பார்க்க மிக அழகு !

  ReplyDelete
 6. Your ribbon embroidery work looks great Angelin.

  ReplyDelete
 7. looks beautiful..good job angelin!!

  ReplyDelete
 8. ஆஅ.... அஞ்சு.. பேப்பிள் அண்ட் ஒரேஞ் பூ சூப்பர்.

  உண்மையிலேயே மிக அழகான கைவண்ணம்.

  ReplyDelete
 9. அனுஷ்கா வுக்கு நல்ல செல்லம்தான்போல:)))).

  சூப்பர் குண்டூஊஊஊஊஊஊ:))).

  நான் ஹ்ஹாய் சொன்னேன் எனச் சொல்லிடுங்க:)).

  ReplyDelete
 10. பார்த்தீங்களோ பூஸ், மீனைச் சாப்புடாதூஊஊஊஊஊஉ:))).

  ReplyDelete
 11. wow ரிப்பன் எம்ப்ராய்டரி சூப்பர்... மெலனிய வாட்ச் பண்ண தான் அனுஷ்கா புஸ்ஸார் வந்திருக்காருன்னு நினைக்கிறேன்.. மெலனிய பத்திரமா பாத்துக்கனும் புஸ்ஸார நம்ப முடியாதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

  ReplyDelete
 12. அனுஷ்கா ரசிகர் மன்ற தலைவரா இருந்தும் இன்னைக்கு தான் அனுஷ்காவ நேர்ல பார்க்க முடிஞ்சது.... இந்த அனுஷ்கா தான் சிங்கம் படத்துல சூர்யா கூட மேக்கப் போட்டு நடிச்சுதா.... மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 13. ரிப்பம் எம்பிராய்டரி அழகோ அழகு.பிரிடிஷ் லேடிக்கு அனுஷ்கா படம் பார்க்கச்சொன்னது யாரு?

  ReplyDelete
 14. வளக்கறது பிரிட்டிஷ் லேடி ஆனால் பூனை பேரு அனுஷ்கா
  அனுஷ்கா ரசிகர் மன்றம் காதில் விழுந்தா அவ்ளவுதான் ./

  அனுஷ்கா அழகா சொகுசா இருக்கா!

  ReplyDelete
 15. /அன்ஷ் கருப்ப இருந்தாலும் களையா இருக்கு/ சிவா??????????!!!!!!!!

  ஏஞ்சல் அக்கா, எம்ப்ராய்டரி பார்த்து இம்ப்ரெஸ் ஆகி, யுட்யூப்ல ரிப்பன் எம்ப்ராய்டரி வீடியோஸ் நிறைய பார்த்துட்டேன்! :) ரெண்டாவது ஆளா கமெண்ட் போட ட்ரை பண்ணேன், லேப்டாப் கொஞ்சம் பிரச்சனை செய்(த)வதால் எங்கயுமே நினைச்ச நேரத்துக்கு கமெண்ட்ட முடில!

  நீங்க தைத்திருப்பது Strait ஸ்டிச் மட்டுமா? என்னென்ன ஸ்டிச்னு சொல்லுங்களேன்..அடுத்த முறை கடைக்கு போகைல ரிப்பன்-ஊசி எல்லாம் வாங்கிட்டு வந்துருவேன்,சீக்கிரம் தைச்சு பார்த்து சொல்றேன்.

  ReplyDelete
 16. மாய உலகம் said...
  wow ரிப்பன் எம்ப்ராய்டரி சூப்பர்... மெலனிய வாட்ச் பண்ண தான் அனுஷ்கா புஸ்ஸார் வந்திருக்காருன்னு நினைக்கிறேன்.. மெலனிய பத்திரமா பாத்துக்கனும் புஸ்ஸார நம்ப முடியாதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

  ReplyDelete
 17. மாய உலகம் said...//

  ஆமா ராஜேஷ் நீங்க சொல்றது சரிதான் .நாங்க நடு இரவில் ஜன்னல் வழியா
  பார்த்தோம் .அப்ப அனுஷ்கா fence மேலே அமர்ந்து கீழே பார்த்திட்டு இருக்கும் .

  ReplyDelete
 18. மகி said...//
  வாங்க மகி .நீங்க தையல் நல்ல செய்வீங்க .இதில் ஒரு french knot ,straight stitch,leaf stitch செய்திருக்கேன் .நான் இன்னும் நிறைய வெப்சைட்ஸ் தருகிறேன் .எனக்கு கார்ட்ஸ்மற்றும் மீள் சுழற்சி செய்யவதில் தான் விருப்பம் அதிகம் .நீங்க நிறைய செய்து ப்லாக்ல போடுங்க .இந்த எம்ப்றைடரி ரொம்ப அழகா இருக்கும்

  ReplyDelete
 19. இராஜராஜேஸ்வரி said...//
  வாங்க அக்கா .அனுஷ்கா ரொம்ப சொகுசு .அதன் ஓனர் ரொம்ப ஆசையா வளக்கறாங்க

  ReplyDelete
 20. ChitraKrishna said...//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா .

  ReplyDelete
 21. athira said...
  பார்த்தீங்களோ பூஸ், மீனைச் சாப்புடாதூஊஊஊஊஊஉ:))//
  நெட் பக்கத்தில pond அருகில் நிறைய சோலார் லைட் வச்சிருக்கோம் அதனால் தூர இருந்து பார்த்திட்டு போய்டும் ,அடுத்த படத்தில் பார்த்தீங்க தானே என்னம்மா புறாவை பார்த்திட்டு இருக்கு .
  மியாவ் மியாவுக்கு சப்போர்ட் ஹா ஹா

  ReplyDelete
 22. இமா said...//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா.

  ReplyDelete
 23. ஸாதிகா said...
  ரிப்பம் எம்பிராய்டரி அழகோ அழகு.பிரிடிஷ் லேடிக்கு அனுஷ்கா படம் பார்க்கச்சொன்னது யாரு?//

  ஹா ஹா நிச்சியமா நான் இல்ல .நான் நினைக்கிறேன் அனுஷ்கா என்பது ரஷ்ய பெயரோ ?
  நான் மெலனி என்று இங்கிலீஷ் பெயர மீனுக்கு வச்சதால் அவங்க நம்மூர் பேர பூனைக்கு வச்சிட்டாங்க .ஒரு ஆண் பூனையும் இருக்கு அதன் பேர் அஜய் .

  ReplyDelete
 24. MyKitchen Flavors-BonAppetit!. said...//
  Thanks for your lovely comments Christy

  ReplyDelete
 25. S.Menaga said...//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமேனகா .

  ReplyDelete
 26. siva said...//
  ஹா ஹா ஹா .மியாவ் அழகுதான் ஆனா எப்ப மெலனி கிடைக்கும்னு காத்திட்டு இருக்கு .உங்களுக்கும் ஹாப்பி வீக் எண்டு

  ReplyDelete
 27. @ரெவெரி said...//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரெவரி .இங்கே அக்டோபரில் குளிர் ஆரம்பிக்கும் நாங்க டைம் மாத்தும்போது அதாவது 30 ஆம் தேதி வீட்டுக்குள்ள எடுத்தி வந்திடுவோம் அதுவும் மெலனி கொஞ்சம் நல்லா நோட் பண்ணீங்கனா அதோட வால் பகுதி இயல்பிலேயே வளைந்து இருக்கும் மெதுவா தான் ஸ்விம் செய்யும்
  அதனால் அதுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் .ரெண்டு வருடமா அப்படிதான் செய்றோம் .அதுவுமில்லாம இங்கே மழை வேற ஆரம்பிச்சிடும் ,இந்த முறை குளிர் கடுமையா இருக்கும்னு சொல்றாங்க

  ReplyDelete
 28. @Kousalya //
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி

  ReplyDelete
 29. வணக்கம் அக்காச்சி,

  டெக்கிரேசன் சூப்பரா இருக்கு.

  ReplyDelete