அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/13/11

ஷேக்ஸ்பியர் சிட்டி .......நகர்வலம்.. Stratford Upon Avon.
இது தான் வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த இடம் .
சென்ற ஞாயிறன்று எங்கள் மகளின் concert, Stratford Upon Avon Royal Shakespeare Theatre   இல் நடைபெற்றது .மாணவர்கள் பனிரெண்டு மணிக்கே தியேட்டர் உள்ளே சென்று விட வேண்டும் என்பதால் நாங்கள் நகரத்தை ஒரு வலம் வந்தோம்.


                                                                      Royal Shakespeare Theatre  

                                                                                         மரத்தால் செய்த வாத்து 
                                                                                                   
                                                                                நேபாளியர்களின் கடை          

                                                                                                                 
                                                                                                              
                                                                                                       
                                                                                                           
                                                                                                        


                                                       ஷேக்ஸ்பியர் பிறந்த இடம் 
                                                                                                          
                                         பிறந்த தேதி சரியாக எங்கும் குறிப்பிடவில்லை .
ஆனால் கிறிஸ்தவ முறைப்படி (Anglican CHURCH Christening/Baptism ) 
ஹோலி ட்ரினிட்டி ஆலய பதிவில் 26/April /1564 அன்று அவருக்கு 
பாப்டிசம் தரப்பட்டு உள்ளது .
                                இது தான் அந்த பழமைவாய்ந்த ஆலயம் 

                                                                     

                                                                          
                                               என்னா தான் ட்ரை பண்ணாலும் 
அந்த stained glass mirror அப்படியே எல்லா படத்திலும் விழுது  .
                                                   ஞானஸ்நானம் கொடுத்த இடம்
 மிகவும் பழமை வாய்ந்த பைபிள் 
                              பதினாறாம்  நூற்றாண்டு என்று
                              குறிப்பிடபட்டுள்ளது 
                                                                              1611
                                                                     
 ஷேக்ஸ்பியர் மற்றும் அவரது குடும்பத்தினர்கல்லறைகள்
 இங்கேதான் இருக்கு .

இது அவரும் அவர் மனைவியினது கல்லறை      .
அவரது கல்லறையில் இருக்கும் கல்லில் அவரது எலும்புகளை
 நகர்த்துவதற்கு எதிரான சாபம் பொறிக்கப்பட்டுள்ளது:
""Good Friend, for Jesus’ sake forbear
To dig the dust enclosed here:
Blessed be the man that spares these stones,
And curst be he that moves my bones."""

கல்லறையின் மேல் எழுதப்பட்டுள்ள வாசகம் .
இந்த ஆலயத்தை புதுபிக்கும்போது  கூட மிக 
கவனமுடன் கல்லறைக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் 
வேலை செய்திருக்கிறார்கள்..


                             ஆலயத்தினுள் ஷேக்ஸ்பியரின் அரை 
                              உருவச்சிலை.


                                                                          
 இப்ப வெளியே வந்தாச்சு 
"CORDELIA" KING LEAR இன் மகள் பெயர் 
இங்கே எல்லா இடங்களும் பழங்காலத்தில் 
இருந்தா மாதிரியே பாதுகாத்து வராங்க .
கடைகளுக்கும் ஷேக்ஸ்பியர் கதாபாத்திரங்களின் பெயர்கள் .
                                                                                
நிறைய இடங்கள் (ம்யுசியம் )நாங்கள் போகவில்லை 
எங்க மகள் ப்ராக்டிஸ் செய்து கொண்டிருந்ததால் 
அவளோடு பார்த்து ரசிப்பது நல்லது என்று நினைத்தோம் .
                                                         River Avon 

Boat House/Shops
Hamlet 
                                                                            
                                                                     Macbeth
                                                 School Children from Korea 
                                                                                    


                                        இப்பவே கிறிஸ்மஸ் அலங்காரம் 


                                            இப்ப எங்க மகள் பாடிய அரங்கம்                      
                                            SWAN THEATRE ( second in the first row )
                                             
                                                                               
               
                                                          
                       எல்லா படங்களும் என் நோக்கியா touch screen உபயம்  .
இந்த மாத இறுதியில் வேறு ஒரு இடம் செல்கிறோம் அது வரை 
Cheers!!!!Beeeeee Happyyyyyyy...
              

29 comments:

 1. thxs for sharing,waiting for next post!!

  ReplyDelete
 2. கலக்கல் படங்கள்.... நாமும் சுற்றியதுபோல ஒரு உணர்வு...

  என்னது கிறிஸ்மஸ் ஆரம்பித்துவிட்டுதோ? ஆங்ங்ங்ங்ங்ங்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்:)))))).

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. இயற்கை எழிலோடு, கண் கவரும் வேலைப்பாடுகளோடு ஷேக்ஸ்பியர் பிறந்த நகரம் காட்சி தருகிறது.

  படப் பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 5. angelin நீங்க எதையுமே விளக்கமாக எழுதவில்லையே என்று நினைத்தேன்.ஆனால் அழகான பேசும் படங்கள் விளக்கிவிட்டன. அருமையான பதிவு..
  உங்க மகளை கிட்டத்தில் படம் எடுத்து எங்களுக்கெல்லாம் காண்பித்து இருக்கலாம்...

  ReplyDelete
 6. படங்கள் எல்லாமே கதை சொல்லுது.வர்ணக் கண்ணாடி அதிசயம்தான்.ஷேக்ஸ்பியர் பிறந்த வீட்டைப் பார்க்கும்போதும் மனதில் ஒரு பெருமிதம்தான் !

  ReplyDelete
 7. உங்க பதிவு அருமை..
  படங்கள் நேரே பார்ப்பது போல் இருக்கு,,,
  பகிவிற்கு நன்றிகள்....

  ReplyDelete
 8. @S.Menaga said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேனகா .இந்த மாத இறுதியில் வேல்ஸ் செல்கிறோம் போய் விட்டு வந்து படங்களோடு பதிவிடுகிறேன் .

  ReplyDelete
 9. @athira said..//
  வாங்க அதிரா.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
  இப்பவே கிறிஸ்மஸ் அலங்காரம் !!! ஜூலை மாதமே !!!

  ReplyDelete
 10. @நிரூபன் said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

  ReplyDelete
 11. @RAMVI said...//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
  ரமா .இன்னும் நிறைய எழுதியிருப்பேன் .கூகிள் எடிடர் வேலை செய்ய மாட்டேங்குது .இமெயிலில் எழுதி காபி பேஸ்ட் செய்து பதிவை கம்ப்ளீட் செய்தேன் .

  ReplyDelete
 12. @RAMVI said...//
  அந்த அரங்கம் வட்ட வடிவில் ,இருக்கைஎல்லாம் மூன்று , நான்காவது அடுக்கில் ,நானே கொஞ்சம் பயந்திட்டேன் .நாங்கள் அவள் எதிர்புறத்தில் அமர்ந்திருந்தோம் .அதாவது நாங்க உப்பரிகையில் பாடுபவர்கள் கீழே நடுவில் .அருகில் சென்று எடுக்க முடியல ஜூம் செய்த கொஞ்சம் க்ளியரா தெரிவா .ரெண்டு லேடிஸ் வயலின் வாசிக்கிறவங்க நடுவே இருப்பது அவள்தான் .

  ReplyDelete
 13. @ஹேமா said...//
  வாங்க ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
  நாங்க போன நாள் நல்ல வெயில் இங்கிலாந்தில் எப்ப மழை அடிக்கும் /வெயில் காயும்னு சொல்லவே முடியாது .அவர் வீட்டு முன் படம் எடுக்க
  பெரிய க்யு .ஆங்காங்கே street plays என்று நகரம் முழுதும் ஒரே ஆரவாரம் .எல்லாத்துக்கும் டிக்கட் .டூரிஸ்ட் ஏரியா .மொத்தத்தில் perfect place for a day out .

  ReplyDelete
 14. @vidivelli said...//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி செண்பகா .

  ReplyDelete
 15. வந்தாச்சு நிறையா தெரிஞ்சுக்கிட்டாச்சு சகோ.

  வாழ்த்துக்கள் சகோ.

  நீங்கள் சொன்ன பிறகுதான் இந்த வலைப்பூ தெரியும்.

  ReplyDelete
 16. அழகான படங்கள். அருமையான பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. படங்களை அழகாக எடுத்திருக்கீங்க.. என் ஹார்ட் டிஸ்கில் சேமித்துக் கொள்கிறேன்..நன்றி..
  எனது இன்றைய பதிவிற்கு கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி. Followers widget white font-ஆகாத் தெரிகிறது. குறிப்பிட்டமைக்கு நன்றி. இது கூகுளின் தவறு என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 18. நல்ல பதிவுங்க. படங்கள் நல்லா இருக்கு. உங்க பொண்ணுக்கும் வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
 19. படங்கள் ஒவ்வொன்றும் அருமை .

  நேரில் பார்த்தது போல் இருந்தது

  ReplyDelete
 20. சிரமம் பாராமல் என் தளத்திற்கு வருகைப் புரிந்தைமைக்கு நன்றி!

  ReplyDelete
 21. நல்லதொரு பதிவு பகிர்வுக்கு நன்றிகள், நேரில் பார்த்ததுப்போல் இருந்தது

  ReplyDelete
 22. நல்ல பதிவு. நல்ல அருமையான படங்கள். சுமார் 450 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் பிறந்த இடம் வாழ்ந்த இடம் முதலியவற்றை காணச்செய்த தங்களுக்கு என் நன்றிகள். அந்த மரத்தினால் செய்த வாத்துக்கள் நிஜ வாத்துக்கள் போலவே அழகோ அழகாகச் செய்யப்பட்டுள்ளன. பதிவுக்குப்பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. angelin உங்களை மூன்று முடிச்சு தொடர்பதிவிட அழைதிருக்கிறேன்,நேரன் கிடைக்கும் போது தொடரவும். நன்றி..

  ReplyDelete
 24. மன்னிக்கவும் “நேரம்” என்பதிர்க்கு பதிலாக ‘ நேரன்’என்று எழுதிவிட்டேன்.
  நேரம் கிடைக்கும் போது தொடரவும்

  ReplyDelete
 25. ஆஹா.. சூப்பர் போட்டோஸ் ...!! :-))

  ReplyDelete
 26. காண கிடைக்காத புகைப்படங்கள்.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 27. அருமை. பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்.

  இன்னொரு விஷயம்.

  அதிரா மியாவ் அப்பல்லாம் சிங்கிள் கமென்ட் தான் போல!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) அப்போதான் அறிமுகம் பூனைக்கு நான் ..அதனால் ஒரே ஒரு கமெண்ட் தான் :)

   Delete