அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/9/11

Quilled Art/அக்கம் பக்கம் செய்தி

Quilled Art
                                                                             
இது க்வில்லிங் முறையில் செய்த படம் 
முழுவதும் பிரவுன் நிற போஸ்ட் கவர்களை வெட்டி 
செய்தது .ஏற்கனவே என் ஆங்கில வலைப்பூவில் 
பதிவு செய்தேன் .இப்ப frame போட்டு இங்கேயும் 
போட்டாச்சு .கீழ் காணும் சுட்டியில் க்வில்லிங் 
கற்றுக்கொள்ள பார்க்கவும் .

                                               


http://www.handmade-craft-ideas.com/free-quilling-patterns.html
நல்லா உற்று பாருங்க .என்னன்னு தெரியுதா ???


 என் பொண்ணு கொஞ்ச நாள் முன்னாடி பள்ளிக்கூடம் அருகில் 
இருந்து வாட்டர் பாட்டில்ல போட்டு இதுங்கள எடுத்துட்டு வந்தா .
நாமெல்லாம் மீனுன்னு நெனச்சி தவளைய வளத்தோம் ஆனா 
இவ தலைபிரட்டை என்று தெரிஞ்சே எடுத்திட்டு வந்தா .நானும் 
ஒரு பக்கெட்ல போட்டு தோட்டத்தில வச்சேன் இன்னிக்கு   !!!!!!                                                            


                                                 baby frog 

அக்கம் பக்கம் செய்தி 
எங்கள் சிட்டில நம்மூர் பெண்மணி ஒருவர் ஷாப்பிங் 
போயிருக்கார் வழியில் வேறு ஒரு நாட்டை சேர்ந்த ஒரு பெண் 
(பிளாஸ்டிக் மாலைகள்,செயின்விற்பவர்  )இவற்றை நம்மூர்
 பெண்ணின் கழுத்தில் போட்டு அழகா இருக்கு உனக்குன்னு 
சொல்லி கழுத்தில் போட்டு எடுக்கும்போது 25 சவரன் தாலி
 கொடியையும் அபேஸ் பண்ணிட்டு ஓடியே போய் விட்டார் 
இப்ப நம்மூர் பெண்மணி அதிர்ச்சியில்.இன்னும் போலிஸ்
தேடுது தேடுது தேடிகிட்டே இருக்குது .இப்ப எல்லாம் 
காகிதத்தில் ஆபரணங்கள் வந்து விட்டது .மழையில் போட 
முடியாது ஆனா அழகா இருக்கும் .நான் செய்த பேப்பர் க்வில்ட் வளையல் மற்றும் 
பெண்டன்ட்ஸ்.
                                                                        
                                                                           
                                                                             
                                                                                    
 சென்ற வாரம் பார்க்குக்கு போனப்போ எடுத்த படம் 
அம்மா அப்பா பிள்ளைகள் .
கிட்ட போய் போட்டோ எடுக்க முடியல 
அம்மா ஒரு முறை முறைச்சுது ,அம்மாடியோவ் 
parental care !!!!!!!

                                                                                
                                                                                 
                                                                               
                                                  பார்க்கில் இந்த இடம் 
                                        ரொம்ப அழகா இருந்தது க்ளிக்கிட்டேன் .
 Abbey - A church associated with a monastery or convent


                                                                                       
                                                                                   
                                                                                    
                                                                                     
கூகிள் transliterate அ ஆ என் டாஷ் போர்டில் காணவே 
இல்ல இந்த பதிவ இ மெயிலில் டைப் செய்து பேஸ்ட் 
செய்து இருக்கேன் .
அடுத்த பதிவில் சந்திப்போம் .....
until then byeeeeeeeeeeeee.

13 comments:

 1. angalin படங்கள் எல்லாம் ரொம்ப நன்றாக இருக்கு.

  ReplyDelete
 2. 1. நல்ல விழிப்புணர்வு..
  2. ஒவ்வொரு படமும் அருமை..
  3. உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நிறைய சொல்லுங்கள்..ஆவலாய் உள்ளேன்

  ReplyDelete
 3. ஆஆஆ... அனைத்துமே சூப்பர் அஞ்சலின்.

  அது தவளையரோ? ஆஆஆஆஆஅ மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).

  ReplyDelete
 4. ஏஞ்சல்...வால் பேத்தை வளர்க்கும் உங்கள் வாலுக்கு வாழ்த்து !

  இலண்டனில் தமிழர்களின் வீடுகளில் மட்டும் களவு போகிறதாம்.அதுவும் தங்கம் மாத்திரமே களவெடுக்கிறார்களாம்.எங்கு பதுக்கி வைத்தாலும் தேடி எடுக்க காட்டித் தரும் மெஷின் கொண்டு வருகிறார்களாம்.இலண்டன் போலிசார் கை தேர்ந்த கள்ளர்கள் என்று மட்டும் சொல்லிவிட்டுப் பேசாமலிருக்கிறார்களாம்.இது ஐ.பி.சி ல் நான் கேட்டது.எனவே தங்கம் கவனம் !

  ReplyDelete
 5. @வை.கோபாலகிருஷ்ணன் said.//
  தங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் மிக்க நன்றி .

  ReplyDelete
 6. @சி.பி.செந்தில்குமார் said...//
  தங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் மிக்க நன்றி .

  ReplyDelete
 7. @RAMVI said...//
  தங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரமா

  ReplyDelete
 8. @குணசேகரன்... said...//
  தங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் மிக்க நன்றி குணசேகர்.
  ஆமாம் உங்கள் ப்ளோகில் follower ஆவது எப்படி என்று சொல்லுங்க ?

  ReplyDelete
 9. @athira said...//
  அஆவ் மியாவ் பூசார் சின்ன தவளைக்கெல்லாம் பயப்படலாமா.
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

  ReplyDelete
 10. @ஹேமா said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா .நான்கூட கேள்விபட்டேன்
  அதனால்தான் நான் இன்டைரக்டா விளம்பரம் தந்திருக்கேன் க்வில்ட் ஜுவல்சுக்கு.எங்க வீட்டு குட்டி வால் இப்ப ஒரு hamster உம் வளக்குது

  ReplyDelete
 11. இடமும் படமும் அருமை

  ReplyDelete