அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/30/11

கொஞ்சம் ஸ்நாக்ஸ் கொஞ்சம் கிராஃப்ட் .

         புதன் அன்று நோர்த் வேல்ஸ் கடற்கரைப்பக்கம்
சென்றோம் .இந்த ட்ரிப் எங்கள் ஆலயத்தில் ஒழுங்கு
செய்யப்பட்டிருந்தது .
நல்ல வெயில் அதனால் நாங்களும் நன்றாக 
என்ஜாய் செய்தோம் .
                                                  http://www.greatorme.org.uk/
மேலுள்ள லிங்கில் அந்த இடம் பற்றி பார்க்கவும் .
என் நோகியாவில் எடுத்த படங்கள் இங்கே 

                                                                 
 வெல்ஷ் மொழி .நல்ல வேளை அந்தபக்கம் நாங்க 
 செட்டில் ஆகல்லை .வாயில் நுழையாத மொழியா 
 இருக்கு .                   
                                                                                 
                                                                                     
                                                                                   
                                               
                                                                                   
                                     சீச்சீ இந்த பழம் புளிக்கும் நான் இது கிட்ட 
                                     போகவே இல்லை                                  
                                                                                 
                                                                                   
                                                                   
        இது ஒரு INFLATED BALL ,என் மகள் போக மாட்டேன் 
        என்று  சொல்லிட்டா            
                                                             
                                                           *************************************                
இந்த படத்தை பாருங்களேன் இப்ப ஐரோப்பாவில் 
இதுதான் லேட்டஸ்ட் ஃபாஷன் .
எப்படியெல்லாம் கண்டுபிடிக்கறாங்க !!


                                                                   
                                                                            
                                                                           (நன்றி கூகிள் )  
                                                                    
அந்த பின்னல் கூடை நாம மார்க்கெட் கொண்டு 
போவோமே அதுதான் .இப்ப இங்கே  latest trend.
                                                        ****************************
ஹி ஹி ஒரு சிரிப்பு மேட்டர் .JUST FOR FUN 
இந்தியன் எம்பசிக்கு விசா எடுக்க சென்றிருந்தோம் 
அங்கே நாலைந்து air india  ஏர் ஹோஸ்டஸ் கட் அவுட்ஸ் 
இருந்தது .இந்தியர் ஒருவர் வந்தார் .நடந்து போய் 
அந்த கட் அவுட் எல்லாவற்றின் கன்னத்திலும் விரலால் 
 தட்டி விட்டுட்டு எல்லாரையும் ஒரு பார்வை 
பார்த்துட்டு போனார் .யாராக இருக்கும்னு உங்க 
ஊகத்துக்கே விடுகிறேன் .


                                                                     
                                               இந்த பச்சை நெக்லசுக்கு மேட்சிங்கா
                                            ஒரு பச்சை கல் மோதிரம் ...........
                                            வெகு விரைவில் தேம்சிலிருந்து வரும் .
                                                                    
இவையெல்லாம் நான் செய்த பிரேஸ்லெட் மற்றும் நெக்லஸ் .
நெக்லஸ் ஸ்பைரல் staircase முறையில் ஆரம்பித்து right angle
 weaving மற்றும் சிம்பிள் threading முறையில் முடித்தேன் 
                                                                                   


                                                               

                                                                           
   
என் கிராப்ட் பெட்டியில் கொஞ்சம் crystal பீட்ஸ்மட்டும் இருந்தது 
நான்கைந்து கலர்கள சேர்த்து இந்த மாலையை செய்தேன் .
கீழே உள்ள லிங்க் சென்று பார்க்கவும் யாரும் எளிதில் செய்யலாம் .


தேவையான பொருட்கள் 
                                                         beading needle size10or 11
                                                               nymo thread
seed beads
bugle beads
                                                           clear nail varnish
                                                                           
வார்னிஷ் நூலை வெட்டி எடுத்தபின் அந்த இடத்தில
 தடவினால் பிரிந்து வராமல் சீல் செய்யும் .


                                                  ***********************************
ஸ்நாக்ஸ் என்றவுடன் ரெசிபி எதிர்பார்த்து  வந்தால் ஹி ஹி ஹி 
நான் ஏன் சமையல் குறிப்பு எழதுவதில்லை என்று 
சுருக்கமா சொல்லிடறேன் .
எல்லா பொண்ணுங்கள மாதிரி நான் அப்பா செல்லம் 
கல்யாணம் ஆகி புகுந்த வீடு போற வரைக்கும் சமையல்னா 
என்னன்னு தெரியாது .எப்படியோ கஷ்டப்பட்டு பாடுபட்டு 
சமைக்க கற்று கொண்டேன் .
பிறகு UK வந்தோம் அங்கே தான் பிரச்சினை ANDY MORGAN 
என்ற இங்கிலிஷ்காறரால் பஜ்ஜி உருவில் வந்தது 
.இவர் என் கணவருடன் பணிபுரிந்தவர் !!!!.
 கணவரிடம் இந்தியர்கள் ONION BAJJI நன்றாக 
சமைப்பார்கள் உன் மனைவியிடம் செய்து தர சொல்லு 
என்று ஒரே கேட்டு  கொண்டே இருப்பாராம் .
(சொந்த செலவில் சூனியம்)
நானும் நம்மூர் நினைவில் வெங்காயத்தை வட்ட வட்டமா 
வெட்டி பஜ்ஜி செய்து கூட தேங்காய் சட்னி செய்து அனுப்பினேன் 
அவர் தன் பார்ட்னருடன் வீட்டுக்கு சென்று சாப்பிடுகிறேன்  
அடுத்த நாள் அவர் வேலைக்கு வரல்ல .அதுக்கப்புறம் 
வரவே இல்லை , 
என் கணவர் நான் சமைத்த பஜ்ஜி சாப்பிட்டு தான் அவருக்கு எதோ ஆகிடிச்சுன்னு என்னை வெறுப்பேத்திகொண்டு இருந்தார்  .
 .மூன்று மாதம் கழித்து  என் கணவர் அவரை சூப்பர் மார்க்கெட்ல சந்தித்தாராம் அப்புறம்மாக நான் தெரிந்து கொண்டது நம்மூர் மெது பகோடதான் இங்கே அனியன் பஜ்ஜி மேலும்  அவர் சொன்னாராம் THEY LOOKED LIKE POTATO FRITTERS SO WE DID'NT EAT THEM .
அப்ப இருந்து எனக்கு கொஞ்சம் பயம் . .ரிஸ்கெல்லாம் இனிமே  எடுக்க தயாரில்லை .


அப்புறம் நட்புறவுகளே சின்ன சின்ன விடுமுறை எடுத்த நான் 
இத்துடன் ஒரு பெரிய விடுப்பில் செல்கிறேன் .(செல்கிறோம் )
இத்துடன் மீண்டும் செப்டம்பரில் உங்களை சந்திப்பேன் 
அதுவரை எல்லாரும் சந்தோஷமா இருங்க 
என்னைய மறந்துராதீங்க .
(be careful i will send Onion  bajhis if you forget me )
                                                                     


34 comments:

 1. தாங்கள் சென்ற இடங்களில் எடுத்த போட்டோக்கள் யாவும் அருமை.

  தாங்கள் கைவேலையில் செய்த பிரேஸ்லெட் மற்றும் நெக்லஸ் நல்லா அழகாகவே உள்ளன. சமையல் தெரியாவிட்டாலும் கைவசம் இதுபோல தொழில் வைத்துள்ள உங்களுக்குக் கவலையே இல்லை.

  பஜ்ஜி சாப்பிட்டவர் மறுநாள் வரவில்லை. பிறகு அவரை ஆளையேக் காணோம் என்றதும் எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. (சொந்த செலவில் சூனியம்)நல்ல நகைச்சுவையாக இருந்தது.

  விடுமுறை நாட்கள் சந்தோஷமாகவும், இனிமையாகவும், சுவையானதாகவும் அமைய என் அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றி .
  உங்கள் பதிவில் பஜ்ஜி பற்றி வந்த போதே எனக்கு
  இதை பற்றி சொல்ல வேண்டுமென்ற ஆசை .இப்பதான் சான்ஸ் கிடைச்சுது .

  ReplyDelete
 3. சூப்பர் படங்கள் அஞ்சலின்...

  செவ்வந்தி சீசந்தானே இப்போ எல்லா இடமும்.

  வெல்ஸ் இங்கிலிஸ் கொஞ்சம் கடினம்தான், ரேடியோவில் ஒருவர் இருக்கிறார்(வெல்ஸ்) அவரின் ஆங்கிலம் கஸ்டப்பட்டுத்தான் புரிந்துகொள்ளலாம், அதனால்தான் தெரியும் நாம் இன்னும் அப்பக்கம் போகவில்லை, அங்கிருக்கும் முருகன் கோயில் போக விருப்பம்.

  ReplyDelete
 4. //இது ஒரு INFLATED BALL ,என் மகள் போக மாட்டேன்
  என்று சொல்லிட்டா //

  இதை நானும் இத்தடவைதான் பார்த்தேன், இங்கு காணிவேலில் கொண்டுவந்து வைத்திருந்தார்கள், எங்கட மகன் போய்த் துள்ளினார் உள்ளே.

  படமெடுத்து வைத்திருக்கிறேன் நேரமே கிடைக்குதில்லைப்போட.

  இப்பகூட எல்லோர் தலைப்பையும் பார்த்ததும் ஓடிவந்தேன்....

  முடியல்ல சாமீஈஈஈஈஈஈஇ:)).

  ReplyDelete
 5. அஞ்சலின்.... எஞ்சல்... தேவதையே.... :))

  //இந்த பச்சை நெக்லசுக்கு மேட்சிங்கா ஒரு பச்சை கல் மோதிரம் .//

  என் பச்சைக்கல்லுக்கு இது சூப்பராக இருக்கும், கொஞ்சம் கோபிக்காம மகியிடம் கொடுட்த்ஹு நெக்லசை அனுப்ப முடியுமோ?:) நம்புங்கோ திருப்பித் தருவன்:)).

  ReplyDelete
 6. //என் கணவர் நான் சமைத்த பஜ்ஜி சாப்பிட்டு தான் அவருக்கு எதோ ஆகிடிச்சுன்னு என்னை வெறுப்பேத்திகொண்டு இருந்தார் .//

  அப்படித்தான் இருக்குமென எனக்கும் சந்தேகமா இருக்கூஊஊஊஊஉ:)).

  ReplyDelete
 7. //செப்டம்பரில் உங்களை சந்திப்பேன்
  அதுவரை எல்லாரும் சந்தோஷமா இருங்க
  என்னைய மறந்துராதீங்க //

  அடடா முடிவில இப்பூடிச் சொல்லிட்டீங்களே....:((((.

  ஓக்கை ஹப்பியாக போய் வாங்க have a grrrrrrrr....eat holiday:)))

  ReplyDelete
 8. படங்கள் அழகா இருக்கு ஏஞ்சலின் அக்கா! நிதானமாப் படிக்க நேரமில்ல,வெளியே கிளம்புகிறோம்,வந்து படிக்கிறேன்.

  ஹேப்பி ஹாலிடேஸ்! நல்லா என்ஜாய் பண்ணுங்க ட்ரிப்பை!
  :)

  ReplyDelete
 9. @athira said...//
  கண்டிப்பா வேல்ஸ் போய் பாருங்க அதீரா .ரொம்ப அழகான இடம் .மலை மேல் கேபிள் கார் எல்லாம் போகுது .பிள்ளைங்க என்ஜாய் செய்வாங்க .

  ReplyDelete
 10. @athira said...
  //என் கணவர் நான் சமைத்த பஜ்ஜி சாப்பிட்டு தான் அவருக்கு எதோ ஆகிடிச்சுன்னு என்னை வெறுப்பேத்திகொண்டு இருந்தார் .//

  அப்படித்தான் இருக்குமென எனக்கும் சந்தேகமா இருக்கூஊஊஊஊஉ:)).//
  நான் தேம்ஸ் பக்கம் வரும்போது உங்களுக்கு கண்டிப்பா ரெண்டு பெட்டி வெங்காய பஜ்ஜி .CONFIRMED..

  ReplyDelete
 11. @மகி said...//
  Thanks Mahi .

  ReplyDelete
 12. பயணங்கள் இணிமையாக அமைய வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 13. ஜலீலாக்காவுக்கு டாட்டா காட்டிவிட்டு ஷார்ஜாவுக்கு மேலே போகும் போது அந்த பஜ்ஜியை அப்படிக்கா கீழே போடுங்கள் என்னுடைய மேனேஜருக்கு குடுத்து டெஸ்ட் செய்யனும் :-))
  ஐ ...அஸ்கு... புஸ்கு ..நான் சாப்பிடுவேன்னு நினைச்சீங்களா அது மட்டும் முடியவே முடியாது :-)

  ReplyDelete
 14. //அந்த கட் அவுட் எல்லாவற்றின் கன்னத்திலும் விரலால்
  தட்டி விட்டுட்டு எல்லாரையும் ஒரு பார்வை
  பார்த்துட்டு போனார் .யாராக இருக்கும்னு உங்க
  ஊகத்துக்கே விடுகிறேன் //

  அப்போ ஃபிளைட்டில போனா என்னாகதி ஆகிறது அவ்வ்வ்

  ReplyDelete
 15. //மலை மேல் கேபிள் கார் எல்லாம் போகுது//

  அது இங்கே எங்களிடத்திலும் இருக்கு, நாங்கள் ஏறியிருக்கிறோம். ஒரு மலையிலிருந்து அடுத்தமலைக்குப் போகும்.

  //நான் தேம்ஸ் பக்கம் வரும்போது உங்களுக்கு கண்டிப்பா ரெண்டு பெட்டி வெங்காய பஜ்ஜி .CONFIRMED.. //

  நோ... நோஒ... நோஓஓப்.. நான் தான் அசைவமாச்சே:))). சைவம் எல்லாம் சாப்பிடமாட்டேன்:)). வெங்காயம் = சைவமாம்ம்ம்ம்ம்ம்:).

  மேலுக்கு ஆருக்கோ:)) தேவையாம்... டபிளாக்கொடுங்கோ:)).

  ReplyDelete
 16. lovely photos.... The jewelry collection look very nice.

  ReplyDelete
 17. Have a great break!!! Come back soon in September!

  ReplyDelete
 18. போட்டோஸ் அருமைங்க... ஏர்ஹோஸ்டஸ் கட்டவுட் கன்னத்துல தட்டுனது நான் இல்லைங்க... யாருங்க..அது.. எனக்கொரு வேங்காய பச்சி பார்சல்

  ReplyDelete
 19. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. கண்டிப்பாக காத்திருக்கிறோம்...தங்கள் வரவை செப்டம்பரில் எதிர்பார்த்து..... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. ஏஞ்சல்....ஏன் அவர் கட் அவுட்ல கன்னத்தில தட்டினார்ன்னு சொல்லிட்டுப் போங்கப்பா.நிச்சயமா கழிவு சாமான்களெல்லாம் லக்கேஜ்ல கொண்டு வரப்போறீங்க.சுகமா போய் சந்தோஷமா வாங்க.உங்க சின்னக் குட்டிக்கும் சந்தோஷமான விடுமுறை சொல்லுங்க ஏஞ்சல் !

  ReplyDelete
 22. இங்கிலாந்திற்கு வரவேண்டும் எனும் ஆவல் மனதில் தோன்றும் வண்ணம் உங்களின் புகைப்படப் பகிர்வு இருக்கிறது,
  ஒனிஜன் பஜ்ஜி பற்றிய குறும்பினையும் ரசித்தேன்.

  ReplyDelete
 23. @ ஜெய்லானி
  "சிங்கர்களை " கிண்டல் செய்ய கூடாதுன்னு நினைத்தாலும்
  இந்தமாதிரி அற்ப வேலைகளை செய்வதால் சிரிப்பு தான் வருது .
  //அப்போ ஃபிளைட்டில போனா என்னாகதி ஆகிறது அவ்வ்வ்//
  அதைதான் நானும் நினைத்து பார்த்தேன் ஜெய்லானி

  ReplyDelete
 24. @Chitra//
  Thank you Chitra ,for your lovely comments .

  ReplyDelete
 25. @மாய உலகம் said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜேஷ் .
  தாராளமா செஞ்சு தரேன் வெங்காய பஜ்ஜி .

  ReplyDelete
 26. ஹேமா said...//

  எல்லாம் நம்ம சூப்பர்" சிங் " கர்கள்தான்.
  அப்ளிகேஷன் இல் ஆரம்பிச்சு எல்லாமே தப்பு தப்ப செய்துட்டு
  இந்த அல்ப வேலையும் செஞ்சுட்டு போனார் .
  ஊருக்கு போய்விட்டு வந்து இன்னும் நிறைய எழதுகிறேன் .
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Hema.

  ReplyDelete
 27. @நிரூபன் said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிரூபன் .

  ReplyDelete
 28. பச்சை சிகப்புகல மணி கோர்த்து பொம்மை அணிந்திருந்த ஆராம் அபாரம்.ரூபியும் எமரால்டுல் சேர்த்து செய்ததௌ போன்று இருந்தது தூரத்தே பார்க்கும் பொழுது.செய்முறையைச்சொல்லுங்களேன்.

  ReplyDelete
 29. செய்முறை இங்கே http://cherubcrafts.blogspot.com/2011/02/spiral-necklace-this-spiral-is-such.html

  ReplyDelete
 30. படங்களைப்பார்த்ததும் கொஞ்சம் ukயில் நிக்கிற நினைப்பு வந்த்திட்டுது...hehe..
  அழகான படங்கள்....
  உங்கள் கைவேலை விளங்கங்கள் அருமை...
  இடையில் போட்ட சின்ன சுவரசிகமான கதை சுப்பர்...
  எல்லாமே அசத்தல்தான்....

  ReplyDelete
 31. அழகான படங்களுடன் அசத்தலான பதிவு. நிறைய விவரங்கள் சொல்லிவிட்டீர்கள் angelin. உங்க விடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 32. மனதை கொள்ளை கொள்ளும் படங்களும் அதற்கு விரிவுரை அளித்த விதமும் சூப்பர்.

  போயி வரவும்...

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 33. எல்லாமே அழகாக செய்கிறீர்கள்.அனைத்து படங்களும் அருமை.

  ReplyDelete