அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/20/11

மூன்று முடிச்சுகள் [தொடர் பதிவு]

என்னை தொடர் பதிவு எழுத அழைத்த மதுரகவி ரமாவுக்கு நன்றி 


1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?           

1. இறைவன் 
2. எங்கள் குடும்பம் 
3. வார இறுதி நாட்கள் 
  (எனக்கு ஜாலி டே ஹாலி டே கணவரும் மகளும் கிச்சனை 
  குத்தகைக்கு எடுத்து கொள்வார்கள் )

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

1.மற்றவரை பாதிக்கும்  கிசு கிசு ஊர்வம்பு வெட்டிபேச்சு 

2. ஆலயத்தினுள் வழிபாடு நடக்கும்போது 
    அமைதியை கெடுக்கும் பிறரின்  செல் போன் ஓசை 
3. விமானத்தில் பயணிப்பது .

   ஒன்றிரண்டு மணி நேரம் என்றால் பரவாயில்லை
   பதினோரு மணி நேரம் விமானத்தில் அமர்ந்திருக்கும்போது 
   கடுமையான முதுகு வலி எனக்கு உண்டாகும் மற்றும் 
   அளவுக்கதிகமா EAR BUD உபயோகித்தால் என் காதுகளில் WAX 
   இல்லாமல் போய் விட்டது TAKE OFF AND LANDING சமயத்தில் 
    உயிர் போகிற வலி வலிக்கும் .
   ஆனாலும் வேறு வழியே கிடையாது போயே தீர வேண்டும் .

3) பயப்படும் மூன்று விஷயங்கள்
1.எஸ்கலேட்டரில் ஏறுவது .


2. சென்னை மா நகரத்திலே சாலைகளை கிராஸ் செய்வது 

3. வெளியிடங்களில் சாப்பிடுவது .
4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?

1. எவ்வளவோ சாட்சிகள் இருந்தும் குற்றவாளிகள் சட்டத்தில் 
   இருந்து தப்பிப்பது .

2. சுயநலத்திற்காக தான் வாழ வேண்டும் என்பதற்காக பிறர்
  வீழ நினைப்பது . 
     
3.  ஒரே கான்செப்ட் இருக்கும் தொல்லைகாட்சி தொடர்களை 
   ஆயிரம் எபிசொட் வரை இழுத்தடிப்பது .

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

1. என்னுடைய CRAFT BOX

2. CD PLAYER

3. சமையல் குறிப்பு மற்றும் மற்ற தகவல்கள் அடங்கிய குறிப்பேடு .

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

1.எங்க மகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் 
  தடுமாறும் கணவர் 
2.தேர்தல் நேர கூட்டணி 
(இங்கே நான் அற்ரசியல்ல்ல்ல் பற்றி பேசலீங்கோ)
3. மொழி தெரியாத புதிதில் ஜெர்மனியில் நான் வாங்கிய பல்புகள் .

உதாரணம் 
ஜெர்மன் பெண்மணி என் மகள்கழுத்தில் செயின் போட்டு  பேபி
 புஷ் சேரில் அமர்ந்து இருக்கும்போதுஅவளை பார்த்து  கோல்டிஷ் 
 (goldig)என்றார் .பதில் சொல்லாட்டி மரியாதையா இருக்காதுன்னு  
  நான்" யா இட்ஸ் கோல்ட் என்றேன் (gold)"

It's "goldig" (cute). People in Frankfurt don't pronounce 'g' but replace it with 'sch'. 

இப்ப புரியுதா அவங்க cute girl என்று சொன்னதை நான் தங்கம் 
என்று விளங்கிக்கொண்டேன் .


7)தாங்கள் தற்போது செய்து கொண்டு  இருக்கும் மூன்று காரியங்கள்?


1. BEADED NECKLACE 
                                                                               
2. புதுசா எதை மீள்சுழற்சி செய்து அடுத்த பொருள் அல்லது
    வாழ்த்து அட்டை செய்யலாம் என்று யோசித்து
    கொண்டிருக்கிறேன் 


3. pet .hamster ஐ குளிப்பாட்டி கொண்டு இருக்கிறேன்.
                                                                           
   

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?


1.முடிந்தவரைக்கும் எல்லா உலக அதிசயங்களையும் நேரில் 
    பார்க்க வேண்டும் 


2.எதிர்பாராத நேரத்தில் கஷ்ட படறவங்களுக்கு உதவி செய்யணும் 


3.அழகிய கிராமத்தில் கடைசி காலத்தை கழிக்க வேண்டும் .9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயஙகள்?

    1, ருசியான பனைவெல்ல காபி போடுவது 

    2.  குறைந்த நேரத்தில் சமையல்  

      (ருசியா இருக்குமா அப்படினெல்லாம் கேக்க கூடாது
       ஜலீலா அக்கா,ஆசியக்கா மற்றும் தங்கைகள் கீதா /
       மேனகா /மகி /சித்ரா 
      இவர்களால் நானும் இப்ப எக்ஸ்பெர்ட் .
   
    3. எந்த  பொருளையும் வீணாக்காமல் மீள்சுழற்சி  செய்வது .

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?


 1. குழந்தைகள் மேல் வன்முறை பற்றிய செய்திகள் 

 2. அற்பமான காரியங்களுக்காக சிலர் பொய் பேசுவது
 3.விபத்து பற்றிய செய்திகள் 

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?


 1.புதிய கைவினை /க்ரோஷா

 2. கம்ப்யூட்டர் இன்னும் நிறைய 
 3. இன்னும் அழகா உங்கள் எல்லோரைப்போல தமிழில் எழுத வேண்டும் .

12) பிடிச்ச மூன்று உணவு வகை?
   இது மாத்திரம் மூன்றுக்கு மேலே 

 1. தயிர் சாதம் /ரசம் சாதம் /வத்த குழம்பு /அப்பளம் 

  2. களாக்காய் ஊறுகாய் /நெல்லிக்க ஊறுகாய் /
      மாங்காய் தொக்கு 


 3. பூரி கிழங்கு ,உருளை பொடிமாஸ் .,நெய்முறுக்கு /
    நேந்திரங்க பொரிச்சு /பலாபழ சிப்ஸ் 

   நான் சைவம் .சமீபத்தில் மீன் உண்பதையும் நிறுத்தி 
  விட்டேன் (கணவர் மகளுக்கு மட்டும் அசைவம் சமைப்பேன் )
   
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

 1. AMAZING GRACE

 2. MY JESUS MY SAVIOR

 3.ஒவ்வொரு பூக்களுமே 

14) பிடித்த மூன்று படங்கள்?

  1. ஆங்கிலம்--SOUND OF MUSIC
  
  2. ஹிந்தி ---   BLACK

  3. தமிழ்--- MOUNA RAAGAM 15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?

  1. MOBILE போன்(அடிக்கடி அம்மாவிடம் பேச) 
  2. என்ன தான் உடல்நிலை சரியில்லை என்றாலும் தவறாமல் ஆலயம் செல்ல வேண்டும் 
  
  3. இறைநம்பிக்கை .


16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்? 

 1.தோழி திருமதி பி எஸ் ஸ்ரீதர் (ஆச்சி )
    இப்ப  விடுமுறையில் இருக்காங்க திரும்பி வந்ததும் எழுதுவார்கள்  
 2.
மாயாஉலகம் ராஜேஷ்                                                   ****************************************************************

37 comments:

 1. அழகா சொல்லிட்டீங்க ஏஞ்சலின்! ஜெர்மனிலே பல்பு வாங்கின கதைகள் எல்லாம் நல்லா இருக்கும் போல இருக்கே..எல்லாத்தையும் சொல்லுங்க! ;)

  hamster க்யூட்டா இருக்கிறார்,கொஞ்சம் எலி மாதிரி இருக்குன்னு அலர்ஜி எனக்கு!;)

  என் பெயரையும் குறிப்பிட்ட உங்க நல்ல மனதிற்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்! :)

  ReplyDelete
 2. உங்கள் சிந்தனை ஓட்டத்தில் நல்லதொரு தொகுப்பு சகோ ;

  ReplyDelete
 3. உங்களை பற்றி மேலும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி...

  உங்களுடைய pet எலியா...ரொம்ப நல்லா இருக்கு...

  என்னையும் குறிப்பிட்டதற்கு நன்றிகள்...உங்களுடைய காகிதபூக்கள் தொடரட்டும்....

  ReplyDelete
 4. ஆம் angelin நீங்கள் கூறியது போல் நம் இருவருடைய யோசனையிலும் ஒற்றுமை உள்ளது.
  நீங்க சைவமாக மாறியதர்க்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. //1.மற்றவரை பாதிக்கும் கிசு கிசு ஊர்வம்பு வெட்டிபேச்சு //

  கண்டிப்பாக அவர்களது நேரத்தை விரயம் செய்வது மட்டுமல்லாமல் அடுத்தவர்களது மனதையும் புண்படுத்துகிறார்கள்....

  அழகான மூன்று முடிச்சுகளை பொருமையாக படிச்சு முடிச்சுட்டேன்..... அனைத்தும் அருமையாக அசத்தியுள்ளீர்கள்...... வாழ்த்துக்கள்...

  இந்த பொன்னான நட்புலகை கைகோர்க்க மூன்று முடிச்சு என்ற தொடர் பதிவு எழத அழைத்தமைக்கு மகிழ்ச்சியான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...
  ஏற்கனவே சகோ ரமேஷ் அன்பு உலகில் முத்தான மூன்றை எழுத அழைத்துள்ளார்.. எனவே முத்தான மூன்று + மூன்று முடிச்சு = முத்தான மூன்று முடிச்சு
  உங்கள் ஆதரவுடன் எழுதுகிறேன்... அன்புடன் நன்றி

  ReplyDelete
 6. supper...
  excellent..
  congratulation"

  ReplyDelete
 7. அருமையா சொல்லியிருக்கீங்க!

  //உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்//
  இவை நம்மில் பலபேருக்கு இருக்கும் விடைதெரியாத கேள்விகள்தான்! :-)

  ReplyDelete
 8. உங்கள் அன்பும் பொறுமையும் மென்மையும் பொறுப்பும் தெரிகிறது அத்தனை பதில்களிலும் !

  ReplyDelete
 9. >குறைந்த நேரத்தில் சமையல்

  (ருசியா இருக்குமா அப்படினெல்லாம் கேக்க கூடாது

  ஹி ஹி சரி சரி கேட்கல.. அதாவது நீங்க சொன்னது எங்க காதுக்கு கேட்கல.

  ReplyDelete
 10. முத்துக்கள் எல்லாமே அழகாக இருக்கின்றன.

  //7)தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?// ;)

  ReplyDelete
 11. @Mahi said...//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகி .மெர்குரி வேப்பர்,சோலார் பவர் /எனர்ஜி செவிங்க்னு வித விதமா பல்ப் வாங்கியிருக்கேன் .ஹி ஹி ஹி
  HAMSTER அணில் மாதிரியும் சுண்டெலி மாதிரியும் இருக்கும் இது RUSSIAN DWARF HAMSTER .நாள் முழக்க தூங்கும் நைட்ல எழும்பி விளையாடும் .ரொம்ப கிளீன் .

  ReplyDelete
 12. @Mahan.Thamesh said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

  ReplyDelete
 13. @GEETHA ACHAL said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிGEETHA

  ReplyDelete
 14. @RAMVI said...//வருகைக்கும் கருத்துக்கும்எனக்கு இந்த வாய்ப்பை தந்ததற்கும் மிக்க நன்றிங்க ரமா

  ReplyDelete
 15. @மாய உலகம் said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ராஜேஷ் .

  ReplyDelete
 16. பதிவு அருமையான தகவலுடன் உள்ளது சகோ..

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 17. @vidivelli said...//வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க செண்பகா .

  ReplyDelete
 18. @ஜீ... said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

  ReplyDelete
 19. @ஹேமா said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 20. @M.R said...//
  /வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

  ReplyDelete
 21. @சி.பி.செந்தில்குமார் said...//
  உங்கள் சமையல் குறிப்பு பகிர்வுகளும் எனக்கு அப்பப்ப உபயோகமா இருக்கும் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

  ReplyDelete
 22. @இமா said...//அவர் என் மகளோட PET இப்ப என்னுடைய சின்ன தோழர் .VERY INTERESTING !!!

  ReplyDelete
 23. அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. BEADED NECKLACE
  கைவண்ணம் அழகு.

  ReplyDelete
 25. BEADED NECKLACE
  கைவண்ணம் அழகு.

  அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.
  பாராட்டுக்கள்.

  எங்கள் ஊர் பற்றி எழுத தொடர்பதிவுக்கு அழைத்திருந்தீர்கள். அதற்கான தகவல்கள் திரட்டி தயார் செய்து கொண்டிருக்கிறேன். அடுத்த வாரம் நிச்சயமாக வெளியிடுவேன். அன்புடன் vgk

  ReplyDelete
 26. சட்டத்தில் கூட நிறைய ஓட்டை இருக்கின்றது ஆனால் உங்கள் பிடித்த மற்றும் பிடிக்காத விசயங்களில் ஒரு ஓட்டையையும் காண வில்லையே?

  மிக அழகாக எழுதியுள்ளிர்கள் பத்திரிக்கைகாரர்கள் கண்டால் அனேகமாக உங்களுக்கு சீஃப் எடிட்டராக வாய்ப்பு இருக்கின்றது.

  வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 27. மூன்று விஷயங்களைப்பற்றிய நல்லா சொல்லியிருக்கிங்க

  ReplyDelete
 28. அஞ்சலின், உங்க எழுத்தை அழகாக ரசிச்சூஊஊஊஊஉ ரசிச்சூஊஊஊப் படிச்சிட்டு வந்தேன்.... கடேஏஏஏஏசில 3 நபர்கள்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)). ஷொக்க்கிப் போயிட்டேன்:)))......

  மிக்க நன்றி விரைவில் தொடர்வேன்.

  ReplyDelete
 29. என் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது:

  இப்ப இந்த பதிவை தொடர
  ரமா http://maduragavi.blogspot.com/
  அரசன் http://karaiseraaalai.blogspot.com
  இராஜராஜேஸ்வரி http://jaghamani.blogspot.com/
  வை .கோபாலக்ருஷ்ணன் http://gopu1949.blogspot.com/
  அண்ணன் சிபி .செந்தில்குமார் http://adrasaka.blogspot.com/
  இவர்களையும் அழைக்கிறேன் .

  Reference:- http://kaagidhapookal.blogspot.com/2011/06/blog-post_26.html
  angelin [காகிதப்பூக்கள்]

  அழைப்பிற்கு நன்றி கூறி ஆரம்பிக்கிறேன் vgk

  =========================================


  http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_24.html


  தங்கள் வேண்டுகோளுக்கிணங்க என் சொந்த ஊரான திருச்சியைப்பற்றி

  ”ஊரைச்சொல்லவா!! பேரைச்சொல்லவா!! ”

  என்ற தலைப்பில் இன்று ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளேன்.

  இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.


  அன்புடன்,
  vgk

  ReplyDelete
 30. என் முதல் வருகையிலே உங்களை பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி...

  அருமையான பதிவு...என் வாழ்த்துக்களை பிடியுங்கள்...

  Reverie
  http://reverienreality.blogspot.com/

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. தங்களது வரிசையில் ...
  மூன்று முடிச்சு தொடர்
  http://yaathoramani.blogspot.com/ சகோதரர் ரமணி அவர்கள்
  http://manjusampath.blogspot.com/
  கதம்ப உணர்வுகள் -சகோதரி மஞ்சுபாஷிணி அவர்கள்

  http://kowsy2010.blogspot.com/-
  சகோதரி சந்திரகௌரி அவர்கள்
  http://tamilvaasi.blogspot.com/
  நண்பர் தமிழ் வாசி பிரகாஷ் அவர்கள்

  மூன்று முடிச்சை முத்துக்கு முத்தாக எழுதியிருக்கிறார்கள்... அவர்களது பதிவுகளை பகிர்ந்து நன்றி கொள்வோம்... தங்களுக்கு நன்றிகள்

  ReplyDelete
 33. வணக்கம் அக்கா, நான் போன வாரம் முழுவதும் வலைப் பக்கம் வரமால் பிசியாகிட்டேன்,
  எங்கே, உங்க பதிவினை மிஸ்ட் பண்ணிட்டேனோ என்று ஓடி வந்தால்,
  நல்ல வேளை, நீங்க இன்று தான் பதிவு போட்டிருக்கிறீங்க.

  ReplyDelete
 34. வித்தியாசமான தலைப்பின் கீழ் உங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீங்க. ரசித்தேன்.

  ReplyDelete
 35. வணக்கம் அன்பு உறவே இன்றுதான் முதன்முறையாக
  உங்கள் வலைத்தளம் வந்துள்ளேன் அதனால் உங்கள்
  ஆக்கங்கள் சிறப்புற வாழ்த்தி விடை பெறுகின்றேன்
  மிக்க நன்றி தங்களின் அருமையான பகிர்வுகளுக்கு.....

  ReplyDelete
 36. haa haa பல இடங்களில் உங்க டைமிங்க் சென்ஸை ரசிச்சேன்

  ReplyDelete
 37. நல்லதொரு பகிர்வு.என்னையும் தொடர்பதிவிற்கு அழைத்துள்ளமைக்கு நன்றி.நீங்கள் ஊரிலிருந்து திரும்பி வந்ததும் பதிவிடுகிறேன்.நன்றி.

  ReplyDelete