அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/26/11                    எனது முதல் தொடர் பதிவு .என்னை அழைத்த
  சித்ராவுக்கு நன்றி !!!.இவங்க காரைக்குடி பற்றி 
அருமையா எழுதி இருக்காங்க .
ஒரு பெரிய TISSUE PAPER PACK  பக்கத்தில வச்சிக்கிட்டு 
தொடர்கிறேன் .......அவ்வவ்வ்வ்வ் கண்ணு துடைக்க 
இந்த (தேவதை )!!!!!!!!!!!பிறந்த இடம் தர்மபுரி  மாவட்டம் .
மொத்தத்தில் பத்து வீடு தான் இருந்தது அப்ப எங்கூர்ல .
 எனக்கு அது முதல் சொர்க்கம் !!!.
                                         எங்க வீட்டை விட தோட்டம் பெருசு .
சரியான குக்கிராமம் .இரவு தூங்கி  காலையில் எழும்பி  
முன் கதவை திறந்தா நரி குட்டி போட்டுட்டு போய்
இருக்கும் .அங்கேயே விடுவோம் அடுத்த நாள் 
தாய் வந்து எடுத்துட்டு போயிரும் .
நான் வெற்றிலை தோட்டம் ,கரும்பு தோட்டம்,கடலை 
சோளம் எல்லா தோட்டத்திலும் விளையாடிய நினைவு 
பசுமையா இருக்கு .
   தர்மபுரியில்  இருந்து நாற்பது கிமீ தொலைவில் இருப்பது 
ஒகனேக்கல் நீர் வீழ்ச்சி 

                                                                      
                                                                           
 இது தான் வட்டல்/பரிசல் என்பது .          
எனக்கு நினைவு தெரிஞ்சு ஒரு ஆறு 
முறை போயிருக்கேன் இங்கே .ஏதோ FISH PEDICURE
என்ற சொல்றாங்களே ,இங்கே கரையில்  அமர்ந்து 
பாதத்தை தண்ணீரில் வச்சா சின்ன மீன்கள் வந்து 
நறுக்குன்னு கடிச்சு போகும் .அதைதான் இங்கே 
கோல்ட் பிஷ் வச்சு ட்ரீட்மென்ட் என்று சொல்லி 
பணம் பண்றாங்க .
கணவர் மகளோடு மறுபடியும் செல்ல வேண்டும் .
அதுக்கப்புறம் சொர்க்கம் போயி போச்சு 
பல ஊர்கள் பெங்களூர் ,ஹோசூர் ,
சென்னை ...... பள்ளி /கல்லூரி ...வேலை ...
அப்புறம் திருமணமாகி ஜெர்மனி ,ஜேர்மனிய பத்தி 
சொல்லனும்னா அது இன்னொருசுவிஸ் .
ஐரோப்பாவில் சுற்று பயணம் போறவங்க கண்டிப்பா
ஜெர்மனி மிஸ் பண்ண கூடாது .என்ன தவறிக்கூட 
ஆங்கிலத்தில் பேச மாட்டாங்க.மொழி பற்று .
ஒரு சில நகரங்கள் Heidelberg 
                                                                       


                                                                                 


இங்கே 
U.S ARMY BASE இருப்பதால் ஆங்கிலத்தில் 
பேசுபவர்களை பார்க்கலாம் .
   இதில் உட்கார்ந்து மேலே மலை உச்சிக்கு போகணும் 
   மேலிருந்து பார்க்க (நான் பாக்கல )அழகா இருக்கும் .
   நான் கண்ண மூடிட்டே உக்காந்திருந்தேன் .மலை 
   பச்சை பசேல் என்று இருக்கும் .
                                   
                                                                             
                     
 இது திராட்சை தோட்டம் சீசன் முடிந்ததும்  பழம் 
 பறித்து WEIN FACTORY கொண்டு  செல்லப்படும் .
அப்படி முதலில் பறித்து சாறு எடுத்தது NEUER WEIN .  
                                               PICTURES FROM    GOOGLE IMAGES
                                                               ( THANKS GOOGLE )             
                                                                                   

 இப்படிதான் எல்லா சின்ன கிராமங்களிலும் விப்பாங்க .
 (பத நீர் மாதிரி )!!!!!!!!!!!சொல்லி கேள்வி !!!!!
                                     எங்க வீடு பக்கத்தில் பெரிய
தோட்டங்கள் நிறைய வனப் பகுதிகள் உண்டு .
(சிங்கம் புலி எல்லாம் கிடையாது )
மான் ,மற்றும் சின்னஞ்சிறு விலங்குகள் மட்டும் 
பார்க்கலாம் .ஜேர்மனி பத்தி எழுத ஒரு 
பதிவு பத்தாது .

               இப்ப இங்கிலாந்து .எதோ குஜராத் ,பஞ்சாப் பக்கம்
வந்த மாதிரி இருக்குங்க .ஜெர்மனியில் வாரம் ஒரு முறை 
நம்மூர் கீரை ,காய்களுக்கு அலைந்து திரிந்து வாங்குவோம் 
இங்கே .1431 பயோரியா பற்பொடி ,கோபால் பற்பொடி ,கூட 
கிடைக்குது .எல்லா நாட்டு பொருட்களும் கிடைக்குது .
இந்த படம் சென்ற டிசம்பர் எடுத்தது .நிறைய ஸ்னோ 
நடுவே என் மகள் .எங்க சர்ச் முன்பு .
                                                                                
                                                                              
                                                                                        
இரண்டு வாரத்தில் ஷேக்ஸ்பியர் வாழ்ந்த இடத்திற்கு 
செல்கிறேன் படங்களோடு பதிவிடுகிறேன் 
இப்ப இந்த பதிவை தொடர http://maduragavi.blogspot.com/
ரமாவை அழைக்கிறேன் .

31 comments:

 1. படங்களும், பதிவும் அருமையாக உள்ளது. பல விஷயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

  ReplyDelete
 2. ரொம்ப நன்றி வை கோ .சார்.
  இன்னும்நிறைய இருக்கு எழுத. வேறு ஒரு பதிவில் இன்னும் பகிர்கின்றேன்

  ReplyDelete
 3. அழகிய படங்களோடு.. பல விடயங்களை பகிர்ந்து இருக்கின்றீர்கள்.

  எழுத்தக்களை சீர் செய்யுங்கள்... திரட்டிகளில் இணைக்கவிலலையா

  ReplyDelete
 4. சந்ரு said...//
  நீங்கள் எழுத்துக்களை வரிசைபடுத்தி எழுதுவதுபற்றி தானே குறிப்பிட்டு
  இருந்தீர்கள் .இப்ப சரி செய்து விட்டேன் .மிக்க நன்றி .மீண்டும் வந்து பாருங்க
  இப்ப இன்னும் படங்கள் இணைத்துள்ளேன் .திரட்டிகளில் தற்போது இணைக்கவில்லை.

  ReplyDelete
 5. வரிசைப்படுத்தி சீர்செய்து எழுதச்சொன்னேன். இன்றும் கொஞ்சம் சீர் செய்யலாம்.

  திரட்டிகளில் இணையுங்கள். அப்போதுதான் உங்கள் பதிவுகள் பலரை சென்றடையும்.

  ReplyDelete
 6. படங்களும் விளக்கங்களும் நல்லா இருக்கு. பல
  விஷயங்கள் தெரிஞ்சுக்கமுடிந்தது. நன்றி.

  ReplyDelete
 7. >>இந்த (தேவதை )!!!!!!!!!!!பிறந்த இடம் தர்மபுரி மாவட்டம் .

  தர்மபுரி என்பதால் அங்கே தேவதைகள் தர்மத்துக்கு நிறைய பிறந்துட்டாங்க போல ஹா ஹா

  ReplyDelete
 8. >>>சரியான குக்கிராமம்

  ஏன் எல்லாருமே குக் (COOK) பண்ணுவாங்களா?

  ReplyDelete
 9. >>எனக்கு நினைவு தெரிஞ்சு ஒரு ஆறு
  முறை போயிருக்கேன்

  நினைவு தெரிஞ்சா? நினைவு தெளிஞ்சா?

  ReplyDelete
 10. angalin மிகவும் அழகான பகிர்வு.. படஙகளும் வெகு அற்புதமாக உள்ளது. என்னை தொடர சொன்னதர்க்கு நன்றி. எதோ எனக்கு தெரிந்ததை எழுதி தொடருகிறேன்.

  ReplyDelete
 11. தொடர் பதிவுக்கு அழைத்ததை நன்றியோடு ஏற்றுக்கொண்டாலும்,அதிலும் எனக்கு கடைசி இடம் அளித்ததற்காகவும்,தம்பி என அழைக்காமல் அண்ணன் என அழைத்ததற்காகவும் அக்காவுக்கு மைன்ஸ் ஓட்டு ஹா ஹா

  ReplyDelete
 12. தேவதை பிறந்த ஊரும் அழகு. அவங்க சிறகு விரித்து பறந்த இடங்களின் பார்வையும் அழகோ அழகு.
  தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி. கரும்பு தின்ன ஒரு அழைப்பு. அருமை

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. சி.பி.செந்தில்குமார் said...
  //தொடர் பதிவுக்கு அழைத்ததை நன்றியோடு ஏற்றுக்கொண்டாலும்,அதிலும் எனக்கு கடைசி இடம் அளித்ததற்காகவும்,தம்பி என அழைக்காமல் அண்ணன் என அழைத்ததற்காகவும் அக்காவுக்கு மைன்ஸ் ஓட்டு ஹா ஹா//

  அண்ணா! (ஒரு மரியாதை நிமித்தம்)
  ஸாரி, ஸாரி,
  அன்புத்தம்பி,
  கடைசி இடம் அளித்துள்ளதற்கு வருந்த வேண்டாம்.
  என் இடத்தை என் அன்புத்தம்பியாகிய தங்களுக்கு இதன் மூலம் பட்டா போட்டுத்தந்துள்ளேன்.
  நீங்களே முதலில் எழுதுங்கள்.
  எனக்கு 20/07/2011 வரை Tight Schedule உள்ளது.
  இடையில் வெளியூர் பயணங்கள் வேறு குறுக்கிடுகிறது.
  3.7.2011 அன்று என் 100 ஆவது பதிவு வெளியாகும்.
  அதன் பிறகு நீண்ட இடைவெளி தருவதாக உள்ளேன்.

  அன்புடன்,
  vgk

  ReplyDelete
 14. வை.கோபாலகிருஷ்ணன் said...//
  உங்களுக்கு எப்ப வசதி படுதோ அப்ப எழுதுங்க .உங்க எழுத்தில் உங்களூர் பற்றி தெரிந்து கொள்ள ஆசை .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

  ReplyDelete
 15. இராஜராஜேஸ்வரி said...//
  .உங்கள் பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு இனிக்கும் கரும்பு தான் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

  ReplyDelete
 16. சி.பி.செந்தில்குமார் said...
  >>>சரியான குக்கிராமம்

  ஏன் எல்லாருமே குக் (COOK) பண்ணுவாங்களா?//
  ஹா!!!ஹா ! ஹா .உங்கள் பின்னூட்டங்கள் அனைத்தும் சிரிப்போ சிரிப்பு !!.நான் கல கல கல அண்ணன் என்று எழுத நினைத்து அண்ணன் என்று டைப் செய்து விட்டேன் .அதாவது கலகலப்பாக எழுதுவதில் அண்ணன் என்று பொருள் .வருகைக்கும் கலகல பின்னூட்டத்திற்கும் நன்றி நன்றி !!!!!!!!!

  ReplyDelete
 17. RAMVI said...//
  Thanks Rama .

  ReplyDelete
 18. Lakshmi said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Amma .

  ReplyDelete
 19. அங்க போயும் கோபால் பல்பொடிலதான் பல் விலக்கரீங்க போல!.... தர்மபுரிலேந்து இங்கிலாந்து ஜெர்மனி எல்லாம் கூட்டிண்டு போயாச்சு எல்லாரையும்!..:)

  ReplyDelete
 20. @தக்குடு said...//
  ஹா ஹா ஹா !!!!!!கோபால் பல்பொடிய நான் அப்படியே சாப்பிடுவேன் .
  அந்த டேஸ்ட் எந்த லேட்டஸ்ட் டூத் pastlayum
  கிடைக்கவே கிடைக்காது .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 21. உங்கள் ஊரினைப் பிரிந்த நினைவுகளோடு, ஊர் பற்றிய சிறப்புக்களையும் பதிவிட்டிருக்கிறீங்க.

  தர்மபுரி மாவட்டத்திற்குப் போக வேண்டு, ஒகனேக்கல் ஆறினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலை உங்களின் இப் பதிவு தூண்டுகிறது.

  ReplyDelete
 22. கண்டிப்பா போய் பாருங்க நிரூபன் .நான் எழதியது குறைவு .ஒரு தடவை
  தென்னிந்திய டூர் சென்று பெங்களூர் /மைசூர் /திருவனந்தபுரம் ,கேரளா பக்கம்
  ஹைதராபாத் எல்லா இடத்தையும் பார்த்துட்டு வாங்க .எங்க ஊட்டி ,கோடை கானல் ,ஏற்காட் எல்லாம் ரொம்ப அழகா இருக்கும் ஹட்டன் மாதிரியே .

  ReplyDelete
 23. Very nice post with cute pictures.thanks for comments.

  ReplyDelete
 24. உங்களது ஊர் பற்றிய நினைவுகளையும், சிறப்புகளையும் அழகாக பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்க மேம்...

  :)

  ReplyDelete
 25. @குணசேகரன்... said...//
  Thanks Gunasekaran
  @மாணவன் said...//
  Thanks a lot Simbu ,
  your blog is very informative .

  ReplyDelete
 26. தோட்டத்துக்குள்ளே குடியிருந்தீங்களா? சூப்பர் போங்க! நரிக்குட்டியெல்லாம் பாத்திருக்கீங்க.நான் ஸ்கூல் லீவில் சித்திவீட்டுக்கு ஒரு மாசம் போயிடுவேன்,அதுவும் தோட்டம்தான். நரியெல்லாம் பார்க்கமுடியாது ஆனா! அப்பப்ப யானை வரும்னு சொல்லுவாங்க! ;)

  ஜெர்மனி பற்றிய தகவல்களும் நல்லா இருக்கு.விடுமுறை முடிந்து வந்து தொடர்ந்து எழுதுங்க.

  இங்கிலாந்து..நிறைய வசதிகள் இருக்கே,ஒரு ஃப்ளைட்டைப்பிடிச்சா ஊர் போய் சேர்ந்துடலாம்.அதான் நம்ம ஊர்ப் பொருட்கள் எல்லாமே வந்துருது போல!என்னவர் பலநாள் யு.கே.ல இருந்திருக்கார். அவருக்கும் யு.கே.ரொம்ப பிடிக்கும்.:)

  ReplyDelete
 27. இது தான் வட்டல்/பரிசல் என்பது .
  எனக்கு நினைவு தெரிஞ்சு ஒரு ஆறு
  முறை போயிருக்கேன் இங்கே .ஏதோ FISH PEDICURE
  என்ற சொல்றாங்களே ,இங்கே கரையில் அமர்ந்து
  பாதத்தை தண்ணீரில் வச்சா சின்ன மீன்கள் வந்து
  நறுக்குன்னு கடிச்சு போகும்....

  எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா....ஒகேனக்கல் கூட நான் போனதில்லைங்க.. ஆனா இப்ப உலகமே சுத்தன மாதிரி இருக்கு... படங்களுடன் இடங்களும் அருமை.... be happy,
  maayaulagam-4u.blogspot

  ReplyDelete
 28. @மாய உலகம் said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
  சின்ன வயசுல பார்த்தது இப்பவும் பசுமையா இருக்கு .ஒருதரம் போய் பார்த்துட்டு வாங்க அவ்வளவு அழகான இடம் .

  ReplyDelete
 29. மகி said...//
  Thanks for your lovely comments Mahi .

  ReplyDelete
 30. வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/06/blog-post_6.html?showComment=1402066899274#c3308107344037492304

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete