அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/10/11

மீள் சுழற்சி செய்யப்பட்ட குறுந்தகடு / Wall hanger

                                                          
                                       மீள் சுழற்சி செய்யப்பட்ட குறுந்தகடு 
                                                                   

                                எங்க வீட்ல எனக்கு இன்னொரு பெயர் 
                                 இருக்கு ...Junk collector ..

                              மேலே இருக்கும் wall hanger அப்படிப்பட்ட 
                              பழைய பொருட்களை பயன்படுத்தி 
                               செய்தது .
                             நான் பயன்படுத்திய பொருட்கள் ,
                    
                                  பழைய CD ....1
                                  JUTE சிறிய துண்டு 
                              நான் ஒரு முறை (4வருஷம் முன்)
                              இந்தியா சென்ற போது கிரைண்டர்
                              எடுத்து வந்தேன் .
                             அப்ப எங்க அப்பா அதை 
                             அழகா கோணி பை எல்லாம் சுத்தி 
                              கட்டி தந்தார் .அந்த பை இன்னும் 
                            இருக்கு .அதை தூக்கி வீச  மனம் வரல்ல .
                              
                            இங்கே அதை உபயோகபடுதியிருகிறேன் .
                                                                    
                             
                                                                    இந்த JUTE துணியை
                                          முதலில் IRON ON FABRIC எனும்
                                          துணி மீது வைத்து அயர்ன் 
                                         செய்தால் இரண்டும் ஒட்டி கொள்ளும் .
                                          பிறகு CD மீது வைத்து வட்ட வடிவில் 
                                         வெட்டி எடுக்கவேண்டும் .
                                          
                                                                       பிறகு இப்படி இரண்டு 
                                         பழைய அட்டைகளையும் வெட்டி 
                                         எடுக்கவும் .இவை பின் பக்கம் 
                                         கயறு இணைத்து மறைக்க .


                                           முன் பக்கம் jute துணியையும் 
                                           பின் புறம் அட்டையையும் பசை 
                                            அல்லது double sided sticky tape
                                          உதவியோடு ஒட்டவும் .
                                           jute துணியை ஒட்டியபின் அதன் 
                                           ஓரங்களில் clear nail varnish எடுத்து
                                            பூசவும் .அப்பத்தான் துணி ஓரம் 
                                            பிரியாது .

                                                                                 
                                                 இது சைனா ரெஸ்டாரன்ட் 
                                           விளம்பர பேப்பர் .இதில் தான் நான் 
                                            அணில் மற்றும் மர கிளை ,
                                            இரண்டையும் செய்தேன் .
                                             பிரவுன் நிற ஓரங்களை வெட்டி 
                                           செய்தது அணிலும் மரக்கிளையும் .
                                                                            
                                                                            இது ஊதுபத்தி 
                                          இருக்கும் பாக்கெட்.இதில் செய்தது 
                                        தான் அந்த ரோஜாக்கள் .
                                          செய்முறை இங்கே 

                                      
                                     அந்த பைபிள் வசனம் என் மகள் 
                                      கைப்பட எழுதியது .அதன் மேல் 
                                     glitter ஒட்டி அலங்கரித்தேன் ,
                                     அதை பழைய ஈஸ்டர் சாக்லட் 
                                     பெட்டியின் உட் பக்கம் எழுதி 
                                     வெட்டி ஓட்டினேன் .
                                      

                                        
                                       மீண்டும் சந்திப்போம்.
                                      
                           

21 comments:

 1. குறுந்தகடை இவ்வளவு ஆர்டிஸ்ட்க்காக அழகாக வடிவமைத்தமைக்கு பாராட்டுக்கள்.REJOICE IN THE LORD எழுதிய மகளுக்கு வாழ்த்துக்கள்.
  மீண்டும் சந்திப்போம்..!

  ReplyDelete
 2. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியா .
  எனக்கு நேரா எழுத வராது .அதனால் தான் ,என் மகளை எழுத சொன்னேன்
  அவள் ஒரே செகண்டில் எழுதிட்டா .

  ReplyDelete
 3. ஆஹா...அருமையான கை வண்ணமாக இருக்கிறது.

  அழகாகச் செய்திருக்கிறீர்கள். மீள் சுழற்சிக்கு ஓர் எடுத்துக் காட்டாகவும், உங்கள் கைவண்ணத்திற்கு எடுத்துக் காட்டாகவும் இப் பதிவு உள்ளது.

  ReplyDelete
 4. பார்க்க அழகா இருக்கு. குட்டி பொண்ணுக்கு என் பாராட்டுகளை சொல்லிடுங்க.
  4 வருசத்துக்கு முந்தின கோணிப்பை... இப்போ wallhanger-ல.... அவ்... என்னால முடியல ஏஞ்சலின்....
  ஊதுபத்தி பாக்கெட்டில் செய்த ரோஜாவென்றால், கொஞ்ச நாள் இந்த காகிதபூ மணக்கும் இல்லையா :)

  ReplyDelete
 5. @சித்ரா

  எங்க திருமண நிச்சயத்தின் போது என் கணவர் ஒரு ப்ரெசென்ட்
  கொடுத்தார் அது பாக் செஞ்சு வந்த காகிதத்தையே நான் இன்னும் (13)வருஷமா (no wonder my hubby calls me junk collector)
  பத்திரமா வச்சிருக்கேன் .
  ஆமா சித்ரா .அது நல்லா ரோஸ் வாசனையா இருக்கு .
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 6. //பாக் செஞ்சு வந்த காகிதத்தையே நான் இன்னும் (13)வருஷமா (no wonder my hubby calls me junk collector)
  பத்திரமா வச்சிருக்கேன்//

  இவ்வளவு ஆசையா நீங்க அந்த காகிதத்தை 13 வருசம் வச்சிருக்கறதுக்கு சந்தோசப்படாம உங்கள ஜங்க் கலக்டருன்னு சொன்னாங்களா. இருங்க, இட்லி மாமிகிட்ட சொல்லி ஒரு பார்சல் இட்லி அனுப்பிடுவோம்.

  ReplyDelete
 7. @அனாமிகா
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ,
  அப்படி கிண்டல் பண்ணாலும் நான் விடாம collect செஞ்சுகிட்டே
  இருப்பேன்.

  ReplyDelete
 8. @@ நிரூபன்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிரூபன் .

  ReplyDelete
 9. கலக்குறீங்க அக்கா.....
  "Junk collector" ?? ஹஹஹா...
  உங்க கைகள் பட்டபிறகு அதனை ஜங்க் என்று சொல்ல முடியாதே!
  சைனா ரெஸ்டாரெண்ட் பேப்பர், ஊதுபத்தி பாக்கெட், கோணிப்பை......
  என்ன சொல்லுறதுன்னே தெரியல... :-) Simply superb!!!!! :-)

  ReplyDelete
 10. @Prabu
  thanks prabu for your lovely comments.

  ReplyDelete
 11. குப்பை கூழமெல்லாம் ஏஞ்சல் கை பட பூவாகுது.கொடுத்து வச்ச குப்பைகள் !

  ReplyDelete
 12. @ஹேமா
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா .
  ஏதோ நம்மால் முடிஞ்சது .மீள் சுழற்சி .

  ReplyDelete
 13. ஒரு பொருளையும் வேஸ்ட் பண்ண மாட்டீங்கள போல

  கிரேட் தான் எல்லா இருக்கு ஆனால் செய்ய தெரியலபப எனக்கு நேரமும் இல்லை,
  வாழ்த்துகக்ள் அருமையோ அருமை கலக்குங்க.

  ReplyDelete
 14. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜலீலா .
  எனக்கு எதையும் தூக்கி போட மனசு வராது .
  அந்த கோணி பை எனக்கு ரொம்பவே செண்டிமெண்டல் .அதனால் தான் அதை வச்சிருந்து wall hanger ஆக மாற்றி விட்டேன் .

  ReplyDelete
 15. All your recycling ideas are excellent keep going
  anandhirajan


  www.anandhirajansartsncrafts.blogspot.com

  ReplyDelete
 16. ரொம்ப அழகா செய்திருக்கீங்க.திரட்டிகளில்தான் இணைக்கமாட்றீங்க.

  என் பதிவில் பிரகதி மைதானத்திற்கு வந்து முதல் பின்னூட்டம் கொடுத்தீர்கள்.மற்ற இரண்டு பின்னூட்டங்கள்,அந்த பதிவு சுனாமி வந்து அடிச்சிட்டு போனது போல காணாமல் போகிட்டு.

  ப்லாக் சரியான பிறகு அந்த சுனாமி எங்க வீட்டு இணையத் தொடர்புக்கும் வந்துட்டு.இப்போ எல்லாம் ஓகே.மீண்டும் அதே பதிவை பதிவிட்டுள்ளேன்.

  ReplyDelete
 17. சகோ, இந்தப் பதிவு பற்றி இன்னோர் விடயத்தையும் கூற வேண்டும், இவ்வாறு மீள் சுழற்சி செய்வதன் மூலம் சூழல் மாசடைவதனையும் தடுக்க முடியும், ப்ளாஸ்டிக் சூழலுடன் சேர்வதும் தடுக்கப்படும். அருமையான் ஐடியா.

  ReplyDelete
 18. குறுந்தகடை இவ்வளவு அழகாய் மாற்றிய உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் வாழ்த்துக்கள். என் அம்மாவின் நினைவு வருகிறது உங்கள் கை வேலைகளை பார்க்கும் போது அம்மா ஒரு பொருளையும் வேஸ்ட் செய்யாமல் கலை பொருளாய் மாற்றுவார்கள்.

  ReplyDelete