அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/25/11

Teddy Bear CARD /மீள் சுழற்சி

                                                                                    
                                           இது நான் இன்றைக்கு செய்த 
ஒரு வாழ்த்து அட்டை .TEDDY கரடிக்குட்டி 
எல்லாருக்கும் விருப்பமான ஒரு விளையாட்டு 
பொம்மை .
இதற்கு டெடி என்ற பெயர் வர காரணம் 
அமெரிக்காவின் 26 வது ஜனாதிபதி -தியோடர் 
ரூஸ்வெல்ட் .அவர் செல்ல பெயர் TEDDY.
அவர் வேட்டைக்கு போனப்போ ஒரு கரடி கூட 
கண்ணுக்கு அகபடல ,ஜனாதிபதி பேருக்கு 
அவமானம் வர கூடாதுன்னு அவருடைய 
தோழர்கள் எங்கிருந்தோ ஒரு கரடிய வேட்டை நாய் 
உதவியுடன் பிடிச்சு மரத்தில கட்டி போட்டுட்டு இவர 
துப்பாக்கியால் சுட சொன்னங்க அப்ப ரூஸ்வெல்ட் 
நல்ல வீரனுக்கு அது அழகில்லை என்று சொல்லி 
பரிதாபப்பட்டு சுட மறுத்தாராம் .இந்த சேதி அடுத்த 
நாள் பேப்பர்ல கார்டூனா வந்தது 
                                              
               அதுக்கப்புறமா TEDDY BEAR பொம்மைகள் 
விளம்பர யுக்தியால் பிரபலமா ஆக்கப்பட்டது .
இந்த சமயம் ஜெர்மனியில் மார்கரெட் என்னும்
 ஒரு பெண்மணி இந்த பொம்மைகளை செய்து 
 வெளிநாடுகளுக்கு   ஏற்றுமதி செய்தார்.

வின்னி  டெடி ,கேர் BEAR,GOLDILOCKS ,
PADDINGTON ,என்று எல்லா வகை பொம்மைகள்
பிரபலமா ஆச்சு .
சமீபத்தில் ஒரு விலையுர்ந்த கரடி பொம்மை 
அந்த ஜெர்மன் கம்பெனி செஞ்சிருக்கு 
அது 125 KARAT TEDDY BEAR .
 125 பொம்மைகள் மட்டும் செய்யப்பட்டன 
பட்டு ,தங்கம் வைரம் ,SAPPHIRE ஆகியவற்றால் 
ஆனது இந்த பொம்மை .
இங்கே விபத்து ,மற்றும் மோசமான குற்றங்களால் 
மன அதிர்சியில்  உள்ள பிள்ளைகளுக்கு போலிஸ் 
முதலில் தருவது இந்த டெடி பொம்மைகளைத்தான்.

                                    
        வாழ்த்து அட்டை செய்முறை படங்களோடு 
         அடுத்த பதிவில் .
        (இந்த அட்டையில் எப்பவும் போல நான் மீள்
        சுழற்சி செய்த பொருட்களையே பயன்
        படுத்தியிருக்கேன் .
        இந்த பதிவு நீளமா  போனதால் அடுத்த பதிவில் 
        செய்முறை )4 comments:

  1. Teddy Bear எனும் பெயருக்கான காரணத்தை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். பகிர்விற்கு நன்றிகள் சகோ.

    ReplyDelete
  2. டெடி என்ற பெயர் வர காரணம் மிக அருமை.
    விளக்கமாய் சொன்னீர்கள் ஏஞ்சல், நன்றி.

    ReplyDelete