அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/16/11

ஜெர்மன் பக்கம் /நினைவலைகள்

                                                  
                                                      நினைவலைகள் .

                         இன்று நம்ம sashiga .மேனகா ஒரு 
அருமையான ரெசிபி போட்டிருக்காங்க அதை 
பார்த்த வுடன் (பயப்படாதீங்க நான் ரெசிபி மட்டும்
போடவே மாட்டேன் .
நான் தமிழில் பதிவெழுத ஆரம்பித்த வுடன் எடுத்த 
"சபதம் சமையல் குறிப்பு தவிர எல்லாம் 
 எழுதுவேன் .")

                              அதை பார்த்தவுடன் பழைய ஞாபகம் 
 வந்துச்சி .நான் ஜெர்மனியில் வசித்தபோது இந்த
 Asparagus ,மற்றும் strawberry தோட்டத்துக்கு 
ஒவொரு வருடமும் தவறாமல் சென்று 
இருக்கிறோம் .


                          asparagus is the english name for Spargel .
நான் இதை சூப் செஞ்சு சாப்பிடுவேன் .இப்ப
 இங்கேயும் சீசன் .

ஆனா இங்கே பச்சை நிற asparagus தான் கிடைக்கும் .

இங்கே தமிழ் பக்கத்தில் இதை பற்றி பார்க்கலாம் 
இன்டெர் நெட்டில் நிறைய படங்கள் இருக்கு ஆனா 
கூகிள் அத்தை copy right problem தருவாங்களோ என்ற 
பயத்தில் ரெண்டு படம் மட்டும் சுட்டேன் .
                                                                     
                                                                  கூகிள் அத்தை 
                                                                              நன்றி 
                                                                                     
Schwetzingen எனும் இடம் Asparagus தலைநகரம் எனப்படும் .
இதன் அறுவடைக்கு பின்னர் Spargel fest  ,அமோகமாக 
நடைபெறும் .ஐரோப்பா முழுதும் இருந்து இதற்கென்றே 
இங்கே வருகை தருவார்கள் .


இது  STRAWBERRY   தோட்டத்தில் 
                                                                                             
                                                                                     
                                                                         இந்த தோட்டத்தில் 
பழங்கள் விளைந்த பின் நாமே நம் கையால் 
பறித்து வாசலில் அமர்ந்திருக்கும் தோட்டத்தின் 
உரிமையாளரிடம் கொடுத்தால் அவர் அளந்து விலையை 
சொல்வார் பின்பு அதற்குரிய காசை தர வேண்டும் .
                                                     

ஒரு வசதி தோட்டத்தில் பறிக்கும்போது எவ்ளோ சாப்பிட்டாலும் பரவாயில்லை .
நான் சாப்பிட யோசிப்பேன் ஆனா அங்கே வரவங்க 
வயிறு நிறைய சாப்பிட்டு கொஞ்சம் சின்ன பிளாஸ்டிக் 
டப்பாவில் எடுத்து காஷியர் கிட்ட காட்டி காசை தந்திட்டு 
போவாங்க .
அதே மாதிரிதான் திராட்சை தோட்டத்திலும் .அவங்க 
பரிசது போக நமக்கு விட்ருவாங்க .
நிறைய புகைப்படங்கள் Attic இல் இருக்கு .
இது  நாங்க Strawberries பறிக்கும் போது
                                                                       
                                                                                
சில நாட்கள் முன்பு ஒரு தோழியிடம் பேசும்போது 
இந்த தோட்டங்கள் பற்றி கேட்டேன் , சொன்னார் 
நிறைய தோட்டங்கள் வீடுகளாக மாறி 
விட்டனவாம் .நம்ம ஊர் காத்து இவங்களையும் 
அடிச்சிடுச்சோ தெரியல .

                                                                                     
                                                           மீண்டும் சந்திப்போம் .
                                                                

22 comments:

 1. ஆஹா..புது விசியமா இருக்கு.ஆனால் asparagus பாத்தாலே பயமா இருக்கே.சரி சாப்பிட்டு பாத்தால்தானே அதன் அருமை தெரியும்.

  இது போல இந்தியர்களுக்கு தெரியாத பல விசியங்கள் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.நாங்களும் தெரிந்து கொள்கிறோம்

  ReplyDelete
 2. ஆமாம் ஆச்சி ,நானும் முதலில் அப்படிதான் யோசிச்சேன் ஆனா ரொம்ப டேஸ்டா இருக்கும் .பூண்டு வெங்காயம் பனங் கிழங்கு எல்லாம் சேர்த்த ஒரு டேஸ்ட்
  .very healthy and nutritious .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 3. சூப்பர்ர் நினைவலைகள்..நான் மயோனைஸ் தொட்டு சாப்பிடுவதோடு சரி..ஒரு ப்ளாக்கில் பார்த்து பொரியல் செய்தேன்,ரொம்ப நல்லாயிருந்தது ஏஞ்சலின்.ஏன் நீங்களும் சமையல் குறிப்பு போட்டால் என்ன,நாங்களும் உங்களின் சுவையை சுவைப்போம் இல்லையா??

  ReplyDelete
 4. பகிர்வுக்கு ரொம்ப நன்றி...

  ReplyDelete
 5. Asparagus சூப் மிகவும் பிடிக்கும் எனக்கு.
  strawberry வாசனையோ வாசனை !

  ReplyDelete
 6. கூகிள் அத்தை copy right problem தருவாங்களோ என்ற
  பயத்தில் ரெண்டு படம் மட்டும் சுட்டேன் .//

  கூகிள் அத்தையா....நாம எல்லாம் அவாவை அம்மம்மா என்று சொல்லுறோம்..
  ஹி...ஹி...

  ReplyDelete
 7. Asparagus//

  நான் இன்னமும் சாப்பிடாத ஒரு பச்சைய வகை. இலங்கையில் கடைகளில் இல்லை என்று நினைக்கிறேன். அல்லது எங்கள் பகுதிகளில் இல்லை என்று நினைக்கிறேன்.

  மற்றும் படி ஸ்ரோபரி...இதுவும் எட்டாக் கனி தான்.

  படங்களும், அனுபவப் பகிர்வும் அருமை சகோ.

  ReplyDelete
 8. @மேனகா
  வாங்க மேனகா ,உங்க அஸ்பரகஸ் பதிவு பார்த்ததும் ஜெர்மன் ஞாபகம் வந்தது .நான் சமையல் குறிப்பு போடறதா .அவ்வவ்வ்வ்வ்
  ஏதோ உங்கள் ரெசிபிஸ் எல்லாம் பார்த்து சமாளிக்கிறேன் .
  @கீதா
  welcome Geetha
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
  @ஹேமா
  ஜேர்மனி மற்றும் சுவிஸ் இந்த இரண்டு இடத்திலும்
  அஸ்பரகஸ் famous இல்லையா.அதுவும் hollandais sauce சேர்த்து சாப்பிட்ட
  நல்லா இருக்கும்
  அங்கே இருந்த வரை basel ,france rendu இடத்துக்கும் அடிக்கடி போவோம்
  .இப்ப ரொம்ப தூரம் .

  @நிரூபன்
  அங்கே கார்கில்ஸ் /டெய்லி ஸ்பென்சர்ஸ் இருந்தா கண்டிப்பா இந்த அஸ்பரகஸ் கிடைக்கும் .
  எல்லாரும் அம்மா அக்கா அம்மம்ம்மா என்று கூப்டுட்டாங்க கொஞ்சம் வித்யாசமா நான் aunty என்பதை அத்தை என்று மாற்றி விட்டேன் .
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிரூபன்.

  ReplyDelete
 9. ஏஞ்சல் சுவிஸின் கோடைகால மெனு ஒன்று சொல்லியிருக்கீங்க.எனக்கும் பிடிச்சது.குளிமையானதும்கூட !

  ஏஞ்சல் வேலை இடத்தில் நேற்றுத் திடீரென்று உங்கள் ஞாபகம் வந்து போனது.சிரித்துக்கொண்டேன் மனதில்.என்னவென்று நினைக்கிறீர்கள்.பழைய பேப்பர்கள் கட்டினேன்.அழகான மினுமினுவென்று நாவல் கலரின் ஒரு சின்னப்பெட்டி !

  ReplyDelete
 10. வேஸ்டா போறது எதை பார்த்தாலும் என் நினைவு வருதா அப்படீன்னா
  ரொம்ப சந்தோசம் .இன்னிக்கு பபிள் கம் சுத்தி வருமே அந்த காகிதத காட்டி என் பொண்ணு சொல்றா"dont throw away, you could make use of it ""
  அவ்வ்வவ்!!!

  ReplyDelete
 11. சகோதரம் உங்களை போன்றவர் புண்ணியத்தில் தான் இப்படியான தகவல்களை அறிகிறோம் மிக்க நன்றி..

  ReplyDelete
 12. சகோதரம் தப்பா நினைக்காதிங்க கூகுல் அத்தைக்கு பொண்ணிருக்கா...

  ReplyDelete
 13. எல்லாமே மகன்கள் தான் அத்தைக்கு (அத்தை is my mother in law)

  ReplyDelete
 14. இன்னும் நிறைய எழுத ஆசை .
  முடிந்த போது எழுதுகிறேன் .
  தயவுசெய்து என் தமிழில் குறை இருப்பின் சுட்டி காட்டவும் .நான் திருத்தி கொள்ள உதவும்

  ReplyDelete
 15. Good post. We go strawberry picking every year. My kids enjoy it very much.

  ReplyDelete
 16. //பயப்படாதீங்க நான் ரெசிபி மட்டும்
  போடவே மாட்டேன் .
  நான் தமிழில் பதிவெழுத ஆரம்பித்த வுடன் எடுத்த
  "சபதம் சமையல் குறிப்பு தவிர எல்லாம்
  எழுதுவேன் .//
  I like it.=))

  சைனீஸ் உணவகங்களில் கிடைக்கும் Stir fried Asparagus மட்டுமே நான் சாப்பிடுவேன். க்ரஞ்சியாக அதே நேரம் நன்றாக வேகியும் இருக்கும். ஐஞ்சு பேருக்கு வரும் பெரிய சேவிங்கை நான் ஒருத்தியே தனியாக சாப்பிடுவேன். அவ்வளவு ருசியாக இருக்கும்.

  ReplyDelete
 17. I cant see any strawberry pics.

  ReplyDelete
 18. அஸ்பரகஸ் நிறைய fibre இருக்கும் வெஜ் .
  எவ்ளோ சாப்டாலும் உடம்புக்கு நல்லது .
  இப்ப பிக்சர் தெரியுதா .
  (நான் போஸ்ட் போட்ட பிறகு தான்
  பாத்தேன் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்
  அதெல்லாம் கரெக்ட் செஞ்சேன்
  அப்ப படமும் டெலீட்ஆகி விட்டது )

  ReplyDelete
 19. நினைவலைகள் அருமை ஏஞ்சல்.

  ReplyDelete