அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/19/11

Quilling --கூடை மற்றும் பூக்கள்,Quilled flowers in a Basket,

அன்னையர் தினம்

ஏப்ரல் 2011


                                      


                                                       


          இந்த ஆண்டு   ஏப்ரல் 3 ஆம் திகதி அன்று
   இங்கிலாந்தில் அன்னையர் தினம் விமரிசையாக 
 கொண்டாடப்படும் .
ஒரு மாதத்திற்கு முன்பே இதற்கென பரிசு பொருட்கள் 
,வாழ்த்து அட்டைகள் என்று எல்லா கடைகளிலும் விற்பனை 
அமோகமாக இருக்கும். அன்னையர் தினம் lent காலத்தில் 
 நான்காவது வாரம் கொண்டாடப்படும்.
ஆலயங்களில் ஆராதனை முடிந்தபின் வண்ண நிற பூக்களை
பிள்ளைகள்ஒவ்வொருவரும் அவர்களின் தாய்மார்களுக்கு
தருவார்கள்.எவ்வளவு தொலைவில் இருந்தாலும் 
பிள்ளைகள் தங்கள் அம்மாவை பார்க்க அன்று
 வந்து விடுவார்கள். 

                                                அன்று பூங்கொத்துக்கள் நிறைய 
விற்பனையாகும்.SPRING FLOWERS  எனப்படும் DAFFODILS,
TULIPS,  DAISIES என்று பல வகைகள் கிடைக்கும்.
                                                                           
இன்று நான் செய்த QUILLED கூடை மற்றும் பூக்கள்,


தேவையான பொருட்கள் ,

 1,   விருப்பமான அளவில் வெள்ளை அல்லது 
ஏதேனும் ஒரு நிறத்தில் GREETING CARD BASE .


                                                                    

2, கூடை செய்ய பிரவுன் பேப்பர் (PLAIN OR PATTERNED)


                                                         
3 ,  DECORATE செய்ய STICKERS அல்லது GEM STONES.
4,  வீட்டிலுள்ள பழைய திருமண அழைப்பிதழ்
     ஏதேனும் இருந்தால் அவற்றையும் உபயோகிக்கலாம் 
    செலவும் குறைவு .
5,   ஓட்டுவதற்கு பசை / பல் குத்தி (TOOTH PICK)

                                                        
நான் இந்த கூடையை எதில் ஒட்டி இருக்கிறேன்
 என்று பாருங்கள்                                                                                                               
 CHRISTMAS CHOCOLATE BOX உள்ளே இருந்த CUSHION PAD
எடுத்து சதுர வடிவில் டிசைன் கத்திரி கோலால்
 வெட்டி எடுத்து அதன் மேல் சிகப்பு நிற STAMP DISTRESS
செய்தேன்.sponge எடுத்து லேசாக கலர் stamp மீது
தொட்டு greeting card ஓரங்கள் அல்லது நடுவில் 
தேய்ப்பது Distressing stamp எனப்படும்.

அதன் மேல் கூடை பூக்கள் ஒட்டி அலங்கரித்துள்ளேன்.

                                                       கூடை கைப்பிடி

                                                         
                                                         அடிபாகம் C scroll shape
இரண்டு கொம்பும்(c )கார்டில் படுமாறு ஓட்ட வேண்டும்.
                                                         மலர்கள் (tulips)

                                            Fringed flower செய்ய பூவின் நடு
 பாகம்  சிறிதாக வர மெல்லிய காகிதத்தோடு சற்று
 அகலமான ஓரம் பற்கள் போல வெட்டப்பட்ட
   காகிதத்தை ஒட்டிஇதழ்களை (வெட்டப்பட்ட பற்கள்)
விரித்து  விட்டு பூ செய்ய வேண்டும்.

                                                        

                                                      
                                                         

                                        எங்கள் மகளின் கைவண்ணம் 
இங்கே QUILLED PEACOCK            


http://engalcreations.blogspot.com/2011/03/hannah.html

                                                                                                                                                                                                            
                                                                 எங்கள் மகள் 7 வயது
இருக்கும்போது செய்த இந்த பறவைகள்  தான் என்னை 
இந்த quilling முறை கற்று கொள்ள தூண்டியது.

                                                          
                                                                                              
                    எல்லோரும் எப்பவும் சந்தோஷமா இருக்க 
இறைவனை பிரார்த்திப்போம்.

8 comments:

 1. உங்க க்ராஃப்ட் எல்லாமே எப்பவும் அழகு ஆஞ்சலின். போட்டோஸ் இன்னும் கொஞ்சம் க்ளியரா வந்திருக்கலாமோன்னு தோணுது.

  //எல்லோரும் எப்பவும் சந்தோஷமா இருக்க
  இறைவனை பிரார்த்திப்போம்.// அழகு. ;)

  ReplyDelete
 2. வருகை தந்ததற்கு மிக்க நன்றி இமா .
  என் கமெராவில் ஏதோ problem என்று
  நினைக்கிறேன்.நான் photo
  எடுக்கும்போது ரொம்பவே வெளிச்சமா
  இருந்தது .கூடிய விரைவில் சரி செய்கிறேன்.

  ReplyDelete
 3. அருமை ஏஞ்சலின்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. மிக அழகா இருக்குங்க.அன்னையர் தின வாழ்த்து சொல்ல ஆசையாக இருக்கு.அனைவருக்கும் அன்னையின் அன்பும்,பாசமும் நீண்ட நாள் கிடைக்க வேண்டும்.

  ReplyDelete
 5. வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி ஆச்சி.
  என் மகள் இப்பவே எனக்கு தெரியாம சின்ன சின்ன பொருட்கள் வாங்கி
  வச்சிருக்கா .surprise பிரேசெண்டா தருவாளாம்.

  ReplyDelete
 6. வந்தேன் ரசித்தேன் ஏஞ்சல் !

  ReplyDelete
 7. மிக்க நன்றி ஹேமா

  ReplyDelete