அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/5/11

Card making ideas

 இன்று   எளிய பொருட்களை கொண்டு வாழ்த்து அட்டை செய்முறை 
கற்று கொள்வோம் .

தேவையான  பொருட்கள் 

1, வெள்ளை அல்லது  ஏதேனும் லைட் நிறத்தில் அட்டை 
     அல்லது ரெடிமேட் card blanks.
2, Printed  design stickers  அல்லது  digi stamps .சில தளங்களில் இலவசமாக digistamp  down load செய்யலாம்.


3,  ஓட்டுவதற்கு GLUE அல்லது Double sided tape .

         
மேலேயுள்ள வாழ்த்து அட்டை என் 10 வயது
மகள் செய்தது .
                     இந்த கார்டு நான் செய்தது .ஒரு நாள் கடைக்கு சென்ற போது 
அங்கே demonstration க்காக  வைத்திருந்த  சில காகிதங்களை எடுத்து வந்தேன் ..பிறகு இரண்டு படங்களை ஒன்றின் மேல் ஒன்று  sticky pad வைத்து ஓட்டினேன் அதன் பிறகு காது மற்றும் பூக்களை தனியாக ஓட்டினேன் இதற்கு Decoupage என்றும் சொல்வார்கள் .
பரிசு பொருட்கள் சுற்றி வந்த வண்ண தாள்களிலுள்ள பூக்கள் மற்றும் வண்ணத்து பூச்சிகளை வெட்டி வைத்து கொண்டு
தேவையான நேரம் உபயோகிக்கலாம் .
இங்கே பாருங்கள் 
நிஷாந்தி என்பவர் 
தன்னுடைய  வாழ்த்து அட்டையில் செய்திருப்பதை .
அந்த வண்ணத்து பூச்சிகள் gift paper இல் 
இருந்து வெட்டபட்டவையாம்.


digi stamp download செய்து
வர்ணம் தீட்டுவது மிகவும் எளிதான முறை .
தளத்தில் அழகான digi stamps இலவசமாக download செய்யலாம்.
இப்படி எவ்வளவோ, சிறிய கார்ட்டூன் இமேஜை 
  வைத்தும்  அழகான வாழ்த்து அட்டை செய்யலாம்,
மேலுள்ள படத்தில் இருப்பது PEPPER எனப்படும் 
CHARACTER .நான்அதைஎப்படிவாழ்த்து அட்டையில்
 இணைத்திருக்கிறேன் என்று பாருங்கள்
                                
                                            
பதிவு கொஞ்சம் நீளமாகி விட்டது .அடுத்த பதிவில் சந்திப்போம்.

4 comments:

 1. ஏஞ்சல்...மிக மிக ஆர்வமான பதிவு.அழகும்கூட.முதாலாவது பதிவோடு சண்டைபோட்டபடி இருக்கிறாள் என் சிநேகிதியின் மகள் !

  ReplyDelete
 2. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா .
  ஏதேனும் குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும் .அப்பொழுது தான் நான் திருத்தி கொள்ள முடியும்

  ReplyDelete
 3. காகிதபூக்களுக்கு வாழ்த்துக்கள்.
  என்றும் வாடாமலரல்லவா? எல்லாமே அழகு.செய்து பார்க்க தான் நேரம் இல்லை,என் மகள் எப்பவும் தன் கைகளால் செய்த வாழ்த்து அட்டையை தான் பிறருக்கு பரிசளிப்பது வழக்கம்.எக்ஸாம் முடிந்த பின்பு உங்க ப்ளாக்கை அறிமுகம் செய்யனும்.

  ReplyDelete
 4. தங்கள் அன்பான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஆசியா .
  என்ன குறை இருந்தாலும் சுட்டி காட்டவும் .நான் திருத்தி கொள்ள உதவியாக இருக்கும்.

  ReplyDelete