அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/31/11

மீள் சுழற்சி செய்யப்பட அட்டைபெட்டி

                               
                  சென்ற வாரம் அறுசுவை தளத்தில் ஒருவர்  
recycled multi purpose box செய்முறை கொடுத்திருந்தார் .
அதை பார்த்து எனக்கு உதித்த ஐடியாவில் செய்தது 
இந்த பெட்டி.
                                                           


                   தேவையான பொருட்கள் 

                    1, சிறிய அட்டைபெட்டி -    ஒன்று
                                                                     
                    2,wall paper sample piece      -தேவையான அளவு 
                        அல்லது பழைய ஆர்கன்சா புடவை /
                       பட்டு புடவை (சின்ன சதுர துண்டு )

                   3, ஓட்ட பசை /double sided sticky tape,
                   4,  gem stones ,மற்றும் பூக்கள் ,
                   
                                                           
                                        நான் sample wall paper துண்டு
உபயோகித்து இந்த பெட்டியை செய்தேன் .
எல்லா பக்கமும் ஒட்டியபின்பு red stamp தொட்டு
பேப்பர் மீது ஒற்றி எடுத்தேன் .படத்தை நன்கு 
கவனித்தால் சிவப்பு தீற்றல்கள் தெரியும் .
அதன் பிறகு ,gem stones மற்றும் பேப்பர் ரோசெஸ்
 இவற்றால் அலங்கரித்தேன். 

பேட்டியின் எல்லா ஓரங்களிலும் கோல்ட் கலர் 
துண்டுகளால் ஒட்டி அலங்கரித்தேன்.
                                                                   
                                                              
        
  இதிலுள்ள பேப்பர் ரோஸ் செய்முறை 

  இப்படி ஒரு சிறு வட்டம் வரைந்து வெட்டி 
  எடுத்து கொள்ளவும்
                                                                            
                                                                          
                                              இதில்(spiral coil )  சுருள்
                                          வடிவம் வெட்டி எடுக்கவும் 
                                                                                                   
                                                   barbecue skewer உதவியுடன்
                                                   படத்திலுள்ளபடி சுருட்டி 
                                                   கொண்டே செல்லவும்

உள் பகுதி வரை வந்தவுடன் 
குச்சியிலிருந்து எடுத்து 
மேல் புறமிருந்து அடி பாகம் 
நோக்கி மெதுவாக அழுத்தவும்.

இதோ இப்படி வரும் 
பிறகு பசையால் ஒட்டவும்
படத்தில் உள்ள படி 
அந்த இடத்தில பசை வைத்து ஒட்டவும்


ரோஸ் தயார்    
               

ஏப்ரல் 3 ஆம்
திகதி அன்னையர் தினம்
எல்லோருக்கும் 
வாழ்த்துக்கள் .


                                                                               

10 comments:

 1. super,ரோஸ் செய்முறையும் சூப்பர்.
  என்னங்க இன்னும் நாள் கிழமை பாக்றீங்க,விரைவில் இண்ட்லியில் இணைங்க.

  ReplyDelete
 2. நன்றி ஆச்சி .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
  சீக்கிரம் செய்யறேன்.

  ReplyDelete
 3. இண்ட்லியில் இணைக்கவில்லையா?!!!
  ஏன்??
  உங்கள் கைவண்ணம் பலர் வீடுகளையும் அலங்கரிக்கட்டுமே... திரட்டிகளில் இணையுங்க சகோ...

  பொதுவா எனக்கு சம்பந்தமே இல்லாத ஏரியா கைவினைகள், க்ராஃப்ட், ஒரிகாமி போன்றவை... ஆனாலும் உங்களின் பதிவுகள் ரொம்ப க்ளீனா சிம்பிளா... ஃபோட்டோஸோட ஃபினிஷிங்ல அற்புதமா வர படைப்போட மூலமான சாதாரண பேப்பர்களைப் பார்க்கையில் ஈர்க்குது! தமிழ்மணத்திலும், இண்ட்லியிலும் இணையுங்கள்... தொடர்ந்து கலக்குங்க :-)

  ReplyDelete
 4. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பிரபு .
  நான் இன்னமும் ஆங்கங்கே ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துகிறேன் .
  முழுவதுமாக தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தும்போது கண்டிப்பாக இணைக்கிறேன். செய்முறை விளக்க படங்கள் நானே எடுப்பதால்
  சில நேரம் clarity சரியாக வர மாட்டேங்குது .
  எல்லாம் சரிபடுத்தியபின் கண்டிப்பாக இணைகிறேன்.
  thanks for encouraging me.

  ReplyDelete
 5. ரொம்ப அழகாயிருக்கு.ஆனா மிகவும் நுணுக்கமான வேலைப்பாடு.நேரம் அதிகம் வேணும் !

  ReplyDelete
 6. தங்கள் வருகைக்கும் ,அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஹேமா.
  பூக்கள் முன்பே செய்து வைத்தவை .அதனால் சுலபமாக வந்தது .

  ReplyDelete
 7. உபயோகமான பதிவு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றி கீதா .

  ReplyDelete
 9. ரோஸ் செய்முறை அருமை

  ReplyDelete