அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/8/11

மீள் சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள்

       கிறிஸ்துமஸ் , பிறந்த நாள் என்றாலே நமக்கு நினைவில் வருவது முதலில் வண்ண மயமான வாழ்த்து அட்டைகள் தான் .அப்படி எல்லோர்  வீட்டிலும் நிறைய வாழ்த்து அட்டைகள் சேர்ந்திருக்கும் ,அவற்றை வீசாமல் 
மறுபடியும் மீள் சுழற்சி செய்வதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்

இது நான் செய்தது

                                                             


மேலேயுள்ள முகவரிக்கு சென்றால் இதற்கான template கிடைக்கும்
செய்முறை  கீழே உள்ள  முறை தான் .
எல்லா பக்கங்களையும் ஊசியால் துளையிட்டு பின்பு yarn அல்லது
Embroidry  யால் BLANKET STITCH முறையில்
தைத்து இணைக்க வேண்டும்.


                                       அதே போல புகைப்படங்கள் .ஈஸ்ட்டர் வாழ்த்து அட்டைகள் எல்லாவற்றையம் மீள் சுழற்சி செய்யலாம்.


                                             சென்ற மாதம் எங்கள் ஆலயத்தில் தந்த சில அழைப்பிதழ்கள் வீட்டில் சும்மா இருந்தது .அவற்றை வைத்து ஒரு சிறிய 
trinket box /pencil eraser போடுவதற்கு என்று செய்தேன் .

தேவையான பொருட்கள் 

 1, பழைய வாழ்த்து அட்டைகள்       10 (பத்து)


 2, dark color yarn அல்லது Embroidary thread 

 3, ஓட்டுவதற்கு  பசை 

 4,  பெரிய  ஊசி  துளைகள் இடுவதற்கு  மற்றொரு ஊசி முனை ஷார்ப் ஆக
இல்லாமல் தடிமனாக இருக்கும் இது தைப்பதற்கு 

இதற்கு blanket stitch தெரிந்திருந்தால்
நல்லது.

                                      முதலில் எட்டு அட்டைகளை கீழ் கண்டவாறு 
trace செய்து வெட்டி எடுத்து கொள்ளவும் மீதமுள்ள இரண்டு அட்டைகளையும் அவ்வாறே வெட்டி எடுக்கவும்.


                                                            
                                                       
எட்டு வெட்டப்பட்ட துண்டுகளைஒன்றோடொன்று 
 ஓட்டினால் நான்குபக்கங்களும் ,இரண்டு சதுரங்களை
 ஓட்டினால் ஒரு சதுரமும் கிடைக்கும்.

நான் மேலே உபயோகித்தது   4+1 
thick card  ஆக இருந்தால்   4 + 1 போதும்.

front and back இரண்டு பக்கமும் டிசைன் இருந்தால் நன்றாக இருக்கும்
எல்லா பக்கமும் 1/4"  அல்லது விரும்பிய இடைவெளி விட்டு ஷார்ப்பான
ஊசியால் துளை இடவும்
இந்த மாதிரி
                                                            

                 நான் தெளிவாக இருப்பதற்காக இந்த வெள்ளை அட்டையில் 
துளை இட்டு காட்டியுள்ளேன்.இப்போது எல்லா பக்கமும் ஊசியில் விரும்பிய நிற yarn  அல்லது

embroidary நூல் கொண்டு  BLANKET STITCH   ஆல் தைக்கவும்
இதோ இப்படி
                                               
                                                           
பிறகு அந்த ஒரு சதுரத்தையும் நான்கு
பக்கங்களையும்  இவ்வாறு சேர்த்து தைக்கவும் (HEM)
                                        

                                                                

               வித்தியாசம்  தெரியவேண்டும் என்பதற்காக நான் வெவ்வேறு நிற 
நூல்களை உபயோகித்திருக்கிறேன்.

                                                         

                 நான் யார்ன் (Yarn)  உபயோகித்திருந்தால்இன்னும்
அழகாக வந்திருக்கும்.
வாழ்த்து அட்டைகள் வீணாக போவதை விரும்பாதவர்கள் .
இப்படி மீள் சுழற்சி செய்யலாம்.

10 comments:

 1. ஆஹா ஸ்டெப் பை ஸ்டெப் போட்டு அசத்தலாக சொல்லி தந்திருக்கீங்க.ஏஞ்சு நீங்க ஆர்ட்&கிராஃப்ட் டீச்சரா? word verification -வேண்டாமே!

  ReplyDelete
 2. Word Verification எடுத்து விட்டேன்
  . சும்மா பொழுது போக்க இதெல்லாம் செய்ய ஆரம்பித்தேன்.உங்களையெல்லாம் பார்த்து தான் நான் step by step instructions
  செய்ய கற்று கொண்டேன்.
  இங்கே நிறைய பேர் craft workshops என்று
  வகுப்புகள் நடத்துகிறார்கள்.அங்கே கற்று கொண்டவற்றை பகிர்ந்து கொள்கிறேன்

  ReplyDelete
 3. அட..இன்னொன்று.அழகுதான் !

  ReplyDelete
 4. wow each and every one shows
  really you are great mam...hats of to all your works

  ReplyDelete
 5. thanks for your lovely comments siva.

  ReplyDelete
 6. சுப்பரா இருக்கு. நல்ல ஐடியா.

  ReplyDelete
 7. வருகை தந்ததற்கு மிக்க நன்றி இமா .

  ReplyDelete