அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/24/11

முட்டை வடிவ வாழ்த்து அட்டை

பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள் ,அதுவும்  INTERACTIVE CARDSஎன்றால்சிறுவர் சிறுமியருக்கு ,மிகவும்
                                விருப்பம்.


                                                          


                                                                           
                                    
     இந்த முட்டை வடிவ வாழ்த்து அட்டை மிக 
எளிமையாகசெய்யக்கூடியது .
விருப்பமான அளவில் மூன்று முட்டை வடிவங்களை
 வரைந்து கொள்ளவும்.
                   1 , 2 ,--- , THICK CARD
                     3,    --  DECORATED அல்லது மெல்லியDESIGN PAPER
                                                                              I
                                                                                                    
                                           I, இது உட்புறம் ,இதில் விருப்பமான 
புகைப்படம், அல்லது ஸ்டிக்கர் மெசேஜ் ,ஏதாவது ஓட்டலாம்.
நான் ஒரு MOUSE DIGISTAMP  வர்ணம்தீட்டி ஒட்டியுள்ளேன்.

2 ,    இது வாழ்த்து அட்டையின் மேல் பக்கம்,படத்தில்
 காட்டியுள்ளபடியே ஒற்றை ZIGZAG  கோடு வரைந்து
 வெட்டவும்.


                                                                                  II


                                                                               
                                                                    
 3, மூன்றாவது முட்டை மீது கீழே உள்ளபடி இரட்டை 
ZIG ZAG கோடுகள் வரைந்து, வெட்டி எடுக்கவும்.பின்
அதை இரண்டாவது முட்டையின் மேல் ஒட்டவும்                                                                        III


                                                                     

    1   மற்றும் 2 வது முட்டைகள் ஒரே நிற அட்டையிலும்
3  வது முட்டை சற்று மாறுபட்ட வண்ணத்திலும் 
வெட்டி எடுத்தால் அழகாக வரும்.
                                        
                                                       இனி இணைக்க வேண்டும். 
படம் மெசேஜ் இருக்கும் முட்டையை கீழிருக்கும்படியும்
சேர்த்து ஒட்டிய மற்ற இரண்டு முட்டை வடிவங்களை 
ஒன்றோடொன்று வைத்து OVERLAP செய்தபடி
SPLIT PIN உதவியுடன் இணைக்கவும்
இப்படி               
http://www.craftcreations.com/Default.aspx
இந்த வலை தளத்தில் பதிவு செய்து கொண்டால்
digi stamps  ,patterned  design paper ,project tutorial ஆகியவற்றை
அவர்கள் இ மெயில் மூலம் அனுப்புவார்கள்.                                            
நான் முன்பே குறிப்பிட்டிருந்த தளத்தில் http://sliekje.blogspot.com/ 
FREE DIGI ஸ்டாம்ப்ஸ் டவுன்லோட் செய்து வர்ணம்
 தீட்டியும் ஓட்டலாம்

செய்முறை விளக்கத்தில் அல்லது எனது தமிழில் 
ஏதேனும் குறைஇருப்பின் தயவுசெய்து சுட்டி காட்டவும்
திருத்தி கொள்ள உதவியாக இருக்கும்.

3/19/11

Quilling --கூடை மற்றும் பூக்கள்,Quilled flowers in a Basket,

அன்னையர் தினம்

ஏப்ரல் 2011


                                      


                                                       


          இந்த ஆண்டு   ஏப்ரல் 3 ஆம் திகதி அன்று
   இங்கிலாந்தில் அன்னையர் தினம் விமரிசையாக 
 கொண்டாடப்படும் .
ஒரு மாதத்திற்கு முன்பே இதற்கென பரிசு பொருட்கள் 
,வாழ்த்து அட்டைகள் என்று எல்லா கடைகளிலும் விற்பனை 
அமோகமாக இருக்கும். அன்னையர் தினம் lent காலத்தில் 
 நான்காவது வாரம் கொண்டாடப்படும்.
ஆலயங்களில் ஆராதனை முடிந்தபின் வண்ண நிற பூக்களை
பிள்ளைகள்ஒவ்வொருவரும் அவர்களின் தாய்மார்களுக்கு
தருவார்கள்.எவ்வளவு தொலைவில் இருந்தாலும் 
பிள்ளைகள் தங்கள் அம்மாவை பார்க்க அன்று
 வந்து விடுவார்கள். 

                                                அன்று பூங்கொத்துக்கள் நிறைய 
விற்பனையாகும்.SPRING FLOWERS  எனப்படும் DAFFODILS,
TULIPS,  DAISIES என்று பல வகைகள் கிடைக்கும்.
                                                                           
இன்று நான் செய்த QUILLED கூடை மற்றும் பூக்கள்,


தேவையான பொருட்கள் ,

 1,   விருப்பமான அளவில் வெள்ளை அல்லது 
ஏதேனும் ஒரு நிறத்தில் GREETING CARD BASE .


                                                                    

2, கூடை செய்ய பிரவுன் பேப்பர் (PLAIN OR PATTERNED)


                                                         
3 ,  DECORATE செய்ய STICKERS அல்லது GEM STONES.
4,  வீட்டிலுள்ள பழைய திருமண அழைப்பிதழ்
     ஏதேனும் இருந்தால் அவற்றையும் உபயோகிக்கலாம் 
    செலவும் குறைவு .
5,   ஓட்டுவதற்கு பசை / பல் குத்தி (TOOTH PICK)

                                                        
நான் இந்த கூடையை எதில் ஒட்டி இருக்கிறேன்
 என்று பாருங்கள்                                                                                                               
 CHRISTMAS CHOCOLATE BOX உள்ளே இருந்த CUSHION PAD
எடுத்து சதுர வடிவில் டிசைன் கத்திரி கோலால்
 வெட்டி எடுத்து அதன் மேல் சிகப்பு நிற STAMP DISTRESS
செய்தேன்.sponge எடுத்து லேசாக கலர் stamp மீது
தொட்டு greeting card ஓரங்கள் அல்லது நடுவில் 
தேய்ப்பது Distressing stamp எனப்படும்.

அதன் மேல் கூடை பூக்கள் ஒட்டி அலங்கரித்துள்ளேன்.

                                                       கூடை கைப்பிடி

                                                         
                                                         அடிபாகம் C scroll shape
இரண்டு கொம்பும்(c )கார்டில் படுமாறு ஓட்ட வேண்டும்.
                                                         மலர்கள் (tulips)

                                            Fringed flower செய்ய பூவின் நடு
 பாகம்  சிறிதாக வர மெல்லிய காகிதத்தோடு சற்று
 அகலமான ஓரம் பற்கள் போல வெட்டப்பட்ட
   காகிதத்தை ஒட்டிஇதழ்களை (வெட்டப்பட்ட பற்கள்)
விரித்து  விட்டு பூ செய்ய வேண்டும்.

                                                        

                                                      
                                                         

                                        எங்கள் மகளின் கைவண்ணம் 
இங்கே QUILLED PEACOCK            


http://engalcreations.blogspot.com/2011/03/hannah.html

                                                                                                                                                                                                            
                                                                 எங்கள் மகள் 7 வயது
இருக்கும்போது செய்த இந்த பறவைகள்  தான் என்னை 
இந்த quilling முறை கற்று கொள்ள தூண்டியது.

                                                          
                                                                                              
                    எல்லோரும் எப்பவும் சந்தோஷமா இருக்க 
இறைவனை பிரார்த்திப்போம்.

3/8/11

மீள் சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள்

       கிறிஸ்துமஸ் , பிறந்த நாள் என்றாலே நமக்கு நினைவில் வருவது முதலில் வண்ண மயமான வாழ்த்து அட்டைகள் தான் .அப்படி எல்லோர்  வீட்டிலும் நிறைய வாழ்த்து அட்டைகள் சேர்ந்திருக்கும் ,அவற்றை வீசாமல் 
மறுபடியும் மீள் சுழற்சி செய்வதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்

இது நான் செய்தது

                                                             


மேலேயுள்ள முகவரிக்கு சென்றால் இதற்கான template கிடைக்கும்
செய்முறை  கீழே உள்ள  முறை தான் .
எல்லா பக்கங்களையும் ஊசியால் துளையிட்டு பின்பு yarn அல்லது
Embroidry  யால் BLANKET STITCH முறையில்
தைத்து இணைக்க வேண்டும்.


                                       அதே போல புகைப்படங்கள் .ஈஸ்ட்டர் வாழ்த்து அட்டைகள் எல்லாவற்றையம் மீள் சுழற்சி செய்யலாம்.


                                             சென்ற மாதம் எங்கள் ஆலயத்தில் தந்த சில அழைப்பிதழ்கள் வீட்டில் சும்மா இருந்தது .அவற்றை வைத்து ஒரு சிறிய 
trinket box /pencil eraser போடுவதற்கு என்று செய்தேன் .

தேவையான பொருட்கள் 

 1, பழைய வாழ்த்து அட்டைகள்       10 (பத்து)


 2, dark color yarn அல்லது Embroidary thread 

 3, ஓட்டுவதற்கு  பசை 

 4,  பெரிய  ஊசி  துளைகள் இடுவதற்கு  மற்றொரு ஊசி முனை ஷார்ப் ஆக
இல்லாமல் தடிமனாக இருக்கும் இது தைப்பதற்கு 

இதற்கு blanket stitch தெரிந்திருந்தால்
நல்லது.

                                      முதலில் எட்டு அட்டைகளை கீழ் கண்டவாறு 
trace செய்து வெட்டி எடுத்து கொள்ளவும் மீதமுள்ள இரண்டு அட்டைகளையும் அவ்வாறே வெட்டி எடுக்கவும்.


                                                            
                                                       
எட்டு வெட்டப்பட்ட துண்டுகளைஒன்றோடொன்று 
 ஓட்டினால் நான்குபக்கங்களும் ,இரண்டு சதுரங்களை
 ஓட்டினால் ஒரு சதுரமும் கிடைக்கும்.

நான் மேலே உபயோகித்தது   4+1 
thick card  ஆக இருந்தால்   4 + 1 போதும்.

front and back இரண்டு பக்கமும் டிசைன் இருந்தால் நன்றாக இருக்கும்
எல்லா பக்கமும் 1/4"  அல்லது விரும்பிய இடைவெளி விட்டு ஷார்ப்பான
ஊசியால் துளை இடவும்
இந்த மாதிரி
                                                            

                 நான் தெளிவாக இருப்பதற்காக இந்த வெள்ளை அட்டையில் 
துளை இட்டு காட்டியுள்ளேன்.இப்போது எல்லா பக்கமும் ஊசியில் விரும்பிய நிற yarn  அல்லது

embroidary நூல் கொண்டு  BLANKET STITCH   ஆல் தைக்கவும்
இதோ இப்படி
                                               
                                                           
பிறகு அந்த ஒரு சதுரத்தையும் நான்கு
பக்கங்களையும்  இவ்வாறு சேர்த்து தைக்கவும் (HEM)
                                        

                                                                

               வித்தியாசம்  தெரியவேண்டும் என்பதற்காக நான் வெவ்வேறு நிற 
நூல்களை உபயோகித்திருக்கிறேன்.

                                                         

                 நான் யார்ன் (Yarn)  உபயோகித்திருந்தால்இன்னும்
அழகாக வந்திருக்கும்.
வாழ்த்து அட்டைகள் வீணாக போவதை விரும்பாதவர்கள் .
இப்படி மீள் சுழற்சி செய்யலாம்.

3/5/11

Card making ideas

 இன்று   எளிய பொருட்களை கொண்டு வாழ்த்து அட்டை செய்முறை 
கற்று கொள்வோம் .

தேவையான  பொருட்கள் 

1, வெள்ளை அல்லது  ஏதேனும் லைட் நிறத்தில் அட்டை 
     அல்லது ரெடிமேட் card blanks.
2, Printed  design stickers  அல்லது  digi stamps .சில தளங்களில் இலவசமாக digistamp  down load செய்யலாம்.


3,  ஓட்டுவதற்கு GLUE அல்லது Double sided tape .

         
மேலேயுள்ள வாழ்த்து அட்டை என் 10 வயது
மகள் செய்தது .
                     இந்த கார்டு நான் செய்தது .ஒரு நாள் கடைக்கு சென்ற போது 
அங்கே demonstration க்காக  வைத்திருந்த  சில காகிதங்களை எடுத்து வந்தேன் ..பிறகு இரண்டு படங்களை ஒன்றின் மேல் ஒன்று  sticky pad வைத்து ஓட்டினேன் அதன் பிறகு காது மற்றும் பூக்களை தனியாக ஓட்டினேன் இதற்கு Decoupage என்றும் சொல்வார்கள் .
பரிசு பொருட்கள் சுற்றி வந்த வண்ண தாள்களிலுள்ள பூக்கள் மற்றும் வண்ணத்து பூச்சிகளை வெட்டி வைத்து கொண்டு
தேவையான நேரம் உபயோகிக்கலாம் .
இங்கே பாருங்கள் 
நிஷாந்தி என்பவர் 
தன்னுடைய  வாழ்த்து அட்டையில் செய்திருப்பதை .
அந்த வண்ணத்து பூச்சிகள் gift paper இல் 
இருந்து வெட்டபட்டவையாம்.


digi stamp download செய்து
வர்ணம் தீட்டுவது மிகவும் எளிதான முறை .
தளத்தில் அழகான digi stamps இலவசமாக download செய்யலாம்.
இப்படி எவ்வளவோ, சிறிய கார்ட்டூன் இமேஜை 
  வைத்தும்  அழகான வாழ்த்து அட்டை செய்யலாம்,
மேலுள்ள படத்தில் இருப்பது PEPPER எனப்படும் 
CHARACTER .நான்அதைஎப்படிவாழ்த்து அட்டையில்
 இணைத்திருக்கிறேன் என்று பாருங்கள்
                                
                                            
பதிவு கொஞ்சம் நீளமாகி விட்டது .அடுத்த பதிவில் சந்திப்போம்.

3/1/11

Tiny card Basket

வணக்கம் ,

 காகித பூக்களில் இன்று எளிய  அன்னையர் தின பரிசு .செய்முறை 
காகித கூடை 

தேவையான பொருட்கள் 

1,               5 1/2"  x 51/2" அளவிலான
                  பிரவுன் நிற அல்லது விருப்பமான நிறத்தில் அட்டை 
2,               7" x 1 3/4 "  அளவிலான அதே நிற அட்டை கைபிடிக்கு 


3,                (double sided tape) அல்லது split pins 
                  கீழே  குறிப்பிட்டுள்ளபடி  வெட்டி மடிக்கவும்


                                                                                                  கீழே  உள்ளபடி சேர்த்து பிடித்து ஒட்டவும்                              


                                                              
                                          7" x 1 1/4" அளவில் வெட்டிய எடுத்த 
                                         கை பிடியை உள் புறம் வைத்து 
                                         இணைக்கவும் 

                                                                                  
                                          
               
                                                                      
                                              நான் இங்கு உபயோகித்துள்ள பூக்கள்
                                           old gift paper  இல்  இருந்து வெட்டி 
                                          எடுக்கப்பட்டவை 
                                      
                                        


                                        
                                           கூடை தயார் .அதனுள் உங்களுக்கு 
                                         விருப்பமான  சின்ன பொருட்கள் 
                                         gifts, sweets என்று வைத்து அன்பளிப்பாக
                                         தரவும் .
                                                                        
                                                   
                                           
                   மேலுள்ள கூடைகள் நாங்கள் christmas இக்கு 
முதியோர் இல்லத்துக்கு அன்பளிப்பாக தந்தது .அதில்
 உள்ள  பொருட்கள்  மிக விலை குறைந்தவைதான் .
அவற்றை பெற்று கொண்ட அந்த முதியோர்களின் 
 சந்தோஷம் ... அளவிடமுடியாதது
.
ஆயிரம் பரிசு பொருட்கள் கடையில் வாங்கலாம் 
நாமே வீட்டில் செய்யும்போது அதில் மிகுந்த மன 
நிறைவு கிடைக்கும்
என் செய்முறை விளங்காவிடில் கீழ் காணும்
video  பார்க்கவும்
.
நான் இந்த video  பார்த்து தான் இந்த கூடைகளை
செய்தேன்.

http://www.dailymotion.com/video/x2xhgg1