அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் வரவிருக்கும் பதிவுகள் மலர் வடாம் ,அரிசி கிள்ளு  வற்றல் ,ரசக்குணுக்கு , வரகரிசி வடாம் .இதெல்லாம் பார்த்து யாரேனும் மயங்கி விழுந்தால் கம்பெனி பொறுப்பேற்கமாட்டாது Have a Great Day Dear Friends :)

Friday, October 09, 2020

சும்மா ஒரு ஹாய் :)

 நலமாக இருக்கின்(றேன் )றோம்  :))


                                                                                
வலையுலக  நட்புக்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா .


                                                                                    


அவ்வப்போது வலைப்பதிவுகள் பக்கம் எட்டி பார்ப்பதுண்டு சமீபமா அதற்கும் நேரமில்லாமல் பறந்துக்கொண்டிருக்கின்றேன் !!

எதை எழுத !!எதை விட எனுமளவுக்கு பற்பல அனுபவங்கள் சுற்றி நடக்கும் விஷயங்கள் .இயன்றவரைக்கும் சந்தோஷத்தை மட்டும் பரப்பி செல்ல விரும்பி செய்தியில்  படிச்ச குறும்புக்கார  செல்லங்கள் பற்றிய சில பகிர்வுகளை உங்களுடன் பகிர்கின்றேன் .

எங்க இங்கிலாந்தில் lincolnshire பகுதியில் கிளி வகை பறவைகளுக்கென ஒரு சரணாலயமுண்டு சுட்டி இங்கே 

ஒரு விஷயத்தை குறிப்பிடனும் இப்போ இந்த ஆண்டு மார்ச் முதல் பல செல்லங்கள்  சில உரிமையாளர்களால் நிராகரிக்கப்பட்டு இப்படி சரணாலயங்கள் மற்றும் ரெஸ்க்யூ சென்டர்களுக்கு வந்தடைகின்றன .இதில் யாரை குற்றம் சொல்ல :( .சரி விஷயத்துக்கு வருவோம் .இந்த கிளிகள் சரணாலயத்துக்கு செப்டெம்பர் மாதம் 5 ஆப்பிரிக்க கிளிகள் வந்து சேர்ந்தன .இவ்வகை பறவைகள் மிகவும் அறிவார்ந்தவை ஒரு வார்த்தை காதில் கேட்டால் உடனே அதை திருப்பி சொல்லும் அறிவுக்கூர்மை படைத்தவை . இதே சரணாலயத்தில் ஒரு ஆப்பிரிக்க கிளி சமீபத்தில் பின்னணி பாடகி  beyonce போல பாட்டு  பாடி அசத்தியது .

                                                                          அது போல இந்த செல்லங்களுக்கு அவற்றை வளர்த்த உரிமையாளர்கள் கெட்ட வார்த்தை சொல்லி கொடுத்தார்களா அல்லது இவை அவர்கள் பேசியதுகேட்டு அதை பதித்துக்கொண்டனவான்னு தெரியலை ஆனா அந்த வார்தைகளை சரணாலயத்தில் போவோர் வருவோர் கூட்டமாக செல்வோர் முன் ஒன்று சொல்ல அதை இன்னோன்று   தொடர  மற்றவை எல்லாம் சேர்ந்து கொண்டு கெக்கே பிக்கேன்னு சிரிச்சிருக்குங்க .இவற்றின் சேட்டைகளை பார்த்து ஊழியர்களும் சிரிக்க அதுகளுக்கு செம குஷியாகி தொடர்ந்து அதையே பேசி பேசி சிரிச்சிருக்குங்க !! கடைசியில் நிர்வாகம் time out பனிஷ்மென்ட் கொடுத்து பிரிச்சி தனிமை படுத்தியிருக்காங்களாம் பொல்லா கிளிகளை .

                                           ****************************************

எங்க வீட்டு தோட்டத்துக்கு நிறைய பறவைகள் வராங்க மணிப்புறா ,குண்டுப்புறா ராபின்ஸ் சிட்டுக்கள் அணிலன் அணிலா தவிட்டு குருவி வகை கருங்குருவிகள் இப்படி நிறைய .ஒரு பறவை வீடும் வாங்கியாச்சு செட் பண்ணணும் .இவர்களுடன் புதிதாய் ஒரு சாம்பல் புறா ஒரு மாதத்துக்கும் மேலே நான்  தோட்டத்துக்கு போகும்போது தோள்மேலே வந்தமர்ந்து பாசமழை பொழிந்தது கணவர் பின்னாலும் மிக அருகில் வரும் எங்கள் வீட்டு ஓட்டு மீதே இருக்கும் நாங்கள் உணவு நீர் வைப்பதுண்டு .

                                                                                   

                                                                      

                                                                                  


மகள் இந்திய பெயர் ஏதாச்சும் வைக்கலாம்னு சொல்ல ரெண்டு பெயர்களை சொல்ல ஒன்று தேர்வாகியது இப்போ அந்த புறா பெயர் விஜய் :))))))) செல்லமா  விஜுன்னு கூப்பிடறேன். பிறிதொரு நாள் படமெடுத்து பார்த்தபோது கண்டுபிடித்தது அதன் காலில் ஒரு வளையம் .அது ரேஸ் புறா எங்கிருந்தோ வந்திருக்கு அமெரிக்காவிலிருந்து கூட வந்திருக்கலாம் :) அவனா போகும் வரை உணவிட தீர்மானிச்சிருக்கிறோம் . அநேகமா இங்கேயே செட்டில் ஆகிடுவான்னு நினைக்கிறேன் இப்போ புதுசா பெண் தோழியும் அவருக்கு கிடைச்சிருக்கு :) அமேசானில்  பறவை வீடு ஆர்டர் கொடுத்து வந்திருக்கு .பனி மழைக்கு அவங்க உட்கார இருக்கும் 


அப்புறம்  இந்த கடினமான காலகட்டத்தில் கூடுமானவரைக்கும் மனதை ரிலாக்ஸ்டா அழுத்தமின்றி வச்சிக்கோங்க .முக்கியமா போர் எலிகளே !!  

                                                                         


 பொதுவெளியில் மனசஞ்சலம் தரும் விஷயங்களை பெருமளவில் பகிர்வதை தவிருங்கள்  கொஞ்சம் வயதில் பெரியவர்களை மனதிற்கொண்டு எதையும் செய்யுங்கள் .எல்லாருக்கும்  எல்லாவற்றையும் படிக்கும் பார்க்கும்  மனதிடம் இருக்காது .நம்ம கண்முன்னாடி பசியோடு யாராச்சும் இருந்தா இயன்றவரை ஒருவேளை உணவாச்சும் வாங்கி கொடுங்க . இது ஒரு செயின் ரியாக்ஸன்போல் தொடரும் அன்பு வளரட்டும் .

மீண்டும் சந்திப்போம் இப்படிக்கு 

                                                                                

***********************************************************************************Monday, August 03, 2020

 பில்லா :)                                                             

                           எனக்கு அவனுடைய பெயர் தெரியாது .அதனால் எனக்கு பிடிச்ச சித்தப்ஸ் நடிச்ச கேரக்டர்  பெயர் பில்லான்னு வைச்சிட்டேன் .ஒரிஜினல் பில்லா கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி சித்தப்ஸ்க்கும் இந்த பதிவில் வரும் பில்லாவுக்கும் கொஞ்சம் ஏறக்குறைய ஒற்றுமைகள் உண்டு . வயசானாலும் சித்தப்ஸ் மாதிரியே இவருக்கும் அழகும் ஸ்டைலும் குறையவேயில்லை .

Thursday, June 04, 2020

ஏதோ நினைவுகள் ....சினையுறும் சிறு உயிர் கூட உறவென புரிந்திடப்பாரு !!

                                                                             1, இங்கே நான் அடிக்கடி ஆடுமேய்க்கபோவேனே அங்கே சமீபத்தில் நடந்த சம்பவம் ..அந்த இடத்தில்  ரெஸ்க்யூ sanctuary நடத்தும் மூதாட்டிக்கு ஒருநாள்  காலையில் அழுக்கு உடையுடன் ஒரு truck  ட்ரைவர் ஒரு பெண் ஆட்டை கொண்டுவந்து கொடுத்திருக்கிறார் .

Monday, June 01, 2020

அந்த அணிலனும் அணிலாவும் ! என் வீட்டு தோட்டத்தில்

அந்த அணிலனும் அணிலாவும் ! என் வீட்டு தோட்டத்தில் 
                                                                               
                                                                                

நீண்ட நெடுநாட்கள் கழித்து  என்னுடைய மிக விருப்பமான ஓடை பக்கம் நடந்தோம் .சுமார் இரண்டு மாதங்கள் கொரோனாவின் கூரான பற்களுக்கு பயந்து எங்கும் செல்லாமலிருந்தோம் .எப்பவும் ஏப்ரல் இறுதியில் அன்னங்களும் வாத்துக்களும் மூர் கோழிகளும் தங்கள் குடும்பத்தின் புதிய வரவுகளை எங்களுக்கு காண்பிக்கும் .இம்முறை அதை மிஸ் செய்துட்டோம் .இன்று பார்த்தபோது எல்லாரும் வளர்ந்து இருக்காங்க :)

Tuesday, May 19, 2020

என் வீட்டுதோட்டத்தில்

கருணை 
==========
                                                                              


மனநல விழிப்புணர்வு வாரம் இந்த மே மாதம் 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதிவரை அனுசரிக்கப்படுகிறது .இவ்வாண்டுக்கான கருப்பொருள் கருணை .இந்த கருணை தற்போதைய சூழலில் மிகவும்  அவசியமானது  .நிறையபேருக்கு ஆன்க்ஸைட்டி டிப்ரெஷன் என்று பாடாய்  படுத்தி எடுக்கப்படுகிறார்கள் .இந்த பிறரிடம் பிற உயிர்களிடம் கருணையாயிருத்தல் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள் .மூன்றில் இரண்டு பேர்  பிறரிடம் மற்றும் பிற உயிர்களிடத்து  கருணை செலுத்தும்போது அது அவர்களின் மன ஆரோக்கியத்தில் சாதகமான விளைவை தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன